2009-08-31

இப்படியும் Train ஓட்டுறாங்களே!!!!



அண்மையில் எனக்கு வந்த மின்னஞ்சல் ஒன்றில் ஜேர்மன் நாட்டில் இவ்வாறு தொங்கு Train (tram style) ஓடுவதாகவும் அதன் நிழல் படங்களின் தொகுப்பும் கிடைக்க பெற்றது.




ஆமாம் உண்மைதான், அதில் பயணம் செய்ய எனக்கும் ஒரு முறை சந்தர்ப்பம் கிடைத்தது. அண்மையில் அந்த நகரத்துக்கு சென்று இருந்த போது, வழமையாக வரும் மெட்ரோ வண்டி போல தான் (அதன் அமைப்பு ) நானும் ஏறி நின்றால், அது வழமைக்கு மாறாக தொங்கிய படி சென்றது. Traffic இல்லை, சனம் தான் கொஞ்சம் நெருசல், என்றாலும் நல்ல ஒரு பயணம், ஏறத்தாள 2-3 Km தூரம் சென்ற பலன் எனக்கு கிடைத்தது.




செல்லும் பாதை:
கட்டிடங்களுக்கு நடுவே சரி , வீதியின் குறுக்கும் நெடுக்கும் சரி , ஆற்றின் மேலாக சரி செல்லும் போது இயற்கையை ரசிப்போரும், புகைப்படங்கள் எடுப்போரும் என்று ஒரே ஆரவாரமாய் இருக்கும்.


(உடைஞ்சு விழுந்தால் கெதி என்னாகிறது, ஒரு விசாரணை கமிஷன் வைக்க வேண்டியதுதான் )

தரிசிக்கும் Stations யாவும் 2,3 மாடி கட்டிடம் இல்லாவிட்டால் நிலத்தில் இருக்கும்.




எனக்கு இப்பவும் ஞாபகம் இருகின்றது, 5 மாடி கொண்ட Car Park இன் மூன்றாம் மாடியில் தரிசித்து சென்றது.





நான் இதில் பயணம் செய்யும் போது எனது கைதொலைபேசியால் எடுத்த ஓரிரு புகைப்படங்கள் இங்கே !!!


எனது E71 Nokia கைத்தொலைபேசியால் சுட்டது


எனது E71 Nokia கைத்தொலைபேசியால் சுட்டது

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...