2009-12-29

தமிழர் புத்தாண்டாம் தைப்பொங்கல் தினம்

தமிழர் திருநாளாம் தை மாதம் முதல் தேதியைத் (அதாவது தைப்பொங்கல் தினமே ) தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாடும் முறையை பின்பற்றாத தமிழர்கள் இனியாவது கடைப்பிடித்தல் வேண்டும்.. இன்றைக்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் இந்த தகவலை பலரோ சிலரோ அறிந்து இருந்தும் யாருமே பின் பற்ற வில்லை . காரணம் நாம் எமது பண்பாட்டை பிறருக்காக விட்டு கொடுப்பதும் அல்லது பிறரின் பண்பாட்டுக்கு அடிமையாகி இருப்பதுமே!



தமிழ்ப் புத்தாண்டின் தேதியை மாற்றிவிட்டால் தமிழர்களின் தலைவிதி மாறிவிடுமா ? இது எனது நண்பன் கேட்ட சடார் கேள்வி. ஆமா /இல்லை . எது வேண்டுமென்றாலும் சொல்லி வாதிடலாம். அதை வாசகர்கள் நீங்களே தீர்மானியுங்கள். நான் சொல்ல கூடிய ஒன்று . ஒரு இனத்துக்குரிய கலை, கலாச்சார, மொழி , சமய நம்பிக்கைகள் , வாழ்வியல் சம்பந்தமான வற்றை அந்த இனம் முற்று முழுதாக பின்பற்றும்போது அந்த இன மக்கள் பூரண நிம்மதி, சுகங்கள், அடைய வேண்டிய சொவ்பாக்கியங்கள் எல்லாவற்றையும் அடைகின்றனர்.
(இதை மேலைத்தேய இன மக்களுடன் ஒப்பிட்டு பார்க்கவும். )


மேலும் எனது நண்பி சொன்ன கருத்து : தமிழில் பேசினாலே கவுரவம் குறைவு என்று எண்ணும் எண்ணத்தை பலர் கொண்டு இருக்கிறார்கள் ,இதை எல்லாம் விட்டு, நாங்கள் தமிழர்கள், தமிழில் தான் கதைப்போம் , தமிழ் பண்பாட்டையே பின்பற்றுவோம் , எந்த நாட்டிலிருந்தாலும் தமிழில் பேசுவதையும், படிப்பதையும் ஊக்குவிப்போம் என்ற தீர்மானம் போட்டாலே அது நம் தமிழ்த் தாய்க்குச் செய்யும் பெரிய பணி. கடைசி இதையாவது செய்வீர்களாக.

ஷா பா .. அப்போ சித்திரை புத்தாண்டு தமிழர்களின் புத்தாண்டு அல்லவா ? இது வேற ,, அதுதானே சொல்லிட்டம் .. தமிழர்களின் புத்தாண்டு ,.. தை 14 என்று. பிறகு என்ன .. ??
சித்திரைப்புத்தாண்டு, ஆரியர்களின் காலக்கணீப்பீட்டில் அவர்களுக்கு புத்தாண்டு.

2008 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் நாட்டிலே கூட தைப்பொங்கலையே புத்தாண்டாக கொண்டாடும் படி கிழட்டு முதல்வர் ( கடைசி இதிலை யாவது ஞானம் வந்திச்சு). அறிவிச்சும் இருக்கார். அது எங்களுக்கு உங்க தெரிய போகுது.
நீங்க தானே செய்திகள் நடக்கேக்க தொலைக்காட்சி பெட்டியை நிறுத்தி அதுக்கு ஒய்வு குடுப்பீங்க. மற்ற நேரம் எல்லாம் ஒன்றில் ..ஒன்றுக்குமே உருப்படாத சீரியல் பார்ப்பீங்க அல்லது போனால் 'தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முதலாக திரைக்கு வந்து சில மாதங்களே ஆன (வந்த முதல் நாளே காணாமல் போன!) படங்களையும் இல்லாட்டி போனால் தமிழே தெரியாத நடிகைகளின் பேட்டிகளையும் ( அதுவும் நெத்தியில் நிக்கும்முடியை 100 தரம் இழுத்து இழுத்து பேட்டி குடுக்கும் ) பார்ப்பீங்க.. எப்போதான் திருந்த போறீங்களோ.


சரி நீங்களும் இந்த தேசத்தில் இருகுறீங்கள் என்றதை இந்த முறையாவது காட்டுங்கள் உலகத்துக்கு.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...