கொழும்பில் ஓடும் 155 பஸ் வண்டியால் பாதிக்கப்பட்டோர் பலர் .. அதில் பயணம் செய்த ஒருவன் செய்த காரியத்தால், பொலிசு விசாரணை வழக்காக வந்து நீதிமன்றில் அந்த இளைஞன் நிறுத்தப்படுகிறான்.
பராசக்தி படத்தில் சிவாஜி கதைத்த போன்றதொரு கற்பனை ..
( ஒரு புது முயற்சி .. பிழை என்றால் திருத்தி விடவும் )
நீதிபதி :- உன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களுக்கு என்ன பதில் சொல்ல போகிறாய் :
குற்றவாளி :-
இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது. புதுமையான பல வழக்குகளை கண்டிருக்கிறது.
ஆனால் இந்த வழக்கு ஒன்றும் விசித்திரமானது அல்ல.
வழக்காட வந்திருக்கும் நானும் ஒன்றும் புதுமையானவனல்ல.
வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாக பேருந்தில் பயணிக்கும் ஜீவன்களில் நானும் ஒருவன்...
ஒட்டுனரை கியர் தடியால் தாக்கினேன்..
கண்டக்டரையும் கண்மூடித்தனமாக தாக்கினேன்..
குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றேன் இப்படியெல்லாம்..
நீங்கள் எதிபார்ப்பீர்கள் நான் இவற்றையெல்லாம் மறுக்கப் போகின்றேன் என்று....
இல்லை நிச்சயமாக இல்லை...
தாக்கினேன் ஏன்..
அவன் வண்டியை ஓட்டியதற்காகவா இல்லை..உருட்டியதற்காக............
நானே பாதிக்கப்பட்டேன்.. நேரடியாக பாதிக்கப்பட்டேன்....
என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நிடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும்.
கேளுங்கள் சொல்கிறேன் :
யாழ்ப்பாணத்திலே பிறந்தேன் நான்.
பிறக்க ஒரு தேசம் ,
பிழைக்க ஒரு தேசம் .
இது தமிழனின் விதி.
ஆவணி திங்கள்,
வாரத்தின் முதல் நாள்
அதுவும் திங்கள்,
காலை எட்டு மணி
அம்மா செய்த புட்டை கூட
அரைகுறையாக விழுங்கி கொண்டு
வெளுத்து வைச்ச A/L shirt இக்கு
கறுப்பாக ஒரு ஜீன்சு, ஒரு tie
கையில் எனது persoanal file
எடுத்த வீச்சுக்கு அப்பாவுக்கு கூட
போட்டு வாறேன் என்று சொல்லாமல்
வெள்ளவத்தை bus தரிப்புக்கு
ஓட்டோடி வந்தேன் interview போக,
நான் போக வேண்டிய ஊர்களை சொன்னபடி
வசந்தமாய் வந்தது பஸ் வண்டி 155,
ஓடோடி போய் ஏறினேன்
முன் சீட்டிலும் அமர்ந்தேன் ..
வெள்ளவத்தை கடக்க அரை மணி நேரம் ,
பம்பலபிட்டி கடக்க அரை மணி நேரம்...
அப்போ மருதானை தான் எப்போவரும் ?
நான் interview போவேனா என்று ஏக்கம்,
பக்கத்து seat Aunty யிடம் இடைக்கிடை கேட்டேன்
வரும் வரும் விரைவில் வரும் என்ற பதில் தந்தாள்!
Interview கேள்விகளை வாசித்தபடி
அவன் போட்ட தமிழ் டப்பான் கூத்தை கேட்டபடி
ஒன்று அரை மணி நேரம் கழித்து அடைந்தேன் நகர மண்டபத்தை,
யாருமே இல்லை அழைத்து செல்ல ..
இருந்தாலும் conductor இன் அறை கூவல் தொடர்கிறது ..
அங்கே நின்ற மாட்டை பார்த்தா??
மாடு கூட அவனது அறை கூவலை கேட்பதகா தெரிய வில்லை
அறைகூவல் அவன் தொழில்
ஒவ்வொரு இடமும் பல முறை கூவி செல்வது அவன் கடமை
அந்த கூவலுக்கு தான் சம்பளம் அவனுக்கு
அதுக்காக யாருமே இல்லாத இடத்தில் கூவுவதா ??
இப்படியே போனால் எப்போதான் நான் மருதானை போவது
இது என்னோடு நிண்டு போகட்டும் என்று முடிவெடுத்தேன்!!
உனக்கேன் இவ்வளவு அக்கறை,
உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை,
என்று கேட்பீர்கள்.
நானே நேரடியாக பாதிக்கப்பட்டேன்.
interview நேரம் முடிஞ்சு போச்சு ..!!
வேலையும் போச்சு!!!
வாழ விட்டார்களா இந்த மன்னனை,
இது சுயநலம் என்பீர்கள்
இல்லவே இல்லை என் சுயநலம் பொதுநலம் கலந்திருக்கிறது.
ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் – அதைப் போல.
எழுந்தேன் ஆசனத்தை விட்டு,
புடுங்கி எடுத்தேன் கியர் தடியை
அடித்தேன் ட்ரிவரை
அவன் அப்பி யனவா சொல்லும் வரை அடித்தேன்
ஓடி வந்த கண்டக்டர் ஐ மீது பாய்ந்து பாய்ந்து அடித்தேன் ..
அவன் மணி அடிக்கும் மட்டும்!!
இது செய்ய தூண்டியது யார் குற்றம் .. ??
விதியின் குற்றமா?
அல்லது விதியின் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் 155 பஸ் ஓனர்களின் குற்றமா?
டிக்கெட் போடாமல் பணம் பறிக்கும் இந்த பஸ் கொள்ளைக் கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்?
மகிந்தவின் குற்றமா?
அல்லது
பசிலின் குற்றமா ??
அல்லது
பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைக்கும் அரசாங்கத்தின் குற்றமா?
நான் மட்டும் நினைத்து இருந்தால்
Toyota Corrola வாங்கி ஓடி இருப்பேன்,
இல்லவே இல்லை நானுமொரு பொது மகன்
அதனால் தான் பொது மக்கள் போல்
பயணம் செய்ய முயற்சித்தேன்!!
விட்டார்களா இல்லை ..!!!
பாருங்கள் என் நிலபரத்தை,
இன்று மாவட்ட நீதிமன்றில்
குற்றவாளியாக நிக்குறேன் ..
சொல்லுங்கள் இப்போது உங்கள் தீர்ப்பை
நான் செய்தது தவறா சரியா
என் வாதத்தை ஆராயுங்கள்
வாழ விடுங்கள் என்னை
என்னை மட்டுமா
எத்தனை பேர்
155 bus ஆல் பாதிக்கப்பட்டார்கள்
எல்லாருக்கும் ஒரு தீர்ப்பு தாருங்கள்
நீதிபதி தீர்ப்பில்: 155 பஸ் ஓனர்களின் நடவடிக்கை தான் இந்த மாதிரி இளைஞர்களை உருவாக்கியது .. இதனால் இந்த பஸ் எங்கேயாவது தரிப்பில் இரண்டு நிமிடத்துக்கு மேல் நின்றால் உடனடியாக அயலில் உள்ள பொலிசு இக்கு அறியப்படுத்தவும் என்று சொல்வதோடு .. இந்த இளைஞனுக்கு இந்த சம்பவத்தால் எந்த வேலையை இழந்தானோ அதே இடத்தில மீண்டும் interview வைத்து தகுதியானவன் ஆயின் வேலைக்கு எடுக்க உத்தரவிடுகிறேன் ""
காலப்போக்கில் (2012): 155 நம்பர் பஸ் ஆனது 138 நம்பர் பஸ்சிலும் வேகமாக ஓடியது ...
7 comments:
ஹா... ஹா...
ரசித்தேன்.
ha ha ha
நன்றி ஆதிரை
நானே நேரடியாகே பாதிக்கப்பட்டேன் ..ஹா ஹா!!!
நன்றி குரு !!
நான் அடிக்கடி 155ல் பயணிப்பதில்லை ஆனாலும் பாதிக்கப்பட்டவன். 138 ரூ ட்ரைவரை 155 ஓடவைத்தால் சிலவேளைகளில் பஸ்கள் வேகமாக ஓடும்.
நன்றி வந்தி உங்கள் வருகைக்கு ..
அப்படி செய்தாலும் ஒரு வாரத்துக்க இவங்கள் மாத்தி போடுவாங்கள் ..
அது 155 இன் பரம்பரை யா பஸ் வண்டி ஓனர்கள், டிரைவர் குணம் ha ha..
காதலர்களுக்கு , வேலை இல்லாதவர்களுக்கு ,,, நேரத்தை போக்காட்ட உதவும் பஸ்களில் இதுவும் ஒன்று .( 104, 144, 167,154,102) என்னும்சில :(
நன்றி நண்பா இந்த கழக்துக்கு உம் பங்களிப்பினை தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றோம்.
155 வேகப்படுத்தும்வரை தொடர்வோம்.
நன்றி நண்பா உங்கள் பங்களிப்பு இக்கழகத்துக்கு உறுதுனண.
155 வேகமாகும்வரை தொடருவோம்.
Post a Comment