மலரும் புத்தாண்டில் வாழ்க்கையில் அனுபவித்த மனக் கவலைகள், கஷ்டங்கள் யாவும் நீங்கி இன்பம் பிறக்க வேண்டும் :)
புத்தாண்டில் பார்த்தவை :
பொது நடை முறையில் :
இனிய புத்தாண்டில், தமிழர் வாழும் பிரதேசங்களில் பெரும்பாலும் கடைகள் பூட்டு. வீடுகளில் குடும்பமாக தங்கி இருக்காமல் வேலை நிமித்தம், அல்லது தொழில் நிமித்தம் வந்து கடைச்சாப்பாட்டை நம்பி இருப்போர் இக்கு பட்டினி நாள் ;
பல்கலையில் படித்தால் அங்கே கோவில் இருந்தால் அங்கே தஞ்சம் , இல்லாட்டி எங்கட கொழும்பு பிள்ளையார் அவருக்கு பக்கத்தில இருக்கிற கடை எப்புடியும் மத்தியானம் மட்டும் திறந்து வைச்சு இருப்பாங்கள்.. backup எடுத்து கொண்டு போனால் சரி.
வீட்டில் :
சீரியல் பார்க்கும் அக்கா தங்கை அம்மா அம்மாம்மா மற்றும் மாமி மார்களுக்கு தலையிடி நாள் :
- வீட்டுக்கு வரும் விருந்தினருடன் உரையாடுவதால் அன்றைய ஒளி பரப்பை பார்க்க முடியாது போகல்.
- விருந்தினர் வீட்டுக்கு போவதாலும் ( சில வேலைகளில் அங்கே போய் , ஒரு கூட்டாக பார்க்கலாம் ).
- வீட்டில் கணவன் பிள்ளைகள் எல்லாரும் நிற்பதால் அவர்கள் விருப்பப்படியே தொலைக்காட்சி இயங்கும். அதனால் நாள் முழுக்க மூஞ்சியை தொங்க போட்டு கொண்டு இருத்தல்.
அவற்றுள் பார்க்க கூடியவை :
அதிகாலையில் ஒளிபரப்பபடும் இசைகச்சேரி , எதாவது சுவையான விவாத அரங்கு, கொமெடி நிகழ்ச்சிகள். சில பழைய திரைப்படங்கள்
சகிக்க முடியாதவை:
- 'தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முதலாக திரைக்கு வந்து சில மாதங்களே ஆன (வந்த முதல் நாளே காணாமல் போன! படங்கள் போட்டால்
- தமிழே தெரியாத நடிகைகளின் பேட்டிகளையும் ( அதுவும் நெத்தியில் நிக்கும்முடியை 100 தரம் இழுத்து இழுத்து பேட்டி குடுக்கும் ) ..
- நிகழ்ச்சிகளுக்கு இடையில் போடப்படும் விளம்பர ...இடை வேளை.
தைப்பொங்கல் வரும் போது "தை"யைக் குறிக்கும் பாடல்களும் நினைப்புக்கு வரும். எனக்கு விருப்பமான பாட்டு இதுதான். மற்றைய பாடல்கள் தை என்று தொடங்கினாலும் உள்ளே காதல் ரசம் கொட்டும் விதத்தில் அமைந்து இருக்கும். உதாரணமாக பூப்புக்கும் மாதம் தை மதம் , மஜா படத்தில் வரும் தை மாதம்...
மறக்காமல் பட்டி பொங்கல் பற்றியும் சொல்ல வேண்டும். உழவு தொழிலுக்கு
உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கும் "மரியாதை' செய்யும் விழாவாக
"மாட்டு பொங்கல்' அல்லது "பட்டி பொங்கல்' இருக்கின்றது. ஒரு காலத்தில் மாடுகளுடன் வாழ்ந்தனான்.. இப்போது இல்லை .. கவலை தான்..:)
1 comment:
Nice one Priyan. keep it UP!.
Post a Comment