2009-08-29

யாழ் தேவி பயணமும் யாழ் புகையிரத நிலையமும்

எனது சிறு வயதில் இருந்தே இந்த யாழ் புகையிரத நிலையமும் அதன் சுற்றாடலும் அடிக்கடி தரிசிக்கும் இடமாக இருந்து வந்தது.


யாழ் புகையிரத நிலையம்

அம்மா வவுனியாவில் 7 வருடங்கள் சேவை செய்த காலம் அது !!!

குறிப்பாக 1984 ன் நடுப்பகுதியில் இருந்து 1989 ன் இறுதிவரை நாங்கள் வவுனியாவில் குடி கொண்டு இருந்த சமயம். யாழ் தேவி மூலம் பயணம் செய்யும் போது. ( நீண்ட காலம், பஸ் வண்டியில் தான் சென்ற ஞாபகம் இருகின்றது,).


யாழ் புகையிரத நிலையம்


இந்திய இராணுவம் வருகை இன் போது தடைப்பட்டு இருந்தது . ( 1988 நடுப்பகுதி வரை )
பாதை பூர்த்தி செய்யாமல் இருந்ததாக நம்புகிறேன்.
பிறகு சரி வந்த ஞாபகம் , இந்த வரலாறுகள் எனக்கு தெரியாது எனினும் யாரும் தெரிந்தால் சொல்லவும்!!!


யாழ் புகையிரத நிலையம்


ஆனையிறவில் நீண்ட தூரம் காத்து நிக்கும் சரக்கு லாரிகள்

ஆனையிறவில் ஏற்படும் நீண்ட வரிசையை குறைக்க மக்கள் யாழ் தேவியை பயன்படுத்தியதாக முந்தி ஊரார் பேசினதாக ஞாபகம் இருக்கு !!

இந்த தாண்டிக்குளம் என்ற புகையிரத நிலையம் நான் நினைகின்றேன் 1992 களின் பிற்பகுதியில் தான் உருவெடுத்தது , முன்னர் அவ்வாறு இருக்கவில்லை.

நாங்கள் வவுனியாவில் இருந்து யாழ் தேவியில் செல்லும் போது , முதலில் அகப்படும் பெரிய பாலம் அந்த நொச்சி மோட்டை என்னும் இடத்தில இருக்கும் பாலம் தான், அந்த பாலம் அந்த ஊரில் ஏற்படும் வெள்ளங்களை சமாளிப்பதற்காக பிரமாண்டமாய் அமைக்கப்பட்ட ஒன்று. அந்த பாதை ஊடாக சென்று வருவோர் பெரும்பாலும் அதை கண்டு இருப்பர். குறிப்பாக இந்த சமாதானம் வர முன் போய் வந்தோர் எனின் இலகுவில் அடையாளம் கண்டு கொள்வர். அந்த பாலத்துக்கு அண்மையில் வைத்து தான் இராணுவத்தின் இறுதி காவல் அரண் , வன்னிக்குள் நுழைவதற்கு!!!



காங்கேசன்துறை புகையிரத நிலையம் (பின்புறம் )

இந்த பாலத்தில் யாழ் தேவி செல்லும் போது தங்கள் உயிரை மாய்த்தவர்கள் பலர். இதை அடிக்கடி செய்திகளில் பார்த்த ஞாபகம். எனி பாலம் இல்லை என்று போட்டு வவுனியா தாண்டியதும் தலையை வெளியே ( சற்று உடம்பையும்) கூத்து போடும் இளைஞர் கூட்டம் எப்படியும் அகப்படும்.


காங்கேசன்துறை புகையிரத நிலையம்


இப்படியே வன்னிப் பிரதேசம் எல்லாம் கடந்து யாழ் செல்லும் போது இயற்கை காட்சியும், சரியான வெட்கையும் இருக்கும். ஆரஞ்சு பார்லி சத்தம் தான் யாழ் தேவி முழுக்க கேட்கும். குறிப்பாக, ஆசனங்களில் அமருவோரை தவிர பனையோலை பாய் போட்டு இருந்து கும்மாளம் அடிச்சு கொண்டு இருக்கும் வயதானவர்கள் ஒரு புறம்; முரசொலி, ஈழநாடு , உதயன் வாசிப்போர் ஒரு புறம், என்று ஒரே கல கலப்பு தான். இதை விட குடும்ப கதை , கொழும்பு சென்று வந்த கதை என்று ஒரே திருவிழா மாதிரி சத்தமாய் இருக்கும்!!!
கச்சான் கடலை விற்போரின் தொல்லையோ மகா தொல்லை. இடைக்கிடை எங்கட Ticket Checker தனது தலையையும் காட்டி கொண்டு இருப்பர்.


பிரண்டு கிடக்கும் யாழ் தேவி பெட்டிகள்

நாங்கள் அடிக்கடி போய் வருவாதால் இந்த கலகலப்பு இல்லை, எப்படா வீடு வந்து சேரும் என்று போட்டு இவர்களின் ஜொள்ளுகளை பார்த்து கொண்டு இருப்பம்.

கிளிநொச்சியில் நீண்ட நேரம் தரித்து நின்று போட்டு செல்லும். இன்றும் ஞாபகம் இருக்கிறது ( யாழில் இருந்து வரும் யாழ் தேவியை வழிவிட என்று நினைக்கிறன்)


உப்பளம்



அப்புறம் ஆனையிறவு உப்பளம் புகை வண்டியில் இருந்து பார்க்கும் போது அருமையாக இருக்கும்.

காற்றை கிழித்து கொண்டு செல்லும் போது ஏற்படும் சத்தம் ,கக்கும் புகை இதுதான் யாழ்தேவி வருகிறது என்பதற்கு ஆதாரம்.


உப்பளம்


யாழை வரவேற்கும் தென்னை மரங்கள்

வன்னியில் தொடர்ந்து பார்த்த காட்டு மரங்கள் முடிய தென்னை மரங்களின் வருகை ஆகா சுப்பெரோ சூப்பர்


நாவற்குளி பாலம்


நாவற்குளி பாலம்


நாவற்குளி பாலம்


இப்படியே நாவற்குளி வந்தால் அங்கே இருக்கும் அடுத்த பாலம்.
இன்றும் ஞபகம் இருக்கிறது இடம் பெயர்வின் போது அந்த பாலத்துக்கு அண்மையாக நடந்து சென்றது. அப்புறம் றால் பண்ணை எல்லாமே நல்ல காட்சிகள் தான்!!!


சரக்கு எஞ்சின்


பிறகு யாழ் தேவி யாழ் சென்று நீண்ட நேரம் தரிசிக்கும். பெரும்பாலும் எல்லாரும் இறங்கினாலும், கொக்குவில் கோண்டாவில் சுன்னாகம் மல்லாகம் என்று நீண்ட பட்டியல் இருப்பதால் இறங்காமல் இருப்போர் அதிகம் !!!

எங்கள் வாசஸ்தலம் சுன்னாகம் ஆதலால் நாங்கள் பொறுமையாக யாழ் தேவியில் யாழ் புகையிரத்தில் நின்ற ஞாபகங்கள் இன்றும் மறக்க முடியாது.


சரக்கு இழுக்கும் இழுவைகள் !!!


அனுராதபுரம் பிறகு பெரிய அளவில் இருக்கும் புகையிரத நிலையம் என்றால் யாழ் புகையிரத நிலையம் தான். பிரமாண்ட சுவர்கள் , கட்டிடம் என்று . KKS இல் கூட அவ்வளவு பெரிதாக இல்லை, அங்கே ( சரக்கு மற்றும் சாதரண )புகைவண்டிகள் சற்று அதிகம்.


(நன்றி கு.பார்த்தீபன் )

யுத்த சூழ்நிலைகளால் புகைவண்டி சேவை எல்லாம் அற்ற காலத்தில் நான் பல தடவைகள் தாண்டி சென்று இருகின்றேன், இடம்பெயர் மக்களை தன்னகத்தே கொண்டு இருந்ததை யாவரும் அறிவர். (அநேகமான புகையிரத நிலையங்கள் )

1995 இன் பிறகு அது ஒரு பயணிகள் ஒன்று சேரும் இடமாக மாறியது கூட உங்களுக்கு தெரிந்து இருக்கும் !!! (யாழ் கொழும்பு விமான சேவை காரணமாக- 1999 வரையும் இருக்கலாம் ??? )!!! தற்போது இல்லை என்று நினைக்கிறன் !!!!



காங்கேசனில் உள்ள எண்ணெய் குதங்கள்


(நன்றி கு.பார்த்தீபன் )

யாழ் தேவியை இழுத்து வரும் " உட வளவை" எஞ்சின் இன்னும் ஞாபகத்தில்!!!

மீண்டும் அண்மையில் சென்று வந்த போது தூர நோக்கு புகைப்படம் ஒன்றில் அந்த கட்டிடங்களை பார்த்த போது ஒரு கவலை தான். ஆனால் என்ன செய்வது!!!
என்றோ ஒரு நாள் அது மீண்டும் மிளிரும் என்ற நம்பிக்கை!!!

1 comment:

SUMAN said...

WOW நன்றி சுவாமிகள்...

உண்மையிலேயே இன்றுதான் இந்தப் புகையிரத நிலையங்களைப் பார்க்கிறேன்...

இணைப்புக்கு நன்றி

Suman

Related Posts Plugin for WordPress, Blogger...