2010-01-30

முக்கிய செய்தி : மெரீனா கடல் கரையில் நடந்த சோகமான நிகழ்ச்சி


மெரீனா கடல் கரை





தமிழ் நாட்டில் நடந்த மிகத்துயரமான சம்பவம்:
காட்சி :


திடீர் என்று நேற்று முன் தினம் மாலை நேரம் , சென்னை மெரீனாகடல் கரை
அலைகள் ஆக்ரோஷமாக கடற்கரையில் மோதியதை அடுத்து கடற்கரையோரமுள்ள மசூதி, வீடுகள்,கோவில்கள் , பள்ளி கூடங்கள் வரை கடல் நீர் வந்து சென்றது. இதனால் மீனவ குடும்பங்கள் , சுற்றுலா பயணிகள் யாரவது இறந்து இருக்கலாம் என்று நேற்று முழுவதும் ஹெலிகாப்டரில் தேடியும், உடல்களை கண்டுபிடிக்க முடியவில்லை. விடிய விடிய படகு மூலம் தேடினார்கள். ஆனாலும் உடல்கள் கிடைக்க வில்லை. ஆனால் நடந்தது வேற எதுவோ..

கண்ணுக்கெட்டிய தூரம் வரை விதம் விதமான மீன்கள் செத்து கிடந்தது. உடனடியாகவே முதல்வர், கடல் சார்ந்ததொழில் சங்கங்கள் என்று தகவல் அறிவிக்கப்பட்டது. விசாரணைக்குழுவும் அமைச்சாச்சு.( இது தானே முதலாவதா செய்யுற வேலை )

இதுபற்றி விசாரணைக்குழுவில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-


சம்பவம் நடந்த அன்று மெரீனா கடல் கரையில் நடந்த பட ஷூட்டிங் தான் காரணம்...என்றார் .

மேலும் அங்கே நடந்த சம்பவங்களை பார்த்து அதனால் உளவியல் தாக்கம் அடைந்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று மிருக வைத்தியர் கூட விஷேட பத்திரிகை யாளர் மகாநாட்டில் சொல்லியிருந்தார் .


என்ன ஷூட்டிங் என்று உடனே பொலிசு உட்பட எல்லாருமே தேடி தேடி பார்த்தால் ...... என்ன யோசிக்ரீங்களா ??



?
???
????
????
???

?
??
??


வேற என்ன நம்ம இளைய தளபதியின் சுறா படத்தின் ஷூட்டிங் ஐ பார்த்திட்டு
தாங்க முடியாமல் தற்கொலை செய்திட்டுதுகள்.. :)



குறிப்பு: சென்னையில் இருந்து தகவல் அனுப்பிய சங்கர் இக்கு வாழ்த்துக்கள்..
படம் மினஞ்சலில் வந்தது உண்மை.. இப்படியெல்லாம் நடந்ததா ..என்று போய்த்தான் பார்க்கணும் :)
ஸ்ஹபாஆஆஆஅ இப்பதான் நிம்மதியா இருக்கு.. :)

2010-01-27

ஜன நாயக நாட்டில் - இராணுவ ஆட்சி வேண்டாம் என்று தீர்ப்பு

தேர்தல் முடிவுகள் வந்து முடியும் தருவாயில் ஏற்கனவே மாண்பு மிகு ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஸ பதினைந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று கொண்டு இருக்கார்.
தேர்தல் இல் எந்த வித குளறு படியும் நடக்க வில்லை என்று எதிர் கட்சி தலைவர் கூட கூறிய நிலையில் , இந்த வளமான எதிர் காலத்தை உருவாக்க மகிந்தவுக்கு அனுமதி கொடுத்து இருக்கிறார்கள்.



அதி மதிப்புக்குரிய ஜனாதிபதி பிடிக்கிற விதத்தில் தெரியுது இல்ல..நினைச்சன் அப்பவே இதுதான் அர்த்தம் என்று .." சும்மா பேரை கேட்டாலே அதிருதில .... "

ஆமா ஜனாதிபதி அவர்களே ,அதிர்ந்தது..

எங்கள் ஜனாதிபதி நாட்டையும் வளப்படுத்து வார் என்பதில் ஐயம் இல்லை. அடுத்த ஆறு ஆண்டுகள் உங்கள் ஆட்சியில் இன்னும்பல விடிவுகள் வரணும் என்று வாழ்த்துகிறோம்.

இலங்கையில் இனி மீண்டும் வளமான எதிர்காலம் தொடரும்;தொடங்கும்.


ஜனநாயக நாட்டில் இராணுவ ஆட்சி நடக்க விடுவமா? நாங்கல்லாம் யாரு? மக்கள் தலைவன் மகிந்த வாழ்க..வெற்றியின் சின்னம் வெற்றிலை சின்னம்.

2010-01-26

!!!.....குத்துங்க ஐயா குத்துங்க.....!!!

இன்று இலங்கை ஜனாதிபதி தேர்தல், நான் என்றுமே அரசியல் எழுதுறது இல்லை. இங்கவும் அதே தான்.
வாக்களிப்பது கடமை.. கட்டாயம் வாக்களித்து விடுங்கள் . நாங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானித்து வாக்களியுங்கள்.

நான் பார்த்து ரசித்த தேர்தல் காமெடிகள் சில.. நீங்களும் ரசியுங்கள்..

1- குறள் அமுதம்

"அடிச்சு சொல்லுறன்... மாற்றம் ஒன்று தேவை..
ஆனால் மாறாது ஐயா மாறாது .. அடிச்சு சொல்லுறன்"


2 - நண்பியின் மூஞ்சி புத்தகத்தில்

கொழக்கட்டையோ மோதகமோ எதுவெண்டாலும் உள்ளுக்க இருக்கிறது ஒண்டுதான். புள்ளடியை பாத்து குத்துங்கப்பா..!


3- வடிவேல் காமெடி




4- விவேக் காமெடி




5- சத்தியராஜ் காமெடி

2010-01-22

பொங்கல் செய்வது எப்புடி.. டமிள் பொங்கள்..!

பொங்கல முடிஞ்சு ஒரு வாரமாகிட்டு. என்னடா இவன் இப்போ பொங்கல் பற்றி சொல்லுறானே .. ஆமா.. நமீதா பொங்கல் ..
சன் டிவி நடத்திய எப்படி பொங்கல் செய்வது நிகழ்ச்சியில் நமீதா கண்ணுக்கு பொங்கல் செய்து காட்டி குடுத்தார்கள் ..

நமீதா ரசிகர்கள் அம்மணி ஓரளவுக்கு முழு ஆடையில் வந்து இருந்ததால் பொங்கல் தினம் ............ தினமா கொண்டாடினதாக சொல்லப்படுகின்றது.

நமீதாவுக்கு பொங்கலென்றால் என்ன ? என்றுகேட்க .டமக்கு என்று வந்த பதில் சாப்பிட தானே.. ..சபாஷ் ... :)


இப்படி எல்லாம் அறிவு படைத்த நமீதா தான் பொங்கல் விருந்தாளி ?? பொங்கலின் வரலாறு கூட தெரியாது. பொங்கல் ஆறு கோடி தமிழர்களின் பெரும் விழா . தமிழ் புத்தாண்டு. தமிழில் கதைக்க தெரிந்த ஒருவரை கூட்ட்டிடு வந்து பொங்கல் விழாவை செய்து இருக்கலாம் .முந்தி எல்லாம் யாரவது ஒரு தமிழ் நடிகர் / நடிகை வீட்டுக்கு சென்று அங்கே நடக்கும் பொங்கல் நிகழ்ச்சியை தான் ஒளி பரப்பி வந்தார்கள். இப்போது இவர்கள் சொல்லி கொள்வது தமிழ் வளர்ப்போம் என்று அரசியலுக்கு மட்டும் .. செய்வது முழுக்க கேவலமான செயல்கள்.
உலகிலே இருக்க கூடிய மகா கொடுமை இந்த நிகழ்சிகளை நம்மவர்கள் நாக்கை தொங்க போட்டு கொண்டு பார்ப்பதுதான். :)

பொங்கலில் சேர்ப்பதற்கு diet ghee இல்லையா என்ற நமீதாவின் கேள்வியில் அதிர்ந்து போனார் சமையல் காரர் . மயக்கம் போடாத குறையாக அப்படி ஒன்றை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று கூறி ஒருவழியாகச் சமாளித்தார்.




சமைக்க வந்தவர் பொங்கல் பற்றி தானே கதைக்கனும். அவரும் நமீதாவின் உடல் பராமரிப்பு , என்ன இது போடு வீங்க, எப்படிபோடுவீங்க என்று தான் கேட்டு கொண்டு இருப்பார்..


பொங்கலுக்கு ஒரு பெயர் வைச்சாங்க பாரு : "பொங்கல் மச்சான் பொங்கல்", நான் நினைக்கிறன் இப்ப இந்த menu வும் இந்தியாவில் உணவகங்களில் வந்து இருக்கும் என்று நினைக்கிறன்.. எங்க நிலவரம் இப்பிடி ..

விளம்பர இடை வேளை ஆரம்பம்

நண்பன் சொன்னது , நமீதா அடுத்த முறை சிக்கென் செய்வது எப்படி நிகழ்ச்சியில் வந்தால் , நமீதா சிக்கென் என்று பெயரும் வைச்சு ஒரு மெனு வந்தாலும் வரும்.. சாமியுங்கோ .. :) இது மட்டுமா.. நமீதா பாயாசம்.. நமீதா வடை எல்லாமே வந்தாலும் வரும்...

விளம்பர இடை வேளை முடிவு

ஒருவழியாகப் பொங்கல் வைத்து முடித்தவுடன் அதை ஸ்பூனில் எடுத்து அனைவரும் சியர்ஸ் சொல்லிச் சாப்பிட்டார்கள். என்ன கொடுமை என்ன இது கள்ளு கொட்டிலா அல்லது music பார் ஆ ?? சியர்ஸ் சொல்ல??



நிகழ்ச்சியின் முடிவில் தன்னைத் திருமணம் செய்துகொள்ள propose செய்யுமாறு தமிழ்நாட்டின் அனைத்து இளைஞர்களுக்கும் நமீதா விடுத்த அழைப்பு இருக்கே .. இதனால் உங்க கன பேருக்கு தபால் சிலவு வந்து இருக்கும். இப்படி எல்லாம் நிகழ்ச்சிகளை வழங்குகிறார்கள் என்ன கொடுமை.. :)

குறிப்பு: பொங்கல் மச்சான் பொங்கல் எல்லாரையும் ட்ரை பண்ண சொல்லி இருக்காங்க..

நமீதா வாழ்க! டமிள் பொங்கல் வாழ்க! .. டமிள் வாழ்க ..!

ஒம்க்ரீம் நமீதா நமக
நமீதா சரணம்

2010-01-19

தூக்கத்தை கெடுத்த " எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி , உன்னைப் பாராமலே மனம் தூங்காதடி "


ராத்திரி படுப்பம் என்று போனால் ஒரு பாட்டு என்னை தூங்காமல் பண்ணி போட்டு.. எனக்கு பிடிச்ச பாட்டு.. ஒருக்கா நீங்களும் கேளுங்கள் :)

டி
ஆர் ராஜேந்திரர் இரண்டு வேடங்களில் நடித்த ( யாரோ சொன்னாங்கள் ஒரு வேடமே கொடுமை . .....இரண்டு முகத்தையா.. ஆமா... வில்லில் வந்த அப்பா விஜய் கொடுமை போல ..தங்கிக்குங்க) படம் தான் உறவை காத்த கிளி. அந்த படத்தில் வந்த ஒரு பாட்டு .. ஜேசுதாஸ், சசிரேகா பாடினது. இரவு வேளையில் winter நேரத்தில் ஜேசுதாசின் பாடல்கள் கேட்டாலே .. ஒரு வித்தியாச மான அனுபவம் தான் :)

எனக்கு ஏலுமான வரை என்னிடம் இருந்த தொழில் நுட்ப வசதியை பயன்படுத்தி கதையுடன் கூடிய பாடலாக தருகின்றேன்..
( யார் நித்திரையை குழப்பினது என்று கேட்க வேணாம் .. அது யாருமே இல்லப்பா # SG )




கனவென்னும் ஆலைக்குள் அகப்பட்ட கரும்பே
நினைவென்னும் சோலைக்குள் பூத்திட்ட அரும்பே

எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
உன்னைப் பாராமலே மனம் தூங்காதடி

தீம்தன தீம்தன தீம்தனா....தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா....தீம்தன தீம்தன தீம்தனா

எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
உன்னைப் பாராமலே மனம் தூங்காதடி
வலம்புரி சங்கை கூட உன் கழுத்து மிஞ்சுதடி வஞ்சி மலரே
ஹோ..நிலவதன் தங்கை என
உன் ஜொலிப்பு சொல்லுதடி வைர சிலையே

எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
உன்னை பாராமலே மனம் தூங்காதடி
வசந்தமென்னும் ஒரு பாவை
நீ அசைந்து வந்த ஒரு சோலை
வசந்தமென்னும் ஒரு பாவை
நீ அசைந்து வந்த ஒரு சோலை

பப பாப்ப... பாப்பா... பா பா... பபபா.பாப்பா... பா பா... பபபா......
தீம்தன தீம்தன தீம்தனா...தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா....தீம்தன தீம்தன தீம்தனா

பொய்கை தாமரையில் புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா
போதை ஏற்றிக்கொள்ள தாளம் போடுதடி அம்மம்மா
பொய்கை தாமரையில் புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா
போதை ஏற்றிக்கொள்ள தாளம் போடுதடி அம்மம்மா
பொய்கை வண்டாய் உன் கை மாற
மங்கை நாண செய்கை செய்தாய்
வைகைபோல் நாணத்தில் வளைகின்றேனே
வை கை நீ என்றுன்னை சொல்கின்றேனே

எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
உன்னை பாராவிடில் நித்தம் உறங்கா விழி

தீம்தன தீம்தன தீம்தனா....தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா......தீம்தன தீம்தன தீம்தனா

பச்சை அரிசி என பற்கள் கொண்ட உந்தன் புன்சிரிப்பு
நெஞ்ச பானையிலே நித்தம் வேகிறது உன் நினைப்பு
பச்சை அரிசி என பற்கள் கொண்ட உந்தன் புன்சிரிப்பு
நெஞ்ச பானையிலே நித்தம் வேகிறது உன் நினைப்பு
வார்த்தை தென்றல் நீ வீசும்போது
ஆடும் பூவாய் ஆனேன் மாது
இதழோரம் ஜில் என்று நனைகின்றது
சிந்தும் தேன் கூட சிந்தொன்று புனைகின்றது

எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
உன்னைப் பாராமலே மனம் தூங்காதடி
வலம்புரி சங்கை கூட உன் கழுத்து மிஞ்சுதடி வஞ்சி மலரே
ஹோ..நிலவதன் தங்கை என
உன் ஜொலிப்பு சொல்லுதடி வைர சிலையே
வசந்தமென்னும் ஒரு பாவை
நீ அசைந்து வந்த ஒரு சோலை
வசந்தமென்னும் ஒரு பாவை
நீ அசைந்து வந்த ஒரு சோலை



2010-01-18

படம் சொல்லும் கதை: உலகின் மிகப்பெரிய கட்டிடமான பர்ஜ் கலீபா-மீது மின்னல் தாக்கிய போது

160 மாடிகள் கொண்ட( 828m) இந்த கட்டிடம் அண்மையில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான வேளையில் எடுத்த சில புகைப்படங்கள்.


கடல் பகுதியில் இருந்து :





கடல் பகுதியில் இருந்து :


]
கடல் பகுதியில் இருந்து :



நகரப்பகுதியில் இருந்து:




தூர நோக்கில் :



கட்டிடத்துக்கு அண்மையில் இருந்து:



கட்டிடத்துக்கு அண்மையில் இருந்து:


கட்டிடத்துக்கு அண்மையில் இருந்து:



கட்டிடத்துக்கு அண்மையில் இருந்து:

2010-01-17

சிட்னியை கலக்கிய ரகுமானின் இலவச இசையமுதம்

தை மாதம் 16 ஆம் திகதி சிட்னி -ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் குடுத்து வைச்சவர்கள். இசைப்புயல் A.R.Rahuman நடத்திய இலவச இசை விருந்து தான் ..

திருட்டு காணொளிகள் பல இணையத்தில் உலாவ தொடங்கினாலும்.. ஒரிஜினல் வரும் வரை பொறுக்க முடியாது.. எனக்கு தெரிந்த வரையில் முழுமையாக உள்ளடக்கப்பட்டு இருக்குது.



காட்சி 1




காட்சி 2





காட்சி 3



காட்சி 4



காட்சி 5



காட்சி 6



காட்சி 7


காட்சி 8



காட்சி 9


காட்சி 10


காட்சி 11


காட்சி 12




காட்சி 13


காட்சி 14

Related Posts Plugin for WordPress, Blogger...