2009-08-26

மறக்க முடியாத லூட்டி அடித்த இன்னுமொரு நாள்

இன்று ஏதோ எங்கள் ஆபீஸில்( நெதர்லாந்து) எங்கள் குழுமத் தலைவர் வருகை தராததால் ஒரே கொண்டாட்டம். எங்கள் அறையில் இரண்டு நம்ம தென் நாட்டு பொண்ணுகளும் நானும் தான். அதுகளும் நன்றே தமிழில் பேசுவதால் என்றுமே எங்கள் லூட்டிகளுக்கு குறை இல்லை.

ஏதாவது பற்றி, இல்லை போனால் யாரையாவது பற்றி பேசிக்கொள்வது வழக்கம் . இன்று சற்று வேற மாதிரி ( பயப்பட வேண்டாம்) கதைத்து கொண்டு இருக்கும் போது ஒரு சக்கை போடு போட்ட ஜோக்கை நம்ம பொண்ணு ஒருத்தி அவிழ்த்து விட்டாள்.
அதுவும் A1 ஜோக் தான் !!

ஒரு பேராசிரியரும் அவர் பால் வேலை செய்யும் மாணவனும் சந்தித்து கொள்கின்றனர். ( எங்கே என்று எல்லாம் கேட்க கூடாது ,நான் சூடாகிடுவன்)

அப்போது அந்த பேராசிரியர் அந்த மாணவனிடம் ஒரு கேள்வி கேட்டார்.
இதுதான் அந்த கேள்வியின் சாராம்சம்.

அதாவது ஒரு புகை வண்டி 40 km/h வேகத்தில ஒரு தண்டவாளத்தில் ஓடி கொண்டு இருக்கிறது. ஒரு பையன் அந்த தண்ட வாளத்தில் விழுந்து கிடக்குறான். ( ரொம்ப யோசிக்க வேணாம், புகை வண்டி அடிக்குமா , அடிக்காத என்று வடிவேலு மாதிரி கேட்டார் என்று அதுதான் இல்லை ).

கேட்டார் ஒரு கேள்வி , அப்படியே கண்ணை கட்டின மாதிரி இருந்திச்சு.
என்ன தெரியுமா " தண்டவாளத்தின் குறுக்கே படுத்து இருக்கும் பையனின் வயசு என்ன "
சொல்லுவியளோ ஹா ஹா.
மாணவன் பயப்பிடாமல் சொன்னான், ஒரு 20 இருக்கும் என்று.
இதை பார்த்து கொண்டு இருந்த பேராசிரியரின் துணைவியார் அறிவு கேட்டு விழுந்து போனார்.
பிறகு அவருக்கு வைத்தியம் எல்லாம் செய்து, எழுப்பி விட அந்த பையனின் காதுக்குளே கேட்டாவாம், தம்பி நீர் என்னென்று 20 என்று சரியா சொல்ல முடிஞ்சது என்று.
அதுக்கு மாணவன் சொன்னான் " ஒரு நாற்பது வயசு முழு லூசு கேள்வி கேட்குது அதை பார்த்திட்டு விடை சொல்லுது எப்படியும் ஒரு அரை லூசா தானே இருக்க்கும், அதாலே அது இருபது வயசு பையன் என்று மொக்கையா சொன்னதும், எழும்பியிருந்த அந்த பேராசிரியரின் மனைவி மீண்டும் மயங்கி போனாளாம்,

தினமும் இப்படி எத்தனை பேராசிரியரின் மனைவி மார் மயங்கி மயங்கி விழுந்து எழுதல் நடக்குது என்று ஒருக்கா பார்க்கணும் போல இருக்கு !!!

எந்த பேராசிரியரையும் கடிக்க எழுதவில்லை , சிலவேளைகளில் உண்மையும் தான்!!!

1 comment:

SUMAN said...

A க்குப் பக்கத்தில 1 இருந்தத கவனிக்க இல்ல... ஏதோ A ஜோக் எண்டு ஆவலா பாத்தன்

:P :P

Nice Blog...

Related Posts Plugin for WordPress, Blogger...