2009-09-17

பகிடிவதை ஒரு அனுபவம்- பாகம் ஒன்று

பலர் இதை பற்றி எழுதி இருந்ததை இன்று வாசிக்க கிடைத்தது. எனது அனுபவங்களையும் இங்கே தரலாம் என்று இருக்கின்றேன்.

பகிடிவதை என்பதை நான் ஏறத்தாள நான் ஆண்டு ஒன்பதில் இருக்கும் போது கேள்வி பட்டு இருகின்றேன்.மன்னிக்கவும் பார்த்தே இருக்கிறேன். அதுவும் தினமும் என்றே சொல்லலாம்.
நான் எனது இளமை பருவத்தில் யாழ் பல்கலைக்கழகம் முன்பாக உள்ள குமாரசாமி வீதியில் தான் ( ஏறத்தாள எட்டு ஆண்டுகள்) கழித்தேன்.
அந்த இடம் அமைதியானதும் ஆனால் பல்கலை மாணவர்கள் கூடுதலாக கூடும், குடியிருக்கும் இடமாகவே என்றும் இருக்கின்றது.
எனது அடுத்த வீட்டிலேயே நான்கு அக்கா மார் குடியிருந்ததால் ( வன்னி மாவட்டம்) எனக்கு தினமும் ஒரு பொழுது போக்காக இருந்து வந்தது இவர்கள் பட்ட கஷ்டங்களை கேட்டு அறிவதற்கு.
மாலையில் பல்கலை முடிந்து வரும் போதே முகத்தில் எதோ இழந்து வந்ததை போல வீடு வருவார்கள். எங்களுக்கு கிணறு பங்கு என்பதால் கிணற்றடியில் தான் எங்களின் கூட்டம்.
அவர்கள் தங்களுக்குஇடையில் பேசுவதையும், எங்களுடன் பேசுவதையும் வைத்தே பார்த்தால் எதோ கொடுமையான விஷயம் தான் நடக்கிறது போல இருக்கும் உண்மையும் தான் .
அந்த நால்வரில் ஒருத்தி பல்கலையே வேண்டாம் என்று விட்டு போட்டு போனது கூட எங்கள் எல்லாரையும் திக்கு முக்காட செய்தது. போன காரணம் அதே ஊரை சேர்ந்த மாணவன் சீனியர் என்பதாலும் இந்த பெண்ணின் அக்காவை காதல் கொண்டு தோல்வி உற்றதால் பழிவாங்கும் பொருட்டு இந்த பெண்ணை தோய்ச்சு துவைக்காதா மாதிரி திட்டுவதும் பேசுவதும், கண்ட கண்ட விதத்தில் கடிதம், கட்டுரை எழுதி தர சொல்லுவதும் அந்த அக்காவின் மனசை புண் படுத்தியதால் விட்டு சென்றதாக சொன்னாள்.
இது மட்டுமா இந்த GAQ வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்கள் துன்புறுத்த படுவதும் நான் கண்டதுகள்.

இவ்வாறு தினமும் காலத்தை ஒட்டி கொண்டு இருக்கும் போது தான் எனது பல்கலை பிரவேசம். அம்மாடி உயர்தரம் படிச்சு முடிச்ச நேரம் தான் அதே பல்கலையில் வரப்பிரகாஷ் அண்ணன் பிரச்சினை நடந்து கொண்டு இருந்தது. எங்கள் கல்லூரி ஆசான் மோகன் சார் அவர்களின் மருமகன் தான் அந்த அண்ணா. அதனால் மோகன் sirஅம்மாவை ஒரு முறை சந்தித்த போது சொல்லி பட்ட வேதனைகளை சொல்லி இருந்தார் . அதனால் சரி இதோட வீட்டில் சொல்லியாச்சு படிப்பு தேவை இல்லை என்று. நீண்ட காலம் போராடி ( அம்மாவுடனும் உறவினருடனும்), ஒரு பல்கலையில் படிச்சு பட்டம் பெறுவது நல்லது என்று அம்மாவுக்கு பலர் பரிந்து உரைத்து ஒரு மாதிரி பல்கலையும் வந்தாச்சு.

முதல் நாள் பயணம் கொழும்பில் இருந்து

அன்று என்னுடன் எங்கள் குடும்ப நண்பர்கள் ஒரு சிலருடன், பொறியியல் பீட சீனியர் ஒருவருடன் தான் பேராதனை வந்து சேர்ந்தேன். சஞ்சீவன் தான் ( பூனை ) என்னை புகையிரத நிலையத்தில் இருந்து கொண்டு போய் குருந்துவதையில் சேர்த்தது. அங்கு நானும் எனது சக பீட மாணவனும் முதல் சந்திப்பு. குருந்துவத்தை என்பதை சுருக்கி வதை முகாம் உள்ள பிரதேசம் என்றே சொல்லலாம். மன்னிக்கவும் இவ்வாறு சொன்னால் பலர் கோவம் கொள்ளலாம், இது என்னுடைய கருத்து.
நான் பல்கலை வந்த காலத்தில் ஆனையிறவு தாக்குதல் நடை பெற்றதால் எங்கள் சக பீட யாழ் மாணவர்கள் இல்லாததால் ஏறத்தாள ஒருமாதம் கோவில் மேளம் மாதிரி நான் எனது நணபன் செந்தூரன், மற்றும் ஈசன் இவர்கள் தான் எங்கள் சீனியர்களின் ராகிங் என்னும் பசிக்கு இரையாவது. வடிவேலு ஸ்டைல் இல சொன்னால் நாங்க ரொம்ப நல்லவங்க.

(எங்கள் வீட்டில் இருந்து )
முதல் நாள் குருந்துவத்தை கடையில்
இரவு ஆறு மணி சாப்பிடுவம் என்று போட்டு நண்பனும் நானும் கடையை நோக்கி செல்லும் போதே நன்றே மாட்டி கொண்டோம். நாங்கள் வேறு பீடம் என்று சொன்னாலும் நம்புவார் இல்லை. ஒரே நேரத்தில் தான் பொறியியல் பீட மாணவர்களும் வந்த காரணத்தால். காட்டுவதற்கு campus அட்டை கூட இல்லை. என்ன செய்யுறது. அனுமதி கடிதத்தின் போட்டோ பிரதிதான். என்னை சந்தித்த முதல் சீனியர் பெயர் சொல்வது சரி இல்லை. எனது அந்த போட்டோ பிரதியையே கிழித்து எறிந்து போட்டு அறைக்கு கொண்டு போய் செய்த அநியாயம் என்றால் சொல்ல முடியாது.


(பஸ்சில் செல்லும் போது )

இருட்டு அறைக்குள் நடந்த சம்பவங்கள் இன்றும் என்றும் என்னை ராகிங் மகிமைகள் இவைதானா கேவலம் என்று நன்றே உளற செய்கின்றன. என்னதான் செய்யலாம்.
இரண்டு மணி நேரம் அனுபவித்து விட்டு ஒரு மாதிரி அழுத மூஞ்சியோட கடையடிக்கு வந்தால் அடுத்த கூட்டம் இருக்கு இங்கே. ஏற்கனவே இந்துவின் மைந்தர்கள் அங்கெ வாங்கி வதங்கி கொண்டு இருக்கும் போது சேர்த்து நானும் இணைந்து கொண்டேன். இங்கையாவது பரவாய் இல்லை ., கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் ஏச்சு. என்று ஒரு மாதிரி சாப்பிட சரி இடம் தந்தார்கள்.,
சாப்பிடும் போது முதல் முறை ஆங்கிலத்தில் நான் எதோ சொன்னதிற்கு அந்த சீனியர் தந்த பேச்சை நான் இன்று வரை யாரிடமும் கேட்க வில்லை. ஒரு Non Stop என்றே சொல்லலாம்.
"ஆகா இவர்தானா அவரு எங்க கல்லூரியில் முந்தி சமய பிரசங்கம் செய்வாரு ? ஆகா மாப்பு நீங்க எப்புடி இப்புடி?? " இதை வடிவேலு அந்த காலத்தில் சொல்லி இருந்தால் கட்டாயம் நான் சொல்லி சிரிச்சு இருப்பேன் ( கடைசி எனது நண்பர்களிடமாவது)
ஒரு மாதிரி சாப்பிட்டு முடிய எல்லாரயும் அடுத்த கூட்டம் தங்கள் அறையை நோக்கி அழைத்து செல்கிறார்கள்.

Sarasavuyana
தொடரும் ......!!!!

பாகம் இரண்டில் ( அங்கு என்ன நடை பெற்றது, முதல் நாள் கம்பளை bus பயணம், முதல் நாள் என்ன கற்று கொண்டேன் என்பன வரும்)

&&&&& விளம்பரம் இப்போ .................&&&

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...