2009-09-30

ஐந்தறிவு ஜீவன்களுடன் சரி அன்பாய் இருப்போம்

சில மனிதர்களின் வெளிப்படுத்தப்படாத கோப உணர்ச்சிகளுக்கு வடிகால்களாக இருப்பது இந்த ஐந்தறிவு ஜீவன்கள் தான்... '

உதாரணமாக
அம்மாவுடன் வீட்டில் ஏதும் பிரச்சினை என்றால் அப்பா வீட்டில் கட்டி போட்டு இருகின்ற நாயுக்கு காலால் அடிப்பார். அந்த நாய் என்ன செய்யும், அடியை வாங்கும்!!
(யோவ்.. நீ தான இங்க கட்டி போட்ட, இப்போ நீயே உதைக்கிறியே.. இதெல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல...?', என்று அது கேட்டு இருக்கும் அனால் வாய் இல்லை கதைக்க....!! பின்னர் மாலையில் அவர் சாப்பாட்டு தட்டோடு வருகையில், வழக்கம் போல் வாலாட்டி நக்கி கொஞ்சும் !!!! அது வைத்து இருக்கும் பாசம் கூட சிலவேளைகளில் நாங்கள் வைச்சு இருப்பது இல்லை )

சிலபேரை பார்த்து உள்ளேன் வீட்டில நிக்குற மாட்டை பார்த்து சனியன் முதேவி என்று பேசி பலன் இல்லை. நீங்கள் எதோ ஒற்றை செய்யாத படியால் அது குறை பட்டு உங்களை கோவம் செய்ய வைக்கிறது. என்ன என்று ஆராயுங்கள்.அதை நிவர்த்தி செய்யுங்கள் . அது பின்னர் செய்ய முயற்சிக்காது.

கூட்டில் புலியை கட்டி வைச்சு போட்டு சேட்டை காட்டினால் புலியும் சேட்டை காட்டும் தானே. இவ்வாறே சிங்கத்துக்கும் ஏன் எல்லா ஐந்தறிவு படைத்த மிருகங்களுக்கும் பொருந்தும்.

ஒரு நாளும் மிருகங்களை துன்புறுத்தாதீர்கள். அவை படும் துன்பம் நீங்கள் படும் துன்பத்திலும் கூட. எத்தனயோ மிருக வதைகளை பார்த்து இருகின்றோம். அவற்றை எல்லாம் கட்டு படுத்த முடியாது. இருந்தாலும் நாங்கள் நாங்கள் மிருகங்களுடன் நன்றாகவே நடப்போம்.


சும்மா ஒரு மனசில பட்டிச்சு எங்கள் வீட்டு நாய் குட்டியின் பாசமான பண்பை பற்றி !! அடுத்த வீட்டில் இருக்கும் நாய் குட்டிக்கு அடி போடும் போது எங்கள் வீட்டு நாய் குட்டி அதற்கு support குடுக்கும் விதத்தில் குரல் எழுப்புது. ( நண்பன் சொல்லுறான் நாங்கள் அல்லது எங்கள் இனம் அழிகிறோம்/ அழிகிறது என்று தெரிஞ்சும் அடுத்தவன் குரல் எழுப்பாமல் இருந்த சாதி தானே இந்த மனித ஜாதி அதால இந்த சாதிக்கு எல்லாம் தத்துவம் எழுதாமல் நிப்பாட்டு என்றான்.free யா விட்டுடு என்றான் .. சரி நிப்பாட்டி போட்டன்)

இங்கே பாருங்கள் எவ்வளவு பாசம்மாக அந்த பெண்மணியும் அணிலும்!!!

லண்டன் St. James's Park

பாசமாக இருங்கள் கடைசி ஐந்தறிவு ஜீவன்களுடனாவது !!!

2009-09-29

இன்ப துன்பம் எது வந்தாலும் பங்கு கொள்ள நண்பன் உண்டு!

துன்பங்கள் எதுவந்தாலும் துயரங்களை எவ்வளவுதான் எதிர் கொண்டாலும் ஓரிரு நல்ல நண்பர்களை வைத்து இருத்தல் என்றுமே மனதுக்கு இனியது.
பாழா போன இந்த உலகத்தில் யாரைத்தான் நம்புவது. எல்லாம் போட்டி பொறாமை என்று போய்கிட்டு இருக்கிறது.
நண்பர்களை இருந்து விரோதிகளான வர்களை இங்கே கருதாது( கழுத்தறுக்கும் ) நல்ல குணமான நண்பர்களை வைத்து இருத்தல் என்றுமே ஆரோகியம்.
எனக்கும் ஓரிரு நண்பர்களா இருக்காங்க. அவர்களுக்கும் சேர்த்து இந்த இனிய பாடல் சமர்ப்பணம்




படம்: இணைந்த கைகள்
Actors : Arun Pandian, Nirosha, Ramki, Sasikala
Director : Viswanathan NK
Lyrics : Abhavanan
Music Director : Manoj Gyan
Producer : Abhavanan
Year : 1990


அந்தி நேரத் தென்றல் காற்று
அள்ளித் தந்தத் தா...லாட்டு
அந்தி நேரத் தென்றல் காற்று
அள்ளித் தந்தத் தாலாட்டு

தங்க மகன் வரவைக் கேட்டுத்
தந்தை உள்ளம் பாடும் பாட்டு
தங்க மகன் வரவைக் கேட்டுத்
தந்தை உள்ளம் பாடும் பாட்டு

- அந்தி நேரத் தென்றல் காற்று...

உயிர் கொடுத்தத் தந்தை இங்கே
உரு கொடுத்த அன்னை அங்கே
இன்ப துன்பம் எது வந்தாலும்
பங்கு கொள்ளும் சொந்தம் எங்கே?

தாலாட்ட அன்னை உண்டு!
சீராட்டத் தந்தை உண்டு!
இன்ப துன்பம் எது வந்தாலும்
பங்கு கொள்ள நண்பன் உண்டு!

ஒரு தாயின் பிள்ளை போல
உருவான சொந்தம் உண்டு!
வரும் காலம் யாவும் வெல்ல
இணைந்த கைகள் என்றும் உண்டு!

- அந்தி நேரத் தென்றல் காற்று...

உன் மகனைத் தோளில் கொண்டு
உரிமையோடு பாடுவதென்று
அந்நாளில் துணையாய் நின்று
அன்பு கொள்ள நானும் உண்டு!

தத்துப் பிள்ளை இவனைக் கண்டேன்
தாய்மை நெஞ்சம் நானும் கொண்டேன்!
பத்துத் திங்கள் முடிந்த பின்னே
முத்துப் பிள்ளை அவனைக் காண்பேன்!

உறங்காத விழியில் இன்று
ஒளி வந்து சேரக் கண்டேன்!
பரிவான நண்பன் தந்த
கனிவான தோள்கள் கண்டேன்!

- அந்தி நேரத் தென்றல் காற்று...

2009-09-26

பகிடிவதையில் -அனுபவங்கள் பாகம் 3

பகிடிவதையில் -அனுபவங்கள் பாகம் 1
http://svpriyan.blogspot.com/2009/09/blog-post_17.html

பகிடிவதையில் -அனுபவங்கள் பாகம் 2 - விரைவில் !!!!

எத்தனை தரம் தான் மாட்டுவது. தப்பி பிழைக்கலாம் என்றால் எங்கள் உடைகளே காட்டி கொடுத்து விடும்.

பல்கலை நேரங்களில் :- ஆடைகள் அணியலாம் அல்லது எங்களுடன் வைச்சு இருக்கலாம் என்று அனுமதிக்கபட்டவை

1- பாட்டா செருப்பு
2- கறுப்பு கலர் ஜீன்ஸ் ( டெனிம் தடை)
3- வெள்ளை கலர் shirt - half sleeve (வேறு கலர்கள் சந்தர்ப்பங்களை பொறுத்து)
4- ஒரு file மட்டை + ஒரு சில தாள்கள்
5 ஒரு பேனை
6 - பணப்பை ( உள்ளே :- அப்போ நமீதா இல்லை அதனால் ரம்பாவின் ஒரு item படம்)

வேறு எதுவும் இல்லாமல் இதை வைத்தே நாங்க யாரு என்று பார்க்கிரவங்கள் எல்லாருமே இடை போடுவது மட்டும் இல்லாமல் தங்கள் தங்கள் நேரங்களுக்கு ஏற்ற மாதிரி எங்களை புளிந்தே எடுத்து கொள்ளுவார்கள்.


Super Economy காலம்



Ground

பல்கலை வாழ்க்கையிலே சூப்பர் economy ஆ வாழ்ந்த காலம் என்றால் இந்த 3-4 மாதங்கள் தான் !!

breakfast:- பாண் + பருப்பு தண்ணீர் (இதுக்குள் பருப்பை தேடி பிடிக்க முடியாது)+ பொல்சம்பல்

Lunch :
சாபிடுறது சோறு + குளத்து மீன் ( சூப்பர் தான் )( சிவாஜி பாரதிராஜாவின் படத்தில் மீனை சாப்பிட்ட விதம் போலவே ரசித்து ருசித்து சாப்பிட்டேன்).

இரவு : பெரும்பாலும் ஒரு நல்ல நிறைவான சாப்பாடு குறுந்துவத்தை கடையில்


செவ்வாய் வெள்ளி சைவப்பழமாக இருந்த நான் எவ்வளவு அழுதும் விபரத்தை சொல்லியும் முடியாமல் கடவுள் மன்னிப்பாராக என்று சாப்பிட தொடங்கியது இந்த காலத்தில் தான்.


அனுபவித்ததில் பிடித்தவை



என்ன சத்தம் இந்த நேரம்

இந்த பாட்டை பாட சொல்லி ஒருமுறை யாரோ ஒரு சீனியர் சொன்னதிற்கு. எங்கள் பெண்கள் கூட்டத்தை சேர்ந்தவள் பாடியதால். நாங்கள் தான் மாட்டி கொண்டோம்.
அதன் ரீமிக்ஸ் version, fast forward version, slow version,வேறு மொழியில் பாடுதல்( நான் ஜப்பான் மொழியில் பாடியது இன்னும் ஞாபகம் இருக்கு)

இருட்டு அறைக்குள்
அடிக்கடி இருட்டு அறைக்கு செல்வது முதல் வாரத்தில் இருந்து நடந்ததால் எனக்கும் அலுத்து போச்சு.
இவன் ரொம்ப 'தைரியசாலி'னு யாரும் பார்த்தா சொல்லுவாங்கள்.
ஒரு முறை எதாவது பகிடி ஒற்றை சொல்ல சொன்னதிற்கு, நான் சிரிச்சாலே பகிடி என்று நானும் சொன்னதாலே அந்த அறைக்குள் இருந்த sunlight soap இன் பாதியை வாயுக்குள் புகுத்தி என்னை ஒரு முறை திணற செய்தது என்றுமே மறக்க முடியாத துன்பியல் சம்பவம். அன்று எடுத்த வாந்தி போல என்றும் எடுக்கவில்லை.

மேலும்: இருட்டு அறைக்குள் நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்று முன்னர் யாரோ கேட்டதிற்கு ; வேற என்ன மாதிரி இருப்போம் சகோதரா??

Marks போடும் முறைகள்
இது எல்லாரும் மாட்டி கொள்வது வழமை. என்னை பார்த்து யாரோ ஒரு அம்மையாருக்கு marks போட சொல்லி என்னையே கடுப்பு எத்தி போட்டாங்கள். இவங்கள் எல்லாம் ...................!!!
கனக்க கதைச்சா இருட்டு அறை. சரி எத்தினை தரம் தான் அங்க போறது. போனால் போகட்டும் என்று ஒரு marks போட்டேன், படு பாவிகள் அதுக்கு விளக்கம் கேட்டு போட்டாங்கள். என்ன பிறவிகளோ.
சரி சொல்லி தொலைச்சம். அதுக்குள்ள ஒருத்தர் எனக்கு feedback வேற தாரார். தூ.....!!!!



பேராதனை சந்தியில் ஒரு இரவு
எங்கயோ தப்பினம் பிழைத்தோம் என்று வந்த நானும் என் ரூமாவையும் பிடிச்சு போட்டாங்கள். இரவு எட்டு மணி இருக்கும். இது வேற பீட சீனியர் மார்.
அப்புறம் என்ன அவங்கள் Panideniya வில் கொண்டு போய் வைச்சு வறுத்து எடுத்து போட்டு கடைசியா இரவு 12 மணிக்கு துரத்தி விட்டாங்கள். வழமையான அழு மூஞ்சி . களைப்பு தாகத்துடன் மீண்டும் கம்பளை வீதியில் நடை !!!! அங்கே இருந்து உள்ளாடைகள் எல்லாம் ஜீன்ஸ் பொக்கட்டுக்க கவனமா வைச்சு கொண்டு, நடந்து குருந்து வத்தை வந்தால் அன்று இரவு தொடர் தாக்குதல்கள். அதிகாலை 4 மணி வரை எதோ ஒரு வீட்டு அண்ணன் மாருக்கு நாங்கள் தான் இரவு ராணிகள் (ராஜாக்கள்) . ஆட்டமோ ஆட்டம். இடைக்கிடை எங்களுக்கும் பருக்கோ பருக்கோ என்று பருக்கி போட்டு ஆட விட்டு பார்த்திட்டு நின்றாங்கள் பாருங்கோ அதை விட கொடுமை வேற இல்லை. அதோடதான் நானும் டப்பான் குத்து ரசிகனாக வந்தது.

குறிஞ்சியில் தைப்பொங்கல்
இரவு இரவாக ground இல உடல் பயிற்சிகள் முடித்து விட்டு அதிகாலை இரண்டு மணிக்கு தோய்ந்து போட்டு பொங்கல் பாணைக்க தண்ணியும் நிரப்பி கொண்டு அருணாசலத்தில் இருந்து எங்களை நடக்க பண்ணின கொடுமை. பானையை தூக்க கூட பலன் இல்லை. மார்கழி குளிர் தேனிர் குடிக்காமல், நித்திரை தூக்கத்தில் கோவில் ஏறி சென்ற பெருமை எங்களுக்கு இருக்கு. முருகனுக்கே இது தாங்காது.



( நேரம் உள்ள போது -தொடரும்)

மனதை வருடி செல்லும் -உந்தன் தேசத்தின் குரல் தொலைத்தூரத்தில் அதோ

எங்கு சென்றாலும் எனது ipod play list இல முதலில் உள்ள பாடல். என்ன mood இல இருந்தாலும் ஒரு முறை எதோ ஒன்று ??? மனதை வருடி செல்லும் !!!

எழுதிய வாலிக்கு 100 கோடி நன்றிகள்



உந்தன் தேசத்தின் குரல் தொலைத்தூரத்தில் அதோ!
செவியில் விழாதா?
சொந்த வீடு உனை வாவென்று அழைக்குதடா தமிழா!
அந்த நாட்களை நினை அவை நீங்குமா உனை?
நிழல் போல் வராதா?
அயல்நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!

வானம் எங்கும் பறந்தாலும் பறவை எண்ணம் தன் கூட்டில்..
உலகம் எங்கும் வாழ்ந்தாலும் தமிழன் எண்ணம் தாய் நாட்டில்..
சந்தர்ப்பங்கள் வாய்த்தாலும் அங்கு செல்வமரம் காய்த்தாலும்..
உள் மனத்தின் கூவல் உந்தன் செவியில் விழாதா?

உந்தன் தேசத்தின் குரல் தொலைத்தூரத்தில் அதோ!
செவியில் விழாதா?
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா!

கங்கை உனை அழைக்கிறது
யமுனை உனை அழைக்கிறது
இமயம் உனை அழைக்கிறது
பல சமயம் உனை அழைக்கிறது

கண்ணாமூச்சி ஆட்டம் அழைக்க..
சின்ன பட்டாம்பூச்சி கூட்டம் அழைக்க..
தென்னந்தோப்பு துரவுகள் அழைக்க..
கட்டிக்காத்த உறவுகள் அழைக்க..
நீ தான் தின்ன நிலா சோறு தான் அழைக்க..

உந்தன் தேசத்தின் குரல் தொலைத்தூரத்தில் அதோ!
செவியில் விழாதா?
சொந்த வீடு உனை வாவென்று அழைக்குதடா தமிழா!

பால் போல் உள்ள வெண்ணிலவு..
பார்த்தால் சிறு கறையிருக்கும்..
மலர் போல் உள்ள தாய்மண்ணில்..
மாறாத சில வலி இருக்கும்..
கண்ணீர் துடைக்க வேண்டும் உந்தன் கைகள்..
அதில் செழிக்க வேண்டும் உண்மைகள்..
இந்த தேசம் உயரட்டும் உன்னாலே..
மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே..
அன்பு தாயின் மடி உனை அழைக்குதே தமிழா!

உந்தன் தேசத்தின் குரல் தொலைத்தூரத்தில் அதோ!
செவியில் விழாதா?
சொந்த வீடு உன்னை வாவென்று அழைக்குதடா தமிழா!..

படம் : தேசம்(2004)
பாடியவர்: ஏ.ஆர்.ரகுமான்
பாடலாசிரியர்:வாலி
இசை : ஏ.ஆர்.ரகுமான்

நினைத்தாலே இனிக்கும் --பனாரஸ் பட்டு கட்டி




இப்போதைய காலங்களில் வந்த எனக்கு பிடித்த ஒரு குத்து பாடல்:

இதே இசையை தந்த அதே விஜய் அந்தோணிதான் நம்ம விஜய் படத்தின் இசையையும் தந்தார். சொதப்பிட்டார் வேட்டையில் !!!


High Quality One


Low Quality One




படம்: நினைத்தாலே இனிக்கும்
இசை: விஜய் அந்தோணி
பாடியவர்: விஜய் அந்தோணி


பனாரஸ் பட்டு கட்டி
மல்லிப்பூ கொண்டை வச்சி
சிங்கப்பூர் சீமாட்டி என் மனசை கெடுத்தா
அவ முந்தான பூவ கண்டு
என் உயிரு புட்டுக்குச்சு
சிந்தாம சிதறாம என் கதைய முடிச்சா

மெரே பியா மெரே பியா பியா ஓ
மெரே பியா மெரே பியா பியா ஓ
மெரே பியா மெரே பியா பியா ஓ
மெரே பியா மெரே பியா
(பனாரஸ்..)

உன் மூச்சு வாசனையில் ரோஜாக்கள் டவுன் டவுன்
ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன்
உன்னுடைய பேச்சினிலே ரிங்டோன்கள் டவுன் டவுன்
ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன்
உன் விழியின் ஓசையிலே டாஸ்மார்க்கள் டவுன் டவுன்
ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன்
மயிலே உன் மாராப்பில் மல்கோவா டவுன் டவுன்
ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன்

மெரே பியா மெரே பியா பியா ஓ ப்ரியா
மெரே பியா மெரே பியா பியா ஓ ஃப்ரியா
மெரே பியா மெரே பியா பியா ஓ
மெரே பியா மெரே பியா
(பனாரஸ்..)

பளபளக்குது உன் மேனி கண்ணாடி டவுன் டவுன்
ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன்
ராத்திரி நீ கண் முளிச்சா நட்சத்திரம் டவுன் டவுன்
ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன்
பக்கத்திலே நீ வந்தா பல்ஸ் ரேட்டு டவுன் டவுன்
ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன்
உன்னை பார்த்த நாள் முதலா ஃபுல் மீல்ஸு டவுன் டவுன்
ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன்

மெரே பியா மெரே பியா பியா ஓ
மெரே பியா மெரே பியா பியா ஓ
மெரே பியா மெரே பியா பியா ஓ
மெரே பியா மெரே பியா
(பனாரஸ்..)

சனிப்பெயர்ச்சி : பரிகாரம் செய்ய வேண்டியது யார்?



வாக்கிய பஞ்சாங்கப்படி சனிபகவான் வெள்ளி(25-09-2009) மாலை 3.27 மணிக்கு, சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். நவக்கிரகங்களில் ஒருவரான சனிபகவான், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை பெயர்ச்சியாவார். இவரே, மக்களின் ஆயுள் மற்றும் தொழிலை நிர்ணயம் செய்யும் பிரதான கிரகமாக இருக்கிறார். இவர் பெயர்ச்சியாகும் ராசிகளை பொறுத்து, ஒவ்வொருவரின் ஆயுளும், தொழிலும் மாற்றம் பெறும். சனிபகவான், அவருக்குரிய சனிக்கிழமையான இன்று பெயர்ச்சியாவது விசேஷமாகக் கருதப்படுகிறது. எண்கணிதப்படி சனிபகவானுக்குரிய எண் எட்டு ஆகும். இன்று 8ம் எண் ஆதிக்கம் உள்ள நாளாகும். மேலும், இன்று எட்டாம் திதியான அஷ்டமியும் இருக்கிறது. சனீஸ்வரர், அவருக்கு உகந்த நாளில் பெயர்ச்சியாவதால், அவ்வளவாக தீய பலன் இருக்காது என கணிக்கப் பட்டுள்ளது.


பாதகமான ராசிகள்


சிம்மம், கன்னி, துலாம் ஆகிய ராசிக்காரர்களுக்கு இது ஏழரைச்சனி காலமாகும். மிதுன ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டமம், தனுசு ராசிக்காரர்களுக்கு ஜீவனச்சனி, கும்ப ராசிக்காரர்களுக்கு அஷ்டமச்சனி, மீன ராசிக்காரர்களுக்கு கண்டகச்சனி ஆகிய நிலை வருகிறது. எனவே, இந்த ராசியில் பிறந்தோரும், இந்த ராசிகளை லக்னமாக உள்ளவர்களும் சனிபகவானுக்கு பரிகாரம் செய்து கொள்வது நல்லது. மற்ற ராசியினருக்கு இந்த பெயர்ச்சி காலம் நற்பலன்களைத் தரும்.




முழுமையான சனி பெயர்ச்சி பலன்கள் 2009 :
http://svpriyan.blogspot.com/2009/09/2009-sept-2011.html

2009-09-24

எனக்கு பிடித்த விஜய் ஜோக்ஸ்



வடிவேலுவின் தங்கச்சி:ஏன் அண்ணா சோகமா இருக்கீங்க?

வடிவேலு: வரும்போது ஒரு நாதாரி பய குருவி பட டிக்கேட் ஓசில தந்தான். சரினு போனா போகுதுனு மூனு மணி நேரம் தெனர தெனர பாத்தேன்.. அதான்

தங்கச்சி: ஓடி வந்துருக்கலாமே?

வடிவேலு:படம் பாக்கும்போது ஒருத்தன் சொன்னா இவன் 'விஜய்' படம் பாக்க வந்துருக்கான் இவன் ரொம்ப 'தைரியசாலி'னு சொல்லிட்டாமா!!... நானும் எவ்வளவு நேரம் தான் படம் பாக்குற மாதிரியே நடிக்குறது?

============================================================
முதல் நபர் : எங்க ஊர்ல கப்பல் ட்ராக்குல போகும், ட்ரயின் தண்ணில போகும்,
இரண்டாம் நபர் : கேக்குறவன் விஜய் fan மாதிரி மாக்கானா இருந்தா, குருவி ஆஸ்கர் போகனும்னு சொல்லுவீங்களே!!!
=============================================================
ஆறிலும் சாவு, நூறிலும் சாவு, கொய்யால விஜய் படத்த பாத்தா அப்பவே சாவு!!!

=============================================================
வேட்டைக்காரன் கிளைமாக்ஸ்
பத்து ஓட்டங்கள் ஒரு பந்தில் அடிக்கணும் அதுவும் நம்ம விஜய் தான் Batsman
அடிச்சாரு ஒரு அடி

பந்து அடிச்ச அடியில இரண்டா பிளந்து ஓன்று எல்லை கோட்டை மேலாக தண்டி ஆறு ஓட்டங்கள்
மற்றது வழமை போல நான்கு ஓட்டங்கள்

அப்புறம் பார்த்திட்டு நின்ற ரசிகர்கள் கூட்டம் கை தட்டி ஆரவாரம் செய்ய
நம்ம விஜய் சொல்லுறார் பஞ்சு
எவளவோ கொடுமைய தாங்கிட்டீங்க .. இதையும் சேர்த்து குங்க..............

=============================================================
விஜய் : நான் ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா அப்புறம் என் படத்தை நான் கூட பார்க்க மாட்டேன்
ரசிகர்: கொய்யால நாங்க உங்க போஸ்டர் கூட பார்க்க மாட்டோம், பிறகு என்ன படம்
=============================================================

ரஜினி : "கண்ணா கவலை படாதீங்க.. கடவுள் ஒவ்வொரு கெட்ட விடயத்தை நமக்கு கொடுக்கும் போதும் கூடவே ஒரு நல்ல விடயத்தையும் சேர்த்து கொடுப்பார்... வேட்டைக்காரன் release ஆகுற அதே நாள் தான் ஆதவனும் release ஆகுது.... so ஆதவன் பார்த்து enjoy பண்ணுங்க..."
=============================================================
பாவ மன்னிப்பு சொல்லும் பாதர் :

தினமும் சிகரெட் குடி- 10 வருஷம் முன்னர் உனக்கு சாவு
தினமும் Drum குடி- 20 வருஷம் முன்னர் உனக்கு சாவு
யாரயும் நீ உண்மையா காதலி - நீ தினமும் செத்து கொண்டு இருப்பாய்!!!
அதற்கு
அந்த பாவ மன்னிப்பு கேட்க வந்த பையன் சொன்னான்
பாதர், நீங்க ஒருக்கா வில்லு படம் இல்லாடி போனால் போகுது வேட்டைக்காரன் பாருங்க ஒவ்வொரு மணித்தியாலமும் செத்து கொண்டு இருப்பீங்க.............!!!
============================================================
விஜய் அமீர்கானை மும்பையில் சந்திக்கிறார்)

விஜய்- ஸாரி அமீர். எனக்கு இந்தி தெரியாது
அமீர் - ஸாரி, எனக்கு உங்களையே யாருன்னு தெரியாது
============================================================
பத்திரிக்கை நிருபர் : வேட்டைக்காரன் படத்தில யாரு காமெடி பண்ணுறாரு சார்??? மாறன்:நடிக்கிற விஜய் யே காமெடி தானே அப்புறம் என்னத்துக்கு புதுசா ஒரு கேரக்டர்??
============================================================

Last one week around
12crores of msgs had been sent in tamilnadu.

1-Gud mor,gud nite msgs- 1cr
2-Frndship nd love msgs-1.5 cr

3- Sardar Jokes msgs - 1 crore.

4- News and fwd msgs- 0.5 cr
5-Msgs teasing VIJAY nd VEddaikaaran songs - nearly 8 crs

All mobile ...service providers are thanking vijay and veddaikaaran ‘ s team for the profit..

2009-09-23

நவராத்திரி பூஜையில் லஷ்மி பூஜை -"பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க"

"நவராத்திரி" என்ற பதம் ஒன்பது இரவு எனப் பொருள்படும். இது புரட்டாசி அமாவாசைக்குப் பின் உள்ள நவமியை இறுதியாக உடைய ஒன்பது நாள்கள் - இரவிலும் கொண்டாடப்படும் உற்சவம். இது சில வருடங்களில் ஐப்பசி மாதத்துக்குள்ளும் வரும். இந்நாள்களின் ஆரம்பத்தில் எல்லோர் வீட்டிலும் அவரவர்கள் நிலைக்கேற்ப பொம்மைகள் கடவுள்களின் உருவான படங்கள் வைத்து, ஒவ்வொரு சாயங்காலமும் ஒன்பது நாள் வரையில் பாட்டு முதலியவை பாடி, ஆரத்தி முதலியவைகள் சுற்றி, இந்த உற்சவத்தைப் பெண்கள் கொண்டாடுவது வழக்கம்.


துர்க்கை : இவள் நெருப்பின் அழகு. ஆவேசப் பார்வை.வீரத்தின் தெய்வம். சிவபிரியை. இச்சா சக்தி. ''கொற்றவை '' , ''காளி'' என்றும் குறிப்பிடுவர். வீரர்களின் தொடக்கத்திலும், முடிவிலும் வழிப்படும் தெய்வம். துர்க்கை, மகிஷன் என்ற அசுரனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டாள். இவையே ' நவராத்திரி ' எனப்படும்.




இதில் புருஷர்கள் கொலு முதலியவைகளைக் கவனியாவிட்டாலும் நவராத்திரியைக் கொண்டாடுகிறார்கள். வேத பாராயணம், சூரியநமஸ்காரம் முதலிய வைகளை நடத்த பார்ப்பனர்களை ஏற்படுத்தி, இந்த ஒன்பது நாள் களில் நமது வீடு வேத கோஷத்தில் நிறைந்து மங்களகரமாகும் படியாகச் செய்ய வேண்டுமாம். ஆனால் இந்த விதி பார்ப் பானுக்கும், அதிகாரம் படைத்த இராஜாக்களுக்கும், பணம்படைத்த வைசியனுக்கும் மாத்திரமாம்; மற்றவர்கள் பக்தியோடு சுந்தரகாண்டம் பாராயணம் செய்து முடித்து பார்ப்பானுக்குச் சாப்பாடு, தட்சணை கொடுத்து ஆசீர்வாதம் பெற வேண்டுமாம்.


இலட்சுமி : இவள் மலரின் அழகு. அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தி. இலட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருக்கிறாள். இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது. முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள்.



நவராத்திரி பூஜையில் லஷ்மி பூஜை மிகவும் முக்கியமானது. "பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க " என்று பெரியோர் வாழ்த்துவார்கள். அந்த பதினாறு செல்வங்களான சௌந்தர்யம், சௌபாக்கியம், கீர்த்தி, வீரம், வெற்றி, சந்தானம், மேதை, கல்வி, துஷ்டி, புஷ்டி, ஞானம், சக்தி, சாந்தி, சாம்ராஜ்யம், ஆரோக்கியம், மோட்சம் ஆகியவற்றிற்கு அதிபதியானவள் ஸ்ரீ மகாலஷ்மி ஆவாள். ""திருவைப் பணிந்து நித்தம் செம்மைத் தொழில் புரிந்து வருக வருகவென்றே கிளியே. மகிழ்வுற்றிருப்போமடி'' என்று மகாகவி பாரதி பாடினார்.



சரஸ்வதி : இவள் வைரத்தின் அழகு. அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள். கல்வியின் தெய்வம். பிரம்பிரியை. ஞான சகதி. தமிழ் நூல்கள் சரஸ்வதியை, 'ஆற்றங்கரைச் சொற்கிழத்தி ' என்று குறிப்பிடுகிறது.


நவராத்திரியில் கடைசி நாளாகிய நவமி தினத்தில் புருஷர்கள் தமது வீட்டிலிருக்கும் புத்தகங்களை ஒழுங்காக அடுக்கிவைத்து, காலை முதல் உபவாசமிருந்து சரஸ்வதியை பூசை செய்யவேண்டும். இந்த நவமி அன்றைய தினமாவது அல்லது அடுத்த தினமாவது, தொழிலாளிகள் ஆயுதத்தையுடையவர்கள் ஆகியவர்கள் தங்கள் தங்கள் ஆயுதங்களை வைத்து பூசை செய்வது வழக்கம். அதனாலேயே இந்தப்பூசைக்கு 'ஆயுதபூசை' என்றொரு பெயரும் உண்டு.

மகிஷாசூரன்

முன்னொரு காலத்தில் மகிஷாசூரன் என்ற எருமை ரூபமான அசுரனும் அவன் பரிவாரங்களும் விருத்தியாகி கடவுள் வரத்தால் சிறந்த பதவியை அடைந்து உலகை இம்சித்துக்கொண்டிருந்ததால் , இந்தக் கஷ்டம் பொறுக்க முடியாமல் தேவர்கள் பார்வதியிடம் முறையிட, பார்வதி ஒன்பது நாள் சிவபிரானைக் குறித்துத் தவமிருந்து, அவரிடமிருந்து தகுந்த சக்திபெற்று, ஒன்பதாம் நாள் மகிஷா சூரனைக் கொன்று, பரிவாரங்களை நாசம் செய்து சாந்தமடைந்தார். மகிஷாசூரனைக் கொன்றதனால் பார்வதிதேவிக்கு மகிஷா சூரமர்த்தினி என்கிற பெயரும் வந்தது என்பர். எனவே இந்தக் கதையின் ஆதாரத் தைக் கொண்டு அம்மன் தவமிருந்து விழித்த ஒன்பதாம் நாள் வேண்டிய வரங்கள் கொடுப்பார் என்னும் கருத்தை கொண்டே இவர்கள் இந்த உற்சவத்தைக் கொண்டாடுகிறார்கள்.

வெற்றி தருகிற நாள். பல குழந்தைகள் கல்வியினை இன்றுதான் ஆரம்பிப்பார்கள். இன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும்.

சரஸ்வதி பூஜை சகலகலாவல்லிமாலை குமரகுருபரர் - பொருள் விளக்கத்துடன்
1.
வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்கஎன் வெள்ளையுள்ளம்
தண்தாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும் அளித்து,
உண்டான் உறங்க, ஒழித்தான் பித்தாக,உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே! சகலகலாவல்லியே!

2.

நாடும் சொற்சுவை பொருட்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்து அருள்வாய்! பங்கய ஆசனத்தில்
கூடும் பசும்பொற்கொடியே! கனதனக் குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே! சகலகலாவல்லியே!

3.

அளிக்கும் செழுந்தமிழ்த் தெள் அமுது ஆர்ந்து உன் அருட்கடலில்
குளிக்கும் படிக்குஎன்று கூடுங்கொலோ?உளம்கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழைசிந்தக்கண்டு
களிக்கும் கலாபமயிலே! சகலகலாவல்லியே!

4.

தூக்கும் பனுவல் துறை தோய்ந்த கல்வியும்சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய்! வடநூல் கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!

5.

பஞ்சுஅப்பு, இதம்தரும், செய்ய,பொற்பாதபங்கேருகம்என்
நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடுந்தாள் கமலத்து
அஞ்சத்துவசம் உயர்ந்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்தவிசு ஒத்திருந்தாய்! சகலகலாவல்லியே!

6.

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிது எய்தநல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும்வெங்காலும்,அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே!

7.

பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி உன்கடைக்கண்நல்காய்! உளம்கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம்தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள் ஓதிமப்பேடே! சகல்கலாவல்லியே!

8.

சொற்விற்பன்னமும், அவதானமும், கல்விசொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய்!நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிது என்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெறுஞ்செல்வப்பேறே! சகலகலாவல்லியே!

9.

சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞானத்தில் தோற்றம் என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்?நிலம்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம்நாணநடை
கற்கும் பதாம்புயத்தாளே! சகலகலாவல்லியே!

10.

மண்கண்ட, வெண்குடைக்கீழாக, மேற்பட்டமன்னரும், என்
பண்கண்ட அளவில், பணியச்செய்வாய்! படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும்,விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே!

பொருள்:

1. உலகு ஏழும் காத்து, அவற்றை உண்ட விஷ்ணுதுயில் கொண்டிருக்க, அவற்றை
அழிப்பவராகிய சிவன் பித்தனாகுமாறு, படைக்கும் ஆற்றல் கொண்ட பிரம்மன்சுவைக்கும் கரும்பான சகலகலாவல்லியே! உன்திருவடிகளைத்தாங்க, வெண்தாமரைக்கே அல்லாமல், என்னுடைய தூய உள்ளமான, குளிர்ச்சி பொருந்திய தாமரைக்குத் தகுதி இல்லையோ?

2. தாமரை மலரால் ஆன ஆசனத்தில் அமர்ந்திருக்கின்ற பசுமையான பொற்கொடியாளே! குன்று போன்ற தனங்களையும், ஐந்து வகையாகப் புனையப்பெற்ற கூந்தல் வனத்தைச் சுமந்துள்ள கரும்பனைய சகலகலாவல்லியே! சொற்சுவை பொருட்சுவை தோய்ந்த நால்வகை கவிகளாகிய ஆசு, மதுரம்,சித்திரம், வித்தாரம் ஆகியவற்றைப்பாடும் பணியை எனக்கு அருள் புரிவாய்! சகலகலாவல்லியே!

3. உள்ளம் கனிந்து, தெளிவாகப் பனுவல்களைத் தெளிக்கும் புலவர்களின் கவிமழை
பொழியக்கண்டு களிப்படையும் தோகைமயிலாளே! சகலகலாவல்லியே! நீ அருளிய
செழிப்பான செழுந்தமிழ் அமுதத்தை அருந்தி, உன்னுடைய அருள் நிறைந்த கடலில்
குளிப்பதற்கு என்னால் இயலுமோ?

4. இனிமையான செந்தமிழ்ச் செல்வத்தையும் சமஸ்கிருதக் கடலையும் அடியார்களின்
சிறப்பான நாவினில் வீற்றிருந்து காக்கும் கருணைக்கடலான சகலகலாவல்லியே!
சீர்தூக்கிப்பெறுகின்ற பலநூல் துறைகளிலும் சார்ந்த கல்வியையும், சொற்சுவைநிறைந்த வாக்கையும் எனக்குப் பெருகும்படி அருள்புரிவாயாக!

5. நெடும் தண்டு உடைய தாமரையைக் கொடியாகக் கொண்ட பிரம்மனின் செம்மையான நாவிலும், அவன் மனத்திலும், உன்னுடையவெண்தாமரை மலர் ஆசனத்தைப்போன்று கருதி வீற்றிருக்கும் சகலகலாவல்லியே! நன்மையளிக்கின்ற செம்பஞ்சு போன்ற சிவந்த அழகுமிக்க உன் பொற்பாதங்களாகியதாமரை மலர்கள் என் நெஞ்சமாகிய தடாகத்தில் மலராதது ஏனோ?

6. விண்ணிலும்,மண்ணிலும்,நீரிலும் நெருப்பிலும், காற்றிலும், வேதத்திலும், அன்பர்
கண்ணிலும், கருத்திலும் நிறைந்திருக்கும்சகலகலாவல்லியே!முத்தமிழான பண்ணும்
பரதமும் கல்வியும் இனிமையான கவிதையும் நான் நினைக்கும்போது எளிதில் எய்துமாறு எனக்கு அருள் புரிவாயாக!

7.கலைத்தமிழாகிய சுவையான பால் அமுதத்தை, மனம் உவந்து தொண்டர்கள்
படைக்கின்றனர்; அதனைத் தெளிவுறசெய்யவல்ல வெண்ணிறப் பெண் அன்னம் போன்ற சகலகலாவல்லியே! பாடலையும் அதன் பொருளையும், பொருளால் ஏற்படக்கூடிய பயனையும் என்னிடத்தில் சேருமாறு உன் கடைக்கண் பார்வையை அருள்வாயாக!

8. தாமரை மலரில் வீற்றிருக்கும் லட்சுமிக்கு அரிது என்பதால் நீ, எக்காலத்திலும்
அழியாத தன்மையை நல்கும் கல்வியாகிய பெருஞ்செல்வத்தின் பயனான சகலகலாவல்லியே! சிறப்பு மிகு சொல் திறமையும், அவதானம் புரியும் ஆற்றலும், கல்வி போதிக்கத்தக்க புலமையும் எனக்கு அளித்து ஆட்கொள்வாயாக!

9.பூமியைத்தொடக்கூடிய துதிக்கையையுடைய பெண்யானையோடு ராஜ அன்னமும்கூட நாணும் வண்ணம் நடைபயிலுகின்றாய்!தாமரையைபோன்ற திருத்தாள்களையுடைய சகலகலாவல்லியே! சொல்லுக்கும் பொருளுக்கும் உயிராகியமெய்ஞானத்தின் காட்சியாகத் திகழக்கூடிய உன்னை நினைக்கக்கூடிய திறமைசாலி யார்?

10. பிரம்மா முதலான தெய்வங்கள் பலகோடி இருந்தாலும்கூட உன்னைபோன்ற
கண்கண்ட தெய்வம் வேறு உளதோ? சகலகலாவல்லியே! குடைநிழலில் வீற்றிருந்து, நிலவுலகைஆட்சி செய்யும் மன்னர்களும் என்னுடைய பாடல்களைக் கேட்ட உடனே அவர்கள் என்னைப் பணியுமாறு செய்து அருள்வாய்!

பேராதனைப்பல்கலைக்கழகத்தில் குடி கொண்டுள்ள எம்பெருமான் குறிஞ்சிக்குமரன் ஆலயத்தில் நான் கண்ட நவராத்திரி பூஜைகள் :-


கோலம்

சரஸ்வதியாக எழுந்தருளி அம்மன்


கொலுக்கள் நிறைந்த வசந்த மண்டபம்


ஏடு தொடக்கல்

ஏடு தொடக்கல்


கொலுக்கள் நிறைந்த வசந்த மண்டபம்

சமையலில் இளம் சிங்கங்கள்


சமையலில் இளம் சிங்கங்கள்

சமையலில் இளம் சிங்கங்கள்

தோரணம் தயார் படுத்தும் இளைஞர் கூட்டம்

சமையலில் இளம் சிங்கங்கள்


சமையலில் இளம் சிங்கங்கள்

கோவில் முகப்பு

எழுந்தருளி

வசந்த மண்டபம்

வாழைமரம் கடும் இளம் சிங்கம்

அடியார்களுக்கு இராப்போசனம்

2009-09-17

பகிடிவதை ஒரு அனுபவம்- பாகம் ஒன்று

பலர் இதை பற்றி எழுதி இருந்ததை இன்று வாசிக்க கிடைத்தது. எனது அனுபவங்களையும் இங்கே தரலாம் என்று இருக்கின்றேன்.

பகிடிவதை என்பதை நான் ஏறத்தாள நான் ஆண்டு ஒன்பதில் இருக்கும் போது கேள்வி பட்டு இருகின்றேன்.மன்னிக்கவும் பார்த்தே இருக்கிறேன். அதுவும் தினமும் என்றே சொல்லலாம்.
நான் எனது இளமை பருவத்தில் யாழ் பல்கலைக்கழகம் முன்பாக உள்ள குமாரசாமி வீதியில் தான் ( ஏறத்தாள எட்டு ஆண்டுகள்) கழித்தேன்.
அந்த இடம் அமைதியானதும் ஆனால் பல்கலை மாணவர்கள் கூடுதலாக கூடும், குடியிருக்கும் இடமாகவே என்றும் இருக்கின்றது.
எனது அடுத்த வீட்டிலேயே நான்கு அக்கா மார் குடியிருந்ததால் ( வன்னி மாவட்டம்) எனக்கு தினமும் ஒரு பொழுது போக்காக இருந்து வந்தது இவர்கள் பட்ட கஷ்டங்களை கேட்டு அறிவதற்கு.
மாலையில் பல்கலை முடிந்து வரும் போதே முகத்தில் எதோ இழந்து வந்ததை போல வீடு வருவார்கள். எங்களுக்கு கிணறு பங்கு என்பதால் கிணற்றடியில் தான் எங்களின் கூட்டம்.
அவர்கள் தங்களுக்குஇடையில் பேசுவதையும், எங்களுடன் பேசுவதையும் வைத்தே பார்த்தால் எதோ கொடுமையான விஷயம் தான் நடக்கிறது போல இருக்கும் உண்மையும் தான் .
அந்த நால்வரில் ஒருத்தி பல்கலையே வேண்டாம் என்று விட்டு போட்டு போனது கூட எங்கள் எல்லாரையும் திக்கு முக்காட செய்தது. போன காரணம் அதே ஊரை சேர்ந்த மாணவன் சீனியர் என்பதாலும் இந்த பெண்ணின் அக்காவை காதல் கொண்டு தோல்வி உற்றதால் பழிவாங்கும் பொருட்டு இந்த பெண்ணை தோய்ச்சு துவைக்காதா மாதிரி திட்டுவதும் பேசுவதும், கண்ட கண்ட விதத்தில் கடிதம், கட்டுரை எழுதி தர சொல்லுவதும் அந்த அக்காவின் மனசை புண் படுத்தியதால் விட்டு சென்றதாக சொன்னாள்.
இது மட்டுமா இந்த GAQ வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்கள் துன்புறுத்த படுவதும் நான் கண்டதுகள்.

இவ்வாறு தினமும் காலத்தை ஒட்டி கொண்டு இருக்கும் போது தான் எனது பல்கலை பிரவேசம். அம்மாடி உயர்தரம் படிச்சு முடிச்ச நேரம் தான் அதே பல்கலையில் வரப்பிரகாஷ் அண்ணன் பிரச்சினை நடந்து கொண்டு இருந்தது. எங்கள் கல்லூரி ஆசான் மோகன் சார் அவர்களின் மருமகன் தான் அந்த அண்ணா. அதனால் மோகன் sirஅம்மாவை ஒரு முறை சந்தித்த போது சொல்லி பட்ட வேதனைகளை சொல்லி இருந்தார் . அதனால் சரி இதோட வீட்டில் சொல்லியாச்சு படிப்பு தேவை இல்லை என்று. நீண்ட காலம் போராடி ( அம்மாவுடனும் உறவினருடனும்), ஒரு பல்கலையில் படிச்சு பட்டம் பெறுவது நல்லது என்று அம்மாவுக்கு பலர் பரிந்து உரைத்து ஒரு மாதிரி பல்கலையும் வந்தாச்சு.

முதல் நாள் பயணம் கொழும்பில் இருந்து

அன்று என்னுடன் எங்கள் குடும்ப நண்பர்கள் ஒரு சிலருடன், பொறியியல் பீட சீனியர் ஒருவருடன் தான் பேராதனை வந்து சேர்ந்தேன். சஞ்சீவன் தான் ( பூனை ) என்னை புகையிரத நிலையத்தில் இருந்து கொண்டு போய் குருந்துவதையில் சேர்த்தது. அங்கு நானும் எனது சக பீட மாணவனும் முதல் சந்திப்பு. குருந்துவத்தை என்பதை சுருக்கி வதை முகாம் உள்ள பிரதேசம் என்றே சொல்லலாம். மன்னிக்கவும் இவ்வாறு சொன்னால் பலர் கோவம் கொள்ளலாம், இது என்னுடைய கருத்து.
நான் பல்கலை வந்த காலத்தில் ஆனையிறவு தாக்குதல் நடை பெற்றதால் எங்கள் சக பீட யாழ் மாணவர்கள் இல்லாததால் ஏறத்தாள ஒருமாதம் கோவில் மேளம் மாதிரி நான் எனது நணபன் செந்தூரன், மற்றும் ஈசன் இவர்கள் தான் எங்கள் சீனியர்களின் ராகிங் என்னும் பசிக்கு இரையாவது. வடிவேலு ஸ்டைல் இல சொன்னால் நாங்க ரொம்ப நல்லவங்க.

(எங்கள் வீட்டில் இருந்து )
முதல் நாள் குருந்துவத்தை கடையில்
இரவு ஆறு மணி சாப்பிடுவம் என்று போட்டு நண்பனும் நானும் கடையை நோக்கி செல்லும் போதே நன்றே மாட்டி கொண்டோம். நாங்கள் வேறு பீடம் என்று சொன்னாலும் நம்புவார் இல்லை. ஒரே நேரத்தில் தான் பொறியியல் பீட மாணவர்களும் வந்த காரணத்தால். காட்டுவதற்கு campus அட்டை கூட இல்லை. என்ன செய்யுறது. அனுமதி கடிதத்தின் போட்டோ பிரதிதான். என்னை சந்தித்த முதல் சீனியர் பெயர் சொல்வது சரி இல்லை. எனது அந்த போட்டோ பிரதியையே கிழித்து எறிந்து போட்டு அறைக்கு கொண்டு போய் செய்த அநியாயம் என்றால் சொல்ல முடியாது.


(பஸ்சில் செல்லும் போது )

இருட்டு அறைக்குள் நடந்த சம்பவங்கள் இன்றும் என்றும் என்னை ராகிங் மகிமைகள் இவைதானா கேவலம் என்று நன்றே உளற செய்கின்றன. என்னதான் செய்யலாம்.
இரண்டு மணி நேரம் அனுபவித்து விட்டு ஒரு மாதிரி அழுத மூஞ்சியோட கடையடிக்கு வந்தால் அடுத்த கூட்டம் இருக்கு இங்கே. ஏற்கனவே இந்துவின் மைந்தர்கள் அங்கெ வாங்கி வதங்கி கொண்டு இருக்கும் போது சேர்த்து நானும் இணைந்து கொண்டேன். இங்கையாவது பரவாய் இல்லை ., கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் ஏச்சு. என்று ஒரு மாதிரி சாப்பிட சரி இடம் தந்தார்கள்.,
சாப்பிடும் போது முதல் முறை ஆங்கிலத்தில் நான் எதோ சொன்னதிற்கு அந்த சீனியர் தந்த பேச்சை நான் இன்று வரை யாரிடமும் கேட்க வில்லை. ஒரு Non Stop என்றே சொல்லலாம்.
"ஆகா இவர்தானா அவரு எங்க கல்லூரியில் முந்தி சமய பிரசங்கம் செய்வாரு ? ஆகா மாப்பு நீங்க எப்புடி இப்புடி?? " இதை வடிவேலு அந்த காலத்தில் சொல்லி இருந்தால் கட்டாயம் நான் சொல்லி சிரிச்சு இருப்பேன் ( கடைசி எனது நண்பர்களிடமாவது)
ஒரு மாதிரி சாப்பிட்டு முடிய எல்லாரயும் அடுத்த கூட்டம் தங்கள் அறையை நோக்கி அழைத்து செல்கிறார்கள்.

Sarasavuyana
தொடரும் ......!!!!

பாகம் இரண்டில் ( அங்கு என்ன நடை பெற்றது, முதல் நாள் கம்பளை bus பயணம், முதல் நாள் என்ன கற்று கொண்டேன் என்பன வரும்)

&&&&& விளம்பரம் இப்போ .................&&&

2009-09-14

அடங்காப்பிடாரி மனைவியை கட்டு படுத்த ???

அடங்காப்பிடாரி மனைவியை கட்டுப்படுத்த இப்படியும் ஒரு டெக்னாலஜி இருக்காமே !!!!


வாங்கி பயன் பெறுங்கள் தேவையானோர்.
இதை எந்த பெண்ணுக்கும் Compatible என்றும் சொல்ல படுகிறது :)

2009-09-13

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2009 Sept -2011



மேஷம் துணிச்சலான செயல்கள்

(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)


பொது: உங்கள் ராசிக்கு 10. 11-ஆம் இடங்களுக்குரிய சனி 6-ஆமிடத்திற்கு வந்திருக்கிறார். இது விசேடமான
மாற்றமாகும். எதிர்ப்புக்கள் விலகும். உழைப்புக்குரிய பயன் கிடைக்கும். செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி
காணலாம். புதிய தொழிலில் ஈடுபடவும் வாய்ப்பு உண்டாகும். வெளிநாட்டு வேலைக்காகக் காத்திருப்பவர்கள் அதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். பண நடமாட்டம் திருப்தி தரும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக்கூடி வரும். இரக்க சுபாவம் கூடும். பேச்சாற்றல் பளிச்சிடும். வழக்கு, வியாஜ்ஜியங்களில் வெற்றி காணலாம். மற்றையோர் உங்களைப் போற்றுவார்கள். பொருள் திரட்டுவதில் ஆர்வம் கூடும். நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேற வாய்ப்புக் கூடிவரும்.

ஆரோக்கியம், குடும்பம்: உடல் நலம் சீராகும். குடும்பத்தில் குதூகலம் கூடும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். மக்கள் நலம் சீர்பெறும். மூத்த சகோதர, சகோதரிகளால் மன அமைதி கெடும். வாழ்க்கைத்துணைவரின் நலனுக்காகச் செலவு செய்ய நேரலாம். வேலையாட்கள் நல்லவிதமாக நடந்து கொள்வார்கள்.

பொருளாதார நிலை: 19-12-2009 முதல் குருபலம் கூடுவதால் பொருளாதார நிலையில் விசேடமான வளர்ச்சியைக் காணலாம். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். கடன் தொல்லை நிச்சயமாகக் குறையும். சேமிப்புப் பெருகும். வரவேண்டிய பாக்கிப் பணம் வசூலாகும். புதிய துறைகளில் முதலீடு செய்ய வாய்ப்புக் கூடிவரும்.
கொடுக்கல்-வாங்கல் இனங்களில் அபிவிருத்தி காணலாம். பல வழிகளிலும் பணம் வந்து சேரும். 2011-ல் சுபச் செலவுகள் செய்ய வேண்டிவரும்.

நிலபுலங்கள்: 2011-ல் புதிய சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும்.

தொழில்: சனி 6-ல் இருப்பதால் தொழிலில் விசேடமான வளர்ச்சியைக் காணலாம். புதிய தொழில் துறைகளில் ஈடுபடவும் வாய்ப்பு உண்டாகும். இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கள், தோல் சம்பந்தப்பட்ட இனங்கள் லாபம் தரும். விவசாயிகளுக்கு மகசூல் கூடும். தொழிலாளர்களது நிலை உயரும். ரியல் எஸ்டேட் இனங்கள்
லாபம் தரும். சமுதாய நலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவற்றைப் பெற வாய்ப்புண்டாகும். சனி புதனுடைய வீட்டில் இருப்பதால் சொந்தமாக வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். தரகு, கமிஷன் ஏஜன்ஸி போன்ற இனங்
களால் ஆதாயம் கூடப் பெறலாம். கூட்டுத் தொழிலில் கவனம் தேவை.

மாணவர்களுக்கு: முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். மறதி விலகி, ஞாபக சக்தி கூடும். தடை, தாமதங்கள் விலகும். போட்டித் தேர்வுகளில் வெற்றி காணலாம்.

மாதர்களுக்கு: சிறுசிறு பிரச்னைகள் ஏற்படுமென்றாலும் சமாளித்து விடுவீர்கள்.

அதிர்ஷ்ட காலம்: 19-12-2009 முதல் 1-5-2010 வரை.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9. எண் 8-ம் அதிர்ஷ்டம் தரும்.

திசை: கிழக்கு, வடகிழக்கு, தெற்கு, மேற்கு.

தெய்வம்: முருகன்.

பரிகாரம்: குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவதன் மூலம் நலம் கூடப் பெறலாம்.


=========================
ரிஷபம் பல வழிகளில் ஆதாயம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)


பொது: உங்கள் ராசிக்கு 4-ல் உலவிக் கொண்டிருந்த சனி 5-ஆமிடம் மாறுகிறார். கோசாரப்படி இது விசேடமாகாது என்றாலும் உங்கள் ராசிக்கு 9, 10-ஆம் இடங்களுக்குச் சனி அதிபதியாகி, யோக காரகன் ஆவதாலும், ராசிநாதன் சுக்கிரனும் சனியும் ஒருவருக்கொருவர் நண்பர்களாவதாலும், சனி தன் நட்புக் கிரகமான புதனின் வீட்டில் உலவுவதாலும், உச்ச ஆரோஹணத்தில் இருப்பதாலும் சுப பலன்களே கூடும். 19-12-2009 வரையிலும் குரு பலம் இருப்பதால் சுப காரியங்கள் நிகழும். அதன்பிறகு குரு 10-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. 2011-ல் குரு மீனத்தில் உலவும்போது சுப பலன்கள் கூடும். 5-ல் உள்ள சனி அதிர்ஷ்ட வாய்ப்புக்களை உண்டுபண்ணுவார். சனி புதனது வீட்டில் இருப்பதால் புத்திசாலித்தனம் வெளிப்படும். வியாபார நுணுக்கம் தெரியவரும். புனிதப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மந்திர சித்தி ஏற்படும். மனக்குழப்பம் விலகும்.

ஆரோக்கியம், குடும்பம்: வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். குடும்ப நலம் சீராகவே இருந்துவரும். மக்களால் அனுகூலம் உண்டாகும். தந்தை நலம் சீர்பெறும். உடன் பிறந்தவர்கள் உதவுவார்கள். மாமன் வழி உறவினரால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். வாழ்க்கைத்துணைவரால் நலம் கூடப் பெறலாம். மூத்த சகோதர, சகோதரிகளால் அனுகூலம் உண்டாகும்.

பொருளாதார நிலை: 19-12-2009 வரையிலும் பொருளாதார நிலையில் விசேடமான வளர்ச்சியைக் காணலாம். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். அதன் பிறகு கொடுக்கல்-வாங்கல் இனங்களில் விழிப்புத் தேவை. அதிர்ஷ்ட வாய்ப்புக்களை எண்ணி ஏமாற வேண்டாம். 2011-ல் குரு மீன ராசியில் சஞ்சரிக்கும்போது பொருளாதார நிலையில் விசேடமான அபிவிருத்தியைக் காணலாம். புதிய இனங்களில் முதலீடு செய்யவும், சேமிப்பு கூடவும் வாய்ப்பு உண்டாகும்.

நிலபுலங்கள்: சொத்துக்களால் ஆதாயம் கிடைத்து வரும். புதிய சொத்துக்களின் சேர்க்கையையும் பெறுவீர்கள்.

தொழில்: செய்தொழிலில் விசேடமான வளர்ச்சியைக் காண இயலாது. இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். தொழில் ரீதியான பிரச்னைகளும் உண்டாகும். சனிப் பிரீதி செய்வது நல்லது. தொழிலாளர்கள், விவசாயிகள், துப்புறவுப் பணியாளர்கள், சுரங்கப்பணியாளர்கள், ஆலைப் பணியாளர்கள் ஆகியோர் பொறுப்புடன் செயல்படுவது அவசியமாகும். புதிய தொழில்களில் பிரவேசிக்க வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கும் ஆசிரியர்களுக்கும், ஆன்மிகவாதிகளுக்கும் அனுகூலமான போக்குத் தென்படும்.

மாணவர்களுக்கு: திறமைக்குரிய வளர்ச்சியைக் காணலாம். தொழில் நுட்ப கல்வியில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும்.

மாதர்களுக்கு: உற்சாகம் கூடும். முக்கியமான எண்ணங்கள் ஈடேறும்.

அதிர்ஷ்ட காலம்: 9-9-2009 முதல் 19-12-2009 வரை. 2-5-2010 முதல் 2011 வரை.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6, 8.

திசை: வடக்கு, தென்கிழக்கு, மேற்கு.

தெய்வம்: மகாலட்சுமி.

பரிகாரம்: ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதியாக துர்க்கையையும் விநாயகரையும் வழிபடுவது நல்லது.


===============================
மிதுனம்: அரசு உதவி

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

பொது: உங்கள் ராசிக்கு 3-ல் உலவிக் கொண்டிருந்த சனி 4-ஆமிடம் மாறியிருக்கிறார். அர்த்தாஷ்டம சனியின் காலமிது. எதையும் சுலபமாக நிறைவேற்றி விட இயலாதவாறு தடைகளும் குறுக்கீடுகளும் உண்டாகும். அதிகம் பாடுபட வேண்டிவரும். இங்குமங்கும் அலைந்து திரிய வேண்டிவரும். நண்பர்கள், உறவினர்களால் பிரச்னைகள் சூழும். முக்கியமானவர்களை விட்டுப் பிரிய நேரலாம். மறதியால் அல்லல்பட வேண்டிவரும். தொலைதூரத் தொடர்பால் அனுகூலமிராது. 19-12-2009 முதல் குரு 9-ஆமிடம் மாறுவதால் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். புத்திசாலித்தனம் பளிச்சிடும். பிரச்னைகள் குறையும். சனி உங்கள் ராசிக்கு 9-ஆம் வீட்டோனாகி, 4-ல் இருப்பதால் சுக, சௌக்கியங்கள் கூடும். உற்றார்-உறவினர்களால் அளவோடு நன்மைகள் ஏற்படும்.

ஆரோக்கியம், குடும்பம்: அலைச்சலால் உடல் சோர்வு ஏற்படும். மார்பு, இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது. குடும்ப நலம் சீராக இராது. மக்களால் வீண் செலவுகள் ஏற்படும். மூத்த சகோதர, சகோதரிகளின் முன்னேற்றம் பாதிக்கும். தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும்.

பொருளாதார நிலை: அதிகம் பாடுபட்டே பயன் பெற வேண்டிவரும். அதிர்ஷ்ட வாய்ப்புக்களை எண்ணி ஏமாற வேண்டாம். குரு கும்பத்தில் உலவும் நேரத்தில் பண நடமாட்டம் அதிகரிக்கும். ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். கொடுக்கல்-வாங்கல் இனங்களில் அபிவிருத்தி காணலாம்.

நிலபுலங்கள்: சொத்துக்கள் சம்பந்தப்பட்ட இனங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. பராமரிப்புச் செலவுகள் கூடும். வண்டி, வாகனங்களால் அனுகூலமிராது. புதிய சொத்துக்களை வாங்கும்போது சட்ட சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ளவும்.

தொழில்: 10-ஆம் இடத்தை 4-ல் இருந்து சனி பார்ப்பதால் மாமூலான காரியங்கள் சீராகவே நடந்து வரும். புதிய தொழில் துறைகளில் அதிகம் முதலீடு செய்ய வேண்டாம். கல்வி சம்பந்தப்பட்ட இனங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுகூலமான போக்கு நிலவிவரும். ரியல் எஸ்டேட் இனங்கள் ஓரளவு லாபம் தரும். தரகர்களுக்கும் கமிஷன் ஏஜென்டுகளுக்கும் அளவோடு அனுகூலம் உண்டாகும். 2011-ல் தொழில் ரீதியாக முன்னேற்றம் காணலாம். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு, இட
மாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும்.

மாணவர்களுக்கு: பள்ளிகளில் படிப்பவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்தினால்தான் முன்னேற்றம் காணமுடியும். கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு 19-12-2009 முதல் விசேடமான வளர்ச்சி தெரியவரும். மேல் படிப்புக்காகச் சிலர் வெளிநாடு செல்லவும் வாய்ப்புக் கூடிவரும்.

மாதர்களுக்கு: அளவோடு நலம் உண்டாகும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. சொந்த பந்தங்களால்
அதிகம் அனுகூலமிராது.

அதிர்ஷ்ட காலம்: 19-12-2009 முதல் குரு பலம் கூடுவதால் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடப் பெறலாம்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6.

திசை: வடக்கு, தென்கிழக்கு.

தெய்வம்: மகாவிஷ்ணு.

பரிகாரம்: ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது. சனிக்கிழமைகளில் சனீஸ்வரரை வழிபடவும். ஹனுமான் சாலீசா படிப்பது நல்லது. பெருமாள் கோயிலில் இருக்கும் ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பாகும்.

============================================
கடகம் பொருளாதார வளர்ச்சி

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)


பொது: இதுவரையிலும் உங்கள் ராசிக்கு 2-ஆமிடத்தில் உலவி வந்த சனி 3-ஆமிடத்திற்கு மாறியிருப்பது விசேடமாகும். ஏழரைச் சனியின் பிடியிலிருந்து முழுவதுமாக விடுபடுகிறீர்கள். இனி வசந்த காலம்தான். நினைப்பது நடக்கும். தடைகளும் குறுக்கீடுகளும் விலகும். பிரச்னைகள் எளிதில் தீரும். முயற்சி பலிதமாகும். போட்டிப் பந்தயங்களிலும், விளையாட்டு, விநோதங்களிலும் வெற்றி பெறுவீர்கள். தடைப்பட்டிருந்த சுப காரியங்கள் நிகழும். மனத்திற்கு மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். மனோபலம் கூடும். உடல் சக்தி அதிகரிக்கும். காம உணர்வு கூடும். சனி 3-ல் இருப்பதால் உழைப்பின் பயனை முழுமையாகப் பெறுவீர்கள். சமுதாய நலப்பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும்.

ஆரோக்கியம், குடும்பம்: உடல் நலம் சீராக இருந்து வரும். குடும்பத்தில் இதுவரையிலும் இருந்து வந்த பிரச்னைகள் விலகும். குதூகலம் நிறைந்திருக்கும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். எதிர்ப்புக்கள் விலகும். வேலையாட்கள் நல்லவிதமாக நடந்து கொள்வார்கள். பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

பொருளாதார நிலை: பண வரவு கூடும் நேரமிது. வரவேண்டிய பாக்கிப் பணம் வசூலாகும். திறமை வீண்போகாது. கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். சேமிப்பு அதிகரிக்கும்.

நிலபுலங்கள்: சொத்துக்களால் அதிகம் ஆதாயத்தைப் பெற இயலாது. பழைய சொத்துக்களை விற்க நேரலாம். வண்டி வாகனங்களில் செல்லும்போது விழிப்புத் தேவை.

தொழில்: செய்தொழிலில் விசேடமான வளர்ச்சியைக் காணலாம். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். தொழிலாளர்கள், விவசாயிகள், சுரங்கப்பணியாளர்கள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். பொது நலப்பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும். ரேடியோ, வீடியோ, டி.வி, பத்திரிகை, தொலைபேசி, கைபேசி மற்றும் தகவல் துறைகளைச் சேர்ந்த அனைவருக்குமே இந்தச் சனிப்பெயர்ச்சிக்காலம் மிகவும்
விசேடமானதாக அமையும்.

மாணவர்களுக்கு: வெற்றி வாய்ப்புக்கள் கூடும். போட்டித் தேர்வுகளிலும், விளையாட்டு விநோதங்களிலும் வெற்றி கிட்டும். விரும்பிய பாடம் கிடைக்கும். தொழில் கல்வி பயில்பவர்களுக்கும் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.

மாதர்களுக்கு: சோதனைகள் விலகும். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். மன உற்சாகம் பெருகும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் ஆகும். வேலைக்குச் செல்லும் மாதர்களுக்குப் பதவிச் சிறப்பு உண்டாகும். பணவரவு திருப்தி தரும்.

அதிர்ஷ்ட காலம்: 2011-ஆம் ஆண்டில் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 8, 9.

திசை: கிழக்கு, வடகிழக்கு, தெற்கு, மேற்கு.

தெய்வம்: பராசக்தி.

பரிகாரம்: 19-12-2009-ல் குரு 8-ஆமிடத்தில் உலவத் தொடங்குவதால் குருப் பிரீதி செய்யவும். குருவுக்கு அதிதேவதையான தட்சிணாமூர்த்திக்கும் அர்ச்சனை ஆராதனைகளைச் செய்யவும். விநாயகரை வழிபடவும்

================================
சிம்மம் பயணத்தால் அனுகூலம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)


பொது: உங்கள் ராசியிலேயே ஜன்மச் சனியாக உலவிக் கொண்டிருந்தவர் 2-ஆமிடத்திற்கு மாறுகிறார். ஏழரைச் சனியின் இறுதிக் காலமிது. பாதச் சனியின் காலமாகும். சனியானவர் கோசாரப்படி 2-ல் உலவுவது சிறப்பாகாது என்றாலும் விட்டு விலகும்போது நலம்புரிவார் என்பது அனுபவ மொழியாகும். உங்கள் ஜன்ம ராசிக்கு 6, 7-ஆம் இடங்களுக்குரிய சனி 2-ல் உலவுவதால் பேச்சிலும் செயலிலும் அவசரப்படாமல் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். பேச்சால் சங்கடம் உண்டாகும் என்பதால் யோசித்துப் பேசுவது அவசியமாகும். பழைய நண்பர்களது தொடர்பு பயன்படும். கடுமையாக உழைத்தே பயன்பெற வேண்டிவரும் என்பதால் உழைப்புக்குப் பின்வாங்கலாகாது. அக்கம்பக்கத்தாரால் சில இடர்ப்பாடுகள் உண்டாகும். சனிப் பிரீதியைத் தொடர்ந்து செய்துவருவது நல்லது.

ஆரோக்கியம், குடும்பம்: சனி 2-ஆமிடத்தில் உலவுவதால் கண், வாய், முகம் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். கெட்ட உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி காண்பது கடினம். தந்தை நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். வாழ்க்கைத்துணைவருக்குக் கண்டம் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீண் செலவுகள் ஏற்படும். மக்கள் நலம் சீராகவே இருந்து வரும். மக்களுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க வாய்ப்பு உண்டாகும். மக்களின் நடத்தையில் கவனம் தேவை.

பொருளாதார நிலை: 19-12-2009 முதல் குரு 7-ஆமிடம் மாறி, வலுப்பெறுவதால் பண வரவு கூடும். அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். 2010 முன்பகுதியில் கடன் ஓரளவு குறையும். சனி 2-ல் இருப்பதால் கொடுக்கல்-வாங்கல் இனங்களில் விழிப்புடன் ஈடுபடுவது அவசியமாகும். யாருக்கும் ஜாமீன் கொடுக்கவேண்டாம். கைப்
பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது. 2011-ல் கடன் சுமை கூடும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. வீண் ஆடம்பரம் வேண்டாம்.

நிலபுலங்கள்: நிலம், மனை, வீடு போன்ற சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். சனி 4-ஆமிடத்தைப் பார்ப்பதால் சொத்துக்கள் சம்பந்தப்பட்ட காரியங்கள் தாமதமாகி, பின்னர் நிறைவேறும்.

தொழில்: செய்தொழிலில் அதிகம் அக்கறை செலுத்தினால் அபிவிருத்தி காணலாம். 19-12-2009 முதல் குரு பலம் கூடுவதால் பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், மேடைப் பேச்சாளர்கள், ஆன்மிகவாதிகள் ஆகியோருக்கெல்லாம் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். கடுமையாக உழைப்பவர்களுக்கு வருவாய் கூடும். கூட்டுத் தொழிலில் ஓரளவு வளர்ச்சி காணலாம். வெளிநாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது.

மாணவர்களுக்கு: படிப்பில் முழுக்கவனம் செலுத்தினால் முன்னேற வாய்ப்பு உண்டாகும். விளையாட்டு விநோதங்களைத் தவிர்ப்பது நல்லது.

மாதர்களுக்கு: சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். 2010 முன்பகுதி விசேடமானதாக அமையும். முக்கியமான எண்ணங்களும் ஈடேறும்.

அதிர்ஷ்ட காலம்: 19-12-2009 முதல் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடப் பெறலாம்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9.

திசை: கிழக்கு, வடகிழக்கு, தெற்கு.

தெய்வம்: ருத்திரன், முருகன்.

பரிகாரம்: சனி, ராகு ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது அவசியமாகும். ஆஞ்சநேயரையும் துர்க்கையையும் வழிபடுவது நல்லது.

===================================
கன்னி் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள்

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)


பொது: இதுவரையிலும் உங்கள் ராசிக்கு 12-ல் உலவி வந்த சனி ஜன்ம ராசிக்கு இடம் மாறியிருக்கிறார். ஏழரைச் சனியின் மத்திய காலமிது. சனியும், உங்கள் ராசிநாதன் புதனும் ஒருவருக்கொருவர் நண்பர் என்பதாலும், 5-ஆம் வீட்டுக்கு அதிபதியான சனி ஜன்ம ராசியில் உலவும் நிலை அமைவதாலும் எதிர்பாராத ஓரிரு அதிர்ஷ்ட
வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். அலைச்சலும் உழைப்பும் கூடும் என்றாலும் அதற்கான பயனும் கிடைத்து வரும்.
பொறுப்புக்கள் கூடவே செய்யும். 6-ஆம் வீட்டோன் சனி ஜன்ம ராசியில் உலவுவதால் எதிரிகள் இருப்பார்கள். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. கெட்டவர்களின் தொடர்பு கூடாது.

ஆரோக்கியம், குடும்பம்: தலை சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். குடும்ப நலனில் கவனம் தேவை. குடும்பத்தை விட்டுச் சிலர் பிரிந்திருக்க வேண்டிவரும். மக்களால் அளவோடு நலம் உண்டாகும்.
வாழ்க்கைத்துணைவரால் ஓரிரு நன்மைகள் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உதவுவார்கள். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

பொருளாதார நிலை: 19-12-2009 வரை குரு பலம் இருப்பதால் பண வரவு கூடும். எதிர்பாராத ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். அதன்பிறகு பண நடமாட்டம் சீராக இராது. தேவைகளைச் சமாளிக்கக் கடன்பட நேரலாம். அதிர்ஷ்ட வாய்ப்புக்களை எண்ணி ஏமாற வேண்டாம். உழைப்புக்கு முக்கியத்துவம் தருவது அவசிய
மாகும். பொருள் வரவு குறைந்து, செலவுகள் கூடும். சிக்கன நடவடிக்கை தேவை. 2-5-2010 முதல் குரு மீனத்தில் உலவும்போது பண நடமாட்டம் அதிகரிக்கும்.

நிலபுலங்கள்: 2011-ல் நிலபுலங்களால் ஆதாயம் கூடப் பெறலாம். புதிய சொத்துக்களும் சேரும்.

தொழில்: செய்தொழிலில் அபிவிருத்தி காண அதிகம் பாடுபட வேண்டிவரும். இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னேற்றம் தடைப்படும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், மதபோதகர்கள் ஆகியோருக்கெல்லாம் 2011-ல் அனுகூலமான போக்குத் தென்படும். வியாபாரிகளுக்கு அவ்வப்போது வளர்ச்சி தெரியவரும். என்றாலும் விசேடமான வளர்ச்சிக்கு இடமிராது. கலைஞர்களுக்கு ஓரளவு நலம் உண்டாகும்.

மாணவர்களுக்கு: படிப்பில் முழுக் கவனம் செலுத்தினால்தான் முன்னேற முடியும். சோர்வுக்கும் சோம்பலுக்கும்
இடம் தரலாகாது. காலத்தைத் தள்ளிப்போடாமல் அன்றைய பாடங்களை அன்றைக்கே படிப்பது நல்லது. உடல் நலனிலும் தகுந்த பாதுகாப்புத் தேவை.

மாதர்களுக்கு: 2011-ஆம் ஆண்டு சிறப்பாக அமையும். சுப காரியங்கள் நிகழும். திருமணம் ஆகாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்புக் கூடிவரும். திருமணம் ஆனவர்களுக்கு வாழ்க்கைத்துணைவரால் நலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட காலம்: 9-9-2009 முதல் 19-12-2009 வரை. 2-5-2010 முதல் 2011 வரை.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6. எண் 8-ம் ஓரளவு அதிர்ஷ்டம் தரும்.

திசை: வடக்கு, தென்கிழக்கு.

தெய்வம்: மகா விஷ்ணு.

பரிகாரம்: சனிப் பிரீதி செய்வது அவசியமாகும். சிவாலயம் சென்று அங்கே தனிச்சந்நதியில் மேற்கு நோக்கி வீற்றிருக்கும் சனீஸ்வரரை வழிபடுவது நல்லது. கோளறு திருப்பதிகம் பாராயணம் செய்யவும். ஆஞ்சநேயரை வழிபடவும். ஹனுமன் சாலீசா சொல்வது சிறப்பாகும்.

==========================================
துலாம் பொது நலப்பணிகளில் ஈடுபாடு

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)


பொது: உங்கள் ராசிக்கு 4, 5-ஆம் இடங்களுக்கு அதிபதியான சனி 12-ஆமிடம் வந்திருக்கிறார். இது விசேடமான மாற்றமாகாது. ஏழரைச் சனியின் ஆரம்ப காலமாகும். ஜனன கால ஜாதக பலம் உள்ளவர்கள் கவலைப்படத் தேவையில்லை. பொதுவில் விரயச் சனியால் வீண் விரயங்கள், இழப்புக்கள் ஆகியவை ஏற்படும். விரும்பத் தகாத இடமாற்றம், நிலை மாற்றம் ஆகியவை உண்டாகும். உடல் ஆரோக்கியத்திற்காகச் செலவு செய்ய வேண்டிவரும். மதிப்பும் அந்தஸ்தும் குறையும். மக்களைப் பிரிந்து வாழ நேரலாம். நண்பர்கள், பங்குதாரர்களால் பிரச்னைகள் ஏற்படும். அக்கம்பக்கத்தாரால் அனுகூலமிராது. மனத்தில் ஏதேனும் பயம் குடிகொள்ளும். மறதியால் அவதிப்பட வேண்டிவரும். கெட்டவர்களின் தொடர்பு கூடாது. எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது அவசியமாகும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. சனி உங்கள் ராசிக்கு யோக காரகன் என்பதாலும், ராசிநாதன் சுக்கிரனும் சனியும் ஒருவருக்கொருவர் நண்பர்களாவார்கள் என்பதாலும் கெடுபலன்கள் பெருமளவு குறைந்து நற்பலன்களும் உண்டாகும். சுபச் செலவுகள் கூடும்.

ஆரோக்கியம், குடும்பம்: உடல் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். மருத்துவச் செலவுகள் கூடும். கால் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். குடும்ப நலம் சீராக இராது. மக்களின் முன்னேற்றம் தடைப்படும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இராது. சண்டை, சச்சரவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணைவரின் நலம் பாதிக்கும்.

பொருளாதாரநிலை: 19-12-2009 முதல் குரு உங்கள் ராசிக்கு 5-ஆமிடம் மாறுவதால் பொருளாதார நிலையில்
வளர்ச்சி காணலாம். அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். பணம் கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். ஸ்பெகுலேஷன் துறைகளால் ஆதாயம் கிடைக்கும். வர வேண்டிய பாக்கிப்பணம் வசூலாகும். 2010 முன்பகுதி பொருளாதார ரீதியில் சிறப்பானதாக அமையும். என்றாலும் சனி 12-ல் இருப்பதை மறந்துவிடலாகாது. வீண் விரயங்கள், இழப்புக்கள் ஆகியவை ஏற்படுமாதலால் கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது அவசியமாகும். கறுப்பு நிறமுள்ளவராலும், பிற மொழி, மதக்காரர்களாலும் ஏமாற்றப்பட நேரலாம்; விழிப்புத் தேவை. யாரையும் நம்பி அதிகப் பணத்தைத் தரவேண்டாம்.

நிலபுலங்கள்: 4-ஆம் வீட்டுக்கு அதிபதியான சனி 12-ல் இருப்பதால் சொத்துக்கள் சம்பந்தப்பட்ட இனங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. சிலர் சொத்துக்களை விற்க வேண்டிய நிலைக்கு ஆளாகவும் நேரலாம். பராமரிப்புச் செலவுகள் கூடும். வண்டி, வாகனங்கள், நாற்கால் பிராணிகளால் அனுகூலமிராது.

தொழில்: செய்தொழிலில் வளர்ச்சி காண்பது அரிதாகும். தொழிலாளர்களுக்குப் பிரச்னைகள் சூழும். சுரங்கப் பணியாளர்கள், தோட்டப் பணியாளர்கள், ஆலைப்பணியாளர்கள் ஆகியோருக்கெல்லாம் உழைப்புக் கூடுமே தவிர, அதற்கான பயன் கிடைக்காது. வேலை இழப்பு, பதவியில் சறுக்கல் ஆகியவையும் ஏற்படலாம். செய்வன திருந்த செய்வது நல்லது. சிறு தவறு செய்தாலும் பெரும்தண்டனை பெற வேண்டியிருக்கும். உங்கள் வேலைகளை மற்றையோரிடம் தர வேண்டாம். பொறாமைக்காரர்களால் பிரச்னை உண்டாகும். தொழில் புரியுமிடத்தில் யாரிடத்திலும்
பக்குவமாகப் பேசிப் பழகுவது நல்லது.

மாணவர்களுக்கு: முன்னேற்றம் தடைப்படும். படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது அவசியமாகும்.

மாதர்களுக்கு: சங்கடங்கள் கூடும். எதிர்ப்புக்கள் அதிகரிக்கும். வீண் வம்பு வேண்டாம்.

அதிர்ஷ்ட காலம்: 19-12-2009 முதல் 1-5-2010 வரை.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6.

திசை: வடக்கு, தென்கிழக்கு.

தெய்வம்: பராசக்தி, மகாலட்சுமி.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபமேற்றி வழிபடவும். கால் ஊனமுள்ளவர்களுக்கு உதவி செய்யவும்.

=======================================
விருச்சிகம் தொழில் முன்னேற்றம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

பொது: உங்கள் ராசிக்கு 3, 4-ஆம் இடங்களுக்கு அதிபதியான சனி 11-ஆமிடத்தில் உலவுவதால் வெற்றி
வாய்ப்புக்கள் கூடும். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். முயற்சி வீண்போகாது. பெரியவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். பொது நலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மதிப்பு உயரும். சுகம் கூடும். சனி புதனின் ராசியில் காமத் திரிகோணமாகிய 11-ல் இருப்பதால் காம உணர்வு கூடும். ஒழுக்கத்துடன் இருப்பது அவசியமாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கூடிவரும். திருமணம் ஆனவர்களுக்கு மகப்பேறு பாக்கியம் உண்டாகும். கறுப்பு நிறப்பொருட்கள் லாபம் தரும். தடைகளும் குறுக்கீடுகளும் விலகும். வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பயனைப் பெறுவீர்கள். புதிய துறைகளில் ஈடுபடவும் அதனால் பயன் பெறவும் வாய்ப்பு உண்டாகும்.
ஆரோக்கியம், குடும்பம்: உடல் நலம் சீராக இருந்து வரும். குடும்பத்தில் குதூகலம் கூடும். சுப காரியங்கள் நிகழும். மக்களாலும், உடன் பிறந்தவர்களாலும் நலம் கூடும். வேலையாட்கள் நல்லவிதமாக நடந்து கொள்வார்கள். தாய் நலனில் கவனம் தேவை.

பொருளாதார நிலை: 2011 முதல் பொருளாதார நிலையில் விசேடமான வளர்ச்சி காணலாம். கொடுக்கல்- வாங்கல் இனங்களில் அபிவிருத்தி காணலாம். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். வரவேண்டிய பாக்கிப் பணம் வசூலாகும். கடன் தொல்லை நிச்சயம் குறையும். சேமிப்புக்கும் இடமுண்டு. புதிய துறைகளில் முதலீடு செய்ய வாய்ப்புக் கூடிவரும்.

நிலபுலங்கள்: சனி வலுத்திருப்பதாலும், 4-ஆம் வீட்டோனாகி 11-ல் இருப்பதாலும் நிலபுலங்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும். பழைய சொத்துக்களைப் புதுப்பித்துக் கொள்ளவும் சந்தர்ப்பம் கூடிவரும்.

தொழில்: சனி பலம் இருப்பதால் செய்து வரும் தொழிலில் விசேடமான வளர்ச்சியைக் காணலாம். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். தொழில் அதிபர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். சுரங்கப் பணியாளர்கள், தோட்டப்பணியாளர்கள், ஆலைப்பணியாளர்கள்
ஆகியோருக்கெல்லாம் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். கச்சாப் பொருட்கள், எண்ணெய் வகையறாக்கள், கறுப்பு நிறப் பொருட்கள், பூமியிலிருந்து வெளிப்படும் பொருட்கள், தோல் பொருட்கள் ஆகியவை லாபம் தரும். ரியல் எஸ்டேட் இனங்களால் ஆதாயம் கூடப் பெறலாம். 2011-ல் உத்தியோகஸ்தர்களின் நிலை உயரும். பொருள் நடமாட்டமுள்ள இனங்களில் வளர்ச்சி காணலாம். வியாபாரிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும்.
அரசியல்வாதிகள், பொது நலப்பணியாளர்கள் ஆகியோர் தங்கள் செல்வாக்கு உயரப் பெறுவார்கள். கிராம, நகர நிர்வாகப் பொறுப்பு சிலருக்குக் கிடைக்கும். திறமைக்குரிய பயன் கிடைக்கத் தவறாது.

மாணவர்களுக்கு: 4-ஆம் வீட்டோன் சனி புதன் வீட்டில் வலுத்திருப்பதால் வெற்றி வாய்ப்புக்கள் கூடும். மதிப்பெண்கள் உயரும். படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். பரிசுகளும் பதக்கங்களும் கிடைக்கும். ஆசிரியர்களும் பெற்றோரும் உங்களைப் பாராட்டுவார்கள்.

மாதர்களுக்கு: மன மகிழ்ச்சி கூடும். முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும்.

அதிர்ஷ்ட காலம்: 2-5-2010 முதல் 2011 வரை.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 8, 9.

திசை: கிழக்கு, வடகிழக்கு, மேற்கு, தெற்கு.

தெய்வம்: முருகன், தட்சிணாமூர்த்தி.

பரிகாரம்: ராகுவுக்குப் பிரீதியாக துர்க்கையையும், கேதுவுக்குப் பிரீதியாக விநாயகரையும் வழிபடுவது நல்லது. 2-5-2010 வரை குருப் பிரீதி செய்வதும் அவசியமாகும்.

====================================
தனுசு: சொத்துக்கள் சேருதல்

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

பொது: உங்கள் ராசிக்கு 9-ஆமிடத்தில் உலவிக் கொண்டிருந்த சனி 10-ஆமிடத்திற்கு வந்திருக்கிறார். இது விசேடமான மாற்றமாகும். 2, 3-ஆம் இடங்களுக்குரிய சனி 10-ல் உலவுவதால் குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். உடன் பிறந்தவர்களால் ஓரிரு காரியங்கள் நிறைவேறும். எடுத்த காரியத்தை எப்பாடுபட்டாவது நிறைவேற்றி விடுவீர்கள். சமுதாயத்தில் அந்தஸ்தும் மதிப்பும் உயரும்.வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்புக் கூடிவரும். தகவல் தொடர்பு இனங்கள் லாபம் தரும். பொருள் திரட்டுவதில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிரிகள் அடங்குவார்கள். வழக்கு, வியாஜ்ஜியங்களில் நல்ல திருப்பத்தைக் காணலாம். கடன் தொல்லைகள் குறையத் தொடங்கும். உழைப்புக்குரிய பயன் கிடைக்கவே செய்யும்.
ஆரோக்கியம், குடும்பம்: உடல் நலம் சீராகவே இருந்து வரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். மக்கள் நலனில் கவனம் தேவை. உடன் பிறந்தவர்களால் மன அமைதி குறையும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இருந்து வரும்.

பொருளாதார நிலை: பணவரவு கூடும். 19-12-2009 வரையிலும் குரு 2-ல் இருப்பது விசேடமாகும். குரு 10-ல் உள்ள சனியைப் பார்ப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் குரு மகரத்தில் இருக்கும் காலம் மிகச் சிறப்பானதாகும். அதன்பிறகு 3-ஆமிடம் மாறுவதாலும், சனியும் குருவும் 6/8-ஆக இருப்பதாலும், பொருளாதாரப் பிரச்னை ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்புக்களை எண்ணி ஏமாற வேண்டாம். மற்றையோரால் ஏமாற்றப்பட நேரலாம். விழிப்புடன் இருப்பது நல்லது.

நிலபுலங்கள்: 19-12-2009 வரையிலும் நிலபுலங்களால் ஆதாயம் கிடைத்து வரும். அதன் பிறகு சொத்துக்கள் சம்பந்தப்பட்ட இனங்களில் விழிப்புத் தேவை. 2011-ல் குரு மீனத்தில் உலவும் நேரத்தில் புதிய சொத்துக்கள் சேர வாய்ப்புண்டாகும்.

தொழில்: தொழிலாளர்கள், விவசாயிகள், சமுதாய நலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்கள் ஆகியோருக்கெல்லாம் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். ரியல் எஸ்டேட் இனங்கள் லாபம் தரும். தரகர்களுக்கும் கமிஷன் ஏஜண்டுகளுக்கும் வருவாய் கூடும். கறுப்பு நிறப்பொருட்கள், கச்சாப் பொருட்கள், இரும்பு சம்பந்தப்பட்ட இனங்கள், நிலக்கரி, விளை பொருட்கள் ஆகியவை லாபம் தரும். எண்ணெய் வகையறாக்
களால் ஆதாயம் கூடும்.

மாணவர்களுக்கு: பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் படிப்பில் முழு அக்கறை செலுத்துவது அவசியமாகும். தொழில் நுட்பக் கல்வி பயிலுவோருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும்.

மாதர்களுக்கு: அளவோடு நலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட காலம்: 9-9-2009 முதல் 19-12-2009 வரை குரு பலம் இருப்பதால் ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடி. வரும். அதிர்ஷ்ட வாய்ப்புக்களை எண்ணி ஏமாறாமல் உழைப்புக்கு முக்கியத்துவம் தருவது நல்லது. சனி உழைப்பின் மூலம் பயன் பெற உதவுவார்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9. எண் 8-ம் கூட ஓரளவு அதிர்ஷ்டம் தரும்.

திசை: கிழக்கு, தெற்கு, வடக்கு, வடகிழக்கு.

தெய்வம்: சிவன், முருகன்.

பரிகாரம்: சர்ப்ப சாந்தி செய்வது அவசியமாகும். 19-12-2009 முதல் குரு பிரீதி செய்யவும். விநாயகரையும், துர்க்கையையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது நல்லது.

=================================
மகரம்: கலைத்துறையினருக்கு வெற்றி

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

பொது: இதுவரையிலும் உங்கள் ராசிக்கு 8-ஆமிடத்தில் உலவிக் கொண்டிருந்த சனி 9-ஆமிடம் மாறுகிறார். இது விசேடமானதாகாது. என்றாலும் ராசிநாதன் சனி 9-ல் உலவுவதால் இதுவரையிலும் அஷ்டமச் சனியால்
விளைந்துவந்த சங்கடங்கள் விலகும். தான, தருமப் பணிகளிலும், தெய்வப் பணிகளிலும் ஈடுபாடு கூடும்.
தொலைதூரத் தொடர்பு பயன்படும். அயல்நாட்டுப் பயணத் திட்டம் நிறைவேறும். வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். செல்வாக்கும் மதிப்பும் உயரும்.
ஆரோக்கியம், குடும்பம்: சனி 9-ல் இருப்பதால் நோய் நொடி உபாதைகள் குறையும். 19-12-2009 முதல் குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். பெற்றோரால் அனுகூலம் உண்டாகும். மக்கள் நலம் சீர்பெறும். உடன்
பிறந்தவர்கள் உதவுவார்கள். நண்பர்கள், உறவினர்களால் அளவோடு நலம் உண்டாகும்.

பொருளாதார நிலை: 19-12-2009 முதல் பணவரவு அதிகரிக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். புதிய துறைகளில் முதலீடு செய்வீர்கள். கடன் உபத்திரவம் குறையும். பாக்கிப் பணம் வசூலாகும். 2-5-2010 முதல் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களில் விழிப்புத் தேவை.

நிலபுலங்கள்: சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை ஏற்பட்டு விலகும். 2010 முன்பகுதியில் புதிய சொத்துக்களை வாங்க வாய்ப்புக் கூடிவரும். பழைய சொத்துக்களைப் பராமரித்துக் கொள்ளவும் முடியும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும்.

தொழில்: தகவல் தொடர்பு இனங்களைச் சேர்ந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். கல்வித்துறைகளில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள். தரகர்களுக்கும் ஏஜண்டுகளுக்கும் வருவாய் கூடும். கலைஞர்களது நிலை உயரும். 2010 முன்பகுதியில் உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். ஆசிரியர்களது நிலை உயரும். ஆன்மிகவாதிகளுக்கு வரவேற்பு கூடும். 2011-ல் தொழில் ரீதியாக பிரச்னைகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது.

மாணவர்களுக்கு: வெற்றி வாய்ப்புக்கள் கூடும். கல்லூரிகளில் உயர்படிப்புப் படிப்பவர்கள் வளர்ச்சி காண்பார்கள். தொழில் நுட்பத் துறை சம்பந்தப்பட்ட படிப்பில் முன்னேற்றம் காணலாம்.

மாதர்களுக்கு: உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். ஆடை, அணிமணிகள் சேரும்.

அதிர்ஷ்ட காலம்: 19-12-2009 முதல் 1-5-2009 வரை.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6.

திசை: வடக்கு, தென்கிழக்கு.

தெய்வம்: ஆஞ்சநேயர், ஐயப்பன்.

பரிகாரம்: ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது நல்லது.


====================================
கும்பம்: வாழ்க்கைத்துணைவரால் அனுகூலம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

பொது: உங்கள் ராசிக்கு 8-ஆமிடம் வருகிறார் சனி. அஷ்டம சனியின் காலம் தொடங்குகிறது. இது கோசாரப்படி விசேடமாகாது என்றாலும் சனி உங்கள் ராசிநாதனாகி, 8-ல் இருப்பதால் துன்பம், துயரம், சோதனை, விரக்தி ஆகியவை ஏற்படுமென்றாலும் ஆயுளுக்குப் பாதகம் உண்டாகாது. வேலைப்பளு கூடும். அங்குமிங்கும் அலைந்து திரியவேண்டிவரும். வீண்வம்பு, வழக்குகளில் சிக்க நேரலாம்; எச்சரிக்கை தேவை. யாரிடத்திலும் வெளிப்படையாகப் பழகலாகாது. ஏமாற்றம், இழப்பு ஆகியவை ஏற்படும். எடுத்த காரியத்தை முடிக்க முடியாமல் தடைகளும் குறுக்கீடுகளும் முளைக்கும். மனத்தில் ஏதேனும் பயம் உண்டாகும். விளையாட்டு விநோதங்களில் ஈடுபடும்போது விழிப்புடனும் பாதுகாப்புடனும் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை ஒத்திப்போடுவது சிறப்பாகும். ஜனன கால ஜாதகத்தில் யோக பலனைத் தரக்கூடிய தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறுமானால் கவலைப்படத் தேவையில்லை. ஜாதக பலமும் இல்லாதவர்கள் இறைவழிபாட்டிலும் கிரக வழிபாட்டிலும் ஈடுபடுவதன் மூலம் அஷ்டமச் சனியால் விளையக்கூடிய சங்கடங்களைக் குறைத்துக் கொள்ளலாம்.
ஆரோக்கியம், குடும்பம்: ராசி நாதன் சனி 8-ல் மறைவதால் உடல் நலம் சீராக இராது. நீண்ட நாள் நோய் நொடிகளால் அவதிப்பட வேண்டிவரும். மறைமுக உறுப்புக்கள் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். குடும்ப நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். எதிர்ப்புக்களின் கரம் வலுக்கும். யாரிடத்திலும் சுமுகமாகப் பழகுவது நல்லது. வேலையாட்களால் தொல்லைகள் கூடும். யாரையும் நம்பி முக்கியப் பொறுப்புக்களையோ, பணத்தையோ ஒப்படைக்க வேண்டாம். உடன் பிறந்தவர்களாலும், தந்தையாலும் மன வருத்தம் உண்டாகும். கூட இருப்பவர்களே உங்களுக்குப் பிரச்னைகளை உண்டுபண்ணுவார்கள்.

பொருளாதார நிலை: 2011-ல் குரு மீனத்தில் உலவும் நிலை அமைவதால் பொருளாதார நிலையில் விசேடமான வளர்ச்சியைக் காணலாம். அது வரையிலும் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. பொருள் இழப்புக்குக் காரணம் உண்டு. கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது அவசியமாகும்.

நிலபுலங்கள்: சொத்துக்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும் என்றாலும் கஷ்டப்பட்டு பெற வேண்டிவரும். எதுவும் எளிதில் கிடைக்காது. போராடிப் போராடித்தான் பெற வேண்டிவரும்.

தொழில்: சனி 8-ல் இருப்பதால் செய்து வரும் தொழிலில் வளர்ச்சி காண அரும்பாடுபட வேண்டிவரும். உங்களுக்குரிய பணிகளை நீங்களே செய்வது நல்லது. பொறுப்புக்களை மற்றையோரிடம் ஒப்படைக்கலாகாது. புதிய தொழில் துவங்க இந்த நேரம் சிறப்பானதாகாது. மாமூலாகச் செய்து வரும் காரியங்களில் கூட அதிகம் கவனம் தேவைப்படும். சிறு தவறு செய்தாலும் பெரும் தண்டனைக்கு ஆளாக வேண்டிவரும். 2011-ல் குரு 2-ல் அமர்ந்து 10-ஆமிடத்தைப் பார்க்கும் நிலை அமைவதால் தொழில் ரீதியாக முன்னேற்றம் காண வாய்ப்புண்டாகும்.

மாணவர்களுக்கு: படிப்பில் முழுக்கவனம் செலுத்தினால்தான் முன்னேற்றம் காணமுடியும். விளையாட்டு, விநோதங்களைத் தவிர்ப்பது நல்லது. கெட்டவர்களின் தொடர்புக்கு இடம் தரலாகாது.

மாதர்களுக்கு: பிரச்னைகள் கூடும் நேரமிது. எதிலும் யோசித்து ஈடுபடுவது அவசியமாகும். கைப்பொருளைப் பத்திரமாக வைத்துக் கொள்வது அவசியமாகும். சுப காரியங்கள் தாமதமாகும். 2011 சிறப்பாக அமையும்.

அதிர்ஷ்ட காலம்: 2011-ல் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6.

திசை: வடக்கு, தென்கிழக்கு.

தெய்வம்: ஆஞ்சநேயர், ஐயப்பன்.

பரிகாரம்: சனிப் பிரீதி செய்வது மிகவும் அவசியமாகும். சனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி, அர்ச்சனை செய்வது நல்லது. ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யவும். அன்னதானம், வஸ்திர தானம் ஆகியவற்றைச் செய்வதன் மூலம் நலம் உண்டாகும். கால் ஊனமுள்ளவர்களுக்கு உதவவும். ஆஞ்சநேயரையும் விநாயகரையும் வழிபடவும்.

==========================================
மீனம் சுப காரியங்கள் நிகழுதல்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பொது: 6-ஆமிடத்தில் உலவி வந்த சனி 7-ஆமிடத்திற்கு மாறியிருக்கிறார். இது விசேடமான மாற்றமாகாது. 11, 12-ஆம் இடங்களுக்குரிய சனி 7-ல் இருப்பதால் எதிலும் ஒரு மந்த நிலை ஏற்படும். எதிர்ப்புக்கள் கூடும். மனத்தில் ஏதேனும் சலனம் உண்டாகும். முக்கிய நண்பர்களையோ, பங்குதாரர்களையோ விட்டுப் பிரிய நேரலாம். கெட்டவர்களால் பிரச்னைகள் ஏற்படும். காம உணர்வு கூடும். ஒழுக்கத்துடன் இருப்பது அவசியமாகும். யாரிடத்திலும் விழிப்புடன் பழகுவது நல்லது. வீண் வம்பு, வழக்குகளில் ஈடுபட வேண்டாம். சனிக்கு 7-ஆமிடம் திக் பலம் உள்ள இடம் என்பதாலும், சனி லாப ஸ்தானத்திற்கு அதிபதி என்பதாலும் சில நன்மைகளும் உண்டாகும்.
ஆரோக்கியம், குடும்பம்: உடல் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. தலை, கண், முதுகு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். குடும்ப நலம் சீராக இராது. கணவன் மனைவி உறவு நிலை ஒருநாள் போல் மறுநாளிராது. அக்கம்பக்கத்தாரால் பிரச்னைகள் உண்டாகும். தாய் நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். மக்களால் அனுகூலம் உண்டாகும்.

பொருளாதார நிலை: 19-12-2009 வரையிலும் குருபலம் இருப்பதால் பண வரவு அதிகரிக்கும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். சேமிப்பு கூடும். கடன் தொல்லை குறையும். அதன் பிறகு பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது.

நிலபுலங்கள்: 2010-ல் சொத்துக்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ பெறுவீர்கள்.

தொழில்: குரு பலம் இருப்பதால் 19-12-2009க்குள் தொழில் ரீதியாக முன்னேற்றம் காணலாம். அதன் பிறகு குரு 12-ஆமிடம் மாறுவதால் தொழிலில் விரும்பத்தகாத இடமாற்றமோ, நிலைமாற்றமோ ஏற்படும். புதிய துறைகளில் அதிகம் முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. காண்ட்ராக்ட் முறையில் தொழில் புரிபவர்கள் ஓரளவு வளர்ச்சி காண்பார்கள்.

மாணவர்களுக்கு: நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். வெளிநாடு சென்று படிக்க விரும்புபவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் கூடிவரும். சனி உங்கள் ஜன்ம ராசியைப் பார்ப்பதால் சோர்வை அகற்றிச் சுறுசுறுப்புடன் செயல்படுவது நல்லது.

மாதர்களுக்கு: பிரச்னைகள் அதிகரிக்கும். பக்குவமாகச் சமாளிப்பது அவசியமாகும்.

அதிர்ஷ்ட காலம்: 9-9-2009 முதல் 19-12-2009 வரை; 2011.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 9.

திசை: வடகிழக்கு, தெற்கு, வடமேற்கு.

தெய்வம்: செந்திலாண்டவர், தட்சிணாமூர்த்தி, பராசக்தி.

பரிகாரம்: சனி, ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி செய்வது நல்லது. 2-5-2010 முதல் குரு பிரீதி செய்வதும் அவசியமாகும்.

Source:?????

2009-09-10

உலகத்திலேயே மிகப்பெரிய Alarm மணிக்கூடு.


என்ன கந்தசாமி வந்துட்டாரா என்று புலம்புறீங்களா ?? இல்லை இல்லை

முன்னர் நான் பல்கலையில் படிக்கும் காலங்களில் விதம் விதமான Alarm வைத்து விட்டு தூங்குவதும் பின்னர் அறை நண்பர்கள் அதனை நிட்பாட்டுவதும். எங்கள் கழக வாழ்க்கையில் சாதாரணமான விஷயம் தான். எனது அறையில் கூடிய அளவு Alarm வைப்பது நான்தான். அதிகாலை 3மணி இல்லாட்டி 4 மணி என்று வைத்து எழும்பி படிப்பது வழமை.
இருந்தாலும் முதல் நாள் இரவு ஏற்படும் களைப்பு?? பிந்திய தூக்கம்?? போன்றவற்றால் எனது அறை நண்பர்களே தினமும் பாதிக்கப்படுவது.

இதனை நிவர்த்தி செய்ய இப்போது வழி இருகின்றது.

எப்படியா ?? அதுதான் இப்படி ???

எங்களை மாதிரி ஒரு சில நன்றே குறட்டை விட்டு மணித்தியால கணக்காக தூங்கும் நண்பர்கள் இதனால் கோவம் கொண்டாலும். தேவைப்படும் இடத்து அது தனது சேவையை செய்வதால் தூக்கத்தில் இருந்து எழும்பி சென்று வேலைகளில் ஈடுபட முடிகிறது.
எளிமையான அமைப்பை கொண்டதால் சுலபமாக நீங்கள் உறங்கும் கட்டிலில் பொருத்தி விடலாம்.



பார்த்தால் எதோ குண்டு சரி செய்து வைத்த மாதிரி இருந்தாலும் அது அவ்வாறு இல்லை.

PS1:- கட்டில் உங்களை எந்தகட்டத்திலும் தாங்கவல்லது என்பதை உறுதி செய்யவும் !!!

அதன் இயக்கத்தை பின்வரும் காணொளியில் கண்டு மகிழுங்கள்.

http://www.youtube.com/watch?v=kQ-l5PlDa-k

என்ன கொடுமை சரவணா இது???.!!!


PS2:பல பல Alarm என்னும் போது இப்பவும் ஞாபகம் வருவது எனது நண்பர் ஒருவர் தனது பீட சக மாணவிகளிடம் சொல்லி வைத்து தூங்குவார். அவர்கள் அதிகாலையில் எழுப்பி விடுவார்கள்.
நம்மளுக்கு அப்படி யாரும் உதவவில்லை :(

2009-09-04

கொள்ளையர்களின் அதிரடி அட்டகாசம்

நேற்று அதிகாலையில் நடந்த அதிரடி சம்பவம்.
நியூ ஜெர்சி ( New Jersey) எனப்படும் பிரதேசத்தில் நடைபெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் காட்சியறையில் கொள்ளையுடன் சம்பந்த பட்ட ஐவரை தேடும் பணியில் போலீசார் !!!



சம்பந்த பட்ட காட்சிகள்
1-http://www.youtube.com/watch?v=t-Wj2-3BrNg
2- http://abclocal.go.com/wpvi/story?section=news/take_action&id=6995567

Apple Store : http://store.apple.com/us

பிந்திக்கிடைத்த தகவல் :-
இந்த சம்பவத்தை அடுத்து சுவாமிகள் தங்கள் ஆச்சிரமத்தையும் பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவதற்காக அவசரம் அவசரமாக புற நாட்டில் இருந்து தளம் திரும்புகிறார்.

2009-09-01

நினைத்தாலே இனிக்கும்

நடந்தது இற்றைக்கு 14 ஆண்டுகளுக்கு முன்!!!

எனது கல்லூரி வாழ்க்கையில் செய்த மிகப்பெரும் குறும்பு என்றால் இதுதான் என்று சொல்லலாம். குறிப்பாக உயர்தரம் பயிலும் போது( சிலர் சாதரணதரம் படிக்கும் போது பாய்ந்து இருந்தால் - பிஞ்சில் பழுத்தவர்கள்) "இந்த கல்லூரியில்" (மட்டும் இல்லை எல்லா ஆண்கள் கல்லூரியிலும்) வழமையாக நடை பெறுவதுதான்.

அதுதான் வேறு ஒன்றும் இல்லை. "மதில் பாய்தல்"


சத்தியமா நான் இல்லை ; யாரோ பாய்கிறார்கள்

என்னை போன்ற 'அப்பாவிகளுக்கு' இது ஒரு புதுமை, ஒரு ஆசானின் பாடம் என்றால் காணும் ( Double period Boring ) பாய்வார்கள். ஒவ்வொரு நாளும் அவர்கள் பாய்வதை நானும் புதுமையாக பார்த்து ரசிப்பதும், அப்புறம் ஆசிரியர் வகுப்பில் கேட்கும் போது மிஞ்சி நிக்கும் சகோதரர்கள் அவர்களில் சிலரை மாட்டுவதும், சிலரை காப்பாத்துவதும் வழமையான ஒன்று.

இது எல்லாத்துக்கும் காரணம் அந்த ஆசிரியரின் படிப்பித்தல் பிழையா அல்லது பாடம் பிழையா அல்லது பாய்வோர் இக்கு ஏதாவது வேலை இருக்கிறதா ( தனிப்பட்ட மற்றும் day class)என்று எல்லாம் தலையை பிச்சு கொண்டு இருந்த எனக்கும் ஒரு ஆசை வந்து விட்டது.
எந்த காரணம் சரி வரும் என்று பார்த்தால் நமக்கு தனிப்பட்ட காரணம் என்றால்( பிடிபட்டால் )அம்மாவுக்கு தெரிவித்து போடுவார்கள், அப்புறம் அம்மா கேட்பா என்னடா என்று.

அதற்குள் ஒரு புலனாய்வு நடவடிக்கை ஏன் பாய்கிறார்கள் என்று? பிறகு தான் தெரிந்தது பாய்வோரில் பலர் கல்லூரிக்கு அண்மையில் இருந்த ஒரு தனியார் சினிமாவில் "நல்ல" படம் பார்ப்பதாக .
இவ்வாறு பாயும் நாளும் select பண்ணியாச்சு. அப்புறம் பாய்வோருடன் சேர்ந்து பாய்தல் வேண்டும். இல்லாட்டி நான் தனித்து போய் விடுவேன்.
எதோ பாடம் முடிஞ்சுது அப்புறம் என்ன ஒரே துணிவு . பாயும் போது யார் யார் பாய்ந்தார்கள் என்று கூட தெரியாது. ஒரு நல்ல சிரிப்பு என்ன வென்றால் எங்கள் வகுப்பு தலைவனும்(Monitor) சேர்ந்து பாய்ந்து விட்டாதால் எனக்கு என்னும் துணிவு.

அப்புறம் எங்கள் படை மெல்ல மெல்ல ஊர்ந்து செல்கிறது , கிடைக்கும் புலனாய்வு தகவல்களை கொண்டு ஏறத்தாள அரை மணி நேர ஊர்ந்த நடவடிக்கை அந்த தனியார் சினமாவை சென்றடைந்ததும் முடிவுக்கு வந்தது.(<500 m)

அப்புறம் என்ன நல்ல குஷியில் போய் இருந்தால் ( டிக்கட்டு 5/= ). அங்கே கவிழ்த்து போட்டாங்கள். நாங்கள் நினைத்து கொண்டு போன படி என்று எதுவும் 'புதுசு ' இல்லையாமே. என்றதும் எல்லாருக்கும் திக் என்று போயிட்டு. என்றாலும் போடுவதை பார்த்து விட்டு வருவதாக தீர்மானம். போட்டார்கள் ஒரு படம் படத்தின்ட பெயர் "நினைத்தாலே இனிக்கும்". அந்த நிமிஷமே எல்லாரும் தலை மறைவு, ஆனால் நான் அது ஒரு நல்ல படம் என்றதால் ( சூப்பர் ஸ்டார், kamal படமும் தான்) வந்த காரியம் வீண் போகவில்லை என்று பார்த்து விட்டு மீண்டும் கல்லூரி வந்தேன்.

வரும் போது கல்லூரி இல எங்கள் பௌதீகவியல் ஆசான் (பிரபல்யம் ஆனவர்) கேட்டார், டோய் டீச்சர் எப்படி படம். நான் சொன்னேன் நல்ல படம்.

அவர் சரி சக வகுப்பு மாணவர்கள் சரி எதிர்பார்த்த படமும் நான் பார்த்த படமும் வித்தியாசம் என்று யாருக்கும் தெரியாது . சரி விஷயம் எங்களுக்கவே இருக்கட்டும் என்றால் அடுத்த நாள் எல்லாமே public படுத்தி, கடி வாங்காத நாள் இல்லை. அப்புறம் என்ன அந்த படத்தின் பெயரில் ஒரு package create பண்ணி போட்டார்கள் ( வழமையான ஒன்று தானே )

அப்புறம் அண்மையில் அந்த கல்லூரி வீதியால் அந்த கல்லூரியில் படிப்பிக்கும் இணைந்த கணித ஆசான் உடன் ( இவரும் மிகவும் பிரபல்யம்) உந்துருளியில் செல்லும் போது அவ்வாறு பாய்ந்து ஊர்ந்து சென்ற மாணவர்களை வீதியில் சந்திக்க கிடைத்து.(இப்போ எல்லாம் டவுன் சென்று தான் பார்ப்பார்களாம்) அந்த ஆசானிடம் கேட்டேன். என்ன சார் இப்பவும் செய்யுரான்களே என்று அதுக்கு அவர் தந்த பதில் பிறகு பொடியன் வகுப்புக்கு தானே வரணும் என்றார்.
நல்ல வேளை நாங்க பாய்ந்ததை குரு காணவில்லை.. ( குரு தான் எனது வகுப்பு ஆசான்)
வாழ்க குரு. தப்பீட்டோம்ல!!!!
Related Posts Plugin for WordPress, Blogger...