அப்போது பல்கலைக்கழக அனுமதி கிடைத்து விட்டது. கொழும்பில் தனியார் கணணி மையத்தில் இரண்டு வருட டிப்ளோமா முடியும்காலம், முதல் முறையாக சகோதர மொழி மாணவர்களுடன் பழகிய காலங்கள். இன்றும் அவர்கள் எனது நண்பர்களா இருக்கிறார்கள். வார நாட்களில் கணணி மையத்தில் தான் காலத்தை போக்குறது.
யாழ்ப்பாண பிள்ளைகளை, முன்னர் அங்கு இருந்த காலத்தில் ஒரு சிலருடன் கதைத்து ,சில வேளைகளில் கதைக்காமல் தவிர்த்து ரொம்பவே பீல் பண்ணி இருந்த காலத்தில் தான் , இப்படி யான புது அனுபவங்கள் இந்த புது முகங்களுடன்.
நான் படித்த வகுப்பில் ஆறே ஆறு பையன்கள்(மூன்று சகோதர மொழி, நானும் கரனும் மற்றது இன்னொரு கொழும்பில் வளந்த பையன் - கொழும்பு பையன் ). மிச்சம் எல்லாமே ( பதினனைந்து) தமிழ் சகோதரிகள். யாரு என்றெல்லாம் கேட்க கூடாது. அதில பாதி தமிழே கதைக்காம , எதை கேட்டலும் ஆங்கிலத்தில் எங்களையும் கதைக்க வைக்க முயலும் சகோதரிகள். அவங்களை பற்றி சொல்லணும் என்றால் ( கட்டமைப்பை ) , நமீதா மவளிகாவே தோத்து போயிடுற அளவுக்கு ....... அல்லாத பிகர்கள். மீதி சைவப்பழங்கள். பட்டை தீட்டி தான் அங்கேயும் வருவினம். போனால் போகுது ஒரு மகாலட்சுமி மாதிரி என்று சொல்லுவம்.
விளம்பர இடைவேளை ஆரம்பம்
வேறு வகுப்பில் படித்த நண்பர் ஒருத்தன் சொன்ன ஞாபகம் இருக்கு.. "டேய் உங்கட வகுப்பில எல்லாமே பெண் பிள்ளைகலாமே " ஆமா நாங்க எப்படி தான் ஆண்பிள்ளைகளாய் இருக்கிறது.. அதுகளே மாத்தி போட்டுதுகள்.. என்று உடனே வெட்கம் , மானம் ,ரோஷம் ,சூடு சுரணை இல்லமல் சொல்லிப்போட்டேன்.:)
விளம்பர இடைவேளை முடிவு
எங்களுக்கும் வகுப்பு போறதென்றால் ஒரே கிளு கிளுப்பு. அதுவும் காலை தொடங்கினால் மாலை 4:00 மணி வரை வகுப்பு., பின்னர் எங்கள் கணணி மையத்துக்கு அருகாமையில் உள்ள , MC இல் இருக்கிற KFC இக்கு போறது ( கூட்டிட்டு இல்ல ,கூட்டி கொண்டு போவினம் )..அப்போ எல்லாம் கோழி விலை குறைவு ..:( இப்ப எல்லாம் அப்படி யாரும் கூட்டிட்டு போக கட்டு படியாகாது ..கோழி 1000 ருபாய்.
இப்படி இருக்கிற காலத்தில் நம்ம கரனுக்கு ஒரு கொழும்பு பெண் மீனாட்சி என்று சொல்லுவம் சுருக்கமாக, அவள் மீது ஒரு கிக்கு ,லவ்வு ,நாங்க சும்மா இருப்பமோ வாற போற நேரம் எல்லாம் அவளை பார்த்து எங்கட ஸ்டைல் இல் " யாரோ தங்களை லவ் பண்ணினம் போல , நீங்க வர வர புதுசு புதுசா உடுப்பு போடுறீங்க" என்று சொல்லி அவளுக்கும் அலுத்து போச்சு.. மீனாட்சிக்கு எங்கள் மூவரில் யாரு என்று தான் சந்தேகம். அவளும் ஒவ்வொருத்தரா பரீட்சித்து பார்த்தாள். நாங்களும் பரீட்சையில் ஒரே மாதிரி பதில்கள் வழங்கி அவளை குழப்பினோம்.
இருந்தாலும் பொண்ணு மட்டரில நாங்க சறுக்குவம் என்று தெரியாமல் இல்லை அவளுக்கும். இப்படி இருக்கும்போது தான் தென் இலங்கை சுற்று பயணம் , இரண்டு நாட்கள் .வகுப்பில் ஒரு சகோதரியை தவிர எல்லாரும் வர கூடிய தாய் இருந்தது.. நாங்க விடுவமோ. எங்க பஸ் வண்டிக்கையே எங்க சகோதரிகள் , எங்க நல்ல காலத்துக்கு விசிறிகள் வேற பஸ் வண்டிக்க. கொழும்பை தாண்ட முதலே ஆட்டம் பாட்டம் .. சூப்பர்.
என்னட்ட இருந்த ஒரு சில பாட்டுகள் ( அப்போ தான் தேவா என்னை டப்பான் குத்தால் கவர்ந்த நேரம்) அவரின் பாட்டுகள் தான். நாள் முழுக்க ..:) முக்கிய விஷயம் நாங்க ஆட இடமிருக்கவில்லை . இருக்கிற பொண்ணுகள் எல்லாமே ஆட தொடங்கிற்றுதுகள். துப்பட்டாவை இடுப்பில் கட்டி போட்டு ஆட தொடங்க நாங்க முழு நாளும் அங்க விழுந்து இங்க விழுந்து ஓவ்வொரு கோணத்தில் படம் எடுத்த தான் வேலை :) நான் இல்லை .. எல்லாருமாய் ..
போட்ட பாட்டுகளில் ஒரு சிலவற்றை அப்பப்போ இங்கே இணைத்துள்ளேன்.
முதல் நாள் கதிர்காமம் , மலை ஏறினது ; முருகன் என்று போய் முடியவே இருட்டிட்டு.
இரவு ஒரு நல்ல சாப்பாடு ( என்ன ...குக்குள் மஸ் , பொல் சம்போல், பத், கங்குன் ) . ஒரு விசிறி மாணவனின் வீட்டில் தான். அனுபவம் அவங்கட சாப்பாடு சாப்பிட்டு.. இப்போ எல்லாம் அதுதான் கூட சாப்பிடுறது. செலவும் இல்லை .. :)
இரண்டாம் நாள் மாத்தறை ,காலி என்று போனாலும் கூட நேரம் பஸ் பயணம் தான். பாட்டு பெட்டிக்கு ஒய்வு இல்லை. பொண்ணுங்க ஆட்டமும் தொடர்கிறது.
நாங்களும் எப்படியாவது இந்த லவ் மட்டரை சொல்லியே ஆகணும் என்று , தொடங்கியாச்சு. முதலில தூரவா (பஸ் இக்க போய் நின்றுகொண்டு தம்பி பாட்டை போடுடா என்றதும் போட்டேன் அந்த பாட்டை )
அதுதான் மீனாட்சி மீனாட்சி .. ஆனந்த பூங்காற்றே .. அதோட எல்லாரும் எங்க மற்றைய சகோதரிகளும் சேர்ந்து மீனாட்சி அப்படி என்ன தான் காதல் என்று சொல்ல .. பின்னுக்க இருந்த நான் கரன் என்னவாம் என்றேன்.. ஒருக்கா சப் என்று போச்சு.. பிறகென்ன ட்ரிப் எப்படி இருக்கும் என்று தெரியும்தானே ..
மீனாட்சி அழ தொடங்க , எல்லாரும் என்னை பேச, கரன் உவங்கள் போய் என்று சொல்ல ,, நான் தனியவே நின்று வேண்டி கட்டினது தான் .. ( இது வழமை தானே - வடிவேலு ஸ்டைல் இல் .ம்ம்ம்ம்ம்ம்......................)
ஒரு இரண்டு மணி நேரம் பஸ் டிரைவர் நிம்மதியா பஸ் ஒட்டி இருப்பான். அப்புறம் மாலை பேருவல கடல் கரையில் ஒரு சில மணி நேரம் .. அதுக்கு பிறகு எல்லாருமா சேர்ந்து வந்த trip ஐ முதலில் முடித்து போட்டு பிறகு கதைப்பம்..
அதுக்கு பிறகு எங்கே தேவா .. எல்லாமே .. எங்கட சோகமான ஆட்டம் தான்.. அப்போது தான் நாங்கள் ஆடினது.. நிம்மதியா .. :)
அதிலும் முக்கியமாய் அஞ்சலியை மடிக்கலாம் என்ற பாட்டுக்கு ..எங்களை மறந்து ஆடினது மறக்க முடியாது..
அஞ்சலியை மடிக்கலாம் :)
ஒரு மாதிரி அந்த பொண்ணுகளும் எங்கட ஏதோ ஆடினதை பார்த்தோ தெரியல .. கொஞ்சம் வெளிப்பாய் இருந்ததை காண கூடியதை இருந்தது ..
போதிக்கின்னு.. :)
இப்படியே வந்து சேர்ந்திட்டம் .. சந்தோஷமான ஆரம்பம் பெரிய வெற்றி இல்லாமல் முடிஞ்சு போச்சு .. ஹா ஹா ..
அடுத்த நாள் வகுப்புக்கு போகும்போது மீனாட்சி நெருப்பு எடுத்ததை பார்த்த போது ,,.. காளி வேஷம் தெரிஞ்சது.. எப்படி.. சமாளிக்க முடியுமோ.. அப்படி எல்லாம் சமாளிச்சு பார்த்தேன்,.. முடியவே இல்ல ..
இருந்தாலும்.. எங்கட tune எல்லாமே அந்த மீனாட்சி பாடல்தான்.. " அடி அடிச்சால் அம்மியும் நகரும் " என்று எங்கட சங்கத்தின் திருநாமம் ,.,,. முயற்சி செய்து செய்து ,, மீனாட்சி ஒரு கட்டத்தில்( ஏறத்தாள இரண்டு ஆண்டுகள் மேலான காதல் .. முடிவுக்கு வந்தது..) ..
விளமபர இடைவேளை ஆரம்பம்
அதாவது நான் பல்கலைக்கழகம் போற காலத்தில்,( இங்கே ஒன்றை சொல்லணும் .. எங்கட கம்பஸ் இல் போய் படிக்க தொடங்கின பிறகு) , யாரோ ஒருத்தன் என்னை கொழும்பில் கேட்டன் மச்சான் . உனக்கு ராசிடா... கொழும்பில இவளவை ,, கம்பஸ் இல் அவளவை... நான் சொன்னேன் " தேரான தேரெல்லாம் தெருவில் ஓட , தேவாங்குகள் மட்டும் கம்பஸ் வருமாம் " இப்போ இதை தத்துவம் மாதிரி .. ... எடுத்து வைச்சு இருக்கானாம் .. அவன்.. இது பத்து வருஷத்துக்கு பின்னர் சொன்னான் .. எனக்கு:)
)
விளமபர இடைவேளைமுடிவு
ஒரு நாள் கரன் எனக்கு " தொல்லை" பேசியில் மச்சான் மீனாட்சி என்னை வரட்டாம் KFC இக்கு ..தானும் ஏதோ கதைக்க வேணுமாம். அப்ப எனது அறிவுரை தம்பி தனியே போயிடாதே ,,, அடியாள் வைச்சு அடிக்க போறாளோ ..அல்லது ... காதலை சொல்ல போறாளோ.. இல்லை ... நான் வேறை யாரையோ காதலித்து விட்டேன் ,,, என்று.. சொல்ல ..போறாளோ .,.. என்ற ஏக்கத்துடன் கூடிய அறிவுரையை சொன்னேன்..
அங்கே ..நடந்தது என்ன.. கரனின் நிலைமை என்ன.. அடுத்த வாரம் தொடரும்.,.
(சீரியல் எல்லாம் பார்த்து பொறுமையா இருக்குறவர்களுக்கு.. பரவாய் இல்லை மற்றையோர் மன்னிக்கணும்.. நேரம் இல்லை எழுதி முடிக்க ... :)
4 comments:
சகோதரி எண்டு சொல்லி sight அடிக்கிற ஈன புத்தி
அவர்கள் .. உடன் பிறவாத சகோதரிகள் .. ..
அவங்க மீது காதல் வந்தால் அது யார் குற்றம்.. :)
அகா.. ஆகா. தேவாவுக்கு கோவில் கட்டியே கும்பிடுவீங்க போல.. ;)
//அவர்கள் .. உடன் பிறவாத சகோதரிகள் .. ..
அவங்க மீது காதல் வந்தால் அது யார் குற்றம்.. :)
//
;) mmmm
LOSHAN said...
அகா.. ஆகா. தேவாவுக்கு கோவில் கட்டியே கும்பிடுவீங்க போல.. ;)//
முதலில் .. தங்கல் வருகைக்கு நன்றிகள் :)
அந்த நேரம் அவங்க குத்து தான் எங்களை போன்ற இளம் வாலிபர்களுக்கு விருந்தாக இருந்திச்சு..
நமீதம் , ஸ்ரேயா (http://twitpic.com/xdv9d ), எல்லாம் இருக்கும்போது அந்த தாத்தாவுக்கு கட்டுவமா போய்.
Post a Comment