2010-03-19

பேய்களும் தவிர்ப்புகளும்

கடந்த வாரம் புற நாட்டுக்கு விஜயம் செய்து ஒரு வாரம் கழித்து வழமை போல எனது வீட்டுக்கு வந்து சேர்ந்த போது நள்ளிரவை தாண்டி விட்டது. ஊரென்றால் நாய்களாவது சத்தம் போட்டு ஊரையே எழுப்பும். இங்க அப்படி ஒன்றுமே இல்லை. வழமை போல வந்து கதவை திறக்க திறப்பை போட்ட போது .. ஏதோ டச் பாசையில் பொலிசிடம் இருந்து வந்த நோட்டீஸ் கதவில் ஒட்டி கிடந்தது. அதை உரித்து எடுத்து கொண்டு உள்ளே நுழைந்தேன். எனக்கு தெரிந்த டச்சில் அதை வாசித்தால் ஏதோ விளக்கம் கோரி இருப்பதை அறிந்து கொண்டேன். ஆனால் எழுவாய் பயனிலை செயற்படுபொருள் தெரியாமல் இருப்பதால் உடனடியாகவே வீட்டில் ஸ்கான் செய்து அதை டச் நண்பனிடம் மின்னஞ்சலில் அனுப்பி வைத்து விட்டேன். அவனது பதில் வரட்டும் என்று போட்டு வீட்டை துப்பரவு செய்து போட்டு குசுனியில் தேநீர் அருந்த தயார் ஆன போது வெளியில வாகன சத்தம் கேட்டது. பக்கத்து வீட்டு காரர் யாரவது இரவில் பயணம் போய் வந்தால் டாக்ஸி பிடிச்சு கொண்டு தான் வாறது. குளிருக்க இரவில் நடக்க கஷ்டம் தான் காரணம்.
அப்படி தான் என்று போட்டு பாட்டையும் போட்டு கொண்டு சன் டிவியில் இரவு நேர நிகழ்ச்சிகளையும் பார்த்து பார்த்து தேநீர் தயாரிக்க தொடங்கினேன். வந்த வாகனத்தில் இருந்த பலர் பொலிசு சப்பாத்து சத்தம் மாதிரி பரபரப்பு சத்தம். உடனே நான் வெளி விறாந்தை மின் விளக்குகளை போட்டு விட்டு முன் ஜன்னலால் பார்த்தேன். பொலிசு வந்திருக்கு .. ஒரு வாகனம் என்றால் பரவாய் இல்லை . மூன்று நாலு வாகனம். எல்லாம் ஆயுதங்களோட வந்து நிக்கினம். அப்போ எனக்கு விளங்கிச்சு யாரையோ அல்லது ஏதோ களவு பிடி பட்டுட்டு போல. திடீர் என்று பார்த்தால் எனது முன் கதவை தட்ட நான் உண்மையாகவே பயந்து போனேன். உடனே கைத்தொலைபேசி மூலம் அயலவர்களுக்கு அழைப்பை செய்தால் நண்பர்கள் எல்லாம் நித்திரை. இனி என்ன கதவை திறப்பம் என்று போட்டு ( ஞாபகம் வருது சுவாமி நித்தியானந்தாவின் " கதவை திற காத்து வரட்டும்", எனக்கு பொலிசு தான் வந்தது).
வந்தவங்க சும்மாவா எல்லாம் படு அலெர்ட் நான் கதவை திறந்து முடிக்க முதலே அவங்க சுடுற மாதிரி நின்றாங்கள் பாருங்க .. ஒரு ஹார்ட் அட்டாக் வந்து இரண்டாவதும் வரும் போல கிடந்திச்சு. ஆடியே போனேன்.
உடனை என்னை அறியாமல் கையை தூக்கி போட்டேன்.. ( முன் அனுபவம் பல இருக்கு..) பிறகு என்னை வீட்டுக்கு வெளியே வர சொல்லி போட்டு கதவை சாத்தி போட்டு கேள்விகள் கேட்க தொடங்கினார்கள்.

நான் சொன்ன ஒரே ஒரு வசனம் .."" Sir, I just came from Copenhagen". i have no idea about these incidents". அவர்களுக்கு நம்பிக்கை இல்லை, போய் வந்த பத்திரங்கள், தங்கிய ஹோட்டல் துண்டுகள் எல்லாம் காட்டி அவர்களை திருப்தி படுத்தினேன். இத்தனைக்கும் அடியேன் கையை தூக்கின படி தான்.. ஹஹா .. மறக்க முடியுமா..

இதுதான் நடந்ததாம்
நான் ஒரு வியாழன் இரவு பயணமாகியதால் எனக்கு நடந்தது எல்லாம் தெரியாது.
எனக்கு பக்கத்து அறையில் ஒரு இளம் வயது பையன் குடி இருந்தான். நான் முன் பின் தெரியாததால் பெரிசா கதைப்பது இல்லை. நினைவு கூட இல்லை. தினமும் அவனுக்கு வரும் நண்பர்கள் நண்பிகளுடன் இரவில் படிப்பதும் பிறகு விடிய விடிய குடித்து கும்மாளம் போடுவதும் வழமை. அப்படி தான் அன்றும் நடந்து இருக்கலாம். இரவு குடித்து போட்டு கும்மாளம் போடும் போது பையன் மீது அடி அல்லது தவறுதாலாக எதாவது விழுந்து அல்லது வேணுமெண்டே கொலை செய்து அறைக்குள் போட்டு விட்டு வந்தவர்கள் எல்லாம் தலை மறைவாகி விட்டார்களாம். ஆனால் யார் கொலை செய்தார்கள் என்று இன்னமும் பிடிக்க வில்லை. ஒரு விசாரணை கமிசன் வைக்க சொல்லி பரிந்துரை செய்யலாம். பல விதமான கையடையாளங்கள் இருந்ததாம். இருந்தும் யார்தான் செய்தார்கள் என்று தெரியாதாம். அதுபோக நான் பொலிசிடம் கேட்ட கேள்வி .. உங்களுக்கு எப்புடி தெரியும் என்று. அதை அவர்கள் சொல்ல மறுத்து விட்டார்கள். கொலை செய்தவர்கள் பலர் என்பது மட்டும் உண்மை. கொலை செய்த அடையாளங்கள் எனது வீட்டின் முன் கதவுக்கு அருகாமையில் கூட இருக்கு .. என்று சொன்னார்கள். இதனால நான் ஏதும் அல்லது எனக்கு தெரிய வாய்ப்பு இருக்கலாம் தானே என்று தான் வந்தார்களாம்..


எங்கள் வீட்டு தொகுதி விறாந்தை ... :)

அது சரி, பொலிசு கூட ஒரு அரை மணி நேரம் கதைத்து போட்டு போய் கதவை சாத்த பயம் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை விறைக்க வைச்சு போட்டுது .. என்னாது சிரிப்பு .. அடியேன் இரவில் நித்திரை கொள்ள கூட பயம்.. பக்கத்து வீட்டு காரன் பொலிசு பேயாய் வந்து கதவை தட்டினால் என்னாவது ??
இதை விட பேய்கள் என்றால் எனக்கு பயமில்லை என்று அறுத்து உறுத்து சொல்லவும் மாட்டேன். இதை விட நேற்றில் இருந்து விறாந்தை விளக்கும் இரவென்றால் வேலை செய்து இல்லை. பேய் தான் நிப்பாட்டி போட்டுதோ.. ஸ்ஹபாஆஆஆ ..
வேர்க்குது ..

சினிமா பாடல்கள் எல்லாம் பாடி கொண்டிருந்த வானொலிப்பெட்டி இப்ப இறை பக்தி பாடல்கள் தான் பாடுது. அதுவும் சத்தமாய் .. வாற பேய்க்கு விளங்கனும் இங்க யாரோ இருக்கினம் என்று.. அதை விட விறாந்தை curtain எல்லாம் திறந்து விட்டாச்சு.. வீட்டில் backup உடன் கூடிய லைட் எல்லாம் 24 x7 சேவையை ஆரம்பிச்சிட்டு. அடியேனுக்கு பேய் என்றால் பயத்திலும் பார்க்க .. இது எப்புடி நடந்தது என்று அறியத்தான் ஆவல். ஏனென்றால் , சில நாட்களாக இரவில் முனகல் சத்தம் அல்லது நடந்து அல்லது ஓடி திரியும் சத்தங்களை கேட்டு இருக்கேன். யார் என்று கதவை திறந்து பார்க்க அவ்வளவு ஆசை இல்லை. தேவையும் இல்லை. இருந்தாலும் இப்போ ஆவல். இப்ப எல்லாம் அந்த சத்தம் இல்லை. அதால கடந்த இரண்டு நாட்களாக என்கூட இன்னொரு நண்பனும் இருந்தோம்.
எங்களிடம் டார்ச் லைட், தடி பொல்லு கூட ( வீட்டான் தும்பு தடியை உடைத்து ) வைத்து போட்டு இரவானதும் வெளியே வந்து நடமாடி திரிவதும் பிறகு போவதுமாய் இருந்தோம். எங்களுக்கு காலம் நல்லது,. நேற்று இரவு நாங்கள் வெளி இடம் சென்று போட்டு வந்ததால், வரும் போது எங்கள் வீட்டுக்கு கிட்டே ஒரு கார் வந்து நின்றதை கண்டதும் நாங்கள் உடனையே போலிசுக்கு போட்டு குடுத்து விட்டு( என்னிடம் அந்த நம்பர் தந்தவை) பொலிசு வரும் வரைக்கும் பாதையில் தயாராக இருந்தோம். கார் நம்பர் எடுத்தாச்சு.. இனி இது யாரோ என்று தெரியாது.. உண்மையாகவே யாரும் நண்பர்கள் எங்கள் வீட்டு தொகுதிக்கு வந்தாலும் இதிலை நிறுத்த சந்தர்ப்பம் இருக்கு. இருந்தாலும் பொலிசு வந்திட்டு.. நாங்கள் போய் சொன்னோம் இந்த காரையும் உரிமையாளரையும் கண்டு பிடியுங்க என்று.
அவர்கள் உடனயே கார் பற்றிய தகவல்களை எடுக்க தொடங்கினார்கள். பத்து நிமிடங்கள் போயின. நான் சொன்னேன் நான் வீட்ட போறேன் என்று, போலிசும் என்னுடன் எனக்கு முன்னால் வந்து அந்த வீட்டை அவர்களிடம் இருந்த திறப்பால் திறந்த போது திடிக்கிடும் அளவுக்கு ஏங்கியே போனார்கள். அங்கே ஒரு பெண் மது அருந்தி கொண்டு இருந்தாளாம். அவள், கதவை திறக்க போத்தலினால் கதவை நோக்கி வீசினாளாம். உடனே பொலிசு teaser துவக்கு மூலம் சுட்டது.. நான் வீட்டுக்க நின்றனான் பயந்தே போனேன். பிறகு அவளை தூக்கி கொண்டு போவதை தான் பார்த்தேன்.
இன்று பத்திரிகைகள் எல்லாம் எங்கள் பெயர்தான் பிரபல்யம்.. என்ன தெரியுமா..
அந்த பெண் அந்த இறந்த மாணவனின் காதலியாம் .. அவனை அன்று கொலை செய்து போட்டு தப்பி போய் இருக்காளாம். அது மட்டுமில்லை அவளுக்கு தெரியாது பொலிசு வந்து உடலை மீட்டது. அவள் இன்று வாகனம் கொண்டு வந்து உடலை மீட்டு செல்ல வந்திருக்கலாம் என்று பொலிசு சொன்னதாக பத்திரிக்கை செய்தி.. ஸ்ஹபாஆஆஆஆஆஅ
இப்ப நாங்க famous ஆகிட்டம். நாங்க அலெர்ட் த்தான்.. அவள் வந்தாள் என்றால் அடுத்தது நான்தான்.. ஆனால் வழக்கு முடிச்சு அவள் வாறதுக்க நான் ஊர் போய்டுவன்.. இது எப்புடி..
இப்ப எனக்கு என்ன தெரியுமா.. சந்தேகம் "காதலன் பேயாய் உலாவுவான் தானே, தன் காதலியை காட்டி குடுத்த கோவமிருந்தால் அடியேனுக்கு ஆப்பு.."ஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இப்ப எனக்கு சந்தேகம் .....பேய்கள் இருக்கே, அது உண்மையா??? யாரும் சொல்லுங்கவேன்,,,,

தமிழகத்தில் வெளிவரும் ஒரு பத்திரிக்கையில் பேய்கள் பற்றி பார்த்த போது



இனி பழைய பேய்க்கதை ஒன்று.

93 என்று நினைக்கின்றேன், யாழ்ப்பாணத்தில் இருந்த போது. எங்கள் உறவினர் ஒருவரின் மறைவுக்கு நானும் எனது வீதி நண்பன் பிரேமும் ( எங்கள் வகுப்பும் கூட) கைதடி சென்றோம். செல்லும் போதே மாலை நான்கு மணி..
இறுதிக்கிரிகைகள் முடிந்த பிறகு சுடலை சென்று பிறகு வீடு சென்று கதைத்து விட்டு வெளியேறும் போது இரவு பத்து மணி. எங்களுக்கு செம்மணி என்றால் நெருப்பு பயம். இரண்டு பேரும் தீர்மானித்தோம்.. வாற போக்குவரத்து கழகம் பஸ்ஸில் யாழ் செல்லுவோம் என்று போட்டு கைதடி சந்தியில் நின்றால் இரவு பதினொரு மணி ஒரு பஸ்சும் இல்லை .. சனம் தான் போய் வருது .சரி நாங்கள் ஒரு குடும்பம் சைக்கிளில் போக அவர்களை பின் தொடர்ந்தோம். டைனமோ லைட் இல்லை. இருளில் இடைக்கிடை A9 வீதியால் போய் வரும் வாகனம் தான் எங்களுக்கு வெளிச்சம் . கைதடி முதியோர் இல்லம் , பிறகு நாவற்குழி இறால் பண்ணை , நாவற்குழி பாலம் என்று போய்ட்டு இருக்கு எனக்கு வந்திட்டு, வர வேண்டியது. நான் சொன்னேன் மச்சான் பிரேம் எனக்கு ஒருக்கா போகனும் போல இருக்கு . அவன் சொன்னான் , பொறு மச்சான் செம்மணி போகட்டும் போவோம் என்று. நாங்கள் தொடர்ந்த சனம் இடையில் கால வாரி விட்டுதுகள். நாங்க இரண்டு பேரும் தான் இப்போ பயணத்தில். எங்களுக்கு செம்மணி எங்கே வருது என்று தெரியாது. நீண்ட தூரம் சைக்கிள் மிதிச்ச மாதிரி ஒரு பீளிங்க்சு.பிரேம் சொன்னான் மச்சான் எனக்கும் வருது .. என்று ,, சரிடா அதில ஏதோ மரம் மாதிரி தெரியுது, அதில நிற்ப்பாட்டுவம் என்று வலு கலாதியாய் சைக்கிளை நிப்பாட்டி போட்டு மரத்துக்கு கிட்ட போய் இரண்டு பேரும் ஒவ்வொரு திசையில் நிண்டு கொண்டு, செய்யவேண்டியதை செய்யும் போது, A9 வீதியில் தூரத்தில் போக்குவரத்து கழகம் பஸ் வந்தது அது பாச்சின வெளிச்சத்தில் தெரிந்தது. நான் பிரேமை அப்பதான் பார்த்தேன். அந்த வெளிச்சம் பக்கத்தில் இருந்த மரம் .. எங்கள் கண்ணுக்கே தெரியாமல் இருந்த ஒரு கட்டிடம் என்று எல்லாத்தையும் வெளிச்சம் போட்டு காட்டினது.
மச்சான் டேய் இதுதாண்டா செம்மணி .. என்றதுதான் பிறகு நாங்க எப்படி கல்வியங்காட்டு சந்தி மட்டும் வந்தம் என்று தெரியாது.. ஓட்டமோ ஓட்டம் .. எனக்கு மன்னிக்கவும் எங்களுக்கு அப்படி ஒரு ஷக்தி .. அதுவும் முடிக்க வேண்டியது கூட முடிக்காமல் ( பிறகென்ன சிப் எல்லாம் போடாமலா என்று நக்கலாக கேட்பது தெரியுது .. situation கண்ணா situation ) .
நல்லூரடியால் தான் போய் பிறகு திருநெல்வேலி அம்மன் சிவன் கோவிலடியால் போய் பிறகு பரமேஸ்வரா சந்தி பிறகு குமாரசாமி வீதிக்கு போகணும்., சிவன் கோவிலடியில் நான் பிரேமிட்ட சொன்னேன் மச்சான் வீபுதி பூசினால் பேய் வராதாம் என்று .. சரி போய் வாசிலில் நின்று பூசிப்போட்டு ( இப்பவும் பேய் பயத்தில் நெஞ்சு இடிக்குது, இப்ப என்றது அப்போ lol & lollu ) சிவனே என்று வர, உங்க யாரடா என்று டார்ச் அடிச்சு கொண்டு யாரோ ஓடி வர எடுத்தம் ஓட்டம் .. எங்கட வீட்டு படலை மட்டும் ஓட்டம் தான் . வீட்டில அதுகள் கமிட்டி மீட்டிங் போட்டு முடிவு எடுத்தாச்சு போன பொடி இண்டைக்கு வராது. நான் போய் படலையை திறக்க அதுகள் ஓடி வந்து பேச்சோ பேச்சு .. இரவில் எல்லாம் தனிய வந்தநீயா .. என்று,,, பிறகு என்னடா செத்த வீட்டுக்கு போட்டு வரேக்க வீபுதி எல்லாம் பூசி கொண்டு வாறாய் என்று.. நான் நடந்ததை எல்லாம் சொல்லி முடிய அதிகாலை இரண்டு மணி. பிறகு போய் தோய்ந்து போட்டு வந்து அதுக்குள்ளே அம்மா சமைத்த புட்டும் முட்டை பொரியலையும் சாப்பிட்டு போட்டு படுப்பம் என்றால் அறைக்க தனிய படுக்க பயம். விராந்தையில் படுத்து கொஞ்ச நேரத்திலையே நித்திரை. விடிய( காலை பதினொரு மணி இருக்கும் ) சைக்கிள் தொடக்கம் செருப்பு எல்லாம் மாறி மாறி கழுவினது .. பேய் ஏதும் தொத்தி வந்திருந்தாலும் என்று தான்.
இப்படி பேயால் பட்ட தவிர்ப்புகள் பல.. இன்னும் இருக்கு ...
பிறகு வரும்...

அண்மையில் வெளி வந்த சூப்பர் கிட் பேய் படமான drag me to hell பாருங்கள்..
பேயின் அட்டகாசங்கள் எப்புடி இருக்கும் என்று தெரிய வரும்..



1 comment:

SUMAN said...

பழைய பேய்க்கதை எண்டு சொல்ல நானும் என்னமோ ஏதோ எண்டு மூச்சைப்பிடிச்சுக்கொண்டு படிச்சன்... ம்

எதுவும் தட்டுப்பட இல்ல

Related Posts Plugin for WordPress, Blogger...