2009-09-01

நினைத்தாலே இனிக்கும்

நடந்தது இற்றைக்கு 14 ஆண்டுகளுக்கு முன்!!!

எனது கல்லூரி வாழ்க்கையில் செய்த மிகப்பெரும் குறும்பு என்றால் இதுதான் என்று சொல்லலாம். குறிப்பாக உயர்தரம் பயிலும் போது( சிலர் சாதரணதரம் படிக்கும் போது பாய்ந்து இருந்தால் - பிஞ்சில் பழுத்தவர்கள்) "இந்த கல்லூரியில்" (மட்டும் இல்லை எல்லா ஆண்கள் கல்லூரியிலும்) வழமையாக நடை பெறுவதுதான்.

அதுதான் வேறு ஒன்றும் இல்லை. "மதில் பாய்தல்"


சத்தியமா நான் இல்லை ; யாரோ பாய்கிறார்கள்

என்னை போன்ற 'அப்பாவிகளுக்கு' இது ஒரு புதுமை, ஒரு ஆசானின் பாடம் என்றால் காணும் ( Double period Boring ) பாய்வார்கள். ஒவ்வொரு நாளும் அவர்கள் பாய்வதை நானும் புதுமையாக பார்த்து ரசிப்பதும், அப்புறம் ஆசிரியர் வகுப்பில் கேட்கும் போது மிஞ்சி நிக்கும் சகோதரர்கள் அவர்களில் சிலரை மாட்டுவதும், சிலரை காப்பாத்துவதும் வழமையான ஒன்று.

இது எல்லாத்துக்கும் காரணம் அந்த ஆசிரியரின் படிப்பித்தல் பிழையா அல்லது பாடம் பிழையா அல்லது பாய்வோர் இக்கு ஏதாவது வேலை இருக்கிறதா ( தனிப்பட்ட மற்றும் day class)என்று எல்லாம் தலையை பிச்சு கொண்டு இருந்த எனக்கும் ஒரு ஆசை வந்து விட்டது.
எந்த காரணம் சரி வரும் என்று பார்த்தால் நமக்கு தனிப்பட்ட காரணம் என்றால்( பிடிபட்டால் )அம்மாவுக்கு தெரிவித்து போடுவார்கள், அப்புறம் அம்மா கேட்பா என்னடா என்று.

அதற்குள் ஒரு புலனாய்வு நடவடிக்கை ஏன் பாய்கிறார்கள் என்று? பிறகு தான் தெரிந்தது பாய்வோரில் பலர் கல்லூரிக்கு அண்மையில் இருந்த ஒரு தனியார் சினிமாவில் "நல்ல" படம் பார்ப்பதாக .
இவ்வாறு பாயும் நாளும் select பண்ணியாச்சு. அப்புறம் பாய்வோருடன் சேர்ந்து பாய்தல் வேண்டும். இல்லாட்டி நான் தனித்து போய் விடுவேன்.
எதோ பாடம் முடிஞ்சுது அப்புறம் என்ன ஒரே துணிவு . பாயும் போது யார் யார் பாய்ந்தார்கள் என்று கூட தெரியாது. ஒரு நல்ல சிரிப்பு என்ன வென்றால் எங்கள் வகுப்பு தலைவனும்(Monitor) சேர்ந்து பாய்ந்து விட்டாதால் எனக்கு என்னும் துணிவு.

அப்புறம் எங்கள் படை மெல்ல மெல்ல ஊர்ந்து செல்கிறது , கிடைக்கும் புலனாய்வு தகவல்களை கொண்டு ஏறத்தாள அரை மணி நேர ஊர்ந்த நடவடிக்கை அந்த தனியார் சினமாவை சென்றடைந்ததும் முடிவுக்கு வந்தது.(<500 m)

அப்புறம் என்ன நல்ல குஷியில் போய் இருந்தால் ( டிக்கட்டு 5/= ). அங்கே கவிழ்த்து போட்டாங்கள். நாங்கள் நினைத்து கொண்டு போன படி என்று எதுவும் 'புதுசு ' இல்லையாமே. என்றதும் எல்லாருக்கும் திக் என்று போயிட்டு. என்றாலும் போடுவதை பார்த்து விட்டு வருவதாக தீர்மானம். போட்டார்கள் ஒரு படம் படத்தின்ட பெயர் "நினைத்தாலே இனிக்கும்". அந்த நிமிஷமே எல்லாரும் தலை மறைவு, ஆனால் நான் அது ஒரு நல்ல படம் என்றதால் ( சூப்பர் ஸ்டார், kamal படமும் தான்) வந்த காரியம் வீண் போகவில்லை என்று பார்த்து விட்டு மீண்டும் கல்லூரி வந்தேன்.

வரும் போது கல்லூரி இல எங்கள் பௌதீகவியல் ஆசான் (பிரபல்யம் ஆனவர்) கேட்டார், டோய் டீச்சர் எப்படி படம். நான் சொன்னேன் நல்ல படம்.

அவர் சரி சக வகுப்பு மாணவர்கள் சரி எதிர்பார்த்த படமும் நான் பார்த்த படமும் வித்தியாசம் என்று யாருக்கும் தெரியாது . சரி விஷயம் எங்களுக்கவே இருக்கட்டும் என்றால் அடுத்த நாள் எல்லாமே public படுத்தி, கடி வாங்காத நாள் இல்லை. அப்புறம் என்ன அந்த படத்தின் பெயரில் ஒரு package create பண்ணி போட்டார்கள் ( வழமையான ஒன்று தானே )

அப்புறம் அண்மையில் அந்த கல்லூரி வீதியால் அந்த கல்லூரியில் படிப்பிக்கும் இணைந்த கணித ஆசான் உடன் ( இவரும் மிகவும் பிரபல்யம்) உந்துருளியில் செல்லும் போது அவ்வாறு பாய்ந்து ஊர்ந்து சென்ற மாணவர்களை வீதியில் சந்திக்க கிடைத்து.(இப்போ எல்லாம் டவுன் சென்று தான் பார்ப்பார்களாம்) அந்த ஆசானிடம் கேட்டேன். என்ன சார் இப்பவும் செய்யுரான்களே என்று அதுக்கு அவர் தந்த பதில் பிறகு பொடியன் வகுப்புக்கு தானே வரணும் என்றார்.
நல்ல வேளை நாங்க பாய்ந்ததை குரு காணவில்லை.. ( குரு தான் எனது வகுப்பு ஆசான்)
வாழ்க குரு. தப்பீட்டோம்ல!!!!

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...