2009-12-12

ஆன்லைன் இல் தரிசனமாம்...--திவ்விய தரிசனம்

நாட்டில இப்பெல்லாம காமடி பண்ணிற ஆக்களின்ட தொகை கூடிக்கொண்டே போகுது. எதைப்பார்த்து ரசிக்கிறது எண்ட குழப்பத்தில நம்மட சனமும் குழம்பிப்போயிருக்குது. இந்த காமடி வழங்கல்களில எதாவது தடங்கல்கள் அல்லது இடைவெளிகள் தோன்றுமிடத்து மக்களை உற்சாகப்படுத்தும் வகையில் தமிழ்வின் இணையத்தளம் "முருகப்பெருமான் பொற்கிழி வழங்கினார்." , "வானில் தோன்றிய அம்மனின் அரிய புகைப்படம்" , "சிறுமியாக வந்த அம்மன் சிலையாக மாறிய அதிசயம்" போன்ற செய்திகளை வழங்கி மக்களின் ரசிப்புத்தன்மையை சோதித்து வருகிறது. ஒரேவிதமான காமடிகள் சலிப்புத்தட்டும். எனவே கொஞ்சம் வித்தியாசமா எதாவது பண்ணினா வசூல் கூடும் எண்ட வியாபாரத்தந்திரம் இப்ப சூடு பிடிச்சிருக்கு.

எதை வேணுமெண்டாலும் வீட்டிலிருந்தபடியே ஒன்லைன்ல வாங்கலாம் என்றளவுக்கு இப்ப வசதிகள் கூடிப்போய்ச்சு. முந்தி வீடுவீடா கொண்டுபொய் கூவிவித்தவ கூட website open பண்ணித்தான் விக்கணும் என்ற அளவுக்கு நிலமை தலைகீழ். இதில பண்டங்கள் சேவைகள் என்ற பாகுபாடே கிடையாது. உங்களிட்ட சரக்கும் வாங்கிறதக்கு ஆக்களும் இருந்தா நீங்கள் விலைப்படுத்திடலாம்.

எல்லாத்துக்கும் விளம்பரம் முக்கியம். இப்படி online ல செய்யப்படுற செய்யப்படுற விளம்பரங்களில கணிசமான இடத்தைப்பிடிக்கிறது இந்த பாலியல் தொழில் செய்யிறாக்களின்ர விளம்பரங்கள்தான் எண்டு ஒரு கருத்துகணிப்பு சொல்லுது. இதிலயும் குறிப்பாக இந்த live chat,or video chat எனப்படுகின்ற internet இனூடன சரசத்துக்கு அழைக்கும் வலைத்தளங்களின் விளம்பரங்கள் ஏராளம்
எனவே இதன் பயனார்களுக்கும், சேவை வழங்குநர்களுக்கும் video chat மிகவும் இன்றியமையாத ஓர் அம்சமாகும் என நேற்றுவரை நானும் நினைத்திருந்தேன்.

அம்மா பகவானின் skype ஊடான திவ்விய தரிசனத்துக்கான அழைப்பு விடுக்கும் விளம்பரத்தை பார்த்தபின்பே புரிந்துகொண்டென் அடடா எல்லாவித தரிசனங்களுக்கும் video chat உதவும் என்று.


சிந்தித்துப்பார்த்தபோது புலப்பட்டது ஏன் இந்த ஊடகம் தெரிவுசெய்யப்பட்டதென்பதும். அதில் தவறேதுமில்லை என்பதும். "திவ்விய தரிசனம்", "முற்றுந்திறத்தல்" இறுதியில் "முத்திநிலை அடைதல்" போன்ற ஒற்றுமைகள் காணப்பட்டாலும், சில கேள்விகள் எழவே செய்கின்றன. வழமையான live chat க்கு அழைக்கும் விளம்பரங்களில் பயனாளர்கள் முத்திநிலையை அடையும் வரைக்குமான முற்றுந்திறத்தலுக்கான கட்டண விபரங்கள் அறிவிக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த விளம்பரத்தில் அத்தகைய கட்டண விபரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவேதான் இது மாதாமாதம் சந்தா கட்டுகின்ற members க்கு மட்டுமான அழைப்பாயிருக்குமோ என்று எண்ணத்தோணுகிறது.

ஒரே விதமான வியாபாரத்தை செய்தவர்கள் மட்டுமே போட்டி போட்ட காலம் போய், இப்போ ஒரே ஊடகத்துக்குள்ளால வியாபாரம் செய்யற ஆக்களெல்லாம் போட்டி போடத் தொடங்கீட்டினம். இல்லாட்டி live chat பண்ணறவை "products"விக்கினமாம் எண்டு அம்மா பகவான் கூட்டணியும் ஒன்லைன்ல AmmaBhagavan Oilsஐ விலைப்படுத்தியிருக்கினம் ($68USD + shipping charge $8.95).


இந்த வியாபாரச்சந்தடிகள் ஓயிறமாதிரி தெரியல. இதெல்லாத்தையும் நம்பி பின்னால இழுபடுற கூட்டமாவது தெளியிறமாதிரி தெரியல. வீட்டில வைச்சிருக்கிற பாதத்தை தொட்டா கரண்டடிக்குது. புல்லரிக்குது என்டெல்லாம் பீத்திக்கொண்டு திரியிற கூட்டத்தில ஒருத்தனாவது சிந்திக்கத்தலைப்பட்டால் வியாபாரக்கூட்டம் ஆட்டங்கண்டுவிடும்.

வீட்டில இருக்கிற பாத்தில தொட்டால் கரண்ட் அடிக்கப்பண்ணிற அம்மா பகவான், தரிசனம் கொடுக்கிறதுக்கு மட்டும் எதுக்கு எதுக்கு skype ஐ பாவிக்கணும்?

விஞ்ஞானத்துக்கும் மெஞ்ஞானத்துக்குமிடையில் ஆரோக்கியமாக உறவு ஆரம்பகாலத்தில் இருந்ததில்லை. மனிதன் தனது சிந்திக்கும் திறனுக்கு அப்பாற்பட்ட விசயங்களை தொடர்ந்து ஆராய்ந்து புத்திக்கு வேலை கொடுகாமல், மிக இலகுவாக கடவுள் செயல் என்ற சுலபமான முடிவுக்கு வர முடிந்ததால் மெஞ்ஞானவாதிகளின் வியாபாரம் ஓகோ என நடந்துகொண்டிருந்த காலத்தில், அத்தகைய மாயைத் திரைகளையெல்லாம் கிழித்தெறிந்த விஞ்ஞானத்தின் மீது ஆன்மீகவாதிகள் கொண்டிருந்த கோபம் நியாயமானதே.

அனால் இன்று அதே ஆன்மீகவாதிகள் அல்லது ஆன்மீகவாதிகள் என்று தம்மை சொல்லிக்கொள்வோர் தங்களது பரப்புரைகளுக்கும் வியாபாரங்களுக்கும் விஞ்ஞானத்தையும் அதன் கண்டு பிடிப்புக்களையும் பயன்படுத்துவது விந்தைக்குரியதே..!

தன்னைச் சார்ந்த; தன்னை பின்பற்றுகின்ற; தன்னை கடவுள் அம்சமாக நினைக்கிற ஒரு கூட்டத்துக்கு தரிசனம் வழங்குவதற்கு கட்டணம் வசூலிக்கிற முறைமையிலுள்ள கேவலத்தன்மையை சிந்தித்துப்பார்ப்பவர்கள் அத்தகைய சித்துவிளையாட்டுகளக்கு துணைபோக மாட்டார்கள்.

மதநம்பிக்கை என்கிற விடயம் புரையோடிப்பொயிருக்கிற வரைக்கும் இந்த அடிமைத்தனம் இருக்கவே செய்யும். விழிப்புணர்வை எற்படுத்தலாம் எண்டொரு நப்பாசை எம்போன்றோருக்கு. இதை விவாதிக்கப்போய் வாய்த்தர்க்கங்கள் மூழுவதே மிச்சம்.

அண்மையில கூட இல் ஓர் அன்பர் என்னை எச்சரித்திருந்தார். "மற்றவர்களின் நம்பிக்கைகளின் மேல் கருத்துக்களை சொல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்." என்று.
உண்மைதான். அனால் எந்த நம்பிக்கை? எவர் எவர்மீது கொண்ட நம்பிக்கை? போலி வேடதாரிகள் மக்களின் இறைநம்பிக்கையின் நிலைப்பு மீது கொண்ட நம்பிக்கையா? அல்லது சிந்திக்கத் திராணியற்ற மக்கள் கூட்டம் தங்கள் பகவான்களின் தெய்வாம்சத்தின் மீது கொண்ட நம்பிக்கையா? இந்த இரண்டில் எதையுமே குழப்பும் நோக்கமோ தேவையோ எமக்கில்லை! உங்கள் மனங்களில் கடவுளராக உள்வாங்கப்பட்டவர்கள், எங்கள் கண்களுக்கு சமூகவிரோதிகளாக தென்படுகிறார்கள். அவர்களை நாங்கள் புறக்கணிக்கிறோம் அவ்வளவுதான்.

அவர்ளை தெய்வாம்சம் கொண்டவர்கள் என்றும், இறை தூதர்கள் என்றும் கூறி அவர்களை பின்பற்ற உங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ! அதே போல் அவர்களை போலி என்றும் சழுகவிரோதிகள் என்றும் கூறி, அவர்களை விமர்சிக்க எமக்கும் அதேயளவு உரிமை இருக்கிறது. இவை எவ்வகையிலும் உங்கள் பகவான்களுக்கோ, அல்லது அவர்களின் அடிவருடிகளுக்கோ பாதிப்பை ஏற்படுத்தப்கோவதில்லை. அவர்களுக்குரிய வசூலில் குறையேதும் இருக்காது. வழமைபோல் வந்துகொண்டேயிருக்கும்.

இந்த நீரோட்டத்தில் கலக்காமல் நாங்கள் முழுதாக கரையேறிவிட்டோம் எனும்போது, இன்னும் நடுஆற்றில் தத்தளித்துக் கொண்டிருப்பவர்களைத்தான் கரையேற்ற முற்பட்டுக்கொண்டிருப்பதை விடுத்து மறுகரையில் முதிதாக ஆற்றில் இறக்கிவிடப்படுபவர்களை தடுத்துநிறுத்த முயல வேண்டும் ஏனெனில் இப்பொதும் அதே சமயப்புத்தகமும் அதே புராணங்களும் புதிது புதிதாக அச்சடிக்கப்பட்டு பள்ளிகளில் திணிக்கப்படுகிறதே..!

குளத்தில் குளித்துக்கொண்டிருந்த தங்தையை காணவில்லை என்று தேம்பியழுத ஞானசம்பந்தருக்கு உமையம்மை இடபவாகனத்தில் வந்து பாலூட்டினார் என்று சமய ரீச்சர் வாசிச்சு முடிக்கைக்கிடையிலேயே, ஒரு மாணவன் எழுந்து "ஷெல் அடிச்சு
செத்துப்பொன தாயின் மார்பில பால் குடிக்க தேம்பியழுத நூற்றுக்கணக்கான பச்சிளம் குழந்தைகளுக்கு பால தர உமையம்மை ஏன் ரீச்சர் வரேல்ல?" என்றொரு கேள்வியை கேட்டால் அந்த சமய ரீச்சர் என்ன பதில் சொல்ல முடியும்..! எனவே நீண்டகாலத்தக்கு தாக்குப்பிடிக்கமுடியாத ஓர் மார்க்கத்தில் வியாபாரம் செய்து குளிர்காய நினைக்கும் மதவியாபாரிகளை நாங்கள் விமர்சிப்பதில் தவறேதுமில்லை.

அவர்கள் உனக்கு என்ன தீங்கு செய்தார்கள் எனும் கேள்வி நியாயமானதே. எனக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது ஏற்படலாம் எனும் ஊகத்தினாலோ எதனையும் எதிர்க்க வேண்டும் விமர்சிக்க வேண்டும் என சட்டம் ஏதும் கிடையாது. நான் சார்ந்துள்ள சமூகத்தின் ஓர் அங்கத்தவனாக, எனக்கிருக்கும் சமூகப்பொறுப்பு காரணமாக, சமூகவிரோதிகளை சுட்டிக்காட்டுவதில் தவறொன்றும் இல்லலையே!

சிலமாதங்களுக்கு சுகந்தமாறன் எனக்கொரு சவால் விட்டிருந்தான்.
"தண்னியடிச்சிட்டு வாயால் வாந்தி எடுப்பதே பெரிய துன்பமாக உள்ளது.ஆனால் இவர்கள் எல்லாரும் வாயால் லிங்கம் எடுப்பார்கள் தெரியுமா?.சஞ்சே அவர்களை சும்மா எண்ட நீ...முடிஞ்சா வாயால ஒரு மயிர எடுத்துக்காட்டு பார்ப்பம்? நீயும் தலை மயிர் வளர்த்து,பல நாள் குளிக்காமல்,பல் தீட்டாமல் இருந்தால் சாமியார் களை தானா வந்து சேரும்.நேரடியா தரிசனம் தந்தால் செருப்படி வாங்கும் ஆபத்து உண்டென்பதால்
ஒன்லைன் சாமியாரா மாறி வெப்கமெரா வில தரிசனம் தந்து PAYPAL மூலமா தட்சணைக்காசு பெற்றுக்கொள்ளலாம்.ஏன் ஒருக்கா இத முயலக்கூடாது?."


முயலலாம். அனால் இந்த webcam தரிசனம் எனும் idea ஐ அம்மாபகவான் சுட்டுவிட்டபடியால் நாங்கள் வேற எதாவது advance live streaming technologyஐ பாவிக்கறமாதிரி சிந்திக்கலாம். சிலகோடி ருபாய் பணமும், ஒரு சில ஆயிரம் மக்களும், 5-6 மொழிகளில் பத்திரிகை, ஊடகங்களும் இருக்குமாயின் எனக்கு நானே தெய்வத்தன்மை கற்பித்து அற்புத அதிசயங்கள் செய்ததாகத் கதை கட்டி விட்டுப் பிரச்சாரம் செய்தால் ஒரு ஆண்டுக்குள்ளேயே பல லட்சக் கணக்கில் மக்கள் மண்டியிட்டுப் பின்பற்றும் புதிய மதத்தைக் காணலாம்.

இந்தவழியில் தான் உங்கள் பகவான்களும் உருவானார்கள். புரிந்துகொள்ளுங்கள் அல்லது புரிந்துகொள்ள தலைப்படுங்கள்!
- நன்றி -
தகவல் பரிமாற்றம் - சஞ்சய்

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...