
பேராதனை குறிஞ்சியில் வீற்றிருக்கும் எங்கள் தொப்பையப்பன்
இன்று விநாயகர் சதுர்த்தி ,
விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.
பிள்ளையாரை வணங்கி எந்த காரியத்திலும் ஈடுபட வேணும் என்று எங்கள் சமயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யார் எந்த கடவுளை வணங்கினாலும் முதலில் பிளையாரை வணங்கி விட்டுதான் எந்த கடவுளையும் வழிபடல் வேண்டும் என்று சொல்லப்படுகின்றது
மூன்று முறை தலையில் கையால் குட்டி மூன்று முறை தோப்பு கரணம் போட்டு ""அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே'' என்று தொப்பை யப்பனை வழிபடல் வேண்டும்
இவ்வாறு செய்யும் போது சுக்லாம் பரதரம் என்ற ஸ்துதியை கூட பாடலாம். அவ்வாறு தான் உண்மையில் செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். இது தெரியாதவர்கள் பலர். அதனால் அதை தவிர்த்து விட்டு தொப்பையப்பனே என்று சொல்வது வழமையாகி விட்டது
இந்த தோப்புக்கரணம் போடுவதற்கு பின்னால் ஒரு கதை இருப்பதாக எல்லாரும் அறிவார்கள். அறியாதோர் இருப்பின் இது தான் புராணக்கதை!! (இணையத்தில் எடுத்தது )

சுன்னாகம் கதிரமலை சிவன் தேவஸ்தானத்தில் இருக்கின்ற பிள்ளையார்
ஒருமுறை தவமுனிவரான அகத்தியர் கமண்டலமும் கையுமாக வந்து கொண்டிருந்தார். அப்போது காக உருவெடுத்து வந்த விநாயகப் பெருமான் அக்கமண்டல நீரை தட்டி விட்டு ஓடி விட்டார். காகம் கவிழ்த்த கமண்டல நீர் ஆறாக ஓடிவந்தது. காகம் தட்டியதால் விரிந்து பரந்த நீராக ஓடியது என்பதால் "காவிரி' என்ற பெயர் அந்நதிக்கு உண்டானது. அகத்தியர் தட்டி விட்ட காகத்தைத் திரும்பிப் பார்த்தார். அதைக் காணவில்லை. காகம் நின்ற இடத்தில் கொழு கொழு என்று ஒரு சிறுவன் நின்றிருந்தான். அவன் தான் தொப்பைக் கணபதி. செய்த செயலுக்காக முனிவரைப் பார்த்துச் சிரித்தான்.
கோபமடைந்த அகத்தியர் அச்சிறுவன் தான் கமண்டல நீரை கவிழ்த்தவன் என்ற எண்ணத்தில் அவனது தலையில் குட்ட முயன்றார். ஆனால், அச்சிறுவன் விநாயகப் பெருமானாக அகத்தியர் முன் நின்றான். குட்ட முயன்ற தவறுக்காக வருந்திய அகத்தியர், அப்படியே தன் தலையில் குட்டிக் கொண்டு, மன்னிக்குமாறு வேண்டினார். மற்றொரு கதையும் இதற்கு காரணமாக உள்ளது.கஜமுகாசுரன் என்னும் அசுரன், தேவர்களுக்கு கொடுமைகள் செய்து வந்தான். தேவர்களை தன்னைக் கண்டால், தோப்புக்கரணம் இடவேண்டும் என்று நிர்பந்தித்தான். தேவர்களும் பயந்துபோய் இச்செயலைச் செய்து வந்தனர். அவனைச் சம்ஹாரம் செய்ய கிளம்பினார் விநாயகர். விநாயகரையும் தோப்புக்கரணம் இடுமாறு கஜமுகாசுரன் ஆணையிட்டான். தன் தந்தத்தால் அவனைக் குத்திக் கொன்றார். கஜமுகாசுரன் அழிந்ததும் அவனுக்கு போட்டு வந்த தோப்புக்கரணத்தை நன்றியுணர்வுடன் தேவர்கள் விநாயகப்பெருமானுக்குச் செய்யத் தொடங்கினர். அதுமுதல் விநாயகருக்கு தோப்புக்கரணம் இடும் முறை உண்டானது.
இன்று ஆலயங்களில் கொழுக்கட்டை( மோதகம்) அவித்து ( பொறித்து) விநாயகரை வழிபடுவர். இன்று மோதக பிரசாதம் நன்றே கிடக்கும், யாருக்கும் மோதகம் ஆசை என்றால் அருகில் உள்ள ஆலயத்தை நாடவும்.
எனது பல்கலை காலங்களில் குறிஞ்சியில் நடை பெரும் விநாயக சதுர்த்தியில் நாங்கள் மோதகம் சாப்பிட்ட வரலாறே தனி. என்னுடன் எனது சாப்பாட்டு நண்பர்கள் ( E- Faculty e-98 இல் சாப்பாட்டுக்கு பிரபல்யமானவர்கள் யார் என்று தெரிந்து இருக்கும்) . அவர்கள் இன்று கூட ஏதாவது ஒரு கோவிலில் கட்டாயம் மோதகதுக்காக காத்து இருப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. வாழ்க நண்பர்கள்.
அது என்ன மோதகம் அவிப்பது விநாயகருக்கு இந்த விஷேட நாளில் , அதுக்கும் ஒருகதை உண்டு. அதுதான் இது
கொழுக்கட்டையின் கூர்மையான முன் பகுதி, விநாயகர் கூரிய புத்தியை அருள்வார் என்பதைத் தெரிவிக்கிறது. கொழுக்கட்டையின் வெள்ளை நிற வெளிப்பகுதி, எல்லோருக்கும் தெளிவான உள்ளம் தருவார் என்பதைத் தெரிவிக்கிறது. கொழுக்கட்டையின் உட்புறத்தில் இனிப்பான பகுதியோ, கணபதி எப்போதும் இனிய அருள் வழங்குவார் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது. எவரும் அதிகம் விரும்பாத வெள்ளெருக்கு மாலை, மருத்துவக் குணமுடைய அருகன் புல் அர்ச்சனை ஆகியனவும் விநாயகருக்குப் பிடித்தமானவை. "மற்றவர்களால் கைவிடப்பட்டவர்களுக்கும் நான் ஆதரவாக நிற்பேன்' என்பதை வெள்ளெருக்கு மாலை தெரிவிக்கின்றது. "விநாயகரை வணங்கினால் நோய்கள் தீரும்; பிறவி நோயும் மாயும்' என்பதை அருகன்புல் அர்ச்சனை அறிவிக்கின்றது. கணபதியைத் தொழுவோம்! கவலையெல்லாம் மறப்போம்!
இணையத்தில் -http://www.slokakids.com/
2 comments:
//
யார் எந்த கடவுளை வாங்கினாலும் முதலில் பிளையாரை வணங்கி விட்டுதான் எந்த கடவுளையும் வழிபடல் வேண்டும் என்று சொல்லபடுகின்றது
//
இது கருத்துப் பிழையா, அல்லது சொற் பிழையைக் கருதாப் பிழையா?
எழுத்து பிழை. திருத்தி விடுகிறேன்.
வருகைக்கும் உங்கள் கனிவான அறிவுரைகளுக்கும் அடியேனின் நன்றிகள்
Post a Comment