2009-12-20

வேட்டைக்காரன்- ஒரு திரை அனுபவம்வேட்டைக்காரன் வழமைபோல் ஐரோப்பா முழுதும் வரும் என்பது உறுதி. ஐரோப்பா முழுதும் திரையிடும் உரிமையாளர் ,அவரும் ஒரு ஈழத்தமிழர், உறுதி பட கூறிய பின்னர், நாங்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும்.. என்ற ஒரு முடிவுடன்.. இன்று ஞாயிறு எங்கள் வீட்டுக்கு அருகாமையில் தான் ஈரோஸ் சினிமா திரையரங்கு ...அங்கேதான் தமிழ் திரைப்படங்கள் திரையிடுவது வழக்கம்.கொட்டும் snow இலும் மிதி வண்டியில் ஒரு மிதி மிதித்து கொண்டு போனால்.. ஏற்கனவே நானூறு சனம் , அதுவும் ஈழத்தமிழர் , நெதர்லாந்து வாழ்தமிழர்கள் , கூடி நிற்கின்றனர்.. அவர்கள் இப்படி ஒரு புறக்கணிப்பு பற்றி எதுவும் கதை இல்லை .
கிறிஸ்மஸ் விடுமுறை , எல்லாரும் குடும்பமாக வந்து இருந்தனர். நாங்களும் வந்த ஓரிரு கொஞ்சம் வெளிப்பான சகோதரிகளை ஒரு லுக்கு அடித்து கொண்டு போய் வழமை போல் பால்கனி இல் அமர்ந்தோம்.கடந்த முறை வன்னியில் கடும் யுத்தம் நடை பெற்ற போது தான் வில்லு வந்தது , அப்போது படம் ஓட்ட வில்லை ,மக்கள் இறக்கிறார்கள் , நாங்கள் படம்பார்க்க கூடாது என்ற ஒரு நல்ல முடிவு . அதனால் விஜய் ரசிகர்கள் இந்த படத்தை எப்படியாவது ஒட்டி வெற்றியடைய வேண்டும் என்று ஒரு முடிவில் இருந்ததை அறிந்துமிருந்தேன்.

படம் சொன்ன படி நேரத்துக்கு தொடங்கியது. விஜய் ரசிகர்களின் அட்டகாச விசில் , கை தட்டி , கூ அடித்து ஆரவாரம் ஒரு புறம் , மறு புறம் இடம் இன்றி நிலத்தில் இருந்த சனத்தின் ஆரவாரம். நாங்கள் முதலே reserve செய்த படியால் தப்பி விட்டோம். நாங்கள் reserve செய்யும்போது இப்படி புறக்கணிப்பு கதை தெரியாது. இருந்தாலும் படம் பார்க்க முன் தெரிந்தது உண்மை. நான் பார்க்க முடிவெடுத்த காரணங்கள் பல , ஏற்கனவே சொல்லி இருந்தேன். விசேடமாக நான் கொழும்பில் நிண்ட போது , 75o ரூபாய்க்கு வேட்டைக்காரன் டிக்கெட்டை வாங்கிய சனம் பலர். புறக்கணிப்பு என்றால் எல்லாரும் தான். இது என்ன .கொழும்பில் ஒரு கதை வெளிநாட்டில் ஒரு கதை. இதை விட இந்த படத்தை அதிக விலை குடுத்து வாங்கியதால் இந்த விலை டிக்கட்டு என்று ஊடக துறை நண்பர் கூறியதும் ஞாபகம் இருக்கு. ஏன் கொழும்பில் புறக்கணிக்காமல் வெளிநாட்டில் புறக்கணிக்கனும் ?? நியாயம் எல்லா இடமும் ஒன்று தான் ??
சரி அதை விடுவம்.வேட்டைக்காரன் எழுத்து வரும்போது எங்கட ரசிகர்கள் அடிச்ச விசில் அரங்கமே அதிர்ந்தது.. என்ன இருந்தாலும் விஜயின் அறிமுகம் சரியே இல்லை .. எதிர்கால சூப்பர் ஸ்டார் என்றால் ஒரு அதிரடியா வரணும் , சும்மா வந்து ஒரு பொலிசு கூட தமாஷ் பண்ணும் காட்சியை காட்டிலும் கொஞ்சம் வித்தியாசமாய் செய்து இருக்கலாம்.கொமெடி என்ன வென்றால் , விஜய் கையால் ஒரு koncrete தூணை அடித்து அதனுள் இருக்கும் கம்பிகள் ( நாலு )அடிச்ச அடியில் வளைந்த கட்சிக்கு நான் எழும்பி விசில் அடிச்சது விஜய் ரசிகர்களை கடுப்பு ஏத்தியதும் மறக்க முடியாத ஒன்று. என்னை நோக்கி ஏதோ கெட்ட வசனத்தில் பேசியது கேட்டது.. நான் விஜய் எவ்வளவு effort எடுத்து அதை செய்ததுக்கு தான் விசில் அடிச்சேன்..

எங்கையோ முந்தி வாசிச்ச கொமெடி :
பத்திரிக்கை நிருபர் : வேட்டைக்காரன் படத்தில யாரு காமெடி பண்ணுறாரு சார்??? மாறன்:நடிக்கிற விஜய் யே காமெடி தானே அப்புறம் என்னத்துக்கு புதுசா ஒரு கேரக்டர்??
உண்மைதான் ( நான் சொல்லுறது விஜயை அல்ல ) , விஜய் தான் main ரோல் காமெடியை செய்தாலும், சத்தியன் காமெடியில் சறுக்கியே இருக்கார் .. சில இடங்களில் காமெடி தானா என்று யோசிக்க வைப்பதும் .. சில இடங்களில் வெறுப்பு தருவதுமாக இருக்கின்றது..

பாடல்கள் , அவற்றின் காட்சியமைப்பு, எல்லாமே நன்று.. வழமை போல் ஆடும் விஜயின் எந்த steps இம் இல்லாமல் கொஞ்சம் புதுசா முயற்சி செய்தது வரவேற்க தக்கது.. குட்டி விஜயின் ஆட்டம் கூட பரவாய் இல்லை ..(நான் படம் எடுத்த வேகத்திலும் அனுக்ஷா ஆடின வேகம் கூட :) இருந்தாலும் கொஞ்சம் கவர்ச்சி தான் .. படத்தில் பாடல்களில் மட்டும் எடுப்பு இல்லாட்டியும் மனதை திருப்தி படுத்தும் வகையில் கவர்ச்சி இருக்கு . எதிர்காலத்தில் இதை மீள் பரிசீலனை செய்தால் நன்று ..பிளஸ்+2 வை நாலு ?? atempt செய்து பாஸ் பண்ணி விஜயின் ரோல் மாடல் என்று நினைக்கின்ற தேவராஜன் ஐ பி எஸ். படித்த கல்லூரிக்கு சீட்டு வாங்கி சென்னை வருகின்றார். வரும் போது தான் சுசி என்ற ( சுசீலா ) நாயகியை ரயிலில் சந்தித்து கற்பனையில் மிதக்கின்றார்.


கற்பனையில் போகும்காட்சி .. :(

சுசியின் பாட்டி கதைத்தாரா அல்லது எதாவது உளறினாரா என்று சரியான சந்தேகம்.. வேகமான பேச்சும் குடுகுடு நடையும் .. எங்கட காதை, கண்ணை ஏதோ செய்ய வைத்ததை உணர்ந்தேன்.

செல்லானு ஒரு ரௌடி சென்னையை கைக்குள் வச்சிருக்கான் அவன் ஒரு பொண்ணை ஆசைப்பட்டால் அவளுடைய குடும்பத்திற்கு டார்ச்சர் கொடுத்து பொண்ணை அடைந்துவிடுவான். அப்படி ஒரு செல்லானுவை விஜயிக்கு தெரியவருவது வகுப்பு தோழியையும் (உமா) செல்லான்னு வர சொன்னது தான்.
செல்லானு உமாவுக்கு காசு செருகிய காட்சி .. கொஞ்சம் கிளு கிளுப்பு தான்..

கொதித்து எழுந்த விஜய் ஒரு அண்ணனாக தன்னை ஏற்று கொள்ளுமாறு சொல்லி உமாவை கையும் மெய்யுமாக செல்லானு இடத்துக்கு அழைத்து சென்று .. என்ன தான் செய்வார் ??

அப்பாடி போட்டு தாக்கோ தாக்கி .... சபா .............!! அந்த சண்டைக்காட்சிகள் பார்த்தது எங்கட காதுகள் இப்பவும் அடைப்பு தான் .. பல்கனியில் இருந்ததோ தெரிய வில்லை ஏதோ எனக்கு அடி விழுற மாதிரி பீலிங்க்ஸ் தான் இருந்திச்சு..

அடிச்ச அடியில் செல்லானு ஒய்ந்து போட்டார் ( அப்புறம் விஜையை பொலிசு காரனாய் வரும் சாயாஜி ஷிண்டே அடித்து நொறுக்கி encounter இல் போட்டு தள்ள தயார் ( சிவாஜியில் ரஜனி எப்படி தப்பி போனதோ அதே மாதிரி தான் .. ஆனால் இங்கே போலீசை தாக்கி போட்டு காட்டுக்குள் பாய்ந்து ஓடினது தான் .. அப்புறம் ஒரு நீர் வீழ்ச்சி .. அதுக்குள் பாயும் விஜய் .. அப்புறம் நான் நினைத்தேன் படம் முடிந்து போச்சு என்று .. இனி தான் வேட்டை ஆரம்பம் என்று வருது ..: யம்மாடி இப்பதான் இடைவேளை .... லொள்.வேதநாயகம் அன்கோவால் .. அதுதான் செல்லானுவின் அப்பா( .. பணத்தால் அமைச்சரா கூட வர இருந்தவர் .. :( இலங்கை அரசியல் வாதி ஒருத்தர் மாதிரி ..) ) அவரது அட்ட காசங்களை ஒவ்வொன்றாக தகர்த்து எறிகின்றார் .. ஒரு பாஷா ரஜனி என்று சொல்லுங்களேன்.. அதே setup .. சங்கர் படம் மாதிரி எல்லாத்தையும் அழித்தும் , அடித்தும் நொறுக்குகிறார்.
செல்லானுவை போட்டு தள்ள ஆற்றுக்குள் , செல்லானுவுடன் டபுள் கப் பிக்கப்புடன் .பாய்ந்து விடும் காட்சி .. கொஞ்சம் ஓவர் பில்ட் up. விஜய் மட்டும் நீந்தி வெளியே வர முன் ,, Auto lock போட்டுட்டு வாறது, விஜய் இது தங்களுக்கே கூடவா தெரியலையா ???சாயாஜி ஷிண்டே கொஞ்சம் வடிவாக பொலிசு காரன் மாதிரி நடித்து கலாய்த்து இருக்கலாம். விஜையை மடக்கும் சந்தர்ப்பங்களில் விஜயிடம் ஏதோ ஒரு காரணத்தால் மாட்டி , விஜயை மடக்க முடியாமல் தவிர்க்கும் காட்சிகள் ..கொஞ்சம் மாற்றி அமைத்து இருக்கலாம் ..பொலிசு ஒரு காமெடியான ரோல் போலே இருக்கு .. இது எனது கருத்து.

பத்திரிக்கை நிருபர் மனோபாலாவும் ஓரிரு காட்சிகளில் வந்து கொமேடியாக செய்தி சேகரிக்கும் காட்சிகளை செய்ய முயற்சித்தும் எதுவும் காமெடியாக ரசிக்க கூடிய மாதிரி தோன்ற வில்லை..

ரவி., அதாவது பொலிசு ரவி என்ற ரோலில் வரும் விஜய் மாடி கட்டடத்துக்குள் சுசியை கடத்தி கொண்டே வைச்சு இருக்கும் கூட்டத்தை அடித்து நொறுக்கும் காட்சிகள் சில கொஞ்சம் ஓவர் ..

அனுஷ்காவின் இடுப்படி பிடித்து விஜய் ஆடும்போது விசில்களுக்கு குறைவில்லை.. :)

இறுதியாக வேதநாயகம், விஜயின் நண்பனை கொலை செய்த பின் துடித்து எழும் விஜய் .. ஐ பி எஸ் தேவராஜின் ஐடியா மூலம் .. வேதநாயகம் அரசியல் அமைச்சராக வர முன் போட்டு தள்ள போய் விஜய் ஆட்டோவில் வேதநாயகம் வீட்டுக்கு முன் இறங்கும் போது கிட்ட தட்ட எனக்கே சிரிப்பு வந்திட்டு.. முப்பது வில்லன்கள் வேட்டி உடுத்து பட்டை தீட்டி ரெடியா அடி வாங்க நிக்குறதை பார்த்து , தொடர் விசில் அடிச்சு ஒரு கல கலப்பை ஏற்படுத்தி விட்டேன் .. அரங்கம் முழுதும்.. அடிச்ச விசிலுக்கு ஒரு கை தட்டல் .. எனக்கு..!!!எல்லாரையும் அடித்து நொறுக்கி இனி வேதநாயகம் மட்டும் எஞ்சிய நிலையில் பொலிசு விஜையை கைது செய்ய , முன்னுக்கு இருந்த நண்பி சொன்னது கூட ஒரு பெரிய காமெடியா இருந்து எல்லாரும் சிரிச்சது மறக்க முடியாது: அவ சொன்னது " இப்பவே மூன்று மணி நேரம் பொறுமையா பார்த்து போட்டம் .. இன்னுமாவா.. " ஹா ஹா ..

இறுதியில் வேதநாயகத்தை , பாதிக்கப்பட்ட ஐ பி எஸ் தேவராஜனே போட்டு தள்ளின விதம் .. கொஞ்சம் த்ரில் தான் ..


என்னை பொறுத்த மட்டில் இது வெற்றி படம் என்பது உறுதியாக சொல்ல முடியாது .. ரஜனியின் பாஷா+ சிவாஜி + சங்கர் படம் + பகவதி + வில்லு + திருப்பாச்சி எல்லாமே இருக்கு ..


வேட்டைக்காரன் எங்கள் காசை வேட்டையாடிவிட்டான்.. !!!


No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...