நம்முடைய வறு வல்களும் ; சிந்தனைகள் , மனதில செய்ய நினைத்தவை , செய்தவை ,நல்லதாக பார்த்து சுட்டவை ,சுடாமல் சொந்தமாய் தயாரிச்ச தலைப்புக்கள் என்று ஒரு மொக்கை போடும் இடம்
2009-09-26
சனிப்பெயர்ச்சி : பரிகாரம் செய்ய வேண்டியது யார்?
வாக்கிய பஞ்சாங்கப்படி சனிபகவான் வெள்ளி(25-09-2009) மாலை 3.27 மணிக்கு, சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். நவக்கிரகங்களில் ஒருவரான சனிபகவான், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை பெயர்ச்சியாவார். இவரே, மக்களின் ஆயுள் மற்றும் தொழிலை நிர்ணயம் செய்யும் பிரதான கிரகமாக இருக்கிறார். இவர் பெயர்ச்சியாகும் ராசிகளை பொறுத்து, ஒவ்வொருவரின் ஆயுளும், தொழிலும் மாற்றம் பெறும். சனிபகவான், அவருக்குரிய சனிக்கிழமையான இன்று பெயர்ச்சியாவது விசேஷமாகக் கருதப்படுகிறது. எண்கணிதப்படி சனிபகவானுக்குரிய எண் எட்டு ஆகும். இன்று 8ம் எண் ஆதிக்கம் உள்ள நாளாகும். மேலும், இன்று எட்டாம் திதியான அஷ்டமியும் இருக்கிறது. சனீஸ்வரர், அவருக்கு உகந்த நாளில் பெயர்ச்சியாவதால், அவ்வளவாக தீய பலன் இருக்காது என கணிக்கப் பட்டுள்ளது.
பாதகமான ராசிகள்
சிம்மம், கன்னி, துலாம் ஆகிய ராசிக்காரர்களுக்கு இது ஏழரைச்சனி காலமாகும். மிதுன ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டமம், தனுசு ராசிக்காரர்களுக்கு ஜீவனச்சனி, கும்ப ராசிக்காரர்களுக்கு அஷ்டமச்சனி, மீன ராசிக்காரர்களுக்கு கண்டகச்சனி ஆகிய நிலை வருகிறது. எனவே, இந்த ராசியில் பிறந்தோரும், இந்த ராசிகளை லக்னமாக உள்ளவர்களும் சனிபகவானுக்கு பரிகாரம் செய்து கொள்வது நல்லது. மற்ற ராசியினருக்கு இந்த பெயர்ச்சி காலம் நற்பலன்களைத் தரும்.
முழுமையான சனி பெயர்ச்சி பலன்கள் 2009 :
http://svpriyan.blogspot.com/2009/09/2009-sept-2011.html
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment