2009-08-28

பம்பர கண்ணாலே செய்தி சொன்னாளே

என்னடவா இது.. எல்லாருக்கும் இது தெரிந்த தலைப்பு தான்.
ஆமாம் முன்னரும் இந்த பம்பர கண்ணாலே பாடல்கள் பல விதமான ரிதங்களில் வந்துள்ளது.
அதிலும் எனக்கு இந்த கந்தசாமி பம்பர கண்ணாலே பாடல் , கந்தசாமி ஆடியோ பாடல்கள் இணையத்தில் உலா வர தொடங்கிய காலத்தில் இருந்து , என்னமோ அந்த மெட்டுகள் பிடித்து கொண்டன. மிகவும் ஆவலாக இருந்தேன் எப்போது இதன் வீடியோ வடிவம் வரும் என்று.
ஒருநாள் இணையத்தில் வலம் வரும் போது என்னிடம் சிக்கி கொண்டது. எதிர் பார்த்தே இருக்க வில்லை . இப்படி ஒரு item song இது என்று.

இருந்தாலும் ஒரு கிளாமராக எடுக்கப்பட்டுள்ளதால் எங்களை மாதிரி இளைஞர் களின் மனதில் ஒரு மோகம் தான்.

இப்படியே தினமும் ஒரு தடவை இரவில் இந்த பாடலை எனது லேப்டாப் இலே பார்த்து விட்டு தூக்கம் கொள்வேன். எப்ப அந்த திரைப்படம் வரும் என்று இருந்த வேளை கடந்த வாரம் ஒரு மாதிரி புலம் பெயர் நாடுகள் எல்லாவற்றிலும் அமோக வரவேற்புடன் திரைக்கு வந்தது.


கடந்த மூன்று மாதங்களாக எந்த திரைப்படமும் திரைக்கு வராத நிலையில் , ( தாய் நாட்டில் நடை பெற்ற பாதகமான சூழ்நிலைகள் காரணமாக, புலம் பெயர் மக்கள் ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள் , எழுச்சி நிகழ்வுகள் என்று நடத்தி வந்த காரணம் தான் . ) இதை பார்க்க ஏராளமானோர் வருகை தந்து இருந்தனர்.தொடக்கமே ஒரே விசில், கூ, என்று களை கட்டி இருந்தது. எல்லாம் நம்ம விக்ரமுக்காக அல்ல. நம்ம ஷிரேயா தான் எல்லாம், கொஞ்சம் வடிவேலுக்கும் சாரும்.
ஆரம்பமே விசில், கூ என்று இருந்த ஜனங்களுக்கு ஒரே சப் என்று போய் விட்டது.

வித்தியாசமான சேவல் அறிமுகம் ஏமாற்றம் தான் அதுவும் ஏறத்தாள 15 நிமிடம் ரொம்ப ஓவர் !!!

ரஜனி, கமல் , இல்லை போனால் போகுது நம்ம அஜித் விஜெய் என்றாலும் இப்படி ஒரு ஆரம்பம் வைச்சால் எவ்வளவு தீவிர ரசிகர்கள் என்றாலும் கல்லே எறிவார்கள் :)

இங்கும் இதுதான் நடந்தது. எங்கள் முன்னாடி இருந்த ஸ்ரேயா அன்பர், நீண்ட நேரமாக ஸ்ரேயா தோன்றாததால் திரையை நோக்கி தனது சோடா போத்தலை எறிந்த காட்சியும் அதற்குள் ஒரு பரபரப்பு !!!

நான் திரை விமர்சனம் சொல்ல வரவில்லை, ஆனாலும் சண்டை காட்சிகள் இங்கே நேரத்தை நீட்டி கொண்டே போகின்றன. மிகவும் ஓவராவே இருந்திச்சு. எனக்கு பக்கத்தில் இருந்த நண்பரின் முனுமுனுப்பு " டோய் விக்கி, இதெல்லாம் உனக்கு ஓவர்டா " ஹா ஹா

சும்மா சொல்ல கூடாது குடுத்த காசுக்கு ஸ்ரேயா வின் வருகையும், தோன்றும் காட்சிகளும் ரசிகர் மத்தியில் அமோகமான வரவேற்பு. அதுவும் பறக்கும் விமானத்தில் நடை பெற்ற காட்சியில் என்ன பேசினார்கள் என்று கூட கேட்க முடியவில்லை அந்த அளவு விசில், கூ ..ஆராவாரம். !!!ஸ்ரேயாவின் காட்சியை பதிவு செய்த கமர மென் வாழ்க !!!
ஸ்ரேயாவுக்கு உடுப்பு தைத்தவன் வாழ்க !!!!

இன்னுமொன்று அத்தனை பாடல் காட்சிகளும் சுப்பர். யாரோ எல்லாமே item song என்று கூட சொல்லி கேட்டிச்சு. அப்படியே பார்த்திட்டு இருக்கலாம் .
மன்னிக்கவும் ( திரும்ப திரும்ப )!!!!

மியாவ் மியாவ் பூனைக்குட்டி பாடல்- ஸ்ரேயா துவாய் உடன் ஆடும் காட்சி வரும் போது உண்மையாவே எனக்கு திரை தெரியவே இல்லை. எல்லாரும் எழும்பி ஆட தொடங்கியாச்சு. அப்புறம் என்ன திரையரங்கு முழுதும் விசில் கூச்சல், தான் !!!

பாடல் :-http://www.youtube.com/watch?v=wNL0ErHG59g

வடிவேலுவின் காமடியும் அவ்வளவு இல்லாவிட்டலும் சுப்பர்.

இறுதியாக நான் எதிர் பார்த்து இருந்த பாடல் பம்பர கண்ணாலே .. எங்கேடா வருது வருது என்று ஒரு மாதிரி படம் முடியும்நிலை. வந்திச்சு பாருங்க, நானாகவே விசில் அடிச்சே போட்டேன். அப்படி ஒரு ரிதம். ( காட்சியும் சும்மா பரவாய் இல்லை).

பாடல் :- http://www.youtube.com/watch?v=AKvTMBnRKJA

விக்கரம் வரும் காட்சியில் உள்ள பாடல் வரி இதுதான்
கேட்டு பாருங்களேன்

Show!
Oh my girl, rock it away ..
Pepsi'o, shake it away ..
Move your body tracking away ..
Gala, gala, freakin away

Shakalakka makka you say ...
Everybody pushing away ...
Oh my baby squeez it away...
Baby get him away ..

ஒன்று மட்டும் தெரிந்தது.. நீண்ட நாள் வீனடிப்புக்கு ஏற்ற லாபம் இருக்காது.
மற்றது ஷிரேயா தோன்றும் காட்சிகளை பார்த்த சென்சார் போர்டு கூட திக்கி முக்காடி போயிட்டு போல. அப்படி தணிக்கை செய்தும் இந்த ஓவர் என்றால், தணிக்கைக்கு முன்.. அம்மாடி கந்த சாமியோவ் .. மியாவ் !!!மியாவ் !!!

சிவாஜியில் ஸ்ரேயா கவர்ச்சி என்ற என் நண்பனின் கருத்துக்கு , அப்படி இல்லைங்க என்று நண்பனுக்கு கால் எடுத்து சொன்ன கடுப்பும் எனக்குஇருக்கு.
In Balcony :)

ஒட்டு மொத்தத்தில் கந்தசாமி = சிவாஜி +அந்நியன்+ ரமணா ஆகியவற்றின் கலவை .. நீங்களே தீர்மானியுங்கள் சென்று பார்ப்பதா இல்லையா என்று !!

(இந்த வசனத்தை எழுதி கொண்டு இருக்கும் போது ,நண்பி பக்கத்தில் இருந்து சொன்னாள் உந்த குருவிய கூட பார்த்த....தானே அதை விட இது நல்லதுங்க என்று , சத்தியமா நான் சொல்லல ). அப்புறம் விஜய் ரசிகர் மன்றம் ...எனக்கு மான நஷ்ட வழக்கு எல்லாம் போடாதீங்க. நான் ஒரு அப்பாவி குடும்பஸ்தன் !!!

Excuse Me, ஒரு காப்பி குடிக்க வாறீங்களா!!!LOL
இது நண்பியின் முனுமுப்பு படம் பார்த்த tocuh என்னும் விடவில்லை போல ,!!!

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...