ராத்திரி படுப்பம் என்று போனால் ஒரு பாட்டு என்னை தூங்காமல் பண்ணி போட்டு.. எனக்கு பிடிச்ச பாட்டு.. ஒருக்கா நீங்களும் கேளுங்கள் :)
டி ஆர் ராஜேந்திரர் இரண்டு வேடங்களில் நடித்த ( யாரோ சொன்னாங்கள் ஒரு வேடமே கொடுமை . .....இரண்டு முகத்தையா.. ஆமா... வில்லில் வந்த அப்பா விஜய் கொடுமை போல ..தங்கிக்குங்க) படம் தான் உறவை காத்த கிளி. அந்த படத்தில் வந்த ஒரு பாட்டு .. ஜேசுதாஸ், சசிரேகா பாடினது. இரவு வேளையில் winter நேரத்தில் ஜேசுதாசின் பாடல்கள் கேட்டாலே .. ஒரு வித்தியாச மான அனுபவம் தான் :)
எனக்கு ஏலுமான வரை என்னிடம் இருந்த தொழில் நுட்ப வசதியை பயன்படுத்தி கதையுடன் கூடிய பாடலாக தருகின்றேன்..
( யார் நித்திரையை குழப்பினது என்று கேட்க வேணாம் .. அது யாருமே இல்லப்பா # SG )
கனவென்னும் ஆலைக்குள் அகப்பட்ட கரும்பே
நினைவென்னும் சோலைக்குள் பூத்திட்ட அரும்பே
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
உன்னைப் பாராமலே மனம் தூங்காதடி
தீம்தன தீம்தன தீம்தனா....தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா....தீம்தன தீம்தன தீம்தனா
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
உன்னைப் பாராமலே மனம் தூங்காதடி
வலம்புரி சங்கை கூட உன் கழுத்து மிஞ்சுதடி வஞ்சி மலரே
ஹோ..நிலவதன் தங்கை என
உன் ஜொலிப்பு சொல்லுதடி வைர சிலையே
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
உன்னை பாராமலே மனம் தூங்காதடி
வசந்தமென்னும் ஒரு பாவை
நீ அசைந்து வந்த ஒரு சோலை
வசந்தமென்னும் ஒரு பாவை
நீ அசைந்து வந்த ஒரு சோலை
பப பாப்ப... பாப்பா... பா பா... பபபா.பாப்பா... பா பா... பபபா......
தீம்தன தீம்தன தீம்தனா...தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா....தீம்தன தீம்தன தீம்தனா
பொய்கை தாமரையில் புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா
போதை ஏற்றிக்கொள்ள தாளம் போடுதடி அம்மம்மா
பொய்கை தாமரையில் புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா
போதை ஏற்றிக்கொள்ள தாளம் போடுதடி அம்மம்மா
பொய்கை வண்டாய் உன் கை மாற
மங்கை நாண செய்கை செய்தாய்
வைகைபோல் நாணத்தில் வளைகின்றேனே
வை கை நீ என்றுன்னை சொல்கின்றேனே
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
உன்னை பாராவிடில் நித்தம் உறங்கா விழி
தீம்தன தீம்தன தீம்தனா....தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா......தீம்தன தீம்தன தீம்தனா
பச்சை அரிசி என பற்கள் கொண்ட உந்தன் புன்சிரிப்பு
நெஞ்ச பானையிலே நித்தம் வேகிறது உன் நினைப்பு
பச்சை அரிசி என பற்கள் கொண்ட உந்தன் புன்சிரிப்பு
நெஞ்ச பானையிலே நித்தம் வேகிறது உன் நினைப்பு
வார்த்தை தென்றல் நீ வீசும்போது
ஆடும் பூவாய் ஆனேன் மாது
இதழோரம் ஜில் என்று நனைகின்றது
சிந்தும் தேன் கூட சிந்தொன்று புனைகின்றது
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
உன்னைப் பாராமலே மனம் தூங்காதடி
வலம்புரி சங்கை கூட உன் கழுத்து மிஞ்சுதடி வஞ்சி மலரே
ஹோ..நிலவதன் தங்கை என
உன் ஜொலிப்பு சொல்லுதடி வைர சிலையே
வசந்தமென்னும் ஒரு பாவை
நீ அசைந்து வந்த ஒரு சோலை
வசந்தமென்னும் ஒரு பாவை
நீ அசைந்து வந்த ஒரு சோலை
No comments:
Post a Comment