2010-05-15

எந்த ஊரை சொல்லுறது??

தேசிய அடையாள அட்டை மாற்றனும். இத்தனை வயசாச்சு ( மூன்று கழுதை வயசு) இப்பவும் பாடசாலை மாணவன் என்று போட்டு இருந்தால், அதை பார்த்திட்டு என்னையும் பார்த்திட்டு (எனது வடிவையும் , உடலமைப்பையும் சொன்னேன் ) கட்டி வைச்சு பொல்லால அடிப்பாங்கள் . அதால அட்டையை மாற்றுவம் என்று போட்டு விதானையிட்ட போய் ஒரு பத்திரம் எடுத்து நிரப்ப வெளிக்கிட்டால் கனக்க பிரச்சினை.

இருந்த ஊர்களில் எந்த ஊரை சொந்த ஊர் என்று போடுறது. பிறந்த இடத்தை தான் போடுறது வழமை . இருந்தாலும் பிறந்த ஊரில் நான் ஒரு அல்லது இரண்டு வருடம் தான் இருந்தேன். வவுனியாவில் எட்டு வருடங்கள் , சுன்னாகத்தில் ஒரு வருடம் , யாழ்ப்பாணத்தில் எட்டு வருடங்கள், கொழும்பில் பதினான்கு வருடங்கள் ( இதுக்க கண்டியில் ஐந்து வருடங்கள் , நெதர்லாந்தில் மூன்று வருடங்கள் , வேலை செய்யும் ஊர் ஐந்து வருடங்கள் உள்ளடக்கம்).

விதானை என்னுடைய கதையை கேட்டால் தலை சுத்தி விழுந்தாலும் விழுந்திடுவா. ( அம்மையார் தான் விதானை) . தொழிலை விட்டுட்டு போனாலும் போயிடுவா. ஹா ஹா :)

பிறந்த ஊர், இருந்த ஊர், புகுந்த ஊர், புலம்பெயர்ந்த ஊர் , படித்த ஊர், வேலை செய்யும் ஊர், எத்தனை ஊரையா எம்மளுக்கு ?? நம்மளுக்கு எங்கு இருந்தாலும் எல்லாம் ஒன்று தான்.


(கண்ணனின் யாழ் புகைப்பட தொகுப்பில் இருந்து )

இந்த ஊர் கதை சொல்லும் போது எனக்கு பிடித்த கண்ணதாசனின் வரிகள் ஞாபகத்துக்கு வருகின்றது.
எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரை சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட
அறிந்த ஊர் அல்லவா?

மிகவும் பழைய பாடல் ..கேட்டு ரசித்து பாருங்கள்..

2010-05-09

அன்னையர் தினமும் "அம்மா" க்களும்

இன்று உலகமெங்கும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகின்றது. என்னை பொறுத்த மட்டில் வருடம் முழுதும் கொண்டாடினால் தான் அவளருமை, பெருமை களை சொல்லி முடிக்கலாம். எல்லாருடைய அம்மாக்களும் போற்றப்பட வேண்டியவர்கள். அவர்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.


என் வாழ்வில், எனது அம்மா குருவாக, அன்னையாக, வாழ்கையின் ஒவ்வொரு படிகளிலும் எனக்கு உதவியாக/ வழிகாட்டியாக இருந்து வருகின்றதை நினைக்க பெருமையாக இருக்கின்றது. எனது அன்னையர் தின வாழ்த்துக்கள் உங்களுக்கு உரித்தாகட்டும்.

எனக்கு பிடித்த அம்மா பாட்டு... உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைகின்றேன் ...


2010-05-07

தற்காலிக பின்னடைவுகள், மனதை உருக்கிய பாடல், சுறா அனுபவங்கள்

தற்காலிக பின்னடைவுகள்:

மலையே ஆடினதாம் மதிலாடினால் என்ன. அதுதான் எனது திருமண வாழ்க்கை, இன்னும் ஒரு இரு நாட்களுக்குள் முற்று புள்ளிக்கு வந்து விடும். நீண்ட நாட்களாக நான் பட்ட துன்பியல் அனுபவங்களுடன் கூடிய விளக்கமான அறிக்கை கொழும்பு மாவட்ட நீதி மன்றம் விவாகரத்து வழங்கப்படுகிறது என்று அறிவித்த பின்னர் தரப்படும். அனுபவங்கள் வாழ்கையின் பாடங்கள்......:)

மனதை உருக்கிய பாடல்:
கடந்த வாரம் 155 இலக்க பஸ்ஸில் மருதானைக்கு சென்று வர வேண்டியதாயிற்று. வெள்ளவத்தையில் ஏறும் போது பஸ்ஸில் சனமே இல்லை, இருந்தாலும் கொஞ்ச சனத்தை தன் சாதுரியத்தால் சேர்த்து போட்டான். முன் ஆசனத்தில் இருந்து பஸ்ஸின் இசைதட்டில் இருந்து ஒலித்து கொண்டு இருந்த அழகான சோக பாடல்களை இரசித்து கொண்டு இருந்தேன். கேட்ட பாடல்களில் எனக்கு பிடித்த, என்னை இரசிக்க வைத்த பாடல் இதுதான்.
நெஞ்சே நெஞ்சே பாவை நெஞ்சே ........................:)



விசேடமாக இந்த பாட்டை ஓட்டுனர் திருப்பி திருப்பி போட்டு பஸ்ஸில் சென்றோருக்கு தன் காதல் "வலி"மையை உணர்த்தி விட்டார். மருதானையில் இறங்கும் போது அவருக்கு ஒரு வாழ்த்து சொல்லி போட்டு இறங்கினேன்:).


சுறா அனுபவங்கள்

நீண்ட நாட்கள் வெளிநாட்டில் இருந்து வித்தியாசமான இரசிகர்களுடன் திரைப்படம் பார்த்து வந்த நான் , அண்மையில் விஜய் இன் சுறா படத்தை லோக்கல் பஜாருடன் பார்த்து ரசித்தேன்( ஒரு பொய் சொல்லுறன் ). தமன்னாவுக்காக தான் நான் அந்த படத்தை பார்த்தேன். தமனாவை ரசித்தேன். படம் பரவாய் இல்லை .. இருந்தாலும் விஜய் அடுத்த முறையாவது அடுத்தவன் காசை சுரண்ட முன், கொஞ்சம் கவனமாய் படத்தை எடுத்தால் சரி.

சுறா படம் பற்றி வந்த ஜோக்ஸ் களில் எனக்கு பிடித்தது :

மும்பை: மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள அஜ்மல் கசாப்புக்கு மரண தண்டனையை விட அதிகபட்ச தண்டனையாக கட்டி வச்சு சுறா திரைப்படம் பார்க்க விடவேண்டும் என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் இன்று கோரிக்கை விடுத்தார்:)

2010-04-24

கொழும்பு வர வேற்(ர்க்)கிறது

நீண்ட நாட்களுக்கு பின் தாயகம் திரும்பி இருக்கிறம். போன அலுவல்களை கச்சிதமாய் முடித்து விட்டு, போன இடத்து பழக்க வழக்கங்கள் , கலாச்சாரங்கள் ..இன்னும் பலவற்றை கற்று , பார்த்து தெளிந்து போட்டு , முன்னர் பலர் சொல்லும் குறள் "இருந்தாலும், இறந்தாலும் நம்ம ஊரில் தான் என்று சொன்னது சரி என்று கொண்டு , கடந்த சில நாட்களுக்கு முன் ஐரோப்பாவுக்கு ஒரு போட்டு வாறன் சொல்லி போட்டு வந்துட்டேன் .:)
ஊருக்கு நிம்மதியா வாறதுக்கு கூட ஒழுங்காக குடுத்து வைக்கல. வேறென்ன லண்டன் ஊடாக போட்டு தந்த டிக்கட்டு தான். அதுவும் குறுக்கால போன விமானம் ஓடாத படியால் .. ஒரு நாலு நாள் லண்டனில் தஞ்சம்.
பிரிட்டிஷ் விமானம் மூலம் லண்டன் வரும் போது, நெதர்லாந்தில் வைச்சு என்னுடைய பட்டிகளில் பாதியை எறிஞ்சே போட்டேன்.( பட்டி என்றது ; குளிருக்கு போடும் கவசங்கள் ... அதுவே ஒரு ஐந்து கிலோ போலும் .. யோசித்து பார்த்தேன் , நம்ம ஊரில எவன்தான் உதெல்லாம் போடுவான் . சரி ஒருக்கா இரண்டு தரம் போட்டால், சொல்லுவாங்கள் இவரு இப்பதான் வந்தவரு அங்கே இருந்து , கலர்ஸ் காட்டுறாரு என்று.. வேணமையா..... வீண் வம்பு.. வந்த செலவோடு இதுவும் போகட்டும் .. என்று குப்பை தொட்டியில் போட்டு விட்டு எறிட்டன்)



என்னுடைய கஷ்ட காலம், லண்டனில் இருந்து கொழும்பு செல்லும் விமானம் அன்று ஓட வில்லை. தங்க இடம் குடுத்தார்கள். அடுத்த விமானம் இன்னும் இரண்டு நாளில் போகுமாம் ,அதிலை தான் இடம் இருக்காம் என்று.. குறுக்கால போனவங்கள் என்று போட்டு, திட்டி திட்டி நின்றது தான். இரண்டு நாள் பின்னர் .. நாலு நாள் வரை போனதை நினைச்சா.... கடுப்பா தான் இருக்கு.. என்னமோ ஒரு மாதிரி கொழும்பு வந்து சேர்ந்தேன்..

அந்த மாதிரி குளிருக்க குடும்பம் நடத்தி போட்டு நம்ம ஊருக்கு வரும் போது.. உடம்பே வேர்த்து போச்சு. காலை ஏழு மணி கொழும்பில் காலடி எடுத்து வைத்தேன். போட்டு கொண்டு வந்த உடுப்பு , உடம்பு எல்லாமே வியர்வையில் மிதந்தன..
என்னமா வெட்கை, புழுதி, வாகன இரைச்சல், இராணுவ சோதனை காவலரண்கள் என்று எல்லாவற்றையும் கேட்டும், பார்த்தும், வியந்தும் கொண்டு வீடு வந்தேன்.
வந்த நேரம் கொஞ்சம் விறு விறுப்பான காலம் அன்றைய நாளை விட்டால் தொடர்ந்து 14 நாட்களுக்கு விடுமுறை என்ற படியால், உடனையே தொழில் செய்யும் இடம் நோக்கி சென்று தொழிலுக்கு வந்து விடேன் என்று உறுதி செய்து போட்டு வந்தேன்.

ஐரோப்பாவில் வெளிய போகணும் என்றால் உடுப்பு போட்டு வெளிக்கிடுறது பெரிய பில்ட் அப். உள்ளாடைகள் , அதுக்கு பிறகு குளிருக்கு warmer , பிறகு shirt, பிறகு sweater, பிறகு ஜாக்கெட்;; உதெல்லாம் போட்டு விட்டு பிறகு கைக்கு கையுறை , தலைக்கு கம்பளி தொப்பி , பிறகு கழுத்துக்கு சால்வையை விட மிக நீண்ட துண்டால் ஒரு சுத்து கட்டு , சப்பாத்து , ஒரு headphone தலைக்கு, இதெல்லாம் தேவையா. நிம்மதியா நம்ம ஊரில் ஒரு சாரம், ஒரு ஷர்ட் இது காணும் முன் கடையில போய் பேப்பர் வாங்க , பாண் வாங்க .
அதுதான் சொல்லுறன் " சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா" புரிஞ்சு கொள்ளுங்க நண்பர்களே ..

நேற்று ஆபிசில் இருந்து கொழும்பு நோக்கி வெளிக்கிடும் போது கடும் வெயில், கொழும்பு வர கடும் மழை , மின்னல், இடி முழக்கம், வாகன நெரிசல்.. என்ன கொடுமை. திட்டி திட்டி ஓடோடி வந்து சேர்ந்தேன் . ஐரோப்பாவில் இருந்த காலத்தில் எங்கையும் போறதென்றால், காலநிலையை பார்த்து போட்டு தான் போறது. இவங்கள் இங்க சொல்லுற காலநிலை பற்றி நான் கருத்து எதுவும் கூற விரும்ப வில்லை.


கொட்டும் மழை ; வாகன நெரிசல் ...

சனி, ஞாயிறு மாலையில்Marine Drive ( இராமக்க்ரிஷ்ணாவில் தொடங்கி பம்பல பிட்டிய மஜெஸ்டிக் சிட்டி வரை ) இல் நடக்கும் தொழில் ; உடம்புக்கும் உத்தமமான தொழில் ; நடக்கும் பழசுகளை போட்டி மாதிரி முந்தி நடக்கும் போது உள்ளத்தில் என்ன கிளு கிளுப்பு .. நாங்களும் யாரையோ முந்துரோம்ள:) என்று தான் :) என்னோடு இன்னும் சில எஞ்சினியர் மாரும் நடக்கினம் .... :) அவை தங்கட எதிர்கால மனைவி மாரை தெரிவு செய்யும்பொருட்டு உடம்பை 16 வயது மாதிரி வைத்து இருக்க வேணுமாம் என்று விரும்பினம். :)

கொழும்பு வர வேரக் வேர்க் கிறது

2010-04-08

குத்தீட்டு வந்து இருப்பீங்க ???

இன்று இலங்கை பாராளுமன்ற தேர்தல், நான் என்றுமே அரசியல் எழுதுறது இல்லை. இங்கவும் அதே தான்.
வாக்களிப்பது கடமை.. கட்டாயம் வாக்களித்து இருப்பீர்கள் . நாங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானித்து செயல்பட்டு இருப்பீர்கள் .
வடிவேல் காமெடி போல "தனித்து செயல் படாதையடா ...தனித்து செயல் படாதையடா ... என்று எத்தனை வாட்டி சொல்லுறது என்றதை நினைத்து பார்த்தேன்..:)


நான் பார்த்து ரசித்த தேர்தல் காமெடிகள் சில.. நீங்களும் ரசியுங்கள்..

1- குறள் அமுதம்

"அடிச்சு சொல்லுறன்... இப்படி நடக்காட்டி பாருங்கோவன் ..
மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தந்து மகிந்த சிந்தனையை வெற்றியடைய செய்த எல்லோருக்கும் நான் உங்களின் தலைவன் என்ற ரீதியில் நன்றி சொல்லக்கடமைப்பட்டுளேன்"


2 - நண்பியின் மூஞ்சி புத்தகத்தில்

கொழக்கட்டையோ மோதகமோ எதுவெண்டாலும் உள்ளுக்க இருக்கிறது ஒண்டுதான். புள்ளடியை பாத்து குத்துங்கப்பா..!


3- வடிவேல் காமெடி




4- விவேக் காமெடி




5- சத்தியராஜ் காமெடி

2010-04-04

பையா - பாடல் - துளி துளி மழையாய் வந்தாளே

எனக்கு பிடித்த பாடல், எனது கைத்தொலைபேசி ரிங் டோன் பாடல் ...என்னுடைய பிடித்த நடிகை தமனாவின் பாடல் ..இப்படியே சொல்லி கொண்டுபோகலாம் .. இதோ உங்களுக்காக( பாட்டு பாதியில் நிக்குறதுக்கு நான் பொறுப்பில்லை)


துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுட சுட சுட மறைந்தே போனாளே...
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்,
பூபோல் சிரிக்கும்போது
காற்றாய் பறந்திட தோன்றும்....

செல் செல் அவளுடன் செல்
என்றே காள்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொள்ளுதடா...
அழகாய் மனதை பறித்து விட்டாளே.......

துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுட சுட சுட மறைந்தே போனாளே...


தேவதை அவள் ஒரு தேவதை
அழகிய பூமுகம் காணவே
ஆயுள்தான் போதுமோ!
காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டுத்தான்
பூக்களும் பூக்குமோ!

நெற்றிமேலே ஒற்றை முடி ஆடும்போது
நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும், பார்வை ஆளை தூக்கும்...
கன்னம் பார்த்தால் முத்தங்களால் தீண்ட தோன்றும்...
பாதம் ரெண்டும் பார்க்கும்போது கொலுசாய் மாறதோன்றும்...
அழகாய் மனதை பறித்து விட்டாளே....



செல் செல் அவளுடன் செல் என்றே காள்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொள்ளுதடா...

சாலையில் அழகிய மாலையில்
அவளுடன் போகவே ஏங்குவேன்
தோழ்களில் சாயுவேன்..
பூமியில் விழுகிற வேளையில்
நிழலையும் ஓடிபோய் ஏந்துவேன்,
நெஞ்சிலே தாங்குவேன்,





காணும்போதே கண்ணால் என்னை கட்டிபோட்டாள்,
காயமின்றி வெட்டி போட்டாள்..
உயிரை ஏதோ செய்தாள்...
மௌனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும்
அங்கே வந்து ஒட்டு கேட்டாள்...
கனவில் கூச்சல் போட்டாள்...
அழகாய் மனதை பறித்து விட்டாளே...

செல் செல் அவளுடன் செல்
என்றே காள்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொள்ளுதடா...

துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுட சுட சுட மறைந்தே போனாளே...
துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுட சுட சுட மறைந்தே போனாளே...




முன்னைய பதிவில் : எனக்கும் பிடிக்கும் தமனாவை http://svpriyan.blogspot.com/2009/12/blog-post_05.html
Related Posts Plugin for WordPress, Blogger...