2009-10-01

வத்திக்கான் பயணமும் அனுபவங்களும்

ஆசைகள் பல விதம். ஒவ்வொருக்கும் ஒவ்வொரு ஆசை. அந்த வகையில் எனக்கும் ஒரு சில ஆசைகள். அதில் ஒன்று தான். வத்திக்கான் செல்வது.
இந்த ஆசை எனக்கு வரக்காரணம், முன்னர் நடந்த சம்பவம் ஒன்றுதான்.

1994 இல் ஏற்பட்ட சமாதான காலத்தில். கிளாலி ஊடாக பயணம் செய்து சாதாரண தரம் முடிந்த காலத்தில் ( டிசம்பர் பிற்பகுதியும் ஜனவரி , மாசி நடுப்பகுதியும் உள்ளடக்கம் ) அம்மாவுடன் நாங்கள் கொழும்பில் தங்கி இருந்தோம். அப்போது அம்மாவுக்கு இடம் மாற்றம் கிடைத்தது. ஆனாலும் செயற்படுத்த முடியாத காரணத்தால் அதனை பின் தள்ளி போட வந்து ஏற்பட்ட தடங்களால் நீண்ட காலம் கொழும்பில் செலவிட வேண்டி வந்தது.

இத கால கட்டத்தில், கொழும்பில் தாராளமாக உலாவலாம். எதுவும் பிரச்சினை இல்லை. போலீஸ் பதிவு கூட இல்லை.

அந்த காலத்தில் இன்றும் ஞாபகம் இருகின்றது, வெள்ளவத்தையில் காலி விதிக்கு குறுக்காக மேலாக பாதையை கடக்கும் இரண்டு பாலங்கள்( மேம் பாலங்கள் கிடந்தது).

தை மாசம் பிறந்த நேரம் கொழும்பே களை கட்டினது. காரணம் பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் (Pope John Paul II )கொழும்பு வாராராம்.[1] அவர் அருள் கிடைக்க எல்லாரும் வரட்டுமாம் என்று நாங்களும் ஒரு மாதிரி Galle Face வந்து சேர்ந்தோம். என்ன சனம். ஆங்காங்கே இலங்கை போலீசார் கடமையில். நீண்ட நேரம் அவர் அருள் பாலித்து விட்டு சென்றார்.


அப்போது தான் நானும் இந்த அருளப்பர் யார் என்று ஆராய்ந்த போது கத்தோலிக்க சமயம் பற்றிய அறிவு சாடையாக ( எனது சமயம் பற்றியே சரியாய் தெரியாது இது வேற கதை) தெரிந்தது. அப்போது சொன்னார்கள் இந்தியா இலங்கையில் இருக்கின்ற சமயம் பரப்பும் இந்து குருமார்கள், குரவர்கள், ஆலயங்கள் போல இத்தாலியில் உள்ள ரோம் நகரில் உள்ள வத்திக்கானும்[2][3][4] ஒரு பெரிய சமய சம்மந்த மான இடம். சென்று வாருங்கள் கிடைத்தால் என்று. அங்கு போவது என்றால் எப்படி.

கனவில் இதை எல்லாம் சுமந்த படி ( இதை விட என்னும் பல பல ... ) வாழ்கையை ஓட்டி கொண்டு இருக்கும் போதுதான், உயர் கல்வி படிக்க ஐரோப்பா பயணம் கிடைத்தது. கிடைத்தவுடன் போட்ட திட்டங்கள் பல.
அதில் சில

* வத்திக்கான் செல்வது
* Venice செல்வது- (ஆண்டு எட்டில் Anne & Padmini discussion செய்தவை இப்பவும் ஞாப்கம் இருக்கு. ஒன்று சொல்ல வேணும், இப்போ அந்த Anne & Padmini எல்லாம் எடுத்து போட்டினமாம். நியூ syllabus இப்போ )
* Pizza செல்வது - ஜீன்ஸ் படம் தான் என்னை உசுப்பேத்தியது
* Eiffel Tower உச்சிக்கு ஏறுவது. - (ஜீன்ஸ் படம் தான் என்னை உசுப்பேத்தியது - வேறு ஒரு பதிவில் அது வரும் :) )
* ஒஸ்லோ பயணம் - நாட்டில் சமாதானம் நடந்த காலம் இந்த பிரதேசம் பிரபல்யம்.

என்ன ஐஸ்வர்யாவும் சங்கரும் தான் போகலாமா நாங்க போனா என்ன என்று ஒரு திமிர்.( சும்மா )


ஜீன்ஸ் பாடல்

இவை என் மனதில் இருந்த ஆசைகள். அப்படியும் நிறைவேற்றாமல் வர மாட்டேன் என்று முடிவுடன் ஐரோப்பா பயணம் ஆனேன்.

இத்தாலி பயணம்

ஒரு மாதிரி நாளும் குறித்து வைத்து விட்டு கழகத்தில் படித்து கொண்டு இருந்தேன். நாள் வந்தது. விமானம் மூலம் பயணம். இத்தாலியின் வட பகுதியில் உள்ள Milan நரகத்தில்(மாடலிங் இக்கு பிரபல்யமான நகரம் மாடல் போல தான் இதை பெண்கள் கூட ஒரு விதத்தில், அழகாய் இருப்பார்கள்) இறங்கி புகை வண்டி மூலம் தொடர் பயணம் ரோம் நகரத்தை நோக்கி. அதிகாலையில் சிங்கம் சில நண்பர் கூட்டத்துடன் ரோமாபுரியில் கால் பதிப்பு. உடனேயே தங்க இருந்த hotel சென்று குளித்து விட்டு. காலை உணவை உண்ட பின், மேலதீக உணவுடன் (நீண்ட நேரம் வரிசையில் காத்து இருக்க வேண்டியதால்) தயார்.

காலை 9:00 மணி வத்திக்கான் நரகத்தில் கால் பதிப்பு. ஒரு கணம் ஆடியே போனேன். என்ன கலையமைப்பு. என்ன அமைதி. எல்லாம் பார்க்கவே எதோ நல்லூரில் நின்று முருகா என்று கூபிடுற மாதிரி ஒரு feeling.இங்கே முருகனை கூப்பிட ஏலாது:)எங்கும் கடவுள் இருந்தால் கூப்பிடலாம் !!!அல்லது ஒரு கடவுள் தான் உள்ளார் என்றால் ??? .

வரிசையில் நின்றோம் உள்ளே செல்ல. நிக்க போக எல்லாம் படம் எடுத்த படி நீண்ட வரிசை மூண்டு மணி நேரம் காவலில் இருந்து ஒரு மாதிரி உள்ளே சென்றேன், அன்று ஞாயிறு ஆதலால் உள்ளே prayers நடந்து கொண்டு இருந்த்து. எல்லாமே நிஜமா என்று யோசிக்க முடியல. எதோ கனவில் வாற மாதிரி இருந்தாலும் ஏறத்தாள இரண்டு மணி நேரம் உள்ளே பிரார்த்தனையில் கலந்து கொண்டு விட்டு வெளியே வரும் போது அளவிலா சந்தோசம். என்றோ போட்ட கணக்கு இன்று சரியாயிருச்சு. சாதித்து காட்டி போட்டேன் என்ற பெரு மிதத்துடன் ரோமா புரியின் மிகுதி இடங்களை பார்த்து ரசிக்க தயாரானேன்.


அப்புறம் Venice பற்றி ஆண்டு எட்டில் படித்து சோதனை கூட pass பண்ணினனான். இதே சந்தர்ப்பத்தில் அங்கேயும் சென்று வந்தேன். உண்மையில் நல்ல பிரதேசம்.

வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் இதுவும் ஒன்றுதான்.

" கனவுகள் மெய்ப்பட வேண்டும் " - அது நல்ல கனவாய் இருந்தால் என்றும் மெய்ப்படும் - புரியும் என்று நினைக்கின்றேன்!!!!

Reference :

[1] http://en.wikipedia.org/wiki/List_of_pastoral_visits_of_Pope_John_Paul_II_outside_Italy)
[2] http://en.wikipedia.org/wiki/Roman_Empire
[3] Vatican Temple: http://www.vatican.va/
[4]Vatican State:http://www.vaticanstate.va/EN/homepage.htm

எடுத்த பல படங்களில்( பல கோணங்களில் ) ஒரு சில உங்கள் பார்வைக்கு !!!



நண்பர்களுடன்


சிங்கம் சிங்கிளாக !!!


Venice Water


Colosseum - Rome city



Venice - From the Boat




Inside Colosseum - Rome city



Romanian Cultural Village


Milan Church



Vatican Church Walls



பாப்பரசர் தோன்றும் ஜன்னல் இதனூடாகத்தான் உலகத்துக்கு அருள்




பாப்பரசர் பத்திரிக்கையுடன்



வத்திக்கான் வளாகம்



உள்ளிருந்து வெளியேறிய படி


வத்திக்கான் வளாகம்



வத்திக்கான் வளாகம் -சிங்கம் சிங்கிளாக


உள்ளே பிரமிக்கும் அலங்காரங்கள்-- எல்லாமே சிற்பவேலைகள்


மேல நின்றபடி


உள்ளே பிரமிக்கும் அலங்காரங்கள்-- எல்லாமே சிற்பவேலைகள்


உள்ளே பிரமிக்கும் அலங்காரங்கள்-- எல்லாமே சிற்பவேலைகள்


உள்ளே பிரமிக்கும் அலங்காரங்கள்-- எல்லாமே சிற்பவேலைகள்



உள்ளே பிரமிக்கும் அலங்காரங்கள்-- எல்லாமே சிற்பவேலைகள்


நீண்டு பரந்து இருக்கும் தூண்கள்

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...