2009-10-05

ஆசிரியர்கள் தினம்-மீட்கும் நினைவுகள்

செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர்கள் தினம். மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள் என்று ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளைச் சொல்வதுண்டு. மனிதனை முதன்மை படுத்த உரமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்றால் அது மிகையாகாது.

'எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு" என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள் தான். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால் என்ன? இதில் மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச் சமம். இது போல் தான் மாணவ சமூகமும் குறிக்கோள், லட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர்; இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவ மனதில் நன்கு பதிய வைத்து, அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் பொழுது ஆசிரியர்களின் முகத்தில் ஓர்; மகிழ்ச்சி தோன்றும். இதனை சொல்வதை விட உணர்வுப் பூர்வமாக உணர முடியும். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள். ஒரு சிறந்த ஆசிரியர்களின் பண்புகள், குணங்களை பார்க்கும் மாணவ, மாணவிகளின் மனதில் அப்படியே பதியும். அதனால் ஆசிரியர்கள் தங்களை மாணவர்களின் காலக் கண்ணாடி என்ற எண்ணத்தில் தான் பணியாற்றி வருகின்றனர்.அப்படி பணியாற்றுவதன் மூலம் கடினமாக உழைத்து வாழ்வில் ஒளிரும் மாணவ சமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாக மாறுகின்றனர்.

இந்த ஆசிரியர்களின் அருமையை அவனிக்கு புலப்படுத்தும் நோக்கில்தான் ஆண்டுதோறும் ஆசிரியர் தினம் மிகுந்த எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் கொண்டாடப்படுகிறது.

முன்னர் ஒரு காலத்தில் எனது கல்லூரியில் ஆசிரியர் தினம் கல்லூரி மண்டபத்தில் பெரிய எடுப்பில் நடை பெறும். அங்கே தங்கள் தங்கள் விருப்பமான ஆசிரியர்களுக்கு மாணவர்கள் ஒழுங்கு வரிசையில் நின்று சென்று மாலை அணிவித்து வாழ்த்துவார்கள்.
எனக்கு தெரிந்த வகையில் நான் ஆண்டு ஒன்பது தொடக்கம் ஆண்டு பன்னிரண்டு வரை ஒரு சில ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து , அவர்கள் திருப்பாதம் வீழ்ந்து வணங்கி உள்ளேன்.


ஆண்டு 9 - சா வே . பஞ்சாட்சரம் - சமயம் / தமிழ்
ஆண்டு 10- சா வே . பஞ்சாட்சரம் - சமயம்
ஆண்டு 11 -சா வே . பஞ்சாட்சரம் - சமயம்
ஆண்டு 12- திரு இலட்சுமணபிள்ளை - தூய கணிதம் , வகுப்பு ஆசான்.

இவர்கள் எனது கல்லூரி வரலாற்றில் பெரிய திருப்பங்களுக்கு உரிய ஆசான்கள்.

சா வே ஆசானிடம் முறையாக தமிழ் மற்றும் சமயம் படித்த காரணம் தான் இன்றும் என்னை சமய ரீதியாகவும் தமிழ் ரீதியாகவும் ஈடு பட செய்தது என்று சொல்லலாம்.

இவர்களை விட எனக்கு பாடம் படிப்பித்த சகல ஆசான்களும் திருப்பு முனைக்கு காரணம் தான் . உள்ளடக்கம் ( எனது தாயாரும்)

!!!வாழ்த்துக்கள் எல்லா ஆசிரியர்களுக்கும் !!!

இதைவிட கொடுமை என்ன என்றால் பாடசாலையில் தான் இப்படி என்றால் மாலை நேரங்களில் கல்வி நிலையங்களிலும் குசும்பு தான்.
ஆசான்களை இதே சாட்டில் வைச்சு கடிச்சு( உண்மையாகவே கடிக்கிறது இல்லை ) துவைச்சு எடுப்பது ஒரு வழமையான காரியம்!!!

இதற்கிடையில் ஆசான் மாருக்கு எங்கட பொம்பிளை பிள்ளைகள் வைச்ச பேர்களை பற்றி ஒரு முறை யாரோ பின்னல் இருந்து சவுண்ட் குடுக்க அதுக்கு அப்புறம் என்ன ஒரு கூ தான். பிறகு என்ன எல்லா பெயர்களும் வெளியில வந்து ஒரு மாதிரி ஆசான்களை நோண்டியடிக்கும் பம்பலும் நினைவில் நின்ற சம்பவங்கள்.


பல்கலை வாழ்க்கையில் எனக்கு தெரிந்த அளவில் ஓரிரு தடவைகள் எல்லா பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், உபவேந்தர் போன்றோர் ஒரு வரிசையில் நிக்க மாணவர்கள் வரிசயில் சென்று வெத்திலை குடுத்து அவர்களின் காலில் வீழ்ந்து வணங்கி வந்த சம்பவங்கள் ஞாபகம் இருக்கு.

நான் விரிவுரியாளர் ஆக பணி புரியும் காலத்தில் நாங்களும் வரிசயில் நிக்க எங்கள் மாணவர்கள் வந்து எங்களிடம் ஆசிர்வாதம் பெற்று செல்லும் போதுதான் எனக்கு இந்த "குரு" வின் மகிமை விளங்கினது. எவ்வளவு புனித மானது என்று.

ஆசிரியர்களுக்கு :-
ஆ‌சி‌ரிய‌ர்க‌ள் இளைஞ‌ர்களு‌க்கு ந‌ல்ல மு‌ன்மா‌தி‌ரியாக ‌திக‌ழ்‌ந்து ப‌ண்பாடு ம‌ற்று‌ம் நாக‌‌‌ரீக‌த்‌தி‌ன் அடி‌ப்படைகளாக ‌விள‌ங்க வே‌ண்டு‌ம்.
மீண்டும் ஒரு முறை ஆசிரியர் தின வாழ்த்துக்கள் !!!

2 comments:

கதியால் said...

ஆசிரியர்....ஒரு மனிதனின் வாழ்க்கைப் பயணத்திற்கான பாதயின் திறவுகோல். அர்ப்பணிப்பான ஆசிரியர்கள் என்றும் எம் இதயங்களை விட்டு அழிந்ததாய் வரலாறு இல்லை. எம் வாழ்வில் வந்த அனைத்து குருவுக்கும் இந்நாளில் வணக்கமும் வாழ்த்துக்களும். இந்நாள் மட்டுமல்ல எந்நாளும்.

ப்ரியானந்த சுவாமிகள் said...

உண்மை கதியால்... :)..
மன்னிக்கவும் பதில் போட தவறி விட்டேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...