2009-08-24

உலகிலேயே மிகப்பயங்கரமான நீச்சல் தடாகம்

என்ன என்று யோசிகிறீர்களா , உண்மை தான்.டெவில்ஸ்( Devils Pool) நீச்சல் தடாகம் தான் சிம்பாவே நாட்டில் உள்ளது. 128 அடி ஆழம் கொண்ட ஒரு நீர்வீழ்ச்சியின் உச்சி தான் அது. அதன் விளிம்பில் ஒரு நீச்சல் தடாகம். நீந்த தகுந்த காலங்கள், நீரின் நிலை குறைவாக உள்ள காலங்கள்.

இங்கு எல்லாம் போய் நீந்த வேணுமா ? என்றே தோன்றும். ஆமாம் இதுக்கென்று சென்று வருகிறார்கள் பல உல்லாச பயணிகள் !!!இந்த தொகுப்பை பார்த்த பல்கலை நண்பன் ஒருத்தன் சொன்னான். எங்கட கம்பசில இருக்கிற அந்த 50 மீற்றர் குளத்திலையே நாங்கள் இறங்கி பத்து அடி ஆழமான பகுதிக்கு செல்வது இல்லை. இது என்ன கொடுமை சார். உண்மையும் தான். நான் பல்கலையில் படிக்கும் காலத்திலும் சரி, விரிவுரையாளர் ஆக இருகின்ற காலத்திலும் சரி நீச்சல் அடிக்க போவதுதான். அங்கே அருமையான நண்பிகள்(சகோதர மொழி) உடன் நீச்சலில் ஒரு அரட்டை போட்டு விட்டு வருவது வழமை. அதுவும் 5 அடி ஆழம் மட்டும் நீந்தி சென்று ஐயோ அம்மாடி என்று ஓடி வந்து விடுவேன்.
இங்கே பர்ருங்களேன் இந்த இளசுகள், பழசுகளின் சேட்டைகளை !!!


இதன் காணொளிகளை இங்கே பார்வையிடலாம்

http://www.youtube.com/watch?v=4hlhidk7KgM"

போனால் போகட்டும் வந்தனீங்கள் இதையும் பார்த்து விட்டு செல்லுங்கள் !!!

ஒரு நல்ல சமாச்சாரம் இந்த அசின் பெயரில் நீச்சல் தடாகம். ( உண்மையாகவே இந்த அசின் இல்லை)
http://www.fabulousphilippines.com/asin-hot-springs.html

பிலிப்பைன்ஸ் நாட்டிலாமே . நல்லவேளை இது நம்ம ரசிகர் மன்றங்களுக்கு தெரியாது ,
தெரிந்தால் அப்புறம் நயன் நீச்சல் தடாகம், ஷ்ரேயா நீச்சல் தடாகம், அப்புறம் நம்ம ஜூனியர் தமன்னா நீச்சல் தடாகம், நம்ம சீனியர் த்ரிஷா நீச்சல் அரண்மனை , போனா போகுது நம்ம சுப்பர் சீனியர் நமீதா நீச்சல் தடாகம், நம்ம குரு மாவளிகா நீச்சல் தடாகம் என்று எல்லாம் கட்டி ஒரே நீச்சல் தான் கடைசியில்.

யாருக்கும் என் அறிவுரையை கேட்டு கட்ட போறது என்றால் எனக்கும் ஒரு சிறு லஞ்சம் தந்து போடுங்கள். பகவானே நமக !!!


சுவாமியே!!!! ஏன் நீங்கள் நம்ம ஷ்ரேயா, நமீதா, நயன் குளிக்கிற நீச்சல் தடாகம் பற்றி ??? சொல்லுகிறீர்கள் எங்கே அவர்கள் என்ற எனது பக்கத்து அறை நண்பனின் முனு முனுப்பு காரணமாக இந்தா ஒரு கிளைமாக்ஸ் காட்சியில் !!!!


No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...