2009-12-03

நாங்க எடிட் போட்டா தாங்க மாட்டீங்களா

எதாவது எழுதுவம் என்றால் நேரம் இல்லை ; ரொம்ப பிஸி .. எனக்கு பிடிச்ச ஒரு காணொளி .. நல்ல ஒரு மசாலா கலவை .. பாருங்க .. பிறகு யார் தயாரிச்சது என்று கேட்க கூடாது ... :)



புலி உறுமுது புலி உறுமுது
இடி இடிக்குது இடி இடிக்குது






கொடி பறக்குது கொடி பறக்குது - வேட்டைக்காரன் வரத பார்த்து
கொல நடுங்குது கொல நடுங்குது


துடி துடிக்குது துடி துடிக்குது
நிலைகுலையுது நிலை குலையுது வேட்டைக்காரன் வரத பார்த்து


பட்டாகத்தி பளபளக்க
பட்டி தொட்டி கலகலக்க
பறந்து வரான் வேட்டைக்காரன்
பாமரனின் கூட்டுக்காரன்


நிக்காம ஓடு ஓடு ஓடு .....வரான் பாரு வேட்டைக்காரன்.


என்னதான் இருந்தாலும்
மொத்ததுல பாட்டு படு ஜோரு. இனி நீங்களே இந்த படத்தோட பாட்டை வெறுத்தாலும் உங்களை எங்கள் 'சன்' அடிக்கடி கேட்க வைப்பான்..

ஒரு விளம்பரம் :- சிவராத்திரி 2010 :-

" இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முதலாக திரைக்கு வந்து இரண்டு மாதமே ஆன வேட்டைக்காரன் சிவராத்திரி இரவு பத்து மணிக்கு உங்கள் சன் டீவியில் காணத்தவறாதீர்கள் " சிவராத்திரியை ஜோராக நித்திரை கொள்ளாமல் கொண்டாடுங்கள் !! என்று ஒரு பெரிய விளம்பரம் வரும். :) திரைப்படத்தின் முதல் பகுதியை வழங்குவோர் குட் நைட் நுளம்பு சுருள் . இறுதிப்பகுதியை வழங்குவோர் பனடோல் .. உங்கள் தலை வலிகளை போக்க .. படம் தொடங்கும் போதே அருந்துங்கள் .. !!


2009-12-01

தமிழரின் தீப நாள் -கார்த்திகை தீபம்



(திருவண்ணாமலை அடி வாரம் )
இன்று கார்த்திகை தீபத்திருநாள். ஆலயங்களில் , வீடுகளில் எல்லாம் தீபம் ஏற்றி வழிபாடும் நாள்.

தீப வழிபாடு பண்டைய காலந்தொட்டே பலமுறைகளிலும் நடைபெற்று வருகிறது.

சைவர், வைஷ்ணர், ஜைனர் என்ற பாகுபாடு இன்றி எல்லா மதத்தினரும் தீப வழிபாட்டைக் கடைபிடிக்கின்றனர்.

இந்தியாவில் வடக்கில் தீப வழிபாடு ‘தீபாவளி’ என்றும் , தெற்கே தீப வழிபாடு ‘கார்த்திகை தீபம்’ என்றும் கொண்டாடப்படுகிறது.


தீப தானங்கள் பதினாறு வகை தென் நாட்டில் வழக்கில் இருந்து வருகிறது. தீப வழிபாட்டில் சிறப்பானது கார்த்திகை தீபம்.

கார்த்திகை மாதத்தில் பெளர்ணமி திதியில் கிருத்திகை நட்சத்திரத்தில் வருவது கார்த்திகை தீபம்.

தீப ஒளியின் தாத்பர்யம் நம்முன் இருக்கும் அஞ்ஞான இருளைப் போக்கி மெய்ஞானத்தைத் தருவதாகும். பண்டைய காலத்தில் ஞாயிறு, திங்கள், நெருப்பு இம் மூன்றையும்தான் தமிழர்கள் வழிபட்டு வந்தனர் என்று சொல்வார்கள்.

”அன்பே தகழியா ஆ ர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - என்புருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றனேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ் புரிந்த நான் ”

திருமூலர் தீபவழிபாட்டை பற்றி திருமந்திரத்தில்:

”விளக்கொளியாகிய மின் கொடியாளை
விளக்கொளியாக விளங்கிடு நீயே !
விளக்கிடு மெய்நின்ற ஞானப் பொருளை
விளங்கிடுவார்கள் விளங்கினர் தானே !
– என்று சிறப்பித்துக் கூறுகிறார்.

இவை தீப வழிபாட்டின் முக்கியம் சொல்லும் புராணங்கள்.

குறிப்பு: அத்துடன் தீபாவளி ஆரிய திருநாள் என்றும் கார்த்திகை திருநாளே தமிழர் திருநாள் . இத்தனை முக்கியம் வாய்ந்த தமிழர் திருநாளான இந்த நாளில் எல்லோரும் தீபம் ஏற்றி இன்றைய கார்த்திகை தீப திருநாளை கொண்டாடுவோமாக.


இத்திருநாள், முருகக்கடவுள் அவதரித்தத் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
சிவபெருமான் ஒளி மயமாகக் காட்சியளித்ததை நினைவு கூரும் வகையில், தீபத்தினத்தன்று ,பஞ்ச பூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலையின்( ஈசன் ஜோதிப் பிழம்பாய் நின்ற இடம் ) உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.


இத்தனை இன்று பெரும்பாலான இந்திய தமிழ் ஒளிபரப்புகள் நேரடியாக வர்ணனை செய்யும்.( முன்னர் ஜெயா தொலைக்காட்சி செய்த ஞாபகம் ). மிக பலத்த பாதுகாப்புடன் நிகழும் இந்த நிகழ்ச்சியை காண பலர் கூடுவர். மிக நீண்ட தூரத்துக்கு இந்த காட்சியை காணலாம்.

வாசித்தவற்றுள் பிடித்த கவிதை :

உகலமெல்லாம் தீப ஒளி பரவ
நல்லன எல்லாம் நடக்க
ஆளுவோர் மனம் மாற
மக்கள் நலமொன்றே நினைக்க
வீணாகும் தண்ணீரை சேமிக்க
அதன் மூலம் நல்ல வளம் பெருக
பொது ஜனமும் தனிமனித ஒழுக்கம் கடைபிடிக்க
வன்முறை ஒழிய
தீவிரவாதம் அழிய
எங்கும் அமைதி நிலவ
உலக மக்கள் நிம்மதியான வாழ்வு வாழ
இந்நன்னாளில் எங்கும் ஒளி பரவட்டும்
சாந்தி நிலவட்டும்
அதற்கு
ஏற்றுக தீபம்...போற்றுக தீபம்...கார்த்திகை தீபம்!!!!!!!!!!!!!!!!!!!

"சொக்கப்பனை கொளுத்துதல்".

கோவிலுக்கு அருகே, திறந்த வெளியில், ஒரு காய்ந்த மரத்துண்டை (அனேகமாக பப்பாளி மரத்தண்டு- ஊரில் என்றால் , சிலவேளைகளில் பெரிய மூங்கில் தடி ) நிறுத்தி அதனைச் சுற்றி காய்ந்த பனை மட்டைகளைக் கட்டி வைப்பார்கள். ( கிடுகும் பயன்படும் )இதற்கு சொக்கப்பனை என்று பெயர். சாயங்காலப் பூஜை முடிந்து சுவாமி வீதி உலா வந்தபின்( சுட்டி விளக்கு தரும் ஒளியில் சுவாமி வருதல் கண் கொள்ளாக்காட்சி.) ( பெரும்பாலும் ஆறுமுகசாமியே வள்ளி சமேத தெய்வானை யுடன் வலம் வருவார் ), கோவில் எல்லாம் விளக்கேற்றிய பின்னர், கோவில்குருக்கள் வெளியே வந்து, சொக்கப்பனைக்கு தீபாராதனைக் காட்டி அதைக் கொளுத்தி விடுவார். பனை மட்டையில் தீ பிடித்ததும் படபடவென்று ஒசையுடன் வெடித்துக் கொண்டே கொழுந்து விட்டு எரியும். மிகப்பிரகாசமான ஒளியை தருவது மட்டும் இல்லாமல் தத்துவத்தையும் பொலிந்து இருக்கும் இந்த காட்சி. நம்மவர்கள் உப்பு போட்டு வெடிக்க வைத்து கேலியாகுவதுதான் வழமையான ஒன்றே.

சுருக்கமாய் சொன்னால் ,கார்த்திகை தீபவிழா ஆணவ இருளை நீக்கி, ஞான ஒளியை நம்முள் பெருக்க உகந்த விழாவாகும்.

தமிழ் சினிமா பாடல்கள் :-

2009-11-29

ஞாயிறை பொழுது போக்கிய தொலைபேசி அழைப்புகள்




இதமான சனி இரவு களைத்து போய் நண்பனின் வீட்டில் இருந்து வந்து சேரும் போது அதிகாலை 1 மணி .... வீட்டை சுத்தம் செய்து போட்டு படுப்பம் என்று .. சொல்லி கொண்டு வந்த களைப்புக்கு தேநீர் அருந்த தண்ணியை கொதிக்க வைத்து கொண்டு இருக்கும் போது, கொழும்பில் இருந்து உற்ற நண்பனின் அழைப்பு; காதல் தோல்வி.. அதுதான் மைய்யக்கருத்து..( இதை சொல்லி முடிக்க ஒரு மணித்தியாலம் போட்டுது )பெண் பகுதி எனக்கு தெரிந்த பகுதி.. எனது உதவி .. தேவை.. எப்படியோ பேசி எதாவது செய்,, என்று .. அழுது புலம்பல் .... எனக்கு இருக்கிற களைப்பு எல்லாமே போயிட்டு .. !!! பேசுகிறேன் என்று சொல்லி அந்த பகுதிக்கு தொலைபேசியை அதிகாலையே ( 2 மணி ஐரோப்பிய நேரம்- இலங்கை நேரம் ஞாயிறு காலை 6:30 மணி ) முறுக்கினால் .... இன்றைய ஞாயிறு நாள் எப்புடி .. போயினது என்று தெரியாது அத்தனை தடவை .. கால் எடுத்தாச்சு.. .,. .. பெண்பகுதியினர் ஏமாற்றி விட்டனரா இல்லை ..பெண்ணுக்கு விருப்பம் இல்லையா.. என்று நான் அறிய இன்று மாலை நான்கு மணி..

நானறிந்த அளவில்..
ஒரு தலைக்காதல் , நான் படித்து ( 4 வருடங்கள் ) முடித்து விட்டு வருகிறேன் அதுவரை wait பண்ணுவியா என்று நண்பன் கேட்டதுக்கு அவள் மௌனமாய் இருந்தது, அதுக்கு பிறகு நண்பன் அவளுடன் பழகிய விதங்கள் என்று எல்லாம்.. அவனை அவளும் ஏற்று க் கொண்டு விட்டாள் என்று கடந்த நான்கு வருடமாக அவனது படிப்பை நன்றே செய்து முடித்து விட்டு வந்த போது அது அவ்வாறு இல்லை என்று .. புரிந்ததும்.. அவனது மனமும் உடைந்தது.. வாழ்வும் பாழாய் போனது என்று புலம்பல்.. ;

சரி பெண் பகுதியினரை ... ஒரு மாதிரி சமாளித்து கதைத்தால் .. சாத்திரம் பார்த்து "சரி" என்றால் திருமணம் செய்து வைக்க தயார் என்று .. சொன்னது கொஞ்சம் ஆறுதல் . அது நடக்காது.. என்று எனக்கு நன்றே தெரியும் . அவர்களுக்கும் தான் .செவ்வாய் குற்றம் தான் .. தடை செய்யுது.. என்று பெண் பகுதியினர் சொல்லி விட்டனர்.. அதால பேசாமல் வேறு பெண்ணை பார்க்கவும் என்று அறுத்து உறுத்து சொல்லி தொலைபேசியை வைத்து விட்டனர்.. எனக்கு கடைசியில் கதைக்க ஒரு chance கூட குடுக்கவில்லை.. :(

பெண்ணுக்கு விருப்பம் இல்லை என்று சொன்ன பிறகு .. என்னதான் செய்யலாம்.. பேசாம குடித்து கும்மாளம் போடாமல் வீரமாய் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்க வேண்டியது தானே.. என்று ஒரு உறுதியான ஆறுதல்கள் சொன்னதுதான் ...

ஒன்று போனால் இன்னொன்று .. இனியாவது .. காதலிக்கும் போது confirmation letter ஐயும் சேர்த்து வாங்குங்க பசங்களா.. இல்லாட்டிஇப்படித்தான் .. நடக்கும்..:)

சாத்திரம் உண்மையா .. கடவுள் இருக்காரா .. சாத்திரம் பார்த்து செய்த திருமணம் எல்லாம் சரியான திசையில் குடும்ப வாழ்கையை கொண்டு செல்கின்றனவா.. அல்லது காதல் திருமணங்கள் சரியான திசையில் குடும்ப வாழ்கையை கொண்டு செல்கின்றனவா?? இதுக்கெல்லாம் இருந்து யோசித்தால் ஒரு பெரிய சபையே வைக்கலாம்.. வேணாம் விடுங்க .. இந்த தலைப்புகளில் ஒன்றால் ..நானே நன்றே பாதிக்கப்பட்டு இருக்கின்றேன்.. :)

யப்பாடி கடந்த ஒரு நாள் நான் நித்திரை கூட கொள்ளவில்லை,..இந்த ஆரவாரத்துக்க எனது பாட்டு பெட்டியில் ஒரு பாட்டு போயிச்சு.. அதுவும்.. situation song.. :)
கேளுங்க நீங்களும் ,..



கடைசியில் suriya வரும் காட்சி பற்றி நான் எந்த கருத்தும் கூற விரும்ப வில்லை


ஆசைக்காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே



"True love does not come by finding the perfect person, but by learning to see an imperfect person perfectly."

2009-11-24

நான் அவன் இல்லைங்கோ..




அடியேனிடம் வாசகன் ஒருவன் கேட்ட கேள்விக்கு பதில்

நான் அந்த மாதிரி சுவாமிகள் இல்லை.
நல்லவேளை ஒரு அப்பாவியை கள்ளச்சாமியார் ஆக்காத குறை.

வரலாறு :
ஒரு காலத்தில் நான் சுவாமியார் வேடம் போட்டு நடித்ததன் விளைவு தான் இன்றும் என்னுடன் அதே சுவாமியார் பெயர் அடி படுகின்றது. ஒரு நாடகத்தில் ஒரு வேடம் சுவாமியார். அதில் இந்தியாவில் இருக்கும் அட்டகாச சாமியார்கள் மாதிரி நானும் நடிக்கணும். மது, மாது சூதாட்டம் என்று பலவற்றை செய்து காட்ட சொல்லி நாடகத்தை இயக்கிய எனது நண்பன் சொல்லிட்டான். இது எதுவுமே தெரியாத பாலகனாய் இருந்த என்னை நடிக்க சொன்னால் எப்புடி. ஏதோ ஓரிரண்டு சினிமா படத்தை பார்த்து போட்டு நடித்தேன். காவி உடை அணிந்து தாடி எல்லாம் வளர்த்து ஒரு சாக்கு பையுடன் ( பைக்குள் ஒரு அரைப்போத்தல் plain dee, பழைய சிகரெட் பெட்டி, சாம்பிராணி புகை வெளியே வரும் வகையில் ஒரு டப்பாக்குள் தணல் + சாம்பிராணி, ஒரு பாட்டு பெட்டி -" பக்தி பாட்டுகள் " - பாடும் ) வீதி வீதி எல்லாம் அலைந்து தெரியும் சாமியார நாடகத்தில் நான் வந்த பகுதி எல்லாம் சூப்பர் கிட். அதால என்னை கொஞ்சம் decend ஆ சாமியாரை மாத்தி சுவாமியார் என்று அழைக்க தொடங்கியாச்சு. இதை வலுச்சேர்க்க நான் கோவில் குளம் என்று அடிக்கடி மினக்கெடுவதால் இன்னும் பெயரை நிலைக்க செய்தது.

அதுசரி இப்பவும் அப்படி ஒரு ரோல் செய்தால் கட்டாயம் கலக்குவேன். கொஞ்சம் மேலதிகமாக அறிவு வளர்ந்து இருக்கு.


(நன்றி : சஞ்சீவன் )
இருந்தாலும் நான் ரொம்ப நல்லவன். பழகி பாருங்க தெரியும்.

2009-11-21

(புலம்பெயர் நாடுகள் + தமிழர்கள் ) இரசிக்கக்கூடிய அனுபவங்கள்

அண்மையில் நண்பர் ஒருவர் தனது வலையில் "தமிழ் " பற்றி எழுதி இருந்தார்.
கிடுகு வேலி:-வெல்லத்தமிழ் இனி மெல்லச்சாகுமா?

அதை தொடர்ந்து எனக்கும் ஒரு ஆர்வம் அதே தமிழ் பற்றி எழுதினால் என்ன ; கொஞ்சம் வித்தியாசமாய் ஐரோப்பிய புலம்பெயர் நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்களுடன் ஒரு அனுபவம் பற்றி எழுதினால் என்ன என்று ஒரு ஆர்வம் , ஆனால் அவர்களை நான் வடிவாக பார்க்க சந்தர்ப்பம் இல்லை. அவ்வாறு தெரிந்த ஓரிரண்டு குடும்பங்களும் வெவ்வேறு நாடுகளில். இருந்தாலும் இரண்டு சந்தர்ப்பங்கள். கோவில் இல்லை போனால் தியட்டர் .!!!ஊர்வலங்களில் , கவரும் ஒன்று கூடல்களில் இது எல்லாம் ஆகாது !!!


எம்மை போன்ற இளைஞர்களுக்கும் புதிய திரைப்படம் அன்று தான் புலம்பெயர் ஈழத்து தமிழரை ( பெரும்பாலும் பெண்களை ) காண முடியும் . வாயால் சொல்ல முடியாத நிலை, இப்படியா என்ன சரவணன் சார் இது என்று கையை நாடியில் வைச்சு சொல்லும் அளவுக்கு அவர்கள்!!!அவர்கள் எங்கயோ போட்டார்கள் ~~~கலாச்சாரம் சரி, உடை நடை பாவனை சரி.. என்ன செய்யுறது அவர்கள் இங்கே பிறந்து வளருவதால் வேற்று மொழி, கலாச்சாரம் , மாறும் காலநிலைகள் என்று எல்லாம் அவர்களின் விதி, இது பொதுவாகவே புலம்பெயர் ஈழத்தமிழரின் விதி.

இதைவிட ஊரில் இருந்து இங்கே திருமணம் செய்ய வந்தவர்கள் பலரும் தங்களை ஐரோப்பிய கலாச்சாரத்துக்கு மாற்றி ஏதோ தாங்கள் தமிழர்கள் இல்லை என்பதால் போலவும் இருக்கிறார்கள். :)

இருந்தாலும் அதுக்குள்ளே ஒன்று இரண்டு பேர் (சிறு பிள்ளைகள்) தமிழில் கதைக்கும் போது உணர்ச்சி உச்சந்தலையில் அடிச்ச மாதிரி இருக்கும். என்ன மாதிரி கதைக்கிறார்கள் என்று. கொழும்பில் பிழங்கும் ஒருவகை தமிழிலும் மேலாக நன்றாக கதைத்தார்கள் என்ற பெருமை இவர்களுக்கு இருக்கு. அது அவர்களின் பெற்றோர்கள் உணர்ந்து படிப்பித்து இருக்கிறார்கள் என்று பொருள் படும்.

இதை விட ஒரு சிலர் கதைத்ததை கேட்டும் இருக்கேன், அவர்கள் தமிழை கொன்றே கதைப்பார்கள், அது வேணும் என்று இல்லை , அவர்களுக்கு சொல்லி கொடுக்க அல்லது போனால் தமிழை பயில பயிற்சி கல்லூரிகள் பெரிதாக இல்லை . அவர்களுக்கு வேற்று மொழி கட்டாயம் பயில வேண்டும் அதனால் அவர்களுக்கு நேரமும் இல்லை மேலதிகமாக தமிழை படிக்க. அதை கொஞ்சம் சொல்லி குடுக்க அவர்கள் பெற்றோர்கள் முன்வருவதும் இல்லை. ஊக்கம் இல்லை என்றே சொல்லலாம்.

இனியென்ன நாங்கள் இங்கால வந்துட்டம் . இனியேன் தமிழ் என்று இருக்கிற சனத்தையும் பார்த்து உள்ளேன். :(

இங்குள்ள பல இளையோர் என்றால் நேரடியா ஈழத்தில் இருந்து வந்தவர்கள். அவர்கள் பிரச்சினை இல்லை. அவர்கள் வழமை போல கதைக்கிறார்கள்.

ஒரு முறை நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்று இருந்தேன். நீண்ட நேரம் உரையாடி கொண்டு இருக்கும் போது அவர்கள் பிள்ளைகள் வந்தார்கள் . எட்டு, பத்து வயசில் பிள்ளைகள். தமிழே தெரியுமா என்று கேட்டேன். " கொஞ்சம் கொஞ்சம் தெரியும் " என்று சொன்னார்கள். அந்த நேரம் எனக்கு ஞாபகம் வந்தது 95 இல் யாழ்ப்பாணம் அரசாங்க கட்டுப்பாட்டில் வந்த போது அங்கு நின்ற சீருடையினர் எங்களை போன்றோரிடம் கதைக்கும் போது கேட்பது "கொஞ்சம் கொஞ்சம் சிங்களம் தெரியுமா " என்று.. நாங்களும் " கொஞ்சம் கொஞ்சம் தெரியும்" என்று போட்டு அப்பி யனவா ( இது எங்கட பௌதீகவியல்- ரவி ஆசான் குப்பியில் சொல்லி தந்த ஒன்று) என்று சொல்லி கொண்டு போறது .. அதே மாதிரி மாறி போச்சு .. இப்போ.. இங்கே ..:(

மனசில் இப்பவும் நிக்குற கசப்பான சம்பவங்களில் இதுவும் ஒன்று:-
கொழும்பில் நான் நேரில் கண்ட அனுபவம் ":-இரண்டு தமிழ் நண்பிகள் மாதிரி எனக்கு முதலில் பட்டிச்சு. மட்டக்குளிய 155 பஸ் வண்டிக்குள் , தமிழே வராது மாதிரி , ஆங்கிலத்தில் விக்கி தக்கி கதைப்பார்களாம், ஏனிப்படி ??? ஒன்றில் தமிழை பாவிக்க பயப்பிடலாம் அல்லது ஆங்கிலத்தில் புலமை தேவை என்பதற்காக ஒரு முயற்சி என்று தான் நினைத்தேன். பிறகு கொஞ்சம் காதை கொடுத்து பார்த்தால் அவர்கள் இருவரும் தங்கள் MC போய் செய்ய இருக்கும் ஷாப்பிங் பற்றி பேசுறாங்கள் ஆங்கிலத்தில். இதை விட கொடுமை அவர்கள் ஒரு குடும்பத்தை சேர்ந்த அக்கா தங்கை மார். இதை மருதானையில் வண்டியை மறித்து அடையாள அட்டை பார்க்கும் போது எனக்கு பின்னுக்கு நின்றார்கள் என்பதால் அறிந்து கொண்டேன். இதை விட நம்பர் ஒன்று காமெடி என்ன வென்றால் ஓடுற பஸ்வண்டி தமிழில் பாட்டு போட்டு கொண்டு ஓடுது. அப்ப ஏனிந்த பில்ட் டப் ?? நான் பக்கத்தில இருக்கேன் என்றதுக்காக வா ?? சீ சீ .. இது இப்போ ஒரு கலாச்சாரமாய் வந்து கொண்டு இருக்கு. நான் ஆத்திரப்படவில்லை. கதைக்கலாம், குறை சொல்ல வில்லை , இது எல்லாம் ஒரு கலர்ஸ் இக்கு செய்யுற வேலை. அதாவது தங்களுக்கும் ஆங்கிலம் தெரியும் என்பதற்காக ..:)



புரட்டாதி சனியில் எள்ளு எண்ணெய் எரிக்கும் அடியார்கள். புலம்பெயந்தால் போல சமய நடவடிக்கைகளை மறக்கவில்லை என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டல்.



கொழும்பில் இப்போது எல்லாம் கற்பூரம் தடை. சூழல் மாசடைவதை காரணம் சொல்ல்கிறார்கள் .. ஆனால் எமது கலாச்சாரத்தில் அது அன்று தொட்டே கற்பூர தீபம் மூலம் பூசை செய்வது வழமை, அதனையே இங்கேயும் செய்கிறார்கள், பார்க்க பிரமிக்க வைக்கின்றது. இங்கு சூழல் மாசடைய வில்லையா ???


சிவ சுப்பிர மணியார் கோவில் நெதெர்லாந்து

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நான் முருகன் கோவில் செல்வது வழக்கம், அங்கே பார்த்தால் தான் தெரியும் , எப்படி எங்கள் சமூகம் எவ்வாறு கலாச்சாரம் பேணுகிறார்கள் என்று. பெண்கள், கலாசார உடை என்று சொல்லப்படக்கூடிய, சேலை அணிந்து,( வயது வந்தோர்), சிறுமிகள் சுடிதார் போட்டு,பொட்டு வைத்து கொண்டு வந்து இருப்பார்கள்.( வருத்தம்- இதை கொழும்பில் உள்ள ஆலயங்களில் காண முடியவில்லை.முக்கிய குறிப்பாக பேராதனையில் உள்ள குறிஞ்சிக்குமரனில் பெண்கள் என்றுமே கலாசார ஆடை அணிந்தே வருவார்கள். ) சுவாமி தூக்கும் போது வேட்டி அணிய வேணும் என்று ஒரு வழமை இருக்கு. கொழும்பில் அவ்வாறு செய்வதை நான் காணவே இல்லை. வேட்டி வாங்க வசதி இல்லை என்று நினைக்க வேண்டாம்.. இது எல்லாம் ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டியது. சரி நீங்க வேட்டி கட்டாவிட்டால் ஒதுங்கி இருங்க. அதுவே உத்தமம், யாரோ ஒருத்தன் உணர்ந்து வேட்டி கட்டி கொண்டு முன்னுக்கு வருவான். நிச்சயம் அது நடக்கும்.


சிவசுப்பிரமணியார் கோவில் நெதெர்லாந்து - அடியேன்


ஜுரிச் முருகன் ஆலயம்

நெதர்லாந்தில் உள்ள முருகன் கோவில் ஒன்றில், பூசைகளை தொடர்ந்து நடை பெறும் பஜனைகளை பெண்களே நடத்தி வைப்பார்கள். முறையாக சங்கீதம் பயில பயிற்சி பாசறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆலயத்திலும் அது அமைக்கப்பட்டுள்ளது. புலம் பெயர் தமிழர்களும் இன்று வரை தங்கள் கலாச்சாரத்தை , தங்கள் வரலாறுகளை பேணி பாதுகாத்து வருகிறார்கள் என்று எனக்கு உறுதிப்படுத்தப்பட்டது அண்மையில் சூரிச் சென்று இருந்த போது ஏற்பட்ட அனுபவங்கள் தான். அங்கே முருகன் மற்றும் சிவன் ஆலயங்கள் சென்றேன். அதை விட தமிழர் வாழும் பிரதேசங்களுக்கும் சென்று வந்தேன். அவர்கள் நூலகம்,தமிழ் மன்றம், சங்கீதசபை, விவேகானந்தர் சபை, திருவள்ளுவர் மன்றம், நடன சபை, திருமண சேவை எல்லாம் அமைத்து கலாசாரங்களை பேணியும் புலம்பெயர் சமூகங்களுக்கு புகட்டியும் வருகிறார்கள்.அவர்களுக்கு உரிய ஆர்வம் நாட்டில் இருக்கும் எங்களிடம் இல்லை என்றே சொல்லலாம்.


ஜுரிச் முருகன் கோவில்; சு .பி : ச்விச்ஸ் பிரான்க் )


அங்கே ஒரு சில சிறுவர்களுடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்களிடம் கேட்டேன் , யாழ்ப்பாணம் தெரியுமா ? நல்லூர் தெரியுமா ? திருகோணமலை தெரியுமா என்று? தெரியாது என்று பதில் வந்தது. சேர்ந்து யாழ்ப்பாணத்தில் இந்த தமிழரசன் ஆட்சி செய்தான் என்று பதிலை கூட சொல்லி முடித்தார்கள். கேட்கும் போது எனக்கே ஒரு அவமானம் மாதிரி. எத்தினை பேருக்கு பதில்தெரியும்? இப்படி எல்லாம் எங்கள் வரலாறுகளை படித்து இருகின்றார்கள் என்று கேட்கும் போது பிரமிக்க வைக்கின்றது.





சிவன் கோவில் - Zurich

சிங்கிலா சிங்கம்

இவ்வாறு இவர்களின் முயற்சிக்கு யார்தான் காரணம்; ஒன்று பெற்றோர்கள். மற்றது புலம்பெயர் நாடுகளில் ஈழத்து கலாசாரங்களை பேணி பாதுகாத்து வரும் விதத்தில்,பிரபல்யமான புலம்பெயர் பதிவுகளாக புலம்பெயர் சஞ்சிகைகள் விளங்குகின்றன. இவற்றில் ,கலை இலக்கியம் சார்ந்தனவே அதிகம். அவை கவிதை, சிறுகதை, தொடர்கதை, நூல் மதிப்பீடு, நூல் அறிமுகம், விமர்சனம், கட்டுரை, வாசகர் கருத்து, அரசியல், மாற்றுக்கருத்து, எதிர்வினை, ஆகியவற்றை பிரதானமாகவும் வேறும் சில விடயங்களை உபபிரிவுகளாகவும் கொண்டு வெளி வருகின்றன.
உண்மையாகவே குடுத்து வாங்கும் விலைக்கு ஏற்ற அளவு அவை தகவல்களை பகிர்கின்றன என்பது உறுதி.

எனக்கு வாங்கி படிக்க சந்தர்ப்பம் கிடைத்தவை.
உறவுகள்,தமிழ் முரசு, தமிழ்த் தென்றல், தாயகம், தேடல், பள்ளம், பாரிஸ் ஈழநாடு,தமிழ் ஏடு,சுவடுகள்,செய்திக்கதிர்.

இதை விட நாடுகளில் நல்ல பதிவர்களும் உருவாகி வருகிறார்கள், இணைய வசதிதானே இங்கே பிரச்சனை இல்லை அதனால் தேடியும் பயில கூடிய வசதி இருக்கு. இவற்றை எல்லாம் இந்த சமூகத்தில் இப்போது இருக்கின்ற நம்மை போன்றோர் வழி நடத்தினால் தான் எதிர் காலத்தில் தமிழை மட்டும் அல்ல எங்கள் கலாச்சாரத்தையும் சேர்த்து பாதுகாக்க முடியும் என்பதில் ஐயம் இல்லை.

மேலதிகமாக ஊடகத்துறை ; தமிழ் தனியார் ஊடகங்கள் பல இப்போது உலகெங்கும் பல உருவெடுத்து வருகின்றது. அவை பல சினிமாவை வைத்துதான் இயங்குகின்றன. சினிமா மூலம் தான் இயங்கலாம். உண்மை . இருந்தாலும் அறிவியல் , மொழி, கலாச்சாரம் சம்மந்தமாக கொஞ்சம் கூடுதலாக ரசிகர்களிடையே பகிரலாம் என்று நான் நினைக்கின்றேன்.

இறுதியாக, அண்மையில் நடைபெற்ற ஒரு கலாச்சார நிகழ்ச்சிக்கு செல்லக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அங்கே நடை பெற்ற நிகழ்ச்சிகளில் கலாச்சாரத்தை கட்டி காக்கும் கூத்து, நடன நிகழ்ச்சி, இசையமுதம் என்னையே மறந்து போய் இருந்து ரசிக்கும் விதத்தில் இருந்தது.

குறிப்பாக, நாட்டு கூத்தும் , கீழைத்தேய இசையமுதமும் பெண்களே செய்தார்கள். நன்றாகவே இருந்தது. நீண்ட நாட்களுக்கு பின்னர் ( பல்கலைக்காலத்துக்கு பின்னர் என்றே சொல்லலாம்) நல்ல ஒரு நிகழ்ச்சியை பார்த்தேன் ரசித்தேன்.

ஒரு புறம் இப்படி இருக்க....மறு புறம் ...மிகவும் கொடுமையான கலாச்சார சீரழிவுகளில் ( நைட் கிளப், மது பாவனை, புகைப்பிடித்தல் , அறம் புறம்பான தகாத உறவுகள் ) புலம்பெயர் நாடுகளில் எமது பெண்களே கொண்டு இருக்கிறார்கள் (இதுக்கேன் இங்கே வரணும் இப்போ தமிழர் வாழும் கொழும்பிலையே அரங்கேறி வருவதாகவும் ) நண்பர்கள் கூற கேட்டு உள்ளேன்.

நாங்கள் தான் எதிர்கால சந்ததியினர்; எதிர் காலத்தை உருவாக்கும் சந்ததியினர். நாங்கள் ஒவ்வொருவரும் எடுக்கும் ஆர்வம் தான் எங்களின் பின் எங்கள் மொழி எங்கள் கலாச்சாரம் எல்லாவற்றையும் பாதுகாக்கும் என்பது உறுதி.

கொஞ்சம் சிந்தியுங்கள் தோழர்களே. இனியாவது களத்தில் இறங்குங்கள்.

2009-11-20

இந்த வாரத்தை கலக்கிய சோகமான உதைபந்தாட்ட போட்டி முடிவுகள்

தென் ஆபிரிக்காவில் வரும் 2010ல்(ஜூன் 11-ஜூலை 11) 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்க உள்ளது. இதற்கான இரண்டாவது லீக் போட்டிகள் தற்போது நடை பெற்று முடிந்தன.
இதில் இறுதியாக இந்த வாரம் நடந்த போட்டிகளில் ( இறுதிப்போட்டி அல்ல )

  1. விறு விறுப்பாக்கிய பிரான்ஸ் -அயர்லாந்து FIFA உலக கோப்பை


இந்த போட்டியை வென்றால் தான் தென்னாபிரிக்கா செல்லலாம் என்று இருந்த பிரான்சுக்கு அயர்லாந்தின் Robbie Keane 32வது நிமிடத்தில் அடித்த கோல் பிரஞ்சு ரசிகர்களை ஒரு கணம் ஆட செய்தது.
Robbie Keane

திறமையான, முதல் தரமான பல வீரர்களை தனகத்தே கொண்ட பிரான்ஸ் இறுதி வரை போராடிய போதும் , வழங்கப்பட்ட மேலதிக நேரத்தின் இறுதி நிமிடத்தில் வெளியே சென்ற பந்தை ஹென்றி யின் கை மறித்தது மட்டும் இன்றி ஹென்றியே அதே பந்தை வில்லியம் காலாஸ் இக்கு பாஸ் செய்ய வில்லியம் காலாஸ் அடித்த கோலுடன் பிரான்ஸ் இம் தகுதி கண்டது.



நடுவர் ஹென்றியின் கையில் பந்து பட்டத்தை கவனிக்கவில்லை யாதலால் பெரும் சர்ச்சை போட்டி முடிந்த பிறகு ;

இதற்கிடையில் பிரெஞ்சு கேப்டன் ஹென்றி திரும்ப போட்டி நடத்தினால் அதை தான் ஆமோதிப்பதாக கூறிய செய்திகளும் பரவி வருகின்றன. இருந்தாலும் நடை பெறும் வாய்ப்பு அரிது என்று பலர் கூறு கின்றனர்.

ஹென்றியின் கையில் பந்து படும் போது நடுவர் கவனிக்க வில்லையாதலால் இது நடுவரின் தவறே தவிர வேறு யாரும் எதுவும் செய்ய முடியாது என்று FIFA ம் அயர்லாந்தின் கோரிக்கையை கால வாரி விட்டது.

அவர்கள் வழங்கிய அறிக்கையின் ஒரு பகுதி ஆங்கிலத்தில்:

FIFA said in a statement: "FIFA has replied to the request made by the Football Association of Ireland to replay the 2010 FIFA World Cup play-off match held on 18 November 2009 between France and the Republic of Ireland in Paris.

"In the reply, FIFA states that the result of the match cannot be changed and the match cannot be replayed. As is clearly mentioned in the Laws of the Game, during matches, decisions are taken by the referee and these decisions are final."


உண்மையும் அதுதானே நடுவர்கள் சிலவேளைகளில் விடும் தவறால் பாரிய இழப்புகள் எந்த விளையாட்டிலும் இடம்பெறுதல் வழமை. :)


2.ரஷியாவை வீழ்த்திய ஸ்லோவானியா

வென்றாக வேண்டிய கட்டாயத்தில் ரஷ்யா ச்லோவானியா விற்கு எதிராக களமிறங்கியது. கடந்த 2002ல் தென் கொரிய அணியை உலக கோப்பை அரையிறுதிக்கு அழைத்துச் சென்ற Guus Hiddink , இம்முறை ரஷ்யாவின் பயிற்சியாளராக இருந்தார். இதனால் எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 44வது நிமிடத்தில் ஸ்லோவேனிய வீரர் ஸ்லாட்கோ டெடிக், ஒரு சூப்பர் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்று தந்தார். இதற்கு ரஷ்யாவால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இறுதியில் ஸ்லோவேனிய அணி 1-0 என வெற்றி பெற்று உலக கோப்பை தொடருக்கு முன்னேறியது. கால்பந்து ரேங்கிங் பட்டியலில் தற்போது 12வது இடத்தில் உள்ள ரஷ்யா, கடந்த 1994, 2002ல் உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. 2006ல் தகுதி பெறாத இந்த அணி, மீண்டும் ஏமாற்றம் அளித்துள்ளது.


தென்னாபிரிக்கா FIFA 2010 செல்ல தகுதியான அணிகள்

ஆபிரிக்கா :
ஆசியா :
ஐரோப்பா:

வட, மத்திய அமெரிக்காவும் கரிபியன் தீவுகளும் :

ஓசானியா :
தென்னமெரிக்கா :

இறுதியாக உலகக்கோப்பையை நடத்தும் நாடு :

மொத்தமாக 32 நாடுகள்:)





Related Posts Plugin for WordPress, Blogger...