யாரும் அடிச்சு பிடிச்சு இது எந்த செல்வி ??? என்று பார்க்காதீங்க. நான் சொன்ன செல்வி படத்தின் பெயர் . வேற எதுவும் இல்ல.
சிலர் இந்த சீரியல் செல்வியோ ( நம்மளுக்கும் உந்த சீரியலுக்கும் ஆகாது பாருங்கோ , இதுவரை எந்த சீரியலும் பார்த்தும் இல்லை, பார்க்க போறதும் இல்லை ) இல்லாட்டி போனால் நம்மட காதலி செல்வியோ இல்ல யாரோ ஒரு பொண்ணு செல்வி என்றோ நினைத்தால் வருத்தம் தெரிவிக்கின்றேன்.
இந்த பாடல் யாழ் இல் உள்ள ஒரு பிரபல்ய குளிர்களி கடையில் (கல்யாணி - பெயரே பிரபல்யம் - பிறகு குளிர்களி , ரோல்ஸ் பிரபல்யமாய் இருக்காதா ??) உயர்தரம் வகுப்புகளுக்கு இடையிலான ( science hall தனியார் கல்வி நிறுவனத்தில் பயிலும் போது) இடைவேளையின் போது உணவருந்தி வர சென்ற போது முதல் முதல் நான் கேட்டேன்.
அந்த நேரம் கேட்டது ( நான் இருந்த மன நிலை நல்லது - வகுப்பில நல்ல குளிர்மையாக பார்த்து போட்டு தானே வந்தது ) என்னமோ என்னை ஒரு கற்பனை உலகத்துக்கு இட்டு சென்று விட்டது , பிறகு யாரோட என்று எல்லாம் கேட்க வேணாம். யாரும் உயர்தரம் 97 இல் பிரபல்யமானவர்கள் யாருடனும் என்று வைச்சு கொள்ளுவம். ஆஹா !!!
உண்மையில் அடுத்த கணமே சூப்பர் ஷோ ரெகார்டிங் பார் சென்று பாட்டை சொல்லி அடிச்சு கொண்டு வந்து வீட்டில் பல தடவை கேட்டு ரசித்தேன். எனது ஹிட் லிஸ்ட் இல் உள்ள இந்த பாடலை நீங்களும் கேளுங்கள்.
ஆகா இப்படி ஒரு கற்பனை என்ன கொடுமை இது . நாயை வைத்தே ஒரு டூயட் பாடல். அந்த காலத்தில் இருந்த வசதிகளை கொண்டு அமைய பெற்ற பாடலை பாலா வும் ஜானகி அம்மாவும் அனுபவித்தே பாடியுள்ளார்கள் போலும்.
ராஜா வும் போட்டு தாக்கி உள்ளார் !!!
பாடல்: இள மனது பல கனவு
திரைப்படம்: செல்வி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா
இள மனது பல கனவு விழிகளிலே வழிகிறதே
சிறு வயது புது உறவு அருகினிலே வருகிறதே
இந்த மனதுக்கும் வயதுக்கும் சுகமென்னவோ
இங்கு புரியட்டும் புரியட்டுமே
அது இரவுக்கும் பகலுக்கும் பொதுவல்லவோ
இன்று தெரியட்டும் தெரியட்டுமே
இள மனது பல கனவு விழிகளிலே வழிகிறதே
சிறு வயது புது உறவு அருகினிலே வருகிறதே
கொடியிடை நாணத்தில் நெளிகிறதோ
கனிகளின் பாரத்தில் வளைகிறதோ
மனமொரு மோகத்தில் விழுகிறதோ
மருவிடும் ஆசைகள் வருகிறதோ
விரல் பட்டு இளமொட்டு விரியட்டுமே
வெட்கம் விலகட்டும் விலகட்டுமே
இரு கண்ணும் இரு கையும் இள நெஞ்சமும்
அன்பை எழுதட்டும் எழுதட்டுமே
புது மலரை முதன் முதலாய் தொடுவதினால் சுடுகிறதோ
புது மலரை முதன் முதலாய் தொடுவதினால் சுடுகிறதே
இள மனது பல கனவு விழிகளிலே வழிகிறதே
சிறு வயது புது உறவு அருகினிலே வருகிறதே
இந்த மனதுக்கும் வயதுக்கும் சுகமென்னவோ
இங்கு புரியட்டும் புரியட்டுமே
அது இரவுக்கும் பகலுக்கும் பொதுவல்லவோ
இன்று தெரியட்டும் தெரியட்டுமே
இள மனது பல கனவு விழிகளிலே வழிகிறதே
சிறு வயது புது உறவு அருகினிலே வருகிறதே
No comments:
Post a Comment