2009-10-08

உன்னை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட-அன்புள்ள ரஜினிகாந்த்

அன்புள்ள ரஜினிகாந்த் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. நடராஜ்( இலங்கை மன்னாரைச் சேர்ந்த "சிலோன்" நடராஜன் - திருட்டு பயலே படத்திலே விவேக் கூட ஒரு காமெடி இல உங்களுக்கு சிலோன் நடராசனை தெரியுமோ என்று கேட்டது போல இருக்கு ) இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், அம்பிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் குழந்தை நட்சத்திரம் மீனா பின்னாளில் ரஜனிகாந்துடன் ஜோடியாக "வீரா", "எஜமான்" "முத்து" இலும் , ரஜனியின் "குசேலன்" படத்திலும் நடித்திருக்கிறார்.

தீவிர ரஜனி ரசிகன் நான் என்பது என்னுடன் பழகிய நண்பர்களுக்கு தெரியும். ( இது பற்றி பிறகு பதிவில் எழுதுகிறேன்) ஆனாலும் குறை நிறைகளையும் கதைத்து நியாயங்களை ஏற்று கொள்ளும் அளவுக்கு நான் ரஜனி ரசிகன். இப்போ சிலர் ( விடலை பசங்கள் எல்லாம் விரலை தூக்கி, கோலரில வாயை வைக்கிறது எல்லாம் ரஜனி எப்பவோ செய்து விட்டார் அதாவது இருபது வருசத்துக்கு முன்னரே - கண்ணா புதுசா ட்ரை பண்ணுங்க எதாவது அப்போதான் சமுதாயம் உங்களையும் ஏற்று கொள்ளும் -நான் சொல்லல சிவாஜி படத்தில் விவேக் சொன்னது ) தாங்கள் தான் அடுத்த சுப்பர் ஸ்டார் என்று லொள்ளு பண்ணுவது எல்லாம் முடியலப்பா. என்ன செய்யுறது புலம்பிட்டு போகட்டும்.

சரி விஷயத்துக்கு வருவோம் இந்த படத்தில் தான் லதா ரஜனிகாந்த் முதல்முதலாக பின்னணி பாடினார். பாடல் - "கருணை உள்ளமே, ஓர் கடவுள் இல்லமே".

ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்தாகவே வருகிறார்.

அன்றைய காலங்களில் ரஜனியின் எளிமையான நடிப்பு இந்த படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் செதுக்கப்பட்டுள்ளது.

எனக்கு இந்த படத்தில் வந்த இரண்டு பாடல்கள் என்றுமே பிடிக்கும்
1- தேன் பூவே பூவே வா தென்றல் தேட
2-கருணை உள்ளமே, ஓர் கடவுள் இல்லமே

இரண்டையும் கேட்டு பாருங்கள் மனம் உருகி போடுவீர்கள்.. ராஜா தனது இசையால் பட்டி தொட்டி எல்லாம் போட்டு தாக்கி உள்ளார்.


1-தேன் பூவே பூவே வா தென்றல் தேட


பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி

தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடுதான்
உனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட


பனி விழும் புல்வெளியில் தினம்தினம் பொன் பொழுதில்
கனி விழும் உன் மடியில் கலந்திடும் உன் உறவில்
நானும் கம்பன் தான் கொஞ்சும் போது
கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது
தேவதேவி என்னோடு தான்


(உனை நினைத்தேன்)

இடையினில் உன் விரல்கள் எழுதிடும் என் சுகங்கள்
அணைக்கையில் உன் உடலில் அழுந்திடும் என் நகங்கள்
மீண்டும் மீண்டும் நான் வேண்டும்போது
காதல் யோகம்தான் கட்டில் மீது
காணவேண்டும் உன்னோடு தான்

(உனை நினைத்தேன்)


2-கருணை உள்ளமே, ஓர் கடவுள் இல்லமே

பெ: கடவுள் உள்ளமே ஒரு கருணை இல்லமே(2)
அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடவோ
தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வமன்றி யாரும் இல்லை

குழு: தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வமன்றி யாரும் இல்லை
(கடவுள்)

பெ: சின்ன சின்ன பூக்கள் சிந்திய வேளை
அன்பு என்னும் நூலில் ஆக்கிய மாலை
பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா என் தலைவா

குழு: ஊனம் உள்ள பேரை காத்திடும்
இறைவா என் இறைவா

பெ: ஜீவன் யாரும் ஒன்று
இங்கு யாரும் சொந்தமே

குழு: ஜீவன் யாரும் ஒன்று
இங்கு யாரும் சொந்தமே

பெ: இது தான் இயற்கை
தந்த பாசபந்தமே

(கடவுள்)

பெ: கண்ணிழந்த பிள்ளை
ஆனால் உன்னை
கண்ணீருக்கும் பேர்கள்
கண்டது இல்லை
ஊருக்கொரு வானம் இல்லையே
இறைவா உன் படைப்பில்

குழு: ஆளுக்கொரு ஜாதியில்லையே
அது போல் உயிர் பிறப்பில்

பெ: உண்ணும் உணவும் நீரும்
தினம் தந்த தெய்வமே

குழு: உண்ணும் உணவும் நீரும்
தினம் தந்த தெய்வமே

பெ: என்றும் உனக்கே நாம் நன்றி சொல்லுவோம்
(கடவுள்)


முத்து மணி சுடரே வா கூட பிடிக்கும் ; இருந்தாலும் இவையிரண்டும் மேவி விட்டன. பாட்டு சுப்பர் இருந்தாலும் ஒழுங்கு வரிசையில் மூன்றாம் இடம் !!! ஜேசுதாஸ் ஐயா பாடி கலக்கி இருக்கார் !!!1




பாடியவர்: K.J. யேசுதாஸ்

ரஜினி அங்கிள்............

முத்து மணி சுடரே வா...
முல்லை மலர் சரமே வா...

முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா
கண்ணுரங்க நேரமானதே...
கண்ணே என் பொண்ணே தாலேலோ

[முத்து மணி...]

ம்ஹ்ஹூஊம் நான் தூன்க மாட்டேன்...
அங்கிள் நான் ஒளிஞ்சுக்கிறேன்.. என்ன புடிங்க பாக்கலாம்

ஆயிரம் பூவோடு பாடிடும் வண்டே...
ஆசைகள் பூத்தாடும் தேன்மொழி எங்கே...
அழகாய் நாள் தோறும்
புதுமை கொண்டாடும்
மலரே நீ பேசு...அவளைக் கண்டாயோ...
தானாக தள்ளாடும் பூவண்ணமே...
தானாக தள்ளாடும் பூவண்ணமே...
உடைகள் அணிந்து கனவு சுமந்து
நடந்த நிலவை நீயும் தேடுவாய்...

ரஜினி அங்கிள்...நான் இங்க இருக்கேன்...இங்க...இங்க...

முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா
கண்ணுரங்க நேரமானதே...
கண்ணே என் பொண்ணே தாலேலோ

காற்றினில் தேர் போல ஓடிடும் மானே...
தன் வழி போனாளே...கனிமொழி எங்கே...
அலை போல் பாய்ந்தோடும் முயலே நீ சொல்லு
தனியே பார்த்தாயோ...அவளும் வந்தாளோ...
நான் தேடும் பொன்மாலை கண்டேனடி...
நான் தேடும் பொன்மாலை கண்டேனடி...
அசைந்து குலுங்கி சிரித்து சிரித்து
ஒளிந்த பதுமை நேரில் வந்தது...

[முத்து மணி...]

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...