அண்மையில் நண்பர் ஒருவர் தனது வலையில் "தமிழ் " பற்றி எழுதி இருந்தார்.
கிடுகு வேலி:-வெல்லத்தமிழ் இனி மெல்லச்சாகுமா?
அதை தொடர்ந்து எனக்கும் ஒரு ஆர்வம் அதே தமிழ் பற்றி எழுதினால் என்ன ; கொஞ்சம் வித்தியாசமாய் ஐரோப்பிய புலம்பெயர் நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்களுடன் ஒரு அனுபவம் பற்றி எழுதினால் என்ன என்று ஒரு ஆர்வம் , ஆனால் அவர்களை நான் வடிவாக பார்க்க சந்தர்ப்பம் இல்லை. அவ்வாறு தெரிந்த ஓரிரண்டு குடும்பங்களும் வெவ்வேறு நாடுகளில். இருந்தாலும் இரண்டு சந்தர்ப்பங்கள். கோவில் இல்லை போனால் தியட்டர் .!!!ஊர்வலங்களில் , கவரும் ஒன்று கூடல்களில் இது எல்லாம் ஆகாது !!!
எம்மை போன்ற இளைஞர்களுக்கும் புதிய திரைப்படம் அன்று தான் புலம்பெயர் ஈழத்து தமிழரை ( பெரும்பாலும் பெண்களை ) காண முடியும் . வாயால் சொல்ல முடியாத நிலை, இப்படியா என்ன சரவணன் சார் இது என்று கையை நாடியில் வைச்சு சொல்லும் அளவுக்கு அவர்கள்!!!அவர்கள் எங்கயோ போட்டார்கள் ~~~கலாச்சாரம் சரி, உடை நடை பாவனை சரி.. என்ன செய்யுறது அவர்கள் இங்கே பிறந்து வளருவதால் வேற்று மொழி, கலாச்சாரம் , மாறும் காலநிலைகள் என்று எல்லாம் அவர்களின் விதி, இது பொதுவாகவே புலம்பெயர் ஈழத்தமிழரின் விதி.
இதைவிட ஊரில் இருந்து இங்கே திருமணம் செய்ய வந்தவர்கள் பலரும் தங்களை ஐரோப்பிய கலாச்சாரத்துக்கு மாற்றி ஏதோ தாங்கள் தமிழர்கள் இல்லை என்பதால் போலவும் இருக்கிறார்கள். :)
இருந்தாலும் அதுக்குள்ளே ஒன்று இரண்டு பேர் (சிறு பிள்ளைகள்) தமிழில் கதைக்கும் போது உணர்ச்சி உச்சந்தலையில் அடிச்ச மாதிரி இருக்கும். என்ன மாதிரி கதைக்கிறார்கள் என்று. கொழும்பில் பிழங்கும் ஒருவகை தமிழிலும் மேலாக நன்றாக கதைத்தார்கள் என்ற பெருமை இவர்களுக்கு இருக்கு. அது அவர்களின் பெற்றோர்கள் உணர்ந்து படிப்பித்து இருக்கிறார்கள் என்று பொருள் படும்.
இதை விட ஒரு சிலர் கதைத்ததை கேட்டும் இருக்கேன், அவர்கள் தமிழை கொன்றே கதைப்பார்கள், அது வேணும் என்று இல்லை , அவர்களுக்கு சொல்லி கொடுக்க அல்லது போனால் தமிழை பயில பயிற்சி கல்லூரிகள் பெரிதாக இல்லை . அவர்களுக்கு வேற்று மொழி கட்டாயம் பயில வேண்டும் அதனால் அவர்களுக்கு நேரமும் இல்லை மேலதிகமாக தமிழை படிக்க. அதை கொஞ்சம் சொல்லி குடுக்க அவர்கள் பெற்றோர்கள் முன்வருவதும் இல்லை. ஊக்கம் இல்லை என்றே சொல்லலாம்.
இனியென்ன நாங்கள் இங்கால வந்துட்டம் . இனியேன் தமிழ் என்று இருக்கிற சனத்தையும் பார்த்து உள்ளேன். :(
இங்குள்ள பல இளையோர் என்றால் நேரடியா ஈழத்தில் இருந்து வந்தவர்கள். அவர்கள் பிரச்சினை இல்லை. அவர்கள் வழமை போல கதைக்கிறார்கள்.
ஒரு முறை நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்று இருந்தேன். நீண்ட நேரம் உரையாடி கொண்டு இருக்கும் போது அவர்கள் பிள்ளைகள் வந்தார்கள் . எட்டு, பத்து வயசில் பிள்ளைகள். தமிழே தெரியுமா என்று கேட்டேன். " கொஞ்சம் கொஞ்சம் தெரியும் " என்று சொன்னார்கள். அந்த நேரம் எனக்கு ஞாபகம் வந்தது 95 இல் யாழ்ப்பாணம் அரசாங்க கட்டுப்பாட்டில் வந்த போது அங்கு நின்ற சீருடையினர் எங்களை போன்றோரிடம் கதைக்கும் போது கேட்பது "கொஞ்சம் கொஞ்சம் சிங்களம் தெரியுமா " என்று.. நாங்களும் " கொஞ்சம் கொஞ்சம் தெரியும்" என்று போட்டு அப்பி யனவா ( இது எங்கட பௌதீகவியல்- ரவி ஆசான் குப்பியில் சொல்லி தந்த ஒன்று) என்று சொல்லி கொண்டு போறது .. அதே மாதிரி மாறி போச்சு .. இப்போ.. இங்கே ..:(
மனசில் இப்பவும் நிக்குற கசப்பான சம்பவங்களில் இதுவும் ஒன்று:-
கொழும்பில் அனுபவம் ":-இரண்டு தமிழ் நண்பிகள் மாதிரி எனக்கு முதலில் பட்டிச்சு. மட்டக்குளிய 155 பஸ் வண்டிக்குள் , தமிழே வராது மாதிரி , ஆங்கிலத்தில் விக்கி தக்கி கதைப்பார்களாம், ஏனிப்படி ??? ஒன்றில் தமிழை பாவிக்க பயப்பிடலாம் அல்லது ஆங்கிலத்தில் புலமை தேவை என்பதற்காக ஒரு முயற்சி என்று தான் நினைத்தேன். பிறகு கொஞ்சம் காதை கொடுத்து பார்த்தால் அவர்கள் இருவரும் தங்கள் MC போய் செய்ய இருக்கும் ஷாப்பிங் பற்றி பேசுறாங்கள் ஆங்கிலத்தில். இதை விட கொடுமை அவர்கள் ஒரு குடும்பத்தை சேர்ந்த அக்கா தங்கை மார். இதை மருதானையில் வண்டியை மறித்து அடையாள அட்டை பார்க்கும் போது எனக்கு பின்னுக்கு நின்றார்கள் என்பதால் அறிந்து கொண்டேன். இதை விட நம்பர் ஒன்று காமெடி என்ன வென்றால் ஓடுற பஸ்வண்டி தமிழில் பாட்டு போட்டு கொண்டு ஓடுது. அப்ப ஏனிந்த பில்ட் டப் ?? நான் பக்கத்தில இருக்கேன் என்றதுக்காக வா ?? சீ சீ .. இது இப்போ ஒரு கலாச்சாரமாய் வந்து கொண்டு இருக்கு. நான் ஆத்திரப்படவில்லை. கதைக்கலாம், குறை சொல்ல வில்லை , இது எல்லாம் ஒரு கலர்ஸ் இக்கு செய்யுற வேலை. அதாவது தங்களுக்கும் ஆங்கிலம் தெரியும் என்பதற்காக ..:)
புரட்டாதி சனியில் எள்ளு எண்ணெய் எரிக்கும் அடியார்கள். புலம்பெயந்தால் போல சமய நடவடிக்கைகளை மறக்கவில்லை என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டல்.
கொழும்பில் இப்போது எல்லாம் கற்பூரம் தடை. சூழல் மாசடைவதை காரணம் சொல்ல்கிறார்கள் .. ஆனால் எமது கலாச்சாரத்தில் அது அன்று தொட்டே கற்பூர தீபம் மூலம் பூசை செய்வது வழமை, அதனையே இங்கேயும் செய்கிறார்கள், பார்க்க பிரமிக்க வைக்கின்றது. இங்கு சூழல் மாசடைய வில்லையா ???
சிவ சுப்பிர மணியார் கோவில் நெதெர்லாந்து
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நான் முருகன் கோவில் செல்வது வழக்கம், அங்கே பார்த்தால் தான் தெரியும் , எப்படி எங்கள் சமூகம் எவ்வாறு கலாச்சாரம் பேணுகிறார்கள் என்று. பெண்கள், கலாசார உடை என்று சொல்லப்படக்கூடிய, சேலை அணிந்து,( வயது வந்தோர்), சிறுமிகள் சுடிதார் போட்டு,பொட்டு வைத்து கொண்டு வந்து இருப்பார்கள்.( வருத்தம்- இதை கொழும்பில் உள்ள ஆலயங்களில் காண முடியவில்லை.முக்கிய குறிப்பாக பேராதனையில் உள்ள குறிஞ்சிக்குமரனில் பெண்கள் என்றுமே கலாசார ஆடை அணிந்தே வருவார்கள். ) சுவாமி தூக்கும் போது வேட்டி அணிய வேணும் என்று ஒரு வழமை இருக்கு. கொழும்பில் அவ்வாறு செய்வதை நான் காணவே இல்லை. வேட்டி வாங்க வசதி இல்லை என்று நினைக்க வேண்டாம்.. இது எல்லாம் ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டியது. சரி நீங்க வேட்டி கட்டாவிட்டால் ஒதுங்கி இருங்க. அதுவே உத்தமம், யாரோ ஒருத்தன் உணர்ந்து வேட்டி கட்டி கொண்டு முன்னுக்கு வருவான். நிச்சயம் அது நடக்கும்.
சிவசுப்பிரமணியார் கோவில் நெதெர்லாந்து - அடியேன்
ஜுரிச் முருகன் ஆலயம்
நெதர்லாந்தில் உள்ள முருகன் கோவில் ஒன்றில், பூசைகளை தொடர்ந்து நடை பெறும் பஜனைகளை பெண்களே நடத்தி வைப்பார்கள். முறையாக சங்கீதம் பயில பயிற்சி பாசறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆலயத்திலும் அது அமைக்கப்பட்டுள்ளது. புலம் பெயர் தமிழர்களும் இன்று வரை தங்கள் கலாச்சாரத்தை , தங்கள் வரலாறுகளை பேணி பாதுகாத்து வருகிறார்கள் என்று எனக்கு உறுதிப்படுத்தப்பட்டது அண்மையில் சூரிச் சென்று இருந்த போது ஏற்பட்ட அனுபவங்கள் தான். அங்கே முருகன் மற்றும் சிவன் ஆலயங்கள் சென்றேன். அதை விட தமிழர் வாழும் பிரதேசங்களுக்கும் சென்று வந்தேன். அவர்கள் நூலகம்,தமிழ் மன்றம், சங்கீதசபை, விவேகானந்தர் சபை, திருவள்ளுவர் மன்றம், நடன சபை, திருமண சேவை எல்லாம் அமைத்து கலாசாரங்களை பேணியும் புலம்பெயர் சமூகங்களுக்கு புகட்டியும் வருகிறார்கள்.அவர்களுக்கு உரிய ஆர்வம் நாட்டில் இருக்கும் எங்களிடம் இல்லை என்றே சொல்லலாம்.
ஜுரிச் முருகன் கோவில்; சு .பி : ச்விச்ஸ் பிரான்க் )
அங்கே ஒரு சில சிறுவர்களுடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்களிடம் கேட்டேன் , யாழ்ப்பாணம் தெரியுமா ? நல்லூர் தெரியுமா ? திருகோணமலை தெரியுமா என்று? தெரியாது என்று பதில் வந்தது. சேர்ந்து யாழ்ப்பாணத்தில் இந்த தமிழரசன் ஆட்சி செய்தான் என்று பதிலை கூட சொல்லி முடித்தார்கள். கேட்கும் போது எனக்கே ஒரு அவமானம் மாதிரி. எத்தினை பேருக்கு பதில்தெரியும்? இப்படி எல்லாம் எங்கள் வரலாறுகளை படித்து இருகின்றார்கள் என்று கேட்கும் போது பிரமிக்க வைக்கின்றது.
சிவன் கோவில் - Zurich
சிங்கிலா சிங்கம்
இவ்வாறு இவர்களின் முயற்சிக்கு யார்தான் காரணம்; ஒன்று பெற்றோர்கள். மற்றது புலம்பெயர் நாடுகளில் ஈழத்து கலாசாரங்களை பேணி பாதுகாத்து வரும் விதத்தில்,பிரபல்யமான புலம்பெயர் பதிவுகளாக புலம்பெயர் சஞ்சிகைகள் விளங்குகின்றன. இவற்றில் ,கலை இலக்கியம் சார்ந்தனவே அதிகம். அவை கவிதை, சிறுகதை, தொடர்கதை, நூல் மதிப்பீடு, நூல் அறிமுகம், விமர்சனம், கட்டுரை, வாசகர் கருத்து, அரசியல், மாற்றுக்கருத்து, எதிர்வினை, ஆகியவற்றை பிரதானமாகவும் வேறும் சில விடயங்களை உபபிரிவுகளாகவும் கொண்டு வெளி வருகின்றன.
உண்மையாகவே குடுத்து வாங்கும் விலைக்கு ஏற்ற அளவு அவை தகவல்களை பகிர்கின்றன என்பது உறுதி.
எனக்கு வாங்கி படிக்க சந்தர்ப்பம் கிடைத்தவை.
உறவுகள்,தமிழ் முரசு, தமிழ்த் தென்றல், தாயகம், தேடல், பள்ளம், பாரிஸ் ஈழநாடு,தமிழ் ஏடு,சுவடுகள்,செய்திக்கதிர்.
இதை விட நாடுகளில் நல்ல பதிவர்களும் உருவாகி வருகிறார்கள், இணைய வசதிதானே இங்கே பிரச்சனை இல்லை அதனால் தேடியும் பயில கூடிய வசதி இருக்கு. இவற்றை எல்லாம் இந்த சமூகத்தில் இப்போது இருக்கின்ற நம்மை போன்றோர் வழி நடத்தினால் தான் எதிர் காலத்தில் தமிழை மட்டும் அல்ல எங்கள் கலாச்சாரத்தையும் சேர்த்து பாதுகாக்க முடியும் என்பதில் ஐயம் இல்லை.
மேலதிகமாக ஊடகத்துறை ; தமிழ் தனியார் ஊடகங்கள் பல இப்போது உலகெங்கும் பல உருவெடுத்து வருகின்றது. அவை பல சினிமாவை வைத்துதான் இயங்குகின்றன. சினிமா மூலம் தான் இயங்கலாம். உண்மை . இருந்தாலும் அறிவியல் , மொழி, கலாச்சாரம் சம்மந்தமாக கொஞ்சம் கூடுதலாக ரசிகர்களிடையே பகிரலாம் என்று நான் நினைக்கின்றேன்.
இறுதியாக, அண்மையில் நடைபெற்ற ஒரு கலாச்சார நிகழ்ச்சிக்கு செல்லக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அங்கே நடை பெற்ற நிகழ்ச்சிகளில் கலாச்சாரத்தை கட்டி காக்கும் கூத்து, நடன நிகழ்ச்சி, இசையமுதம் என்னையே மறந்து போய் இருந்து ரசிக்கும் விதத்தில் இருந்தது.
குறிப்பாக, நாட்டு கூத்தும் , கீழைத்தேய இசையமுதமும் பெண்களே செய்தார்கள். நன்றாகவே இருந்தது. நீண்ட நாட்களுக்கு பின்னர் ( பல்கலைக்காலத்துக்கு பின்னர் என்றே சொல்லலாம்) நல்ல ஒரு நிகழ்ச்சியை பார்த்தேன் ரசித்தேன்.
ஒரு புறம் இப்படி இருக்க....மறு புறம் ...மிகவும் கொடுமையான கலாச்சார சீரழிவுகளில் ( நைட் கிளப், மது பாவனை, புகைப்பிடித்தல் , அறம் புறம்பான தகாத உறவுகள் ) புலம்பெயர் நாடுகளில் எமது பெண்களே கொண்டு இருக்கிறார்கள் (இதுக்கேன் இங்கே வரணும் இப்போ தமிழர் வாழும் கொழும்பிலையே அரங்கேறி வருவதாகவும் ) நண்பர்கள் கூற கேட்டு உள்ளேன்.
நாங்கள் தான் எதிர்கால சந்ததியினர்; எதிர் காலத்தை உருவாக்கும் சந்ததியினர். நாங்கள் ஒவ்வொருவரும் எடுக்கும் ஆர்வம் தான் எங்களின் பின் எங்கள் மொழி எங்கள் கலாச்சாரம் எல்லாவற்றையும் பாதுகாக்கும் என்பது உறுதி.
கொஞ்சம் சிந்தியுங்கள் தோழர்களே. இனியாவது களத்தில் இறங்குங்கள்.
No comments:
Post a Comment