2009-12-26

லேட்டஸ்ட் பாடல்களில் பிடித்தவை


அண்மையில் வெளி வந்த படங்களில் எனக்கு பிடித்த பாடல்கள்

  1. பையா படத்தில் வந்த துளி துளி பாடல் ..


லிங்குசாமி தானே இயக்கி வரும் படம் தான் பையா. படத்தில் தமன்னா எனது கனவு நாயகி (முன்னைய பதிவு) , கார்த்தி சிவகுமார் நடிக்கின்றனர்.கடந்த மதம் தான் இந்த ஆடியோ வெளியிடபட்டது. அண்மையில் நான் இலங்கை சென்று திரும்பும் போது எனது ipod இல் இந்த பாடல்களை ஏற்றி கொண்டு வந்தேன். கேட்க சந்தர்ப்பம் கிடைத்தது ஜெர்மனி இல் இருந்து புகை வண்டி பயணத்தின் போது.. ஆகா அருமை. யுவன் சங்கர் ராஜா இசையில் .. சூப்பர்..!!! அந்த பயணித்த அதிகாலை நேரத்தில் நானே ஆறு தொடக்கம் எழு தடவைகள் கேட்டே விட்டேன்.
நீங்களும் ஒருக்கா கேளுங்களேன்.
இப்பாடலை ஹரிசரண் ( காதல் படத்தில் உனக்கென இருப்பேன் பாடல் மூலம் அறிமுகம் ) தன்வி ஷா (ஜெய் ஹோ பாடல் ) ஆகியோர் பாடி இருக்கின்றனர்.
படத்தில் தமன்னா வின் கவர்ச்சிக்கு குறைவே இல்லை என்பதுக்கு ஒரிரு புகைப்படங்கள் .:)

துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுட சுட சுட மறைந்தே போனாளே...
பார்த்தால் பார்க்க தோன்றும் பேரை கேட்க தோன்றும்,
பூபோல் சிரிக்கும்போது காற்றாய் பறந்திட தோன்றும்....
செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொள்ளுதடா...
அழகாய் மனதை பறித்து விட்டாளே......
.துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுட சுட சுட மறைந்தே போனாளே...தேவதை அவள் ஒரு தேவதை
அழகிய பூமுகம் காணவே ஆயுள்தான் போதுமோ!
காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டுத்தான் பூக்களும் பூக்குமோ!
நெற்றிமேலே ஒற்றை முடி ஆடும்போது
நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும், பார்வை ஆளை தூக்கும்...
கன்னம் பார்த்தால் முத்தங்களால் தீண்ட தோன்றும்...
பாதம் ரெண்டும் பார்க்கும்போது கொலுசாய் மாறதோன்றும்...
அழகாய் மனதை பறித்து விட்டாளே....
செல் செல் அவளுடன் செல் என்றே காள்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொள்ளுதடா...


சாலையில் அழகிய மாலையில்
அவளுடன் போகவே ஏங்குவேன் தோழ்களில் சாயுவேன்..
பூமியில் விழுகிற வேளையில் நிழலையும் ஓடிபோய் ஏந்துவேன்,
நெஞ்சிலே தாங்குவேன்,
காணும்போதே கண்ணால் என்னை கட்டிபோட்டாள்,
காயமின்றி வெட்டி போட்டாள்..உயிரை ஏதோ செய்தாள்...
மௌனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும் அங்கே வந்து ஒட்டு கேட்டாள்... கனவில் கூச்சல் போட்டாள்...
அழகாய் மனதை பறித்து விட்டாளே...
செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொள்ளுதடா...

துளி துளி துளி மழையாய் வந்தாளே... சுட சுட சுட மறைந்தே போனாளே...துளி துளி துளி மழையாய் வந்தாளே... சுட சுட சுட மறைந்தே போனாளே...2. ஈரம் படத்தில் வந்த மழையே .. பாடல்

தாமன் இசையில் ரஞ்சித் இந்த பாடலை பாடி உள்ளார். இந்த படத்தை திரையில் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால் பாருங்கள்.உண்மையில் சூப்பர் படம் .

விழியே விழியே பேசும் விழியே
ஒரு பார்வை பார்த்தாய்
மழையே மழையே நெஞ்சில் மழையே
தனியேத் தனியே வாழ்ந்தேன் தனியே
நான் மண்ணின் மேலே
இனிமே இனிமே நீதான் துணையே


மழையே மழையே தூவும் மழையே
இது காதல் தானா
தனியே தனியே நனைந்தேன் மழையே
உன் மனமே மனமே தீயாய் கொதிக்கும்
ஒரு காய்ச்சல் போலே
தவியாய் தவியாய் தவித்தேன் மழையே
(மழையே..)

ஏ நான்தான் நான்தான் ஒரு தீவாய் இருக்கிறேன்
ஏ நீதான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்
ஏ நான்தான் நான்தான் ஒரு தீவாய் இருக்கிறேன்
ஏ நீதான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்
உல்லா ஹ உல்லா ஹ ஒ
உல்லா ஹ உல்லா ஹ ஓ

மை மை மழையே

உன் ஆடைப்ட்டாலே ஒரு சாரல் அடிக்கிறது
உன் ஓரப்புன்னகையாய் பெரும் தூரல் வருகிறது
உன் முகத்தில் அசையும் மொழி
இலைத்துளியாய் நனைகிறது
உன் கைகள் தீண்டுவதால் அடை மழையேப் பொழிகிறது
போதும் போ நீப்போ என் கண்கள் வலிக்கிறது
போடிப்போ நீப்போ என் உள்ளம் உணர்கிறது
(விழியே..)


3- அழகாய் பூக்குதே பாடல் - நினைத்தாலே இனிக்கும்

விஜய் ஆந்தோனி யின் இசையில் பிரசன்னா , ஜானகி ஐயர் பாடிய பாடல். படமும் பார்த்தேன். கொஞ்சம் வித்தியாசமான கதை :) ரசித்து பார்க்கலாம்.
இந்த படத்தில் வந்த பனராஸ் பட்டு கட்டி குத்து பாட்டு எனக்கு ஆரம்பத்திலே இருந்து பிடிக்கும். ( முதல் பதிவு )அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொல்லாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
(அழகாய்..)

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்
காதலன் கை சிறை காணும் நேரம்
காதலன் கை சிறை காணும் நேரம்
மீண்டும் ஒரே கருவரை கண்ட நாளை
கண்ணில் ஈரம்
(அழகாய்..)கடவுளின் கனவில்
இருவரும் இருப்போமே ஓஹோ
கவிதையின் வடிவில்
வாழ்ந்திட நினைப்போமே ஓஹோஹோ

இருவரும் நடந்தால்
ஒரு நிழல் பார்ப்போமே ஓஹோஹோ
ஒரு நிழல் அதிலே
இருவரும் தெரிவோமே ஓஹோஹோ

சில நேரம் சிரிக்கிறேன்
சில நேரம் அழுகிறேன் உன்னாலே
(அழகாய்..)

ஒரு முறை நினைத்தேன்
உயிர் வரை இனித்தாயே ஓஹோ
மறுமுறை நினைத்தேன்
மனதினை வதைத்தாயே ஓஹோஹோ

சிறு துளி விழுந்து
நிறை குடம் ஆனாயே ஓஹோஹோ
அறை கணம் பிரிவில்
வரைவிட செய்தாயே ஓஹோஹோ

நீ இல்லா நொடி முதல்
உயிர் எல்லாம் ஜடத்தை போல் ஆவேனே
(அழகாய்..)4 ஆதவன் படத்தில் அன்பே உன்னால் மனம் freezing

இந்த படத்தை திரையில் பார்த்த போது . இந்த பாட்டு முடியும் வரை விசில் அடிச்சே களைச்சு போனேன். கார்த்திக் , ஹரிணி இந்த பாடலை பாடியுள்ளனர்.ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். [ முதல் பதிவு ]


அன்பே உன்னால் மனம் freezing
அடடா காதல் என்றும் amazing
Excuse me let me tell you something
நீ சிரித்தால் ஐபோன் ட்ரிங் ட்ரிங்
நீ வீசும் அம்பு என் மேல் பாய
காதல் வந்து என்னை ஆழ
வருவாயோ என்னை காப்பாற்ற
வந்தால் மடி சாய்வேன் வாழ

ஹசிலி ஃபிசிலி என் ரசமணி
உன் சிரிப்பினில் சிரித்திடும் கதக்களி
என் இளமையில் இளமையில் பனித்துளி
குதுகளி
எனக்கும் உனக்கும் ஏன் இடைவெளி
நீ இரவினில் இரவினில் எனை வாசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி

அஞ்சனா அஞ்சனா கொஞ்சினால் தேன் தானா
என் கனா என் கனா என்றுமே நீதானா
(ஹசிலி..)உரசாமல் அலசாமல் உயிரோடு ஊருது ஆசை
அடங்காமல் இதுங்காமல் இருந்தால்தான் ஒய்ந்திடும் ஓசை
இரு விழியே ஏவுகணை உனக்கெதுவா இங்கு இணை
உன் இடையோ ஊசி முனை உடைந்திடுமோ சேரு என்னை

ஏன் என்னை தீண்டினாய் வெப்பமா
நான் உனக்கு பூக்களின் உப்புமா
விரலில் உள்ளதே நுட்பமா
நீ கொஞ்சம் தின்றாய் கொஞ்சி கொன்றாய்
(ஹசிலி..)

உயிரோடு உயிரோடு என்னை கொல்ல நெருங்குகிறாயே
விரலோடு விரல் சேர்த்து இதழுக்குள் இறங்குகிறாயே
யாரிதழில் யாரிதழோ வேர்த்துவிடும் வெங்குழலோ
உச்சி முதல் பாதம் வரை எத்தனையோ வித்தைகளோ

நீ ஆடை பாதியா பாதியா
நீ புலியும் மானும் கொண்ட ஜாதியா
உன் அழகின் மீதிதான் பூமியா
நீ முத்தப்பேயா மேதை நீயா
(ஹசிலி..)


இறுதியாக சர்ச்சைக்குரிய வேட்டைக்காரன் படத்தில் இருந்து

வேட்டைக்காரன் எனது பார்வையில்


(m)ஒரு சின்ன தாமரை
என் கண்ணில் பூத்ததே..
அதன் மின்னல் வார்த்தைகள்
என் உள்ளம் தேடி
தைக்கின்றதே..

இதை உண்மை என்பதா
இல்லை பொய்தான் என்பதா..
என் தேகம் முழுவதும்
ஒரு வெண்மீன் கூட்டம்
மொய்க்கின்றதே ... <ஒரு>

(f)என் ரோம கால்களோ
ஒரு பயணம் போகுதே..
உன் ஈரப் புன்னகை
சுடுதே..

என் காட்டு பாதையில்
நீ ஒற்றை பூவடா
உன் வாசம் தாக்கியே
மலர்ந்தேன்.. உயிரே .. <என்>

(ஒரு)(m)உன் பெயர் கேட்டாலே
அடி பாறையில் பூ பூக்கும் ..
உன் காலடி தீண்டிய
வார்த்தைகள் எல்லாம்
கவிதைகளாய் மாறும்..

(f)உன்தெரு பார்த்தாலே
என் கண்கள் அலை மோதும்..
உன் வாசல் தேடி போக சொல்லி
கெஞ்சுது என் பாதம்..

(m)என் வாழ்க்கை வரலாற்றில்
எல்லாமே உன் பக்கங்கள்...

(f)உன்னாலே என் வீட்டின்
சுவரெல்லாம் ஜன்னல்கள்..

(ஒரு)

(m)உன் குரல் கேட்டாலே
அந்த குயில்களுக்கும் கூசும்..
நீ மூச்சினில் சுவாசித்த காற்றுகள்
மட்டும் மோட்சத்தினை சேரும்..

(f)அனுமதி கேட்காமல்
உன் கண்கள் என்னை மேயும்..
நான் இத்தனை நாளாய்
எழுப்பிய கோபுரம்
நொடியில் குடை சாயும்..

(m)உன் கைகள் கோர்க்காமல்
பயணங்கள் கிடையாது..

(f)உன்னோடு வந்தாலே
சாலைகள் முடியாது..

(ஒரு)
(என்)


இதை விட வேறு பல கிட் பாடல்களும் இருக்கலாம் . மீண்டுமொரு தடவை சந்திக்கும் வரை ..
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...