2009-12-23

வருகிறான் பாரு எந்திரன் - சித்திரை 2010நாங்க தீவிர ரஜனி ரசிகர்கள் .. இந்த முறை எல்லாமே எந்திரன்... பற்றிய ஒரு சில தகவல்கள் !!

காதலன் படம் முடிந்ததுமே இயக்குநர் ஷங்கர் இயக்க நினைத்த படம் ரோபோ. ஷங்கரின் கனவுப்படமான ரோபோவில் கமல் நடிப்பதாக இருந்தது. எழுத்தாளர் சுஜாதாவின் வானொலி நாடகமான இயந்திரனையும், முதலில் நாவலாகவும் பின்னர் தொலைக்காட்சித்தொடராகவும் வெளிவந்த என் இனிய இயந்திராவையும் தழுவியே ரோபோவுக்கான திரைக்கதையை எழுதித்தந்தார் சுஜாதா.


திரைக்கதையில் தனக்கு நிறைய டெவலப் செய்ய வேண்டியிருக்கும் என்று கமல் சொல்ல தனது கதையின் ஒரிஜினாலிட்டியை இழக்க விரும்பாத சுஜாதா இழுத்தடிக்க, கமல்- ஷங்கர் டீம் அப்போது இந்தியனில் இறங்கினார்கள். அடுத்து பாய்ஸ், முதல்வன் என்று முடித்துவிட்டு மீண்டும் சுஜாதாவிடம் போனால் கமல் கேட்ட மாற்றங்களில் சமாதானம் அடையவில்லையாம் அவர்.இந்த நிலையில் ஷங்கரைக் கூப்பிட்டார் ஷாருக்கான். தனக்காக இந்தியில் ஒரு படம் பண்ணுங்க என்று சொல்ல ரோபோவை சொன்னார் ஷங்கர். கதையில் எந்த கரக்‌ஷனும் சொல்லாமல், தானே தயாரிக்கிறேன் என்று முன்வந்த ஷாருக், திரைக்கதையில் பாலிவுட்டுக்கான மசாலாக்களை சேர்த்துக்கொண்டு வாருங்கள் என்று சொல்ல, இவருக்கு கமலே பரவாயில்லை என்று அலுத்துக்கொண்டே சுஜாதாவிடம் சொல்லாமலே ஸ்கிரிப்ட் ஒர்க்கில் உட்கார்ந்த போதுதான் ரஜினி அழைத்து தனியார் என்ஜினியரிங் கல்லூரிகளுக்கு சாட்டையடி கொடுக்கிற மாதிரி ஒரு ஸ்கிரிப்ட் பண்ண முடியுமா என்று கேட்டிருக்கிறார். ஏழு நாட்களில் ஷங்கர் செய்த கதைதான் சிவாஜி.


பிறகு ஷாருக்கு கோபமாகி ரோபோ ஸ்கிரிப்ட் என்ன ஆச்சு என்று கேட்க, ஷங்கர் செய்த கரக்‌ஷன்களை சொல்லியிருக்கிறார்.. இந்தமுறை கமலைப் போலவே கதையில் கரக்‌ஷன் சொன்னவர் ஷாருக். பார்த்தார் இது சரிப்பட்டு வராது என்று வந்துவிட்டாராம் ஷங்கர்.ரஜனி இமைய மலை சென்றிந்த போது

வந்தவர் ரோபோவை தமிழில் யாரை வைத்து பண்ணலாம் என்று யோசித்திருக்கிறார்.. அஜீத்துடனும் பேச்சுவார்த்தை நடந்தது. இதற்குள் ரஜினியே முன்வந்து ரோபோ கதையின் மூலம் நாம் மீண்டும் இணையலாமே என்று சொல்ல, இதை கேள்விப்பட்ட ஷாருக் கடுப்பாகி மவனே ரோபோ டைட்டிலேயே நீ நினைச்சுப்பார்க்கக்கூடாது என்று ரோபோ டைட்டிலை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் பதிவு செய்துவிட்டாராம்.. மவனே யாருக்கிட்ட...?! தமிழன்னா உனக்கு தொக்காபோச்சா... அதுக்கு வேற எவனையாச்சும் பாரு என்றே ~எந்திரன்| டைட்டிலை வைத்திருக்கிறார்கள்.120 கோடி பட்ஜெட். ரஜினியின் கனவு நாயகி ஐஸ்வர்யாராயை சம்மதிக்க வைத்த்தில் பா. சிதம்பரத்தின் பங்கு உண்டு என்கிறது நம்பத்தகுந்த வட்டாரம். பெரு நாடு உட்பட பல வெளிநாடுகளில் எந்திரன் படமாக்கப்பட்டாலும் படத்தின் 80 சதவிகித படப்பிடிப்பு தமிழ்நாட்டிலேயே படம் பிடித்திருக்கிறார்கள்.

சென்னை மற்றும் சென்னை புறநகர் பழைய மகாபலிபுரம், மாதவரம், மணலி, சிறுசேரி, மயிலாப்ப+ர் சிட்டிசெண்டர், கானாத்தூர், மாயாஜால், மதுரவாயில், வேலுர் என்று படப்புடிப்பு 90 சதவிகிதம் முடிந்துவிட்டது.

ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடிக்கும் எந்திரன் படத்தில் வைரமுத்து இரண்டு பாடல்களையும் , வாலி இரண்டு பாடல்களையும் , பா.விஜய் ஒரு பாடலையும், வைரமுத்துவின் மகன் ஒரு பாடலையும் எழுதியிருக்கிறார்கள். அப்படியானால் நா. முத்துக்குமார் பாடல் எதுவும் எழுதவில்லையா என்றால் , அங்கேதான் ஷங்கர் ஆள் பார்த்து வேலை வாங்குவதில் கில்லாடி என தங்களது குருவின் புகழைப் பாடுகிறார்கள் அவரின் உதவி இயக்குனர்கள்.

கதைப்படி இரண்டு ரஜினிகளில் ஒருவர் சூப்பர் கம்பியூட்டரால் இயங்கும் எந்திரமனிதன். அதுவும் படுபுத்திசாலியான எந்திர மனிதன். அவர்... sorry...அது படத்தில் பல எடாகூடமான விஷயங்களை பண்ணுகிறது. குறிப்பாக ஹீரோ ரஜினிக்கு தெரியாமல் அவரது காதலி ஐஸ்வர்யா ராயுடன் டுயட் பாடிவிட்டு வருகிறது. தன்னுடன் டுயட் ஆடுவது ரோபோவா என்பது ராய்க்கும் தெரியாதாம். டூயட் பாடும்போது , மனித உருவமாக தன்னை மாற்றிக் கொள்ளும் ரோபோவின் புரோகிராமில் ஏற்படும் சின்னச் சின்ன குளறுபடிகளால் எந்திர மனிதன் உருவத்துக்கு திடீர் திடீரென்று மாற , புத்திசாலி ரோபொ இந்த உண்மை ஐஸ்வர்யா ராய்க்கு தெரிந்து விடாமல் இருக்க பண்ணும் அலப்பறைகள் அந்த டூயட்டில் செம ரொமாண்டிக் காமடியாக பதிவாகி இருக்கிறதாம். (இதையே பெரு நாட்டில் படம் பிடித்து வந்த்திருப்பதாகச் சொல்கிறார்கள்.)

இத்தனை புத்திசாலியான ரோபொவை உருவாக்கியவர் ரஜினியின் அப்பா. அவர் ஒரு ரோபாட்டிக் விஞ்ஞானி. இவரே எதிர்பார்காத வண்ணம், தானே சிந்திக்கத் தொடங்கும் ரோபோ, ஒருநாள் தமிழில் புதுக்கவிதை சொல்கிறதாம். செமகாட்டமான பொலிட்டிகல் சட்டயரிக் நிறைந்த இந்தக் கவிதையை கவிஞர் நா. முத்துகுமாரிடம் எழுதி வாங்கி படமாக்கி இருக்கிறாராம் ஷங்கர். கவிதைக்கும் வெயிட்டான பெமண்டும் கொடுத்திருக்கிறார்களாம்.

ஆக ரோபொ ரஜினி அரசியல் கவிதை சொல்லும் அழகை எந்திரனில் கட்டாயம் எதிர்பார்க்கலாம். எந்திரனில் பெரும்பாலன காட்சிகளுக்கு கார்க்கி வைரமுத்து வசனம் எழுதியிருக்கிறார்.

எந்திரன் ரோபோவை எரித்து செயலிழக்கச் செய்யும் உச்சக்கட்ட காட்சியை வேலூர் விஜடி கல்லூரியின் ஆராய்ச்சி க்கூடத்தில் விரைவில் படமாக்கத் திட்டமிட்டிருக்கிறது எந்திரன் படக்குழு. 2010 ஏப்ரலில் திரைக்கு வரவிருக்கிறாம் எந்திரன்.

ஹய்யா
! நாங்களும் எந்திரன் நியூஸ் சுட்டு கொடுத்துட்டோம்ல!


No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...