2010-02-19

இதமான இரவில் நிறைந்த சுமைகளை இறக்கி வைத்து விட்டு கேட்க கூடிய பாடல்கள்


தற்போது ஒரு புற நாட்டில் ஏதோ கல்வி சம்பந்தமான வேலையில் வந்து நிக்குறோம். விமான நிலையத்தில் மூன்று மணி நேரம் வெள்ளனவே ஆஜரானதால் ஒரு கரையாக இருந்து ஒருக்கா இந்த ஒரு இரண்டு பாட்டுகளை கேட்டால் ஏதோ இருக்கிற சுமை எல்லாம் இறங்கி ஓடினதாகவே இருக்கும்.. என்று இணையத்தில் எனக்கு பிடித்த ஒரு சில பாட்டுகளை கேட்டு ரசித்தேன்......
அவற்றில் சில உங்களுக்கும்..



கட்டு மஸ்தான மோகினி

முதலாவது சின்னக்குயில் சித்ராவின் குரலில் வந்த சொந்தம் வந்தது வந்தது...
இந்த பாட்டை சித்திரா பாடும் போது பாட்டை ரசித்து கேட்டு ஒரு நிகழ்ச்சியில் அழுத நடிகை கூட இருக்கு.. :) கேட்டு பாருங்க..

சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
மாசங்கள் போனாலும் ....... பாசங்கள் போகாது மாமா
சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
சொர்க்கம் வந்தது வந்தது
அதை சொன்னால் என் மனம் துள்ளுது
மாசங்கள் போனாலும் வருசங்கள் ஆனாலும்
பாசங்கள் போகாது மாமா
சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
சொர்க்கம் வந்தது வந்தது
அதை சொன்னால் என் மனம் துள்ளுது


கண்ணேன்னு சொல்ல வேண்டாம் கிளியேன்னு கிள்ள வேண்டாம்
கண்ணாலே கொஞ்சம் பொறு போதும்
நீ வாழும் வீட்டுக்குள்ளே நீ போடும் கோட்டுக்குள்ளே
நீங்காம இந்த பொண்ணு வாழும்
உன்னையே நானே உசுரா தானே
நினைச்சேன் மாமா நெசந்தான் ஆமா
நான் வாங்கும் மூச்சிக்காத்து உன்னாலதான் உன்னாலதான்
ஓயாம உள்ளஞ்சொல்லும் உன் பேரை தான் உன் பேரை தான்
சொந்தம் பந்தம் நீ.....
(சொந்தம் வந்தது..)

பூப்போல தேகம் தொட்டு சோப்பாலே தேச்சி விட்டு
நீராட்ட நீயும் ஒரு சேய் தான்
வாய்யான்னு உன்னை கொஞ்சி வாயார உன்னை சொல்லி
சோரூட்ட நானும் ஒரு தாய் தான்


இரவா பகலா இருப்பேன் துணையா
கண்ணீர் வடிஞ்சா தடுப்பேன் அணையா
போகாது உன்னை விட்டு என்னாசை தான் என்னாளும்தான்
போனாலும் மண்ணை விட்டு பொட்டோடுதான் பூவோடு தான்
வாழ்வோம் மாமா நாம்....
(சொந்தம் வந்தது..)

இரண்டாவது பாட்டை நான் முக வலையில் இணைத்து இருந்தாலும் அந்த அழகிய குரலில் ராஜா அங்கிள் பாடும் போது என்னமோ தெரியல தொடர்ந்து கேட்டிட்டே இருக்கலாம் மாதிரி.
மோகினி நடிகையின் ஆரம்ப கால நடிப்பில் (1991 இல் ) வந்த நாடோடி பாட்டுக்காரன் படத்தில் ...


அப்புடி இருந்தனான் இப்படி ஆகிட்டேனே :)


மூன்றாவது முத்தான பாட்டு தான் : பனி விழும் இரவு - மௌனராகம்
ரொம்ப நாளாவே ... பிடிக்கும்.. :) ஜானகி எஸ் .பி . ராஜா அங்கிள் போட்டு தாக்கி இருக்கினம்.



நான்காவது :இது சின்ன பூவே மெல்ல பேசு படத்தில் வந்த சின்ன பூவே மெல்ல பேசு பாட்டு..



இறுதியாக கட்ட பொம்மன் படத்தில் வந்த .. ஒ.. ப்ரியா ப்ரியா.. எனக்கு பிடித்த பாட்டு.. எங்க இந்த பாட்டு போனாலும் நின்று கேட்டுட்டு போவேன் ,,, அப்படி ஒரு ஆசை இந்த ப்ரியா வில்
எனக்கும் வீட்டு பேர் ப்ரியா தானே ..:)

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...