2009-12-18

வேட்டைக்காரன் பார்ப்பதா ??விடுவதா ??வேட்டைக்காரன் வந்துட்டான் .. யாரும் பார்க்க கூடாது என்று எழுதினால் ..அவர்களை நான் சந்தித்து அரசியல் பேசலாம் .. என்று இருக்கேன் ..

என்னமோ காரணங்கள் எல்லாம் சொல்லி புறக்கணிக்க சொல்கிறார்கள். உண்மையை சொல்ல போனால் இந்த காரணங்கள் எதுவுமே அடிப்படை அற்றவை . இதுக்கு முதலில் செய்ய வேண்டிய அல்லது செய்ய தவறிய பலதை செய்ய முயற்சிப்போம்,

நான் கண்ட உண்மை:
  1. புலம்பெயர் தமிழர்களிடம் போராட்டத்திற்கு என சேகரிக்கப்பட்ட நிதியில் சொகுசு வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பவர்களை ஒரு கை பார்ப்போம் என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா
  2. இலங்கை ஏர்லைன்ஸ் ஐ புறக்கணியுங்க என்று சொல்லினம் : அங்க கட்டு நாயக்கவில் தமிழர்தான் ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் ஐயே ஓட்டுறாங்கள்.. எல்லாம் நிரம்பி வழியுது எங்கட சனத்தால... இதை விட கொழும்பில் இருக்கின்ற தமிழ் விமான agents எல்லாரும் தங்கள் contracts ஐ நிறுத்தலாம் தானே . இதுவே முற்று புள்ளி வைக்கும் தானே .. முடியாது .. பிறகு என்ன . ஒரு முறை ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் குடுத்த offer கூட நான் புறக்கணித்து இலங்கை சென்று வந்தேன் .. அதே பிளேன் ..இலங்கையில் இருந்து ஜெர்மனி செல்லும்போது ..முழுக்க தமிழ் சனம் தான் அதுவும் ஜேர்மன் வாழ் தமிழ் சனம் தான் போனதை கண்டேன் ..என்ன நியாயம்.
  3. புலம்பெயர் நாடுகளில் இலங்கை பொருட்களை புறக்கணியுங்கள் என்று அத்தனை பெரிய பிரச்சாரம் செய்தீர்கள் .. உங்கள் பலர் புலம்பெயர் நாடுகளில் இலங்கை பொருட்களை எடுத்து விற்பவனும் ஈழத்தமிழர் தான் என்பதை அறிய மாட்டீர்கள்.. :ஆனால் எல்லா பொருட்களும் ஈழ தமிழனின் கடையில இன்னும் விற்கப்படுகிறது.
  4. கலைஞர் துரோகி என்றீர்கள் : இன்றும் புலம்பெயர் நாடுகளில் கலைஞர் டிவி யை ஈழத்தமிழன் தான் sattelite மூலம் வழங்கி காசு உழைக்கின்றான் . இதுக்கு என்ன பதில் சொல்வீர்கள்??
  5. என்ன மோ தமிழ்தேசிய கூட்டமைப்பு தமிழ்மக்களுக்கு நல்ல தீர்வு தரும் என்று சொன்னிர்கள் ..கடைசியில் குறுக்கு அரசியிலில் எல்லாரும் தமிழனையே பங்கு போட்டு கொள்கிறார்கள் ..
  6. இறுதியாக தமிழ் படங்களை புலம்பெயர் நாடுகளில் திரையிடுவோர் ஈழத்தமிழர் தான் . அவன் தன் உழைப்பு கெட்டு போகுமென்று சொல்லி நிறுத்த மாட்டான் .. அதால படமும் ஓடும்.. நாங்களும் பார்ப்போம்.
இப்படி எத்தனையோ இருக்கு சொல்ல..

ஒரு வகையில் போராட்டத்தின் தோல்வியே இப்படி யான தேவையற்ற விதண்டாவாதங்கள் தான் காரணம் என்பதை நீங்கள் அறிவீர்களா????..

வன்னியில் சனம் கஷ்டப்படுகின்றது, லண்டனில் ஊர்வலம் , உன்ன விரதம் , அதே இடத்தில சற்று தள்ளி .. மது அருந்திய யாழ் இளைஞர்களின் அட்டகாசம் ??யார்தான் நிறுத்தினார்கள் ??? கண்டுக்க தேவை இல்லை என்று சொல்ல கூடாது ? இவை தான் எங்களையே ..எங்கள் போராட்டத்தையே கொச்சை படுத்தின .. எத்தனையோ சொல்லலாம்..

சும்மா எடுத்த வீச்சுக்கு ..புறக்கணிப்போம் என்றால் ... என்ன இது .. முதலில் நாங்கள் ஒவ்வொருவரும் செய்வது சரியாய் இருக்கா என்று யோசியுங்கள்..
அதை எல்லாம் களையுங்கள்.. முதலில்.. பிறகு .. இங்கே வருவம்..

எல்லாத்தையும் நிற்பாட்ட முடியுமா .??? முடியுமானால் நிற்பாட்டுங்கள் .. நான் வேட்டைக்காரன் பார்க்கிறதை நிறுத்துரன்..

வேட்டைக்காரன் பார்த்தால் துரோகி ,, பார்க்காதவன் தேசபற்றாளி என்பது என்ன விதத்தில் நியாயம்??? கொஞ்சம் யோசியுங்கள் ..

மொக்கு சினா என்பதிலும் ,, மொக்கு தமிழன் என்பதையே சொல்லலாம் .,.இந்த கோமாளிகளால் :)( கோமாளிகள் என்பது .. சும்மா தேவையில்லாத கதையை பரப்பி தேவையற்ற விதண்டாவாதங்களை உருவாக்குவோரை சொன்னேன்)

திருட்டு கொப்பி:-குறிப்பு : நான் விஜய் ரசிகனுமில்லை ..ஆனால் நியத்தை சொன்னேன் .. :)


1 comment:

Thayan said...

அண்ணை,
இந்திய தமிழ் சனத்துக்கு மட்டும் இல்லை எங்கட சனத்துக்கும் சினிமா தான் அரசியல் எண்டு ஆகிப்போட்டுது.சினிமாவை வைத்து இனத்தையே கேவலப்படுத்திக் கொண்டு இருக்குதுகள். இவ்வளவு கதைக்கிறதுகள் சீமானின்ர படம் வரக்குள்ள தலைக்கு மேல வைத்து கொண்டாடுதுகளோ எண்டு பார்க்கத்தானே போகிறோம்.

Related Posts Plugin for WordPress, Blogger...