2010-09-08

நடிகர் அமரர் முரளி அவர்களுக்கு எனது கண்ணீர்அஞ்சலிகள்

இன்று மாரடைப்பால் அகால மரணமான தமிழ் நடிகர், பலருக்கும் பிடித்த நடிகர், காதல் சோகம் என்றால் எப்படி இருக்கும் அதன் வலியை உணர்த்தும் வகையில் பல படங்களில் நடித்து , பலரின் மனதில் இடம்பிடித்த நடிகர் அவர்களுக்கு அடியேனின் ஆழ்ந்த அனுதாபங்கள். நானும் ஒரு விதத்தில் ரசிகன் தான்.
காதலில் தோல்வி என்று எதுவுமில்லை, ஒரு இரசிகன் அவ்வளவுதான்.
காதல் வலி, ஒரு தலைக்காதல் வலி, இது எல்லாம் பற்றி தெட்ட தெளிவாய் விளக்கிய நடிகர். அதனால் தான் ரசிகன். இந்த காதல் எல்லாம் வேணாமப்பா .. என்று எனக்கு உணர்த்தியதால் ரசிகன்.
நடித்த முதல் படமே பூவிலங்கு . நல்ல கிட்டான படம்.


எனக்கு பிடித்த படங்கள்

  • பொற்காலம்
  • பகல் நிலவு
  • ரோஜா மலரே
  • ஆனந்தம்
  • சமுத்திரம்
  • காலமெல்லாம் காதல் வாழ்க
  • இதயம்
  • காதலுடன்
  • சுந்தரா டிராவல்ஸ்
  • உன்னுடன்
  • பூவிலங்கு
பகல் நிலவு படத்தில் எல்லாமே நல்ல பாடல்கள். இருந்தாலும் இந்த பாட்டில் உள்ள வரிகள் கொஞ்சம், இன்னும் பத்து வரிகளை பாடலாசிரியர் எழுதி இருக்கலாம் என்று எனக்கு ஒவ்வொரு முறையும் பாடல் கேட்கும் போது தோன்றும். உங்களுக்கும் அப்படி இருக்கும் என்று நினைக்கின்றேன். அவ்வளவு நல்லதொரு மெட்டு. வாழ்க இசைஞானி . குரலுக்கு சொந்தக்காரர்கள் ஜெயச்சந்திரன் , சுசீலா!!!

பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா
தோளிரண்டில் இரு பூங்கொடி
என் சொந்தம் எல்லாம் இது தானடி
பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா

பூவிதழ் போல முல்லை என் பிள்ளை
புன்னகை செய்தால் கண்படும்
கண்மணி பிள்ளை கொஞ்சமும் வாட
கண்ட என் நெஞ்சம் புண்படும்
அன்னை தந்தை யாவும் அண்ணன் தானடி
அன்பு கொண்டு வாழும் சொந்தம் தானடி
நூறு நூறு ஜென்மம் கூடி நின்று வாழும்
வரவும் வேண்டி தினமும் தவமிருக்கும்


பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா
தோளிரண்டில் இரு பூங்கொடி
என் சொந்தம் எல்லாம் இது தானடி
பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா





2010-09-03

தொடங்குகிறது பல்கலை விரிவுரையாளர்கள் வேலை நிறுத்தம்

பெரும்பாலும் யாவரும் அறிந்த, தற்போது அரசாங்கத்துக்கு தலையிடி தந்து கொண்டு இருக்கின்ற , விரிவுரையாளர்கள் சம்பள பிரச்சினை / சக பிரச்சனைகள் , இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்க இருகின்றார்கள் .

இது தொடர்பான முன்னைய தொகுப்பு : http://svpriyan.blogspot.com/2010/07/blog-post_28.html

எதிவரும் செவ்வாய் 7-09-2010, முதல் பல்கலை விரிவுரையாளர்கள் வகிக்கும் பதவிகளை , இராஜினமா செய்வார்கள். இதனடிப்படையில், யாரும் விரிவுரைகள் எடுக்க முடியாது, உயர்தர வினாத்தாள்கள் மதீப்பீடு நிறுத்தப்படும், போன்ற பல நடவடிக்கைகள் மூலம், அரசாங்கத்தை திணறடிக்க இருக்கின்றனர்.
இது பற்றி FUTA, வெளியீட்டுள்ள செய்தியறிக்கையில் ,





என்ன இருந்தாலும், எதிர்கால கல்விச்சமூகத்தை உருவாக்கும் இந்த விரிவுரையாளர்களுக்கு கட்டாயம் சம்பளம் அதிகரிக்க வேண்டியது , அரசாங்கத்தின் கடமையே!!!!




2010-09-02

என் இதயத்தை திருடிய " இதயத்தை திருடாதே " பாடல்கள்

வேலை செய்யும் இடத்தில் சகோதர மொழி விரிவுரையாளர் பல தடவை கேட்டும் அவரது வீட்டுக்கு செல்ல முயற்சிக்கும் போதெல்லாம் தடைகள் எதாவது வந்து அந்த குறுகிய பயணத்தை செய்ய முடியாமல் பல முறை கைவிட்டு இருந்தேன். கடைசியாக நேற்று மாலை அந்த பயணத்தை மேற்கொண்டு அவர் வசிக்கும் ஊருக்கு சென்று வந்தேன்.

பாதைகள் தெரியாத காரணத்தால் உதவியாளரும் நானுமாய் சென்றோம்.
வழமை போல பாட்டு பெட்டி தனது வேலையை ஆரம்பித்தது.
மலைகளுக்கு இடையில் செல்வதால், எப் எம் அலைவரிசைகளின் ஒலிபரப்பை தெளிவாக கேட்க முடியாது. இதனால் அண்மையில் எனக்கு ஒரு நண்பர் ( நண்பியாகவும் இருக்கலாம்), தந்த இறுவெட்டுகள் தான் போகும் போதும் வரும் போதும் எங்கட பாட்டு பெட்டியை இயங்க வைத்தது.

வீட்டில் இருந்து வெளிக்கிடும் போது சாரதி, சார் இந்தாங்கோ எந்திரன் பாடல்கள் சீடி , என்று தூக்கி தந்தார். வாகனத்தில் முதலில் அதுதான் கேட்கிறது. பிறகுதான் எதுவென்றாலும். நம்ம சாரதி நிலபரத்தை யோசிச்சு பாருங்க.. :(




பிறகு , ஏறத்தாழ ஒரு மணித்தியாலம் போன பின்னர், அன்பளிப்பாக வந்த சீடிக்களை பார்த்தால் , அதில் எல்லாமே ஓடியோ சீடிகள் . அதுவும் எனக்கு பிடித்த இதயத்தை திருடாதே பட பாட்டு சீடியும் கிடந்தது .

உடனடியாகவே ஒரு படப்பாட்டுகள் நிகழ்ச்சி மாதிரி அந்த படத்தில் உள்ள எல்லா பாடல்களையும் கேட்டு இரசித்தேன். ஒரு படத்தில் எல்லா பாடல்களையும் கேட்டு இரசிக்க கூடிய மாதிரி சில படங்களையே சொல்லலாம். அந்த வரிசையில் இந்த படமும் ஒன்று.

கீதாஞ்சலி என்ற பெயரில் தெலுங்கில் சூப்பர் கிட் இயக்குனர் மணிரத்தினம் 1989 இல் இசைஞானியின் இசையில் இயக்கிய படம் தான் தமிழில் இதயத்தை திருடாதே என்று வெளிவந்தது.
நாகர்ஜுன் , கிரிஜா ஷெட்டர் நடித்து , நூறு நாட்களுக்கு மேல் ஓடி சூப்பர் கிட் வெற்றியை தந்த படம் தான் இது. அதனை பாடல்களும் சூப்பர் கிட்.
நல்ல கதை, ஒருக்கா பாருங்க. படத்தை பலதடவை பார்த்துள்ளேன் .

இந்த படத்தில் உள்ள பாடல்கள்

ஆத்தாடி அம்மாடி பாடல்

சித்ராவின் இனிமையான குரலுக்கு இந்த பாடலும் சான்று . சின்னக்குயில் நீங்க தான்

ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டுத்தான்
கூத்தாட தூறல்கள் நீர்விட்டுத்தான்
ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டுத்தான்
கூத்தாட தூறல்கள் நீர்விட்டுத்தான்
உருகுதோ... மருகுதோ...
குழந்தை மனமும் குறும்புத்தனமும் இனிமையும்
கொடியிலே... அரும்புதான்...
குளிரும் மழையில் நனையும் பொழுது
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே
ஏதோதோ வந்தாச்சோ எண்ணத்திலே
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே ஹே
ஏதோதோ வந்தாச்சோ எண்ணத்திலே



வானமும்... வையமும்...
கரங்களை இணைப்பதே மழையில்தான்
செடிகளும்... கொடிகளும்...
ஈரமாய் இருப்பதே அழகுதான்
மழையின் சாரலும் கிள்ளாமல் கிள்ளவும்
அழகும் ஆசையும் ஆடாமல் ஆடவும்
துள்ளுகின்ற உள்ளமென்ன
தத்தளிக்கும் மேனியென்ன
வஞ்சியெந்தன் கண்கள் கண்ட
தேவலோகம் பூமிதான்

(ஆத்தாடி)

என்னவோ... எண்ணியே...





இளையவள் இதயமே ததும்புதா
சிறுசிறு... மழைத்துளி...
சிதறிட சபலம்தான் அரும்புதா
வானதேவனே சொல்லாமல் செய்திட
வாயுதேவனே முத்தாட வந்திட
நீறு பூத்த கூந்தலோடு ஊதக்காத்து தழுவும்போது
துள்ளும் பெண்ணின் உள்ளம் நூறு
கவிதை சொல்லும் ஓஹொஹோ

(ஆத்தாடி)
ப்ரியா.. ப்ரியா

எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாடல் - எங்கு பாடினாலும் நின்று கேட்டு போட்டு போறது .அப்படி ஆசை.. ஏன் தெரியுமா.. நானும் ப்ரியா தானே ..:)
மனோ, சித்ரா நீங்க பல்லாண்டு காலம் வாழ்க.

ஒ ப்ரியா ப்ரியா

என் ப்ரியா ப்ரியா
ஏழை காதல் மாறுமோ

இருளும் ஒளியும் சேருமோ
நீயோர் ஓரம் நான் ஓரோரம்
கானல் நீரால் தாகம் தீராது

ஒ ப்ரியா ப்ரியா

உன் ப்ரியா ப்ரியா
இணைந்திடாது போவதோ

வானம் பூமி ஆவதோ
காலம் சிறிது காதல் நமது
தேவன் நீதான் போனால் விடாது

தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே
வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி

அன்பு கொண்ட கண்களும்

ஆசை கொண்ட நெஞ்சமும்
ஆணை இட்டு மாறுமோ பெண்மை தாங்குமோ
ராஜ மங்கை கண்களே

என்றும் என்னை மொய்ப்பதோ
வாடும் எழை இங்கு ஓர் பாவி அல்லவோ
எதனாலும் ஒரு நாளும் மறையாது ப்ரேமையும்
எரித்தாலும் மரித்தாலும் விலகாத பாசமோ
கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ
காதல் என்ன காட்றிலே குலைந்து போகும் மேகமோ
அம்மாடி நான் ஏங்கவோ ஓ நீ வா வா







ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா

காளிதாசன் ஏடுகள்

கண்ணன் ராச லீலைகள்
பருவ மோகம் தந்தது பாவம் அல்லவே
ஷாஜஹானின் காதலி

தாஜ்மஹால் பூங்கிளி
பாசம் வைத்த பாவம்தான் சாவும் வந்தது
இறந்தாலே இறவாது விளைகின்ற ப்ரேமையே
அடி நீயே பலியாக வருகின்ற பெண்மையே
விழியில் பூக்கும் நேசமாய் புனிதமான பந்தமாய்
பேசும் இந்த பாசமே இன்று வெட்றி கொள்ளுமே
இளம் கன்னி உன்னுடன் கூட வா வா


ஒ ப்ரியா ப்ரியா
என் ப்ரியா ப்ரியா
ஒ ப்ரியா ப்ரியா
உன் ப்ரியா ப்ரியா

ஏக்கம் என்ன பைங்கிளி என்னை வந்து சேரடி
நெஞ்சிரண்டு நாளும் பாட காவல் தாண்டி பூவை இங்காட
காதல் கீர்த்தனம் காணும் மண்கலம்
ப்ரேமை நாடகம் பெண்மை ஆடிடும்


பாப்பா லாலி

மனோவின் மற்றுமொரு இனிமையான குரல்






காவியம்
பாடவா தென்றலே

மனோவின் குரலில் இனிமையான பாடல்

காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புரியாத புதிர்தான் எதிர்காலமோ
பாடும் நீலப் பூங்குயில்
மௌனமான வேளையில்
காவியம் பாடவா தென்றலே
காவியம் பாடவா தென்றலே

விளைந்ததோர் வசந்தமே
புதுப்புனல் பொழிந்திட
மனத்திலோர் நிராசையே
இருட்டிலே மயங்கிட
வாழ்கின்ற நாட்களே
சோகங்கள் எனபதை
கண்ணீரில் தீட்டினேன்
கேளுங்கள் என்கதை
கலைந்து போகும் கானல் நீரிது

காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புரியாத புதிர்தான் எதிர்காலமோ



புலர்ந்ததோ பொழுதிதுவோ
புள்ளினத்தின் மகோத்ஸவம்
இவை மொழி இசைத்ததும்
சுரங்களின் மனோகரம்
புதுப் பிரபஞ்சமே
மலர்ந்த நேரமே
அம்மாடி சொர்கம்தான்
முன்னாடி வந்ததோ
கசந்து போன காட்சி இல்லையே

காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புரியாத புதிர்தான் எதிர்காலமோ
காவியம் பாடவா தென்றலே





ஓம்
நமக



காட்டுக்குள்ளே




2010-08-05

எந்திரன் பற்றிய சிறு குறிப்பும், எந்திரன் பாடல் வரிகளும்

எந்திரன் பாடல்கள் சூப்பர் கிட் அடைந்து இருந்தாலும், பலர் பாடல்வரிகளை தேடி அலையாமல் இருக்க.. எந்திரன் பாடல்களின் வரிகளை இங்கே தருகின்றேன்.
HOT UPDATE: 
எந்திரன் திரை விமர்சனம் 30-09-2010


 
அதற்கு முன்னர் எந்திரன் பற்றிய சிறு குறிப்பு

நடிப்பு : ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், டேனி, சந்தானம், கருணாஸ்.
சவுண்ட் மிக்சிங் : ரசூல் பூக்குட்டி
இசை : ஏ.ஆர்.ரகுமான்
எடிட்டிங் : அந்தோனி
ஒளிப்பதிவு : ஆர்.ரத்னவேலு
பாடல்கள் : வைரமுத்து, பா.விஜய்
வசனம் : சுஜாதா, பாலகுமாரன்
எழுத்து - இயக்கம் : ஷங்கர்
தயாரிப்பு : சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன்
முதல் நாள் ஷூட்டிங் : 15 Feb 2008
கடைசி நாள் ஷூட்டிங் : 7 July 2010
மொத்த நாட்கள் : 873 நாட்கள்
பாடல் வெளியீடு : jul 31 ௨0௧0
படம் வெளியீடு : sept 3rd 2010.

1.பிரபல ஹாலிவுட் ஸ்டேன் விஸ்டம் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட முதல் இந்திய படம் எந்திரன்!
2.எந்திரன் படத்தில் மொத்தம் 22 காட்சிகள் அனிமேஷன் செய்யப்பட்டுள்ளது.
3.எந்திரன் படத்தின் டெக்னிஷியங்களை தேர்ந்தெடுக்க ஒன்றை வருடம் எடுத்துக் கொண்டார் ஷங்கர்!
4.எந்திரன் படத்தில் 200 சிஜி ஷாட்கள் எடுக்கப்பட்டுள்ளன.
5.எந்திரன் படத்திற்கு மறைந்த எழுத்தாளர் சுஜாதா வசனம் எழுதியுள்ளார்.
6.பாடத்தின் பாடல் காட்சிகள் இதுவரை யாரும் படம் பிடிக்காத நாடுகளான பிரேசில், ஆஸ்திரியா, பெரு போன்ற நாடுகளில் படமாக்கப்பட்டது.
7.ஆஸ்கார் நாயகன் ரசூல் பூக்குட்டி சவுண்ட் டிரக் எடிட்டிங் செய்துள்ளார்.
8.எந்திரன் படம் சுமார் 873 நாட்களில் முடிக்கப்பட்டது.
9.படத்தின் ஆடியோ வெளியீட்டு உரிமையை திங் மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.
10.‘புதிய மனிதா’ பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஏ.ஆர்.ரகுமான், ஏ.ஆர். ரகுமான்மகள் கதீஜா இணைந்து பாடியுள்ளனர்.
11.இந்தப் படத்தில் முதல்முறையாக கிளிமஞ்சாரோ என்ற பழங்குடியின பாட்டு இடம்பெற்றிருக்கிறது. எந்திரத்துக்கு காதல் வந்தால் எப்படி இருக்கும் என்பதற்கு டியூன் அமைத்து கலக்கியுள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.
12. 'எந்திரன்', இந்தியில் 'ரோபோ' என்ற பெயரில் ரிலீசாகிறது

1)

இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ
பாடியவர்கள்: AR ரஹ்மான், Kash n' Krissy
வரிகள்: கார்க்கி



You want to seal my kiss
Boy You can't touch this
Everybody Hypnotic Hypnotic
Super Sonic
Super star can't can't can't get this (2)

இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ
முதல் முறை காதல் அழைக்குதோ

பூஜ்ஜியம் ஒன்றோடு
பூவாசம் இன்றோடு
மின்மீன்கள் விண்ணோடு
மின்னல்கள் கண்ணோடு

கூகுள்கள் காணாத
தேடல்கள் என்னோடு
காலங்கள் காணா காதல்
பெண் பூவே உன்னோடு

iRobo உன் காதில்
ஐ லவ் யூ சொல்லட்டா(2)
I am a super girl
உன் காதல் rapper girl

என்னுள்ளே எண்ணெல்லாம்
நீதானே நீதானே
உன் நீலக் கண்ணோரம்
மின்சாரம் பறிப்பேன்
என் நீலப் பல்லாலே
உன்னோடு சிரிப்பேன்
என் இஞ்சின் நெஞ்சோடு
உன் நெஞ்சை அணைப்பேன்
நீ தூங்கும் நேரத்தில்
நான் உன்னை அணைப்பேன்
என்னாளும் எப்போதும்
உன் கையில் பொம்மையாவேன்

Watch me robot shake it
I know you want to break it
தொட்டு பேசும் போதும்
ஷாக்கடிக்கக் கூடும் காதல் செய்யும் நேரம்
மோட்டார் வேகம் கூடும்
இரவில் நடுவில் பேட்டரி தான் தீரும்

மெமரியில் குமரியை
தனிச் சிறை பிடித்தேன்
Shutdownனே செய்யாமல்
இரவினில் துடித்தேன்
சென்சார் எல்லாம் தேயத்தேய
நாளும் உன்னை படித்தேன்
உன்னாலே தானே என்
விதிகளை மறந்தேன்

எச்சில் இல்லா எந்தன் முகம்
சர்ச்சை இன்றிக் கொள்வாயா
ரத்தம் இல்லாக் காதல் என்று
ஒத்திப் போகச் சொல்வாயா
உயிரியல் மொழிகளில் எந்திரன் தானடி
உளவியல் மொழிகளில் இந்திரன் நானடி
சாதல் இல்லா சாபம் வாங்கி
மண்மேலே வந்தேனே
தேய்மானமே இல்லா
காதல் கொண்டு வந்தேனே

hEy Robo மயக்காதே
you wanna come and get it boy
Oh are you just a robot toy
I don't want to break you
Even if it takes to
kind of like a break through
you don't even need a clue
you be my man's back up
I think you need a checkup
I can melt Your heart down
May be if you got one
We doing that for ages
since in time of sages
முட்டாதே ஓரம்போ
நீ என் காலைச் சுற்றும் பாம்போ
காதல் செய்யும் ரோபோ
நீ தேவையில்லை போ போ
(இரும்பிலே..)

2)
அரிமா அரிமா நானோ ஆயிரம் அரிமா

பாடியவர்கள்: ஹரிஹரன், சாதனா சர்கம்
வரிகள்: வைரமுத்து

இவன் பேரைச் சொன்னதும்
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்
இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்
அடி அழகே உலகாழ்கே
இண்டஹ் எந்திரன் என்பவன் படைப்பில் உச்சம்

அரிமா அரிமா
நானோ ஆயிரம் அரிமா
உன் போல் பொன்மான் கிடைத்தால்
யம்மா சும்மா விடுமா
ராஜாத்தி உலோகத்தில்
ஆசைத்தீ மூளுதடி
நான் அட்லாண்டிக்கை ஊற்றி பார்த்தேன்
அக்கினி அணையலையே
உன் பச்சைத் தேனை ஊற்று
என் இச்சைத் தீயை ஆற்று
அடி கச்சைக் கனியே பந்தி நடத்து
கட்டில் இலை போட்டு
(அரிமா..)
(இவன் பேரைச்..)

சிற்றின்ப நரம்பு சேமித்த இரும்பில்
சட்டென்று மோகம் பொங்கிற்றே
நாட்சகன் வேண்டாம் ரசிகன் வேண்டும்
பெண்ணுள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே
பெண்ணுள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே
நான் மனிதன் அல்ல
அக்ரினையின் அரசன் நான்
காமுற்ற கணிணி நான்
சின்னஞ் சிறுசின் இதயம் தின்னும்
சிலிகான் சிங்கம் நான்
எந்திரா எந்திரா..

எந்திரா எந்திரா..
எந்திரா எந்திரா..
எந்திரா எந்திரா..
(அரிமா..)
(இவன் பேரைச்..)

மேகத்தை உடுத்தும் மின்னல்தான் நானென்று
ஐசுக்கே ஐசை வைக்காதே
வயரெல்லாம் ஓசை உயிரெல்லாம் ஆசை
ரோபோவைப் போபோவென்னாதே
ஏ ஏழாம் அறிவே
உள் மூளை திருடுகிறாய்
உயிரோடு உண்ணுகிறாய்
நீ உண்டு முடித்த மிச்சம் எதுவோ
அதுதான் நானென்றாய்
(இவன் பேரைச்..)
(அரிமா..)

எந்திரா எந்திரா..
எந்திரா எந்திரா..
எந்திரா எந்திரா..
எந்திரா எந்திரா..

3)
காதல் அணுக்கள்
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், ஷ்ரேயா கோஷல்
வரிகள்: வைரமுத்து




காதல் அணுக்கள்
உடம்பில் எத்தனை
நியூட்ரான் எலெக்ட்ரான்
உன் நீலக்கண்ணில் மொத்தம் எத்தனை
உன்னை நினைத்தால்
திசுக்கள் தோன்றும் ஆசைச் சிந்தனை
ஹையோ

சனா சனா ஒரே வினா
அழகின் மொத்தம் நீயா

நீ நியூட்டன் நியூட்டனின் விதியா
உந்தன் நேசம் நேசம் எதிர்வினையா
நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா
அழகின் மொத்தம் நீயா

நீ முற்றும் அறிவியல் பித்தன்
ஆனால் முத்தம் கேட்பதில் ஜித்தன்
உன்னால் தீம் தோம் தோம்
தீம் தோம் தோம்
தீம் தோம் தோம் மனதில் சத்தம்
தேன் தேன் தேன் இதழில் யுத்தம்
ரோஜாப் பூவில் ரத்தம்
தீம் தோம் தோம் மனதில் சித்தம்

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
கால்களைக் கொண்டுதான் ருசியறியும்
காதல் கொள்ளும் மனிதப்பூச்சி
கண்களைக் கொண்டுதான் ருசியறியும்

ஓடுகிற தண்ணியில் தண்ணியில்
ஆக்சிஜன் மிக அதிகம்
பாடுகிற மனசுக்குள் மனசுக்குள்
ஆசைகள் மிக அதிகம்

ஆசையே வா வா
ஆயிரம் காதலை ஐந்தே
நொடியில் செய்வோம்
பெண்ணே வா வா வா

காதல்காரா...
நேசம் வளர்க்க ஒரு
நேரம் ஒதுக்கு எந்தன்
நெஞ்சம் வீங்கி விட்டதே

காதல்காரி...
உந்தன் இடையைப் போல
எந்தன் பிழைப்பில் கூட
காதலின் நேரமும் இளைத்துவிட்டதே

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

காதல் அணுக்கள்
உடம்பில் எத்தனை
நியூட்ரான் எலெக்ட்ரான்
உன் காந்தக்கண்ணில் மொத்தம் எத்தனை
உன்னை நினைத்தால்
திசுக்கள் தோன்றும் ஆசைச் சிந்தனை
அன்பே

சனா சனா ஒரே வினா
அழகின் மொத்தம் நீயா

நீ நியூட்டன் நியூட்டனின் விதியா
உந்தன் நேசம் நேசம் எதிர்வினையா
நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா
அழகின் மொத்தம் நீயா

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

4)
புதிய மனிதா பூமிக்கு வா
எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஏ.ஆர்.ரகுமான், ஏ.ஆர். ரகுமான்மகள் கதீஜா




புதிய மனிதா
பூமிக்கு வா

புதிய மனிதா
பூமிக்கு வா


ஹெக்க் -ஐ வார்த்து
சிலிகான் சேர்த்து
வயரூடி உயிரூட்டி
ஹர்ட் டிஸ்க் -இல் நினைவூட்டி
அழியாத உடலோடு
வடியாத உயிரோடு

ஆறாம் அறிவை அரைத்து ஊற்றி
ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி

புதிய மனிதா
பூமிக்கு வா


புதிய மனிதா
பூமிக்கு வா


புதிய மனிதா
பூமிக்கு வா


மாற்றம் கொண்டு வா
மனிதனை மேன்மை செய்
உனது ஆற்றலால்
உலகை மாற்று
எல்லா உயிர்க்கும்
நன்மையாய் இரு
எந்த நிலையிலும்
உண்மையை இரு

எந்திரா எந்திரா எந்திரா
என் எந்திரா

எந்திரா எந்திரா எந்திரா
என் எந்திரா


நான் கண்டது ஆறறிவு
நீ கொண்டது பேரறிவு
நான் கற்றது ஆறு மொழி
நீ பெற்றது நூறு மொழி

ஈரல் கணையம் துன்பமில்லை
இதய கொலர் ஏதுமில்லை
தந்திர மனிதன் வாழ்வதில்லை
எந்திரம் வீழ்வதில்லை

கருவில் பிறந்த எல்லா மரிக்கும்
அறிவில் பிறந்தது
மறிப்பதே இல்லை

இதோ என் இந்திரன்
இவன் அமரன்
இதோ என் இந்திரன்
இவன் அமரன்


நான் இன்னொரு நான் முகனே
நீ என்பவன் என் - மகனே
ஆண் பெற்றவன் ஆண் மகனே
ஆம் உன் பெயர் இந்திரனே

புதிய மனிதா
பூமிக்கு வா


புதிய மனிதா
பூமிக்கு வா


புதிய மனிதா
பூமிக்கு வா


நான் என்பது அறிவு மொழி
ஏன் என்பது எனது வழி
வான் போன்றது எனது விழி
நான் நாளைய ஞான ஒளி

நீ கொண்டது உடல் வடிவம்
நான் கொண்டது பொருள் வடிவம்
நீ கண்டது ஒரு பிறவி
நான் காண்பது பல பிறவி

ரோபோ ரோபோ
பான் மொழிகள் கற்றலும்
என் தந்தை மொழி
தமிழ் அல்லவா

ரோபோ ரோபோ
பல கண்டம் வென்றாலும்
என் கர்தவுக்கு
அடிமை அல்லவா

புதிய மனிதா
பூமிக்கு வா


புதிய மனிதா
பூமிக்கு வா


புதிய மனிதா
பூமிக்கு வா



புதிய மனிதா
பூமிக்கு வா




2010-08-03

இதமான இரவில் நிறைந்த சுமைகளை இறக்கி வைத்து விட்டு கேட்க கூடிய பாடல்கள் III

நீண்ட நாட்களுக்கு பிறகு (மூன்று வருடங்களுக்கு பின் )நேற்றிரவு எனது பழைய பாட்டு பெட்டியை தட்டி சுத்தம் செய்து ஏதாவது வேலை செய்யுதா என்று முயற்சி செய்யும் போது , ஒரு தமிழ் எப் எம் கொஞ்சம் கர முரா சத்தத்துடன் வேலை செய்தது. என்னமோ எனக்கு பிடிக்க வில்லை .


நெதர்லாந்து காற்றாலைகள்

பேசாமல் எனது ஹர்ட் டிஸ்க் இல் இருந்து என்னிடம் உள்ள வீடியோ பாட்டுகளை பார்த்தும் கேட்டும் ரசித்த படி இறுதி வினாத்தாள் தயாரிக்கும் பணிகளை தொடங்கினேன்.
எனக்கு பிடித்த ஒரிரு பாடல்களை இங்கே பகிர்கிறேன்.

ஜேர்மனியின் செந்தேன் மலரே


பேர்லின் Brandenburg Gate

இந்த பாடல் கமல், ரதி ஆகியோர் நடித்து 1980 களில் வெளிவந்த உல்லாச பறவைகள் படத்தில் , பஞ்சு அருணாச்சலம் பாடல்வரிகளுக்கு இசை ஞானி இசை மீட்டினார்.

இந்த பாடல் எனக்கு பிடிக்க பல காரணம். நான் ஐரோப்பாவில் இருந்த காலத்தில், இந்த பாடலை பார்த்து தான் , சில ஊர்களுக்கும் , சுற்றுலா மையங்களுக்கும் சென்று வந்தேன்.
இந்த பாடலில் ,
  • லூவர் நூதன ஆகியன- Paris (தொல் பொருள் களஞ்சியம் )(http://www.louvre.fr/llv/commun/home.jsp?bmLocale=en
  • ஆம்ஸ்டர்டம் டாம் சதுக்கம் ( Dam Square நெதர்லாந்து )
  • பேர்லின் Brandenburg Gate
  • நெதர்லாந்து காற்றாலைகள் (windmills)
ஆகியன படம் பிடித்து காட்டப்பட்டுள்ளது.




உனக்கும் எனக்கும் ஆனந்தம்

லூவர் நூதன சாலை அருகில்

இந்த saumiya என்னும் சிறுமி ஆடும் ஆட்டம் ..... என்னத்தை சொல்லுறது. இந்த பாடல் ஸ்ரீ ராகவேந்திரா படத்தில் வெளிவந்து இருந்தாலும், இந்த மீள் கலவை பாடல் எனக்கு நனறாகவே பிடிக்கும்.









வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே

திரு.கே.ஏஸ்.ரவிக்குமார் டைரக்ஷனில் வெளிவந்த படம் சேரன் பாண்டியன். குடும்ப காவியம் என்றே சொல்லலாம். என்ன அருமையான பாடல்கள் இந்த படத்தில். எனக்கு இந்த பாடல் ரொம்பவே பிடிக்கும். SA ராஜ்குமார் இன் ஆரம்ப கால இசையில் வெளிவந்த பாடல்கள்.




வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே
பிரித்தாலும் பிரியாது நம் காதல் அழியாது
வரும் தடைகளை உடைத்திடும் உறவுக்கு வழிகொடு

வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே

காணும் கனவெல்லாம் எங்கும் நீதானே
என் கனவெல்லாம் நினவாக வா வா கண்மணியே
வீசும் காற்றில் தூசியானேனே
உன்னை எங்கோ மனம் பேச உள்ளம் நொந்தேனே
நாம் ஒன்று சேரும் திருநாளும் உருவாகும்
ஜென்மங்கள் எழேழும் நாம் வாழ்வதை தடுத்திட முடியாது

வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே

காதல் பிரிவென்றால் உள்ளம் துடிக்கிறதே
அதை காதால் கேட்டாலே உலகே வெறுக்கிறதே
தீயாய் உடலெங்கும் என்னை சுடுகிறதே
உன்னை தேடும் கண்கள் கண்ணீர் வடிக்க்க்கிறதே
உன்னோடு நாளும் என நானே வருவேனே
உடலோடு உயிராக நாம் சேர்ந்தது வேறு யாருக்கும் தெரியாதே

வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே
பிரித்தாலும் பிரியாது நம் காதல் அழியாது
வரும் தடைகளை உடைத்திடும் உறவுக்கு வழிகொடு

வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே..ஏஏஏஏ

காதல் கடிதம் வரைந்தேன் வசந்தம் வந்ததா... எனக்கு ரொம்பவே பிடித்த மற்றுமொரு பாடல்
மனோ, ஸ்வர்ணலதா( எனக்கு பிடித்த பாடகி அருமையான பெண் குரல் சோக பாடல்களை பாடுவதில் புகழ் கொண்டவர் ), ஆகியோரின் குரலில் ராஜ்குமாரின் இசையில் சேரன் பாண்டியன் படதில் வெளிவந்தது.
கேட்டு பாருங்களேன்.





காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு
வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா


வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா
உள்ளம் துள்ளுகின்றதே நெஞ்சை அள்ளுகின்றதே
உங்கள் கடிதம் வந்ததால்
இன்பம் எங்கும் பொங்குதே
உண்மை அன்பு ஒன்றுதான் இன்ப காதலில்
என்றும் வாழ்திடும் இனிய சீதனம்

காதல் கடிதம் வரைந்தாய் எனக்கு
வந்ததே வந்ததே வசந்தம் வந்ததே


உயிரின் உருவம் தெரியாதிருந்தேன்
உனையே உயிராய் அறிந்தேன் தொடர்ந்தேன்
வானும் நிலவும் போலவே
மலரும் மணமும் போலவே
கடலும் அலையும் போலவே
என்றும் வாழவேண்டுமே
உண்மை அன்பு ஒன்றுதான் இன்ப காதலில்
என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம்
(காதல்..)

பயிலும் பொழுதில் எழுதும் எழுத்தில்
உனது பெயர் தான் அதிகம் எனக்கு
வானம் கையில் எட்டினால்
அங்கும் உன்னை எழுதுவேன்
நிலவை கொண்டு வந்துதான்
பெயரில் வர்ணம் தீட்டுவேன்
உண்மை அன்பு ஒன்றுதான் இன்ப காதலில்
என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம்
(காதல்..)




2010-08-01

உலக நண்பர்கள் தினம்

அன்பு நண்பர்கள் அறிவது

நண்பன் ஒருவன் வந்த பிறகு
விண்ணை தொடலாம் உந்தன் சிறகு
வாணுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே


இத்தகைய நட்பினை பாராட்டுவதற்காக உலகம் முழுவதும் இன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.


நண்பனை கொண்ட வாழ்க்கை இனிப்பானது.

கொண்டாடப்படுகின்ற தினங்களில் முதல் இடங்களை பெறும் தினங்களில் ஒன்றாக இன்றைய தினத்தையும் குறிப்பிடலாம்.


எனக்கு மட்டுமில்லை .. எல்லாருக்கும் பிடிக்கும் இனிமையான பாடல் .. முஸ்தபா முஸ்தபா ...



அதே போல நண்பன் இருந்தான் - எனக்கு இருபது உனக்கு பதினெட்டு !!!


2010-07-30

வர இருக்கும் எந்திரன் பாடல்கள் - ஒரு முன்னோட்டம்





நீண்ட நாட்களாய் தீவிர ரஜனி ரசிகர்கள் ( மற்றும் ரகுமான் ரசிகர்கள் உள்ளடக்கம் ), எதிர்பார்த்து காத்திருந்த தலையின் , தமிழ் சினிமாவின் ஒரே ஒரு சூப்பர் ஸ்டாரின், சூப்பர் கிட் இயக்குனர் சங்கரின், எந்திரன், ஒலிப்பேழை அல்லது ஒலிநாடாப் பேழை வெளியீடு நாளை மலேசியாவின் PICC hall,( இணைய முகவரி http://www.picc.gov.my/v1/) இல் சிறப்பாக நடை பெற இருக்கின்றது.
எங்களை போன்ற தீவிர ரசிகர்கள் , கடந்த சில நாட்களாய் நடத்திய தேடுதல் வேட்டையில், மாதிரி பாடல்கள் கிடைக்க பெற்றுள்ளன. இறுதியில் பார்க்கவும்.


ரகுமானின் இணைய தளத்தில் ஏழு பாடல்கள் இருப்பதாக பதியப்பட்டுள்ளது.

T...RACK LISTING

1) Puthiya Manidha
Singers: S. P. Balasubramaniam, A. R. Rahman, Khatija Rahman
Lyrics: Vairamuthu

2) Kadal Anukkal
Singers: Vijay Prakash, Shreya Ghoshal
Lyrics: Vairamuthu

3) Irumbile Oru Idhaiyam
Singers: A. R. Rahman, Kash'n'Krissy
Lyrics: Kaarki
English lyrics: Kash'n'Krissy

4) Chitti Dance Showcase
Singers: Pradeep Vijay, Pravin Mani, Yogi B
Additional Arrangements and Programming: Pravin Mani


5) Arima Arima
Singers: Hariharan, Sadhana Sargam
Additional Vocals: Benny Dayal, Naresh Iyer
Lyrics: Vairamuthu


6) Kilimanjaro
Singers: Javed Ali, Chinmayi
Lyrics: P. Vijay
Additional Vocal Arrangements: Clinton Cerejo

7)Boom Boom Robo Da
Singers: Yogi B, Keerthi Sagathia, Swetha Mohan, Tanvi Shah
Lyrics: Kaarki


வழமை போலவே ஆரம்ப பாடல் அநேகமாய் புதிய மனிதா பாடல் என்று நினைக்கின்றேன். ஆரம்ப பாடல்களை எஸ் பி பாடுவது வழமை .. இருந்து தான் பார்ப்போமே.. :) ரகுமானின் மூத்த மகளும் இணைந்து பாடி இருப்பது இங்கே சிறப்பம்சம்.



கிடைக்க பெற்ற படத்தொகுப்புகளில் இருந்து எந்திரன் மற்றுமொரு சங்கர் , ரகுமான் , ரஜனியின் வெற்றி படைப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
வாழ்த்துக்கள் சூப்பர் ஸ்டார் , இந்த வயசிலும் நீங்கள் ஒரு அன்பால சேர்ந்த கூட்டத்தை வைத்து இருப்பதற்கு.


இளமை பொங்கும் ரஜனி , கவர்ச்சி பொங்கி நடிக்கும் இயற்கை அழகி ஐசு , பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை ..

" சும்மா பேரை கேட்டாலே அதிருதில... !!! "


அரிமா அரிமா பாடலை கேட்க :

http://www.mediafire.com/?c2swqqob24rqgxb
Related Posts Plugin for WordPress, Blogger...