2010-02-13

காதல் தோல்விகள் கூட ஒரு சுகம் தான் .. :)

இன்று காதலர் தினம்..

காதலர் தினம் கொண்டாடும் .. ஒரு தலைக்காதல், கண்டதும்காதல், நிண்டதும் காதல், உண்மைக்காதல் , இரு
தலைக்காதல், கள்ளக்காதல் என்று எல்லாக்காதல் நண்பர் களுக்கும் .. அவை எல்லாம் வெற்றி பெறவாழ்த்துக்கள்.

சந்தேகம் ???
இன்று காதல் ஜோடி களுக்கு மட்டும் தானா தினம்? இல்லை காதல் ( அன்பையும் குறிக்கும் ) கொண்ட (பெற்றோர் மீது , படிக்கும் பாடம் மீது, இல்லாட்டி ஒரு பிரபலம் மீது , அரசியல் வாதி மீது ) இவர்களுக்கும்... காதலர் தினம் தானே ???


காதல் ஜோடிகளுக்கு எத்தனையோ பேர் வாழ்த்து தெரிவித்து கொண்டு இருக்கும் நேரத்தில்.. கொஞ்சம்..நான் ... ...

காதலில் தோல்வியுற்றோருக்கு யார்தான் ஆறுதல் சொல்வது. அவர்களையும் இன்று மறக்க கூடாது. அவர்கள் அந்த வலியில் மூழ்கி கிடக்கும் நேரத்தில்..

சரி நாங்கள் ஆறுதல் சொல்லும் அளவுக்கு வளரவில்லை .. இருந்தாலும் என்றோ ஒரு நாள் நீங்களும் ஆறுதல் அடைய வேண்டும்...

பாருங்கள் காதல் தோல்வியால் வந்த வலி செய்யும் வேலைகளை ..


பாருங்க வீட்டில் அம்மா, அப்பா, சகோதரங்கள் , நண்பர்கள் என்று எல்லாரும் அந்தரித்தே போய் விட்டார்கள் ..

என்றையோ ஒரு நாள் சுட்டது:)

காதல் தோல்வியா?
அழு...
வாய்விட்டு அழு...
கதறிக்கதறி அழு...
உன்
கண்ணீரோடு காதலும்
கரைந்து போகும்வரை
அழு...
பின்பு
உலகத்தைப் பார்...
காதலையும் மீறி
எத்தனையோ அழகுகள்...
காதல்தோல்வியும் தாண்டி
எவ்வளவோ பிரச்சனைகள்...
அழகுகளை ரசிக்கக்
கற்றுக்கொள்...
பிரச்சனைகளை தீர்க்க
பழகிக்கொள்...
வாழ்வதற்கே வாழ்க்கையென்பதை
புரிந்துகொள்...!

பெற்றவள் இறந்தாலே
கண்ணீர்தான் சிந்துகிறாய்...
காதல் இறந்ததற்கா
உயிரைச் சிந்தத்துணிகிறாய்?
காதல் புனிதமானதுதான்...
புனிதமான தெதுவும்
உயிரை விலையாய் கேட்பதில்லை.
விலங்குகளை பலிகொடுத்து
கடவுளின் புனிதத்தை கெடுக்கிறோம்...
நம்மையே பலிகொடுத்து
காதலின் புனிதத்தை கெடுக்கிறோம்.
நண்பா ...
பாருங்கள் தோல்வியா?
இந்த இந்த
தேடிச்சென்ற காதலை மறந்து
தேடிவரும் காதலை அணைத்துக்கொள்...
காதலையே வெறுத்திருந்தால்
களவைப் போல காதலையும்
கற்று மறந்ததாய் நினைத்துக்கொள்...
வாழ்க்கையென்பது வாழ்வதற்கே
என்பதைப் புரிந்துகொள்...!






இந்த தொகுப்பில் எனக்கு பிடித்த ஒரு சில காதல் தோல்வி பாடல்கள் ,.. காணொளியாகவும், ஒலி வடிவிலும் தருகின்றேன்..
சோகங்கள் கூட சுமையாக உள்ள போது அதில் உள்ள ஆனந்தம் வேறு.. கொஞ்சம் நினைத்து பாருங்கள்..

1)
காதல் ராணி இல்லை : இது எனக்கு நீண்ட நாளாய் பிடித்த பாடல்

Kaadhal Raniyilleye by svpriyan





2)
மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும் போது சோகம் கூட சுகமாகும் ஆசைக்காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே ...

யப்பா என்ன பாடல்.. நம்ம தளபதி ஒழுங்க நடிச்ச காலத்தில் வந்த பூவே உனக்காக பாடல் ...





3)மோகனின் இதயக்கோவில் .. யார்தான் மறக்கலாம்.. எண்பதுகளில் அந்த சின்ன வயசில் நான் பார்த்த முதலாவது காதல் தோல்வி தொடர்பான கதையுள்ள படம்..
சூப்பர் படம்.. அதுக்கு பிறகு எத்தனையோ தடவைகள் .. பார்த்து ..விட்டேன் ..

காதலை சேர்வு மூலம் ( அலைகள் ஓய்வதில்லை ) வாழ வைத்தார் பாரதி ராஜா.
அதே காதலை பிரிவு (சாவு) மூலம் வாழ வைத்தார் இந்த இதயக்கோவில் ... மணி ரத்தினம் வாழ்க....:)

காதலியை இழந்தாலும் (அம்பிகா ) உண்மைக்காதலுக்காக வேறு ஒருத்தரையும் (ராதா) ஏற்க மறுக்கும் ஷங்கர் எனும் மோகன் .. இறுதியில் இந்த படத்தில் வரும் காட்சி.. ஷாபா,, நெஞ்சு அடைத்து மூச்சு திணற வைக்கின்றது.. பார்க்க தவறிய எவரும் இருந்தால் பார்த்து விட்டு சொல்லுங்கள் எப்புடி படம் என்று .. :)




இந்த கொடுமையோ என்னவோ தெரியல.. இன்னொரு படமான மெல்ல திறந்த கதவில் இரண்டாவது காதலை இறுதியில் சோக முடிவு வரும்போது கிளைமாக்ஸ் காட்சியில் வைத்து காப்பாற்றி காதலையும் வாழ வைக்குறார்.

காதல் தோல்வி படம் என்றால் வேற என்ன நம்ம முரளி இருக்காரே .. அவற்ற எந்த படம் தான் அப்படி இல்லை..
எனக்கு பல படங்களில் வந்த காதல் தோல்வி பாட்டுகள் பிடித்து இருந்தாலும் காலமெல்லாம் காதல் வாழ்கவில் வரும் ஒரு மணி அடித்தால் பாடல் உண்மையாவே ஹரிஹரனின் குரலில் உள்ளதை கிள்ளி எறிந்தது.



கண்மணி நில்லு காரணம் சொல்லு..ஊமை விழிகள் படத்தில் வந்த இதமான இனிய மெட்டு: எனக்கு தெரிந்த காலத்தில் இருந்து என்ன்டுடைய பாட்டு பெட்டியில் நான் கேட்கும்பாடல்.. ( பிறகு யாரும் பிழையாக நினைக்க வேண்டாம்.. என்ன தங்களுக்கு காலம் முழுக்க தோல்வியோடா தம்பி என்று.. ஹஹா )

மலர் ஒன்று எடுத்து சரம் ஒன்று தொடுத்து
தேவி உன் பூஜைக்கு நான் கொடுத்தேன்
மலர்ச்சரம் பிரித்து மலர்வளை தொடுத்து
ஏழையென் காதலை நீ புதைத்தாய்
புதைத்தது மீண்டும் மலராகும்
உன் பூஜையை நினைத்தே சரமாகும்
எஸ் என் சுரேந்தர் பின்னிட்டார்.. குரலில் ..



இப்படியே எழுதி கொண்டு போனால் ஜேசுதாஸ் தொடக்கும் இன்று வரை உள்ள எல்லா பாடகர்களும் பாடிய சோகப்பாட்டுகளை இங்க தரலாம்.. பிறகு உண்மையாவே இந்த சுவாமிகளுக்கும் பட்ட காதல் தோல்வி போல என்று உறுதி பட நினைத்தே போடுவியள்.
அதால காதல் தோல்வி பாட்டு கேட்கணும் என்றால் இங்கே கொஞ்ச இணைப்புகளை தரு கின்றேன்.. நான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறட்டும்..

  1. http://mp3.tamilwire.com/category/sad-love-songs

ஆட்டோக்ராபில் வந்த ஒரு பாடல் :ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே




வரிகள் - பா.விஜய்
படம் - Autograph


ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்,
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!

உள்ளம் என்பது எப்போதும்
உடைந்து போகக்கூடாது,
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக்கூடாது!
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயமில்லை சொல்லுங்கள்!
காலப் போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்!

உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும்,
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்!
யாருக்கில்லைப் போராட்டம்!
கண்ணில் என்ன நீரோட்டம்!
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்!

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்!
இலட்சம் கனவு கண்ணோடு
இலட்சியங்கள் நெஞ்சோடு,
உன்னை வெல்ல யாரும் இல்லை
உறுதியோடு போராடு!

மனிதா! உன் மனதைக் கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் படு தோல்வி
எல்லாமே உரமாகும்!
தோல்வியின்றி வரலாறா!
துக்கம் என்ன என் தோழா!
ஒரு முடிவிருந்தால்
அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்!

மனமே! ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ அது பனியோ நீ மோதிவிடு!

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!


மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ அது பனியோ? நீ மோதிவிடு!


இப்படி ஒரு பாடல் எவ்வளவு அழகாக சொல்லுது .. வலிகளை தாங்கும் உள்ளமே வாழும் உள்ளம்....

ஒன்று மட்டும் சொல்ல விரும்புவது. இது காதலில் ஒரு தற்காலிக பின்னடைவே தவிர வேறொன்றுமில்லை .. காலப்போக்கில் எல்லாமே சரியாக அமையும்..

இறுதியாக ...இது என் நண்பன் சோமனுக்கு ஏற்ற பாடல்.. யார் சோமன் என்று மட்டும் கேட்க கூடாது .. அவருக்காக இதை இங்கே பகிர்கிறேன்..
Kalyanam enbathu by svpriyan

2 comments:

கன்கொன் || Kangon said...

சுவாமிகள்....
அனுபவஸ்தர்களின் அனுபவ உரையை மதிக்கிறோம்...

//களவைப் போல காதலையும்
கற்று மறந்ததாய் நினைத்துக்கொள்...
வாழ்க்கையென்பது வாழ்வதற்கே
என்பதைப் புரிந்துகொள்...!//

மறந்திற்றம்...

காதல் ராணி இல்லையேல் எனக்கு மிகப் பிடித்த பாடல்... பாலசுப்ரமணியம் அழகாகப் பாடுகிறார்...

எல்லாப் பாடல்களும் எனக்குப் பிடித்தவை...

அது சரி,
மலைப்பில் 12ம் திகதியைப் போட்டுவிட்டு 'இன்னு காதலர் தினம்' என்று போட்ட மர்மம் தான் என்னவோ?

ப்ரியா பக்கங்கள் said...

கன்கொன் || Kangon said.

சுவாமிகள்....
அனுபவஸ்தர்களின் அனுபவ உரையை மதிக்கிறோம்...//

இப்படியே எழுதி கொண்டு போனால் ஜேசுதாஸ் தொடக்கும் இன்று வரை உள்ள எல்லா பாடகர்களும் பாடிய சோகப்பாட்டுகளை இங்க தரலாம்.. பிறகு உண்மையாவே இந்த சுவாமிகளுக்கும் பட்ட காதல் தோல்வி போல என்று உறுதி பட நினைத்தே போடுவியள்.

அது சரி,
மலைப்பில் 12ம் திகதியைப் போட்டுவிட்டு 'இன்னு காதலர் தினம்' என்று போட்ட மர்மம் தான் என்னவோ?//


எங்களுக்கு தானே .. எந்த நாளும் காதலர் தினமே.. அதாவது .. காதல் செய்ய துடிக்கும் .. உள்ளங்கள் :)

Related Posts Plugin for WordPress, Blogger...