2009-10-18

எனது பார்வையில் ஆதவன்

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் முதல் முறையாக சூரியா நடிக்கும் படம் தான் ஆதவன்.

ஆதவன், முகமூடி, சிங்கம் என்று மூன்று படங்கள் தொடர் வரிசையில் சூரியாவுக்கு.

அயன் போட்ட சக்கை லாபத்தை தொடர்ந்து ஆதவனும் போடும் என்ற நம்பிக்கையில்.

இருந்தாலும் விஜயின் குருவியை தயாரித்த உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் ஆதவனை தயாரிக்கிறது. இது உதயநிதியின் இரண்டாவது தயாரிப்பு.

இங்கைதான் பிரச்சனையே ஏற்கனவே விஜயின் மதிப்பை எல்லாம் தூக்கி எறிந்த குருவி பட்ட அவமான தோல்வியை ஆதவனும் சந்திக்க நேரிடுமா என்பது தான் கேள்வி ???

இந்தியா , இலங்கையில் வெளியிடப்பட்ட உடனையே விமர்சனங்கள் கொட்ட தொடங்கிய நிலையில் ஐரோப்பாவில் தீபாவளி தினத்தில் வெளியிட இருந்தாலும் லண்டனில்,மற்றும் ஐரோப்பிய நகரங்களில் தீபாவளி தினத்தில் செய்த ஆர்ப்பாட்டம் , கவரும் ஒன்று கூடல் போன்றவற்றால் , ஒரு நாள் பின் தள்ளி வெளியிட செய்தது. இது முகவராக இருக்கும் இலங்கை தமிழர் சொன்ன கதை.

எனினும் ஐரோப்பாவில் திரையிடப்படும் போது சென்று பார்த்து விடல் வேண்டும். தினமும் போடுவது இல்லை, வாடகைக்கு தியட்டர் எடுத்தே போடுவார்கள் , தமிழர்கள் வாழும் நகரங்களில் உள்ள தியட்டர்களில் காட்சி நடக்கும், இது எந்த நாடு என்றாலும் லண்டன் தவிர என்று நினைக்கிறன், சூரிச் சரி , ஜேர்மன் நாட்டில் சரி இது தான் வழமை. நெதேர்லந்தில் தமிழர்கள் நான் வசிக்கும் நரகத்தில் அதிகமாக இருப்பதால் எனது வீட்டிற்கு முன்னால் உள்ள பிரமாண்டமான தியட்டர் இல் தான் போடுவார்கள். ஒரு நேரத்தில் ஏறத்தாள 500 பேரையாவது கொள்ளும் பிரமாண்டமான தியட்டர் அது.

எம்மை போன்ற இளைஞர்களுக்கும் அன்று தான் ஈழத்து தமிழ் பொண்ணுகளை பார்க்க முடியும் . வாயால் சொல்ல முடியாத நிலை, இப்படியா என்ன சரவணன் சார் இது என்று கையை நாடியில் வைச்சு சொல்லும் அளவுக்கு அவர்கள்!!!


அதுக்குள்ளே ஒரு அம்மணி தங்கள் நாய் குட்டியை கூட கூட்டி கொண்டு வந்து விட்டார்கள் குடுத்து வைச்ச நாய்குட்டி !!!அது இடைக்கிடை சன ஆரவரதுக்க சவுண்ட் குடுத்து எல்லாரையும் கலாய்ச்சு கொண்டு இருந்தது ha ha

தீபாவளி வெளியீடு , தொடக்கமே ஒரே விசில், கூ, என்று களை கட்டி இருந்தது. எல்லாம் நம்ம நயன்தாரா , சூரியா , வடிவேலு என்று ஒரே அமர்க்களம்தான் !!!

சனம் நிறைந்த கூட்டம் இடம் கூட இல்லை இருக்க பல்கனி படிக்கட்டுகளில் இருந்து பார்த்தார்கள். ஏறத்தாள 600 பேருக்கு மேல் என்பது மட்டும் தெரிஞ்சது.

சூரியாவுக்கு இப்படி ஒரு ரசிகர்களா என்று சொல்லும் அளவுக்கு பிரமாண்டமான கூடத்தில் நிறைந்து வழிந்த சனம் இடை வேளையின் போது தங்களிடையே கதைக்க தொடங்கிய போதுதான் தெரிந்தது ,



படம் முழுக்க காட்சிகள் தொய்வின்றி செல்வதை காணலாம். உண்மையில் இந்த வருடத்தில் நான் பார்த்த படங்களுக்குள் குடும்பமாய் ரசித்து பார்க்க கூடிய படங்களில் முதிலில் உள்ளது இது தான். இவ்வருடம் வில்லு தொடக்கம் கந்தசாமி வரை பார்த்தேன்.




விதம் விதமான துவக்குகளால் போட்டுத்தள்ளும் சூர்யாவின் கெட்டப்புகள் பார்க்கவே திணறுது. ஹரிஷும் அதுக்கு தக்க மாதிரி பட்டி தொட்டி எல்லாம் அதிரும் விதத்தில் போட்டு தாக்கி உள்ளார்.

இருந்தாலும் ஏமாற்றம் தந்த குருவி பட தயாரிப்பாளர் இங்கே ரசிகர்களை ஏமாற்றாமல் காப்பாத்தி இருக்கார் என்பது படம் பார்த்தவர்களுக்கு புரியும் என்று நம்புறேன்.

இருந்தாலும் இரண்டாவது பாடல் அதாவது நயந்தாராவின் அறிமுகப்பாடல் தான் கொஞ்சம் பிடிக்கல. திரையில் நல்லா தான் இருந்தது. இருந்தாலும் தொடர்ந்து கேட்க கூடியதா இருக்கும் என்று நான் நினைக்க வில்லை.இருந்தாலும் நயன் "தாரா" சூப்பர். கந்தல் சாமியில் சிரேயாவின் குளிர்மையான கவர்ச்சி போல் நயந்தாரா நடிக்கவில்லை என்பது மட்டும் உண்மை.எனினும் நயனின் ஆட்டத்துக்கு ஏற்றவாறு விசில் அடிச்சு ஆரவாரம் செய்ததை பார்க்கவே தெரிகின்றது நயனின் சந்தை இன்னும் இருக்கு என்று. என்னும் கொஞ்சம் மேலே போய் நடித்திருந்தால் என்ன என்று கூட தோன்றுகிறது :)

"யாரோ போட்ட tune இக்கு நான் மியூசிக் டைரக்டர் ஆ என்றதும் சரோஜா தேவி எங்களுக்கு பாட்டு hit ஆயிட்டு என்றால் சரி என்பது மட்டும் தான் இரட்டை அர்த்தம் கொண்ட வசனம் போல் எனக்கு தெரிஞ்ச அளவில் தெரிகின்றது.

வெற்றிக்கொடிகட்டில் பார்த்தீபனிடம் படம் முழுக்க வாங்கி கட்டின மாதிரி சூரியாவிடம் இங்கே வாங்கி தள்ளுகிறார் வடிவேலு. சமையலறையில் நடக்கும் காட்சிகள் சூப்பர்காமெடிகள்.

கைப்புள்ள தொடக்கம் பானர்ஜீ வரை வடிவேலின் தொடர் கெட்டப்புகள் அவர் பால் இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வைக்கும் என்பதில் ஐயமில்லை.

ஹரிஷ் ஜெயராஜின் இசையில் ஏற்கனவே சூப்பர் கிட் ஆன பாடல்கள் தான் இவை மூன்றும்

1- ஹசிலி பிசிலி- கார்த்திக், ஹரிணி, பர்ன், மாயா, பாடல் – பா.விஜய்



2- வாராயோ – உன்னி கிருஷ்ணன், சின்மயி, மேகா, பாடல்- கபிலன்



3-ஏனோ ஏனோ பனித்துளி - shail hada., சுதா ரகுநாதன், ஆண்ட்ரியா, பாடல் -தாமரை

Ice Land ல் எடுத்த பாடல் காட்சிகள் சூப்பர், உள்ளடக்கம்( காட்சி அமைப்பும்)



4- டமுக்கு டமுக்கு – பென்னி தயாள். பாடல் - நா.முத்துக்குமார்


பத்து வயசு சிறுவனாய் சூரியா தோன்றும் காட்சிகள் ரவிக்குமாரின் பல வித்தியாசமான வயது கொண்ட வேடங்களில் நடிக்க விடும்ஆசை இன்னும் முடியல போல் தெரிகின்றது.கொஞ்சம் சறுக்கியும் இருக்காரு. சண் டிவியில் குடுத்த பேட்டியை பார்த்த எனக்கு ஏதோ பிரமாதம் போல் இருக்கும் என்று இருந்த எனக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்.

சூரியாவை போலீஸ் (ரியாஸ்கான்) கைது செய்ய வந்து அடித்து தள்ளும் காட்சியால் குடும்பமே கண்ணீர் விடும் காட்சி ரசிகர்களையும் ஒருக்கா கண்ணீர் விட்டால் என்ன என்று செய்ய வைக்குது.

சூர்யாவின் பிளாஷ்பேக் காட்சிகள், இறுதியில் தந்தையை காப்பாத்தி கொண்டு போகும் காட்சிகள், கொஞ்சம் மனதை இளக/விறு விறுப்பு அடைய செய்தாலும் வில்லனை போட்டு தள்ளும் காட்சிகள் குருவியில் தண்ணிக்க லிப்ட் ஓட தாட்டு விட மீண்டு வந்த விஜய் மாதிரி கொஞ்சம் ஓவரான build up தான். இருந்தாலும் பார்க்கலாம். குருவி என்று அடிக்கடி இழுக்க காரணம் தயாரிப்பாளர் ஒன்றே ராஜா. சரிங்களா..


வழமை போல கே எஸ் ரவிக்குமார் படத்தின் இறுதியில் தோன்றுவாரா இல்லையா என்று நினைக்கையில், ஐயா இன்னும் இரண்டு பேர் வேலைக்கு வந்து இருக்காங்க என்று வடிவேலு கதைக்கும் வசனத்தில் பிடித்து கொண்டேன். ஒன்று கே ,எஸ் ரவிக்குமார் மற்றது யார், சென்று பாருங்கள் தெரியும் விடை.


ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ரசனை, நான் ரஜனி ராசிகராக இருந்தும் சூரியாவின் இந்த படம் நல்லா இருக்கு என்று சொல்லுறன். குடும்பத்துடன் பாருங்கள். பார்த்து விட்டு சொல்லுங்கள். எப்படி என்று.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...