2009-10-04

கண்ணனே நீ வர காத்திருந்தேன்!!!

என்றுமே மறக்க முடியாத இந்த பாடல்1988 இல் நடந்த எனது சின்னம்மாவின் திருமண வைபவத்தில் அமரர் அளவையூர் நாதஸ்வர வித்துவான் N.K. பத்மநாதன், சுந்தர மூர்த்தி & புண்ணியமூர்த்தி குழுவினர் எங்கள் சுன்னாகம் வீட்டில் வைத்து சேவகத்தில் பிளந்து கட்டி இருந்தார்கள். அன்றே இருந்து எனக்கு இந்த பாடல் மீது அப்படி ஒரு ஆசை. என்னமோ தெரியல சின்ன வயசில் பிடிச்ச ஆசை சந்தர்ப்பம் கிடைக்கும் நேரங்களிலும் கேட்டு ரசிப்பேன். ஒருக்கா நீங்களும் ரசித்து பாருங்களேன். பிடிக்க என்னுமொரு ஆசை ஜேசுதாஸ் ஐயாவும் உமா ரமணனும் பாடியதுவும் தான்.

நேரம் இருந்தால் படத்தையும் பாருங்கள் மோகனின் சூப்பர் 25 படங்களில் இதுவும் ஒன்று!!!

படம் : தென்றலே என்னை தொடு
குரல் : ஜேசுதாஸ், உமா ரமணன்
இசை : இளையராஜா

கண்ணனே நீ வர காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
மன்னவன் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மத நாடகமே
அந்திப்பகல்...கண்ணிமையில்...
உன்னருகே...ஹே
கண்மணி நீ வர காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்

நீலம் பூத்த ஜாலப்பார்வை மானா மீனா
நான்கு கண்கள் பாடும் பாடல் நீயா நானா
நீலம் பூத்த ஜாலப்பார்வை மானா மீனா
நான்கு கண்கள் பாடும் பாடல் நீயா நானா
கள்ளிருக்கும்...பூவிது பூவிது
கையணைக்கும்...நாளிது நாளிது
பொன்னென மேனியில்...மின்னிட மின்னிட
மெல்லிய நூலிடை...பின்னிட பின்னிட
வாடையில் வாடிய...ஆடையில் மூடிய தேன்...நான்

கண்மணி நீ வர காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன் என்னுடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மங்கையின் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே
பொன்னழகே...பூவழகே...என்னருகே...ஹே
கண்ணனே நீ வர காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்




ஆசை தீர பேச வேண்டும் வரவா வரவா
நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா மெதுவா
ஆசை தீர பேச வேண்டும் வரவா வரவா
நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா மெதுவா
பெண் மயங்கும்...நீ தொட நீ தொட
கண் மயங்கும்...நான் வர நான் வர
அங்கங்கு வாலிபம்...பொங்கிட பொங்கிட
அங்கங்கள் யாவிலும்...தங்கிட தங்கிட
தோள்களில் சாய்ந்திட...தோகையை ஏந்திட யார்...நீ

கண்ணனே நீ வர காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன் என்னுடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மன்னவன் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே
அந்திப்பகல்...கண்ணிமையில்...உன்னருகே...ஹே

கண்மணி நீ வர காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன் என்னுடல் வேர்த்திருந்தேன்

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...